குருர் ப்ரம்மா குருர் விஷ்ணு
குரு தேவோ மஹேஸ்வரஹ
குரு சாட்சாத் பரப்ரம்மா
தஸ்மை ஸ்ரீ குரவே நமஹா.
பொருள்:
பிரம்மா,விஷ்ணு,மகேஸ்வரர் இவர்கள் குரு தேவர்கள் ஆவர்கள். குருவின் அன்றாட நடவடிக்கைகள்,எண்ணங்கள்,சொற்கள் ஆகியவைகள் உண்மையை பிரதிபலிக்கும். அதாவது இம்மூன்று குணங்களையும் கடந்தவர் என்று பொருள்.அதனால் குரு பிரம்மா,விஷ்ணு,மகேஸ்வரர் முதலானோர்களுக்கு சமமாக கருதபடுகிறார் என்று பொருள்.
விளக்கம்:
ஒழுக்கத்தை மாணவர்களுக்கு சொல்லி கொடுப்பதால் அவர் பிரம்மாவாக கருதபடுகிறார்.மாணவர்களிடம் உள்ள நல்ல பழக்கங்களை பாதுகாப்பதால் அவர் விஷ்ணுவாக கருதபடுகிறார்.மாணவர்களிடம் உள்ள தீய குணங்களை அழிப்பதால் அவர் மகேஸ்வரராக கருதபடுகிறார்.இந்த மூன்று பணிகளையும் செய்வதால் அவர் மூம் மூர்த்திகளுக்கு சமமாக போற்றபடுகிறார்.
No comments:
Post a Comment