வேடன் குகனின் அன்பு
இப்பகுதியால்
குகன் கொண்டு வந்த பொருள்கள் தேன், மீன் மட்டுமல்ல, உயர்ந்த அன்பினையும் கொண்டு
வந்துள்ளான் என்பதனை அறிய முடிகிறது.
இராமன், மூத்தவர்களாகிய முனிவர்களை நோக்கிப் புன்னகைத்து விட்டு, “குகனே ! நீ அன்போடும்
பக்தியோடும் கொண்டு வந்த தேனும், மீனும் மிகவும் அருமையானவை. அமுதத்தைக் காட்டிலும்
சிறந்தவை. இவையெல்லாம் எம்மைப் போன்றவர் ஏற்கத் தக்கவையே. ஆதலால் நாம் அவற்றை இனிதாக
உண்டவர்போல் ஆனோம்" என்று குகனிடம் கூறினான்.
அரியதாம் உவப்ப உள்ளத்து அன்பினால் அமைந்த காதல்
தெரிதரக் கொணர்ந்த என்றால் அமிழ்தினும் சீர்த்த அன்றே
பரிவினின் தழீஇய என்னின் பவித்திரம் எம்ம னோர்க்கும்
உரியன இனிதின் நாமும் உண்டனெம் அன்றோ என்றான்
(கங்கைப் படலம் 42)
இப்பகுதியால் உயர்ந்தவர்களிடத்தில் நாம் கொடுக்கும் பரிசுப் பொருள்கள் (தேன், மீன்)
பெரிதல்ல, அவர்களிடத்தில் காட்டும் மதிப்பும் மரியாதையுமே பெரிது என்னும் பண்பினைக்
குகன் வாயிலாக அறிய முடிகிறது. உண்ணத்தகாத பொருளாயினும் அன்போடு தந்தால் பெரியோர்கள்
ஏற்றல் வேண்டும் என்பதை இராமனின் பெருந்தன்மையால் அறியலாம்.
நாளைவா என்னல்
இராமன், குகனை நோக்கி, "நாம் இன்று தவச் சாலையில் தங்கி, நாளை கங்கையைக் கடப்போம்.
எனவே நீ, அன்பு நிறைந்த நின் சுற்றத்தாரோடு இங்கிருந்து சென்று, உன்னுடைய நகரத்திலே
உவகையோடு இனிதாகத் தங்கி, விடியற் காலை நாங்கள் ஏறிச் செல்வதற்குரிய ஓடத்துடன் இங்கே
வருக!" என்றான்.
பொங்கும்நின் சுற்றத் தோடும் போய்உவந்து இனிதுன் ஊரில்
தங்கிநீ நாவா யோடும் சாருதி விடியல் என்றான்

ராமர்
-- குகன் ! நட்பு
ராமர் காட்டுக்கு வந்ததும் முதமுதல்ல அவரைச் சந்திச்சது
குகன். வேடனான குகனும், அரச குமாரரான ராமரும் முதல் சந்திப்பிலேயே சாதி பாகுபாடு இல்லாம
இணைஞ்சிட்டாங்க. அந்த சந்திப்பின்போது குகன் தேனையும், மீனையும் ராமருக்கு கொடுத்தான்
.
அப்போ மத்தவங்க, " ராஜகுமாரனான ராமருக்கு நீ மீனையும், தேனையும் கொடுத்ததில் என்ன பெருமை ? எத்தனையோ உயர்ந்த விருந்தை உண்டவராயிறே ராமர்" னாங்க .
அப்போ குகன், " சாதாரண வேடனான நான் கொடுத்த இந்த பொருட்களில் மற்றவர்களுக்குப் புரியாத உட்பொருள் உண்டு. அதைப் புரிந்து ஏற்றுக் கொண்டார் ராமர்." னான் .
" என்ன? "ன்னு பதில் கேள்வி வர, குகன் மூலமா கம்பர் எப்படி சமாளிக்கிறாருன்னு பாருங்க .
" தேன் உயர்ந்த மலையில் உள்ள மரத்தின் உச்சியில் கிடைப்பது. மீன் கடலின் ஆழத்தில் கிடைப்பது. எங்கள் நட்பு கடலின் ஆழம் போன்று இதய ஆழத்தில் இடம் பெற்றால் அது மலையைப் போல் உயர்ந்ததாக இருக்கும் என்பதே உட்பொருள்" னான் .
' இதைவிட ஆழமில்லை என்றும் இதைவிட உயர்ந்ததில்லை என்றும் போற்றும்படி அமைவது நட்பு '.

No comments:
Post a Comment