செவ்வாய் தோஷம் பற்றிய பொதுவான குறிப்புகள்
ஒரு பெண்ணுக்கு இரண்டாமிடத்தில் செவ்வாய் காணப்பட்டால், சண்டையிடும் சுபாவம் பெற்றவளாக இருப்பாள். கடினமான சொற்களை எளிதாகப் பயன்படுத்துவாள். யாருக்கும் அஞ்சாத குருட்டு தைரியம் பெற்றவளாகத் திகழ்வாள். இவருடைய ஆரோக்கியமும் அவ்வளவு திருப்தி கொடுக்காது.
ஒரு பெண்ணுக்கு நான்காமிடத்தில் செவ்வாய் காணப்பட்டால் ஒழுக்கமற்றவளாக இருப்பாள். இந்த இடத்தை சுகஸ்தானம் என்று கூறுகிறோம். இதில் செவ்வாய் அமரும் போது சுகவாழ்வே இல்லாமல் வாழ்நாள் முழுவதும் போராட்டங்களைச் சந்திக்கக்கூடியவளாக திகழ்வாள். இவருக்கு பிறந்த வீட்டு ஆதரவு பெருமையைக்
கொடுக்காது. கணவன், மனைவி இருவருக்கும் ஒற்றுமையோ சந்தோஷமோ உண்டாக முடியாது.
கொடுக்காது. கணவன், மனைவி இருவருக்கும் ஒற்றுமையோ சந்தோஷமோ உண்டாக முடியாது.
ஒரு பெண்ணுக்கு 7மிடத்தில் செவ்வாய் அமையப்பெற்றல் கணவன் மனைவிக்குள் பிரிவு உண்டாகிறது. கணவன் திருமணமாகும்போது நல்ல உடல் அமைப்புக் கொண்டவராக இருப்பார். ஆனல் திருமணத்திற்கு பிறகு கணவருக்கு நோய், கெடுதி போன்ற அனுகூலமற்ற பலன்கள் உண்டாகிறது. கணவனுடன் சேர்ந்து வாழும் அமைப்பு இருக்காது. மற்ற ஆடவனுடன் சுகம் காணவேண்டும் என்ற கபட புத்தி இருந்தபடி இருக்கும். இவருக்கு ரத்தஸ் சம்பந்தப்பட்ட நோய்கள் உண்டாகியபடி இருக்கும்.
8 மிடம் என்று சொல்லப்படும் மாங்கல்யஸ்தானத்தில் செவ்வாய் இருந்தால் சிறு வயதிலேயே கணவனை விட்டுப்பிரிவாள். இல்வாழ்வில் நிம்மதி இருக்காது. எப்போது பார்த்தாலும் யாரிடமாவது சண்டை போடுவாள். கணவனை விட்டுப் பிரிவாள். திடீரென்று உணர்ச்சி வசப்பட்டு தற்கொலை செய்து கொள்வாள். எதிர்பராமல் விபத்தில் சிக்குவாள்.
ஒரு பெண்ணுக்கு 12 மிடத்தில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் கெடுதி ஏற்படுகிறது. இந்த இடத்தைக் கொண்டு "கட்டில் சுகம்" "சுக வாழ்வு" போன்ற நற்பலன்களை அறிகிறோம். இதில் செவ்வாய் அமையும் பெண்களுக்கு சுகவாழ்வு முறையாக கிடைப்பதில்லை. கணவனல் வெறுக்கப்படும் நிலை ஏற்படும். கணவனை விட்டுப் பிரிந்து வாழுதல், கணவனுக்கு திடீர் மாரகம் உண்டாகும் நிலையாவும் உண்டாகும்.
எனவே செவ்வாய் தோஷம் உள்ள பெண்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். செவ்வாய் தோஷம் உள்ள ஒரு பெண்ணோடு செவ்வாய் தோஷம் இல்லாத ஆண் உறவு கொண்டால் "உஷ்ண சம்பந்தப்பட்ட நோய்" அந்த ஆணுக்கு உண்டாகும் என்று கூறப்படுகிறது.
No comments:
Post a Comment