Monday, November 9, 2015

பரிகாரத்தினால் ஒருவரது ஆயுளை அதிகரிக்கச் செய்ய முடியுமா?

பரிகாரத்தினால் ஒருவரது ஆயுளை அதிகரிக்கச் செய்ய முடியுமா?
முடியும்.
பதினாறு வயதில் இறக்க வேண்டிய மார்க்கண்டேயன், தான் செய்த தவத்தின் வலிமையால் சிரஞ்சீவி வரம் பெற்றான்.
விதவையாக இருக்க வேண்டிய சாவித்திரி தனது தவத்தால் சத்தியவானைக் காப்பாற்றி னாள்.
ஆனால் இன்றைய காலகட்டத்தில் எவ்வளவு பிராயச்சித்தம் செய்ய வேண்டும் என்பது தெரியாது. என்ன செய்ய வேண்டும் என்று சொல்லித் தருபவர்களும் மிகவும் குறைவு.
பரிகாரம் செய்யும்போது, அதைச் செய்பவ ரும் முழு நம்பிக்கையோடு, பக்திச் சிரத்தையோடு செய்ய வேண்டும். அதைச் செய்து வைக்கும் வைதீகரும் மிகுந்த பக்தியோடு- சிரத்தையோடு மந்திரங்களை உச்சரிக்க வேண்டிய முறையில் மட்டும் உச்சரித்து ஹோமம், பூஜைகளைச் செய்ய வேண்டும். அந்த சமயத்தில் தெய்வ சிந்தனை மட்டும்தான் இருக்க வேண்டும்.
இப்படி மிகுந்த ஈடுபாட்டுடன் செய்பவரும், செய்து கொடுப்பவரும் மிகவும் அரிதாகி வருவ தால், பரிகாரங்களின் முழுப் பலனையும் பலரால் உணர முடியவில்லை.
பல பாவங்களுக்கும் சிறந்த பரிகாரம் அன்னதானம். முதியோர்களை மகிழ்ச்சியடையச் செய்வதும், அவர்களது ஆசியும் மன மகிழ்ச்சி யுடன் நீண்டு வாழ வழி செய்யும்.
நல்லதே நினைத்து, நல்லதே செய்து வாழ்ந்து வந்தால் இவ்வுல வாழ்க்கை இனிக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்வதை ஒரு கடமையாக மேற்கொள்ளுங்கள்.'

No comments:

Post a Comment