இயற்பெயர் - வைச்ரவணன், ஏகாஷி பிங்களி
பெற்றோர் - விச்ரவஸ், பரத்வாஜர் மகள் ஸ்வேதா தேவி
பிறந்த தேதி -ஐப்பசி 3ம் தேதி மங்கள வாரம் - 5064-த்ரேதா யுகத்தில் ஸ்ரீமுக
ஆண்டு
ஜென்ம நட்சத்திரம் - பூர்வாஷாடா என்னும் பூராடம்
ராசி லக்னம்: தனுசுராசி மீன லக்கனம்.
அவதரித்த குறிக்கோள் - உண்மையான பக்தி நேர்மை கொண்டவர்கள் பூஜை செய்தால் சகல
ஐஸ்வர்யங்களும் கொடுத்து வாழ்வை உயர்த்துவது
தாத்தா - புலஸ்தியர்,
கொள்ளு தாத்தா - பிரம்ம தேவர்,
இருப்பிட முகவரி : கயிலாய கிரகத்தில் உள்ள அனகாபுரி.
மனைவி : நிதி என்கிற சித்திரலேகா
சகோதரி : சூர்ப்பணகை,
பிடித்த கிழமை-வியாழன்
பிள்ளைகள் : நளகூபன், மணிக்ரீவன்.
வாகனங்கள் : புஷ்பக விமான மனித வாகனம்.
அபிமான நிதி தேவதாக்கள் - சங்கம் பதுமம் பதவியும்
சிறப்புப் பட்டமும் - நவநிதிகளின் அதிபதி. சிவபெருமானைக் குறித்து 800
வருடங்கள் தவமியற்றி அவரது நட்போடு பட்டம் பெற்றது. பிரம்மனை நோக்கித் தவமிருந்து
வடக்கு திக்கின் பாலனாக ஐஸ்வர்யங்களின் அதிபதியாக பதவி பெற்றது.
செய்த பெரும் சேவை : பத்மாவதி தாயாரை மணந்து கொள்ளும் பொருட்டு
ஏழுமலையப்பனுக்குக் கடன் உதவி.
பிடித்த நைவேத்யம் : எலம், லவங்கம், கிராம்பு, வாசனை திரவியங்கள் கலந்த பால்,
கேசரி, அவல் பாயசம், சர்க்கரை அன்னம்.
பிடித்த வஸ்திரம் : சிவப்பு
பிரியமாக தங்கும் இடம் : வில்வமர நிழல், மந்திரங்கள் வசிக்கும் இடம்,
வலம்புரிச்சங்கு, தாமரை மலர், வாஸ்துக் குறையில்லாத வீடு, சானக்ராமம், ஸ்வர்ணத்தால்
லிங்கம், ஸ்படிக லிங்க வழிபாடு செய்யும் இடம்.
No comments:
Post a Comment