மயிலில் உலகை வலம் வந்தும், மாங்கனியை முருகப்பெருமானால் பெற முடியவில்லை.
விநாயகரோ, அம்மையப்பரே உலகம் என்று சொல்லி சிவபார்வதியை வலம் வந்து மாங்கனியைப்
பெற்றார். பெற்றோர் மீது கோபம் கொண்ட முருகன் பழநி மலை மீது ஆண்டியாகி நின்றார்.
அண்ணனான விநாயகர், இச்செயலுக்குப் பிராயச்சித்தம் தேடிக் கொள்ளும் விதத்தில், தம்பி
முருகன் வள்ளியை மணந்து குடும்பஸ்தனாக வாழ துணை நின்றார். பெரிய மதயானையாக
வந்துவள்ளியைத் துரத்தினார். பயந்து போன வள்ளி, "முருகா! முருகா' என்று கூவியபடி
ஓடினாள். எதிரில் நின்ற கிழவன் முருகனைக் கட்டியணைத்துக் கொண்டாள். மகிழ்ந்த
முருகன் தன் சுயரூபத்தைக் காட்டி வள்ளியை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். அதன் பின்
நம்பிராஜன் தலைமையில் வள்ளிகல்யாணம் இனிதே நிறைவேறியது.
No comments:
Post a Comment