கும்பாபிஷேக பத்திரிகைகளில்
"சர்வசாதகம்' என்று குறிப்பிடுகிறார்களே! பொருள் என்ன?
"சாதகம்' என்றால் "உதவியாக இருத்தல்'. கும்பாபிஷேகம் என்பது கோயில் நிர்மாணம் தொடங்கி, விமான கலசம், மூல ஸ்தான விக்ரஹம் உள்ளிட்டவற்றிற்கு புனிதநீர் கலசாபிஷேகம் செய்யும் பெரிய நிகழ்வாகும். சிவாகமங்களின் அடிப்படையில் சிற்பம், ஜோதிடம் முதலியவற்றில் தேர்ச்சி, மந்திரங்களை உச்சரித்தல், விக்ரஹப் பிரதிஷ்டை, மருந்து சாத்துதல், யாகசாலை அமைத்து அங்கல பிரமாணம் பிசகாமல், குண்டம் அமைத்து அர்ச்சகர்களைக் கொண்டு யாகம் செய்தல் என எல்லா விஷயங்களிலும் தேர்ச்சி மிக்க ஒருவரால் தான், கும்பாபிஷேகத்தை நிர்வாகம் செய்ய முடியும். இப்படிப்பட்ட கும்பாபிஷேக வல்லுநர்களையே "சர்வசாதகம்' என அழைப்பர்.

No comments:
Post a Comment