சிலருக்கு கல்யாணம் தாமதம் ஏன்?
கல்யாணம் என்பது எல்லோரது வாழ்விலும் ஒரு முக்கியமான திருப்பு
கல்யாணம் என்பது எல்லோரது வாழ்விலும் ஒரு முக்கியமான திருப்பு
முனையாக அமையக்கூடிய நிகழ்ச்சி. ஒரு மனிதன் தன்னுடைய வாழ்வில் முழுமை அடைவது கல்யாணம் என்னும் பந்தத்தில்தான்.
ஒரு சிலருக்கு பார்த்தீர்கள் என்றால் கல்யாணம் என்பது அதிக சிரமம் இல்லாமல் நடந்து, குழந்தைகளை பெற்று கொண்டு, பின்பு அந்த குழந்தைகள் பெரியவர்களாகி வாழ்க்கையில் நிம்மதியாக settle ஆகி விடுவர். ஓய்வு எடுக்க வேண்டிய வயதில் பேர பிள்ளைகளுடன் கொஞ்சி கொண்டும், இருக்கும் சேமிப்பில் கடைசி காலத்திற்கு வைத்து கொண்டு நிம்மதியாக இருப்பார்கள்.
ஒரு சிலருக்கு பார்த்தீர்கள் என்றால் கல்யாணம் என்பது அதிக சிரமம் இல்லாமல் நடந்து, குழந்தைகளை பெற்று கொண்டு, பின்பு அந்த குழந்தைகள் பெரியவர்களாகி வாழ்க்கையில் நிம்மதியாக settle ஆகி விடுவர். ஓய்வு எடுக்க வேண்டிய வயதில் பேர பிள்ளைகளுடன் கொஞ்சி கொண்டும், இருக்கும் சேமிப்பில் கடைசி காலத்திற்கு வைத்து கொண்டு நிம்மதியாக இருப்பார்கள்.
ஆனால் ஒரு சிலருக்கு பார்த்தீர்கள் என்றால் கல்யாணம் என்பதே ஒரு பெரிய போராட்டம் ஆகத்தான் இருக்கும். மாப்பிளையோ பெண்ணோ நல்ல அழகு, அந்தஸ்து, சொத்து, சுகம், வண்டி போன்ற அணைத்து வசதிகளும் இருக்கும் ஆனால் கல்யாணம் என்பது கால தாமதாமாகி கொண்டே செல்லும்.
சரி காதலித்துதான் திருமணம் செய்யலாம் என்று இருந்தால் இவர்களை காதலிப்பதற்கு ஆள் யாரும் இருக்கமாட்டார்கள்.
அம்மா அப்பாவிற்கு அடங்கின பிள்ளையாக கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று அவர்கள் விருப்பத்திற்கு பெண்ணோ பையனோ பார்க்கலாம் என்றால் சரியான வரன் அமையாமல் கல்யாணம் தள்ளிக் கொண்டே செல்லும்.
இதுபோன்று கல்யாணம் நடக்காமல் தள்ளி கொண்டே போவதற்கு ஜோதிட ரீதியாக என்ன காரணம்?
ஒருவர் பிறக்கும்போதே அவருடைய வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதினை அவர் பிறக்கும்போது வானில் நிலை கொண்டிருந்த கிரகங்கள் தீர்மானம் செய்து விடுகின்றன.
ஆம் ஒருவர் என்ன குணாதிசயம் உடையவர், நல்லவரா கெட்டவரா, அவர் படிப்பாரா படிக்க மாட்டாரா, சம்பளத்திற்கு வேலைக்கு போவாரா அல்லது வியாபாரம் செய்து பிழைப்பாரா, வீடு கட்டுவாரா அல்லது வீடு கட்டும் யோகம் கிடையாதா, அவருக்கு நோய், கடன், நிலைமை எப்படி இருக்கும் போன்ற பல விசயங்களை கிரகங்கள் தீர்மானிக்கின்றன.
அதுபோன்று ஒருவருக்கு அமையக்கூடிய கல்யாணமும் கிரகங்களின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. நன்மை செய்யும் கிரக கட்டுபாட்டில் ஒருவருடைய திருமண அமைப்பு இருந்தால் அவருக்கு விரைவில் திருமணம் நடக்கின்றது. தீமை செய்யும் கிரக கட்டுபாட்டில் இருந்தால் அல்லது நன்மை செய்யும் கிரகங்கள் நன்மை செய்ய முடியாத அளவிற்கு கைகள் கட்டுப்பட்டு இருந்தால் அவருக்கு கல்யாணம் தாமதமாக தான் செய்யும்.
கிரகங்களின் நிலையினைத்தான் ஒருவருடைய ஜாதகம் பிரதிபலிக்கின்றது. அதில் உள்ள ஸ்தானங்கள் ஒருவருடைய வாழ்க்கையின் அணைத்து விசயங்களும் எப்படி இருக்கும் என்பதை பிரதிபலிக்கின்றது.
அந்த விசயத்தில் ஒருவருடைய கல்யாணம் தாமதமாகிறது என்றால் அதற்க்கு பல காரணங்கள் உண்டு.
அவற்றில் ஒன்று ஒருவருடைய குடும்பஸ்தானமும், அதன் அதிபதியும், களத்திர ஸ்தானமும் அதன் அதிபதியும் கிரக கூட்டு, கிரக பார்வை, இருப்பிடம் போன்றவற்றால் பாதிக்க பட்டு இருந்தால் அவருடைய கல்யாணம் தாமதமாகி கொண்டு செல்லும்.
அப்படி என்றால் கல்யாண தாமதத்தை நிவர்த்தி செய்ய முடியாதா? கல்யாணம் தாமதமாவதை தடுக்க முடியாதா? நிச்சயம் முடியும்.
ஒருவருடைய குடும்பஸ்தானத்தையும் கலதிரஸ்தானத்தையும் ஆராய்ந்து உரிய கிரக நிவர்த்திகள் செய்யும் பட்சத்தில் கெடுதல் செய்யும் கிரகங்கள் விலகி நின்று விரைவில் கல்யாணம் நடப்பதற்கு வழி செய்யும்.
ஆனால் அதற்க்கும் ஜாதகம் வழிவகை செய்யவேண்டும் இல்லையேல் என்ன பரிகாரம் செயிதாளும் பயனில்லை.
No comments:
Post a Comment