மடியில் கனம் இல்லை! அதனால் வழியில் பயமும் இல்லை' என்று தான் சொல்வார்கள். கனம்
இருந்தாலும், செல்லும் வழியில் பயம் இல்லாதவராக இருப்பவர் விநாயகர் தான். இந்த
உண்மையை தன் மூஞ்சூறு வாகனத்தின் மூலம் அவர் நிரூபித்துக் காட்டியுள்ளார்.
பருமனான யானையின் உருவத்தைக் கொண்டிருக்கும் விநாயகர், மிக எளிய பிராணியான மூஞ்சூறுவை வாகனமாக ஏற்றிருக்கிறார். மாடு, சிங்கம், மயில், கருடன் என்று பெரிய வடிவிலுள்ள வாகனங்களை மற்ற தெய்வங்கள் வைத்திருக்கிறார்கள். மூஞ்சூறுவுக்கு சிரமம் கொடுக்காமல் அதற்கு கவுரவம், சிறப்பு அளிக்கும் விதத்தில் தன்னையே லேசாக்கிக் கொண்டிருக்கிறார் விநாயகர். இதிலிருந்து, "பக்தர் இதயத்தில் கனக்காமல் எப்போதும் லேசாகவே இருப்பேன்' என்ற உறுதியை அவர் நமக்கு வழங்குகிறார்

No comments:
Post a Comment