யாகம் நடத்தும் அந்தணர்களுக்கு, தட்சிணை கொடுக்காவிட்டால் யாக பலன்
பூர்த்தியாகாது என்கிறது சாஸ்திரம். யாகம் நடத்துவதற்கு முன்பே தட்சிணையின் ஒரு
பகுதியை கொடுத்து, அந்தணரை அழைக்க வேண்டும். யாகம் நடத்தும் முறை பற்றி கூறும்
ஆபஸ்தம்பர் என்ற மகான், குள்ளப்பசுவைக் கன்றோடு அந்தணர்களுக்கு தட்சிணையாகக்
கொடுப்பது நல்லது என்கிறார். விஷ்ணு வாமனராக, குள்ளவடிவில் வந்து தானம் பெற்றதை
நினைவூட்டும் விதமாக குள்ளப்பசுவைத்தேர்ந்தெடுத்து கன்றுடன் தருவது மரபு. இதன்
மூலம் அந்த பசுவின் உடம்பில் எத்தனை ரோமம் இருக்கிறதோ, அத்தனை ஆண்டுகள்
சொர்க்கத்தில் வாழும் பாக்கியத்தை தானம் கொடுத்தவர் பெறுகிறார்.
No comments:
Post a Comment