மஹா மந்திரம் என்றால் என்ன?
மந்திரம் என்றால் மனதை விடுவிப்பது என்று பொருள். அதாவது ‘மன்’ என்றால் மனம். ‘திரா’ என்றால் “விடுவிப்பது”. மனதை அதன் துன்பங்களிலிருந்து விடுவிப்பது மந்திரம் ஆகும். ஒரு மந்திரம்,ஒரு குறிப்பிட்ட துன்பத்தை மட்டும் நீக்க உதவலாம். ஆனால் மஹா மந்திரம் எனப்படுவது எல்லாவிதமான துன்பங்களிலிருந்தும் மனதை விடுவிக்கும் சக்திவாய்ந்ததாய் இருக்க வேண்டும். மனச்சஞ்சலங்கள், மனச்சோர்வு, மனஅழுத்தம், மனக்குழப்பம், பாவ விளைவுகள், தீய சிந்தனைகள், சண்டை சச்சரவுகள், காம, க்ரோத, மோஹ, லோப, மத, மாச்சர்யம், மற்றும் அனைத்து விதமான மனதின் துன்பங்களில் இருந்தும் மனதை விடுவிக்கும் சக்தி “ஹரே கிருஷ்ண” மந்திரத்திற்கு இருப்பதால் இம்மந்திரத்தை “மஹா மந்திரம்” என்று வேத சாஸ்திரங்கள் அழைக்கின்றன. ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தைச் சொல்லக் கட்டுபாடுகள் எதுவும் இல்லை. உச்சரிக்கும்முறை: நம் காதுகளுக்கு கேட்கும் வகையில் தினமும் குறைந்த பட்சம் 108 முறை ஹரே கிருஷ்ண மந்திரத்தை உச்சரித்து வந்தால் மன அமைதியையும், சந்தோஷத்தையும், பெறலாம். ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
No comments:
Post a Comment