விநாயகர், முருகன், சிவன், விஷ்ணு, சூரியன் ஆகிய தெய்வங்களை வணங்கும்போது
சுவாமியை கிழக்கு நோக்கி வைத்து, நாம் வடக்கு நோக்கி அமர்ந்து பூஜை செய்வதே
சிறந்தது. பெண் தெய்வங்களான காளி, மாரி, லட்சுமி, பிற அம்மன்களை வழிபடும்போது
நேருக்கு நேராக அமர்ந்து பூஜை செய்யலாம். அதாவது, அம்மன் கிழக்கு நோக்கி இருக்க,
நாம் மேற்கு நோக்கியோ அல்லது அம்மன் வடக்கு நோக்கி இருக்க, நாம் தெற்கு நோக்கியோ
பூஜை செய்யலாம்.
No comments:
Post a Comment