கேள்வி என் மனம் எப்போதும் குழப்பத்திலேயே இருக்கிறது. இத்தகைய மனதினைக் கொண்டுள்ள எனக்கு விடுதலை அல்லது முக்தி சாத்தியமா? சத்குரு: நிச்சயமாக அது சாத்தியம். ஏன் சாத்தியமில்லை? ஒவ்வொரு தனி மனிதருக்கும் அது சாத்தியம். அதை நீங்கள்தான் சாத்தியமாக்க வேண்டும். அதை சாத்தியமாக்க வேண்டுமென்றால், வாழ்க்கையில் முதல் இடத்தை அதற்குத்தான் கொடுக்க வேண்டும். பலர் பல விஷயங்களுக்கு முக்கியத்துவம் தருகிறார்கள். ஒரு ஓரத்தில், ஆன்மீகத்தை வைத்துக் கொள்கிறார்கள். அப்படியிருந்தால் விடுதலை நிகழாது. ஞானோதயம் வெகுதூரத்தில் இல்லை. ஆனால் ஒரு மனிதனுக்குள் 100% விருப்பம் உண்டாக்க நேரம் அதிகமாக ஆகிறது. உங்கள் வாழ்க்கையின் ஒரே நோக்கமாக முக்தி இருக்குமேயானால் அது வெகுதூரத்தில் இல்லை. ஒரு விநாடியில்கூட அது நிகழலாம். ஒரே இலக்கு நோக்கி உங்கள் அனைத்து சக்திகளும், குவிக்கப்படுகிறபோது அது தொலைவில் இல்லை. ஏனெனில் நீங்கள் எதை தேடுகிறீர்களோ அது ஏற்கனவே உங்களுக்குள்தான் இருக்கிறது. முக்தி அல்லது விடுதலை என்பது ஏதோ ஒரு மலைமீது உள்ளது என்றால் இந்தக் கேள்வியை நீங்கள் கேட்கலாம், “அது சாத்தியமா, இல்லையா?” என்று. ஆனால் அது உங்களுக்குள்ளே இருக்கிறபோது யாராவது உங்களைத் தடுக்க முடியமா? அதில் இருக்கிற ஒரே தடை நீங்கள்தான். இல்லையா? நீங்கள் விரும்பினால் உங்களைத் தடுக்க யாரால் முடியும். எனவே இந்த ஆத்ம சாதனைகள் எல்லாமே உங்களை அந்த விருப்பத்தை மேற்கொள்ளுமாறு செய்வதற்குத்தான். ஆத்ம சாதனைகள் ஞானத்திற்காக அல்ல. ஞானோதயம் வெகுதூரத்தில் இல்லை. ஆனால் ஒரு மனிதனுக்குள் 100% விருப்பம் உண்டாக்க நேரம் அதிகமாக ஆகிறது. ஏனெனில் அடுக்கடுக்காய் உங்களிடம் எதிர்ப்புத்தன்மை இருக்கிறது. இந்த எதிர்ப்புகளையெல்லாம் கடந்த ஒரு மனிதனுக்கு முழுமையான விருப்பம் உருவாக்குவதற்கு சிறிது நேரம் ஆகிறது. நீங்கள் மிக எளிமையான மனிதராகயிருந்தால், “வாருங்கள் என்னைப் பின்பற்றுங்கள்” என்கிற அழைப்பு மிக அற்புதமாக வேலை செய்திருக்கும். ஆனால் உங்கள் மனதிற்குள் கணக்குகள் வந்துவிட்டனவே.
No comments:
Post a Comment