தீபாவளி சொல்லும் செய்தி <<
கிருஷ்ணனால் நரகாசுரன் வதம் செய்யப்பட்டபோது, மரணத்தருவாயில் அவன் ஞானத்தைப் பெற்றான். ‘எனது தவறுகளுக்காக நான் துன்பம் அனுபவிக்கவே வேண்டும். ஆனால், எனது மரண தினத்தை மக்கள் எல்லோரும் சந்தோஷமாகவும் செழிப்புடனும் கொண்டாடவேண்டும்....” என்று கோரி இறப்பெய்தினான்.
நமக்கு தனிப்பட்ட வகையில் எத்தனையோ துன்பங்கள் இருப்பினும் கவலைகளோ குறைபாடுகளோ இருந்தாலும் சுற்றியிருக்கும் மனிதர்களையும் உயிர்களையும் சந்தோஷமாக வைத்திருக்க வேண்டிய அவசியத்தை ஒரு அசுரன் தனது மரணத் தருவாயில் உணர்ந்தான். ஒரு அசுரன் அத்தனை ஞான நிலையை எட்ட முடியுமானால் நாகரிகமடைந்த மனிதர்களால் இன்னும் மேலான ஆனந்தத்தைப் பிறருக்கு அளிக்க முடியும் என்பதை நினவுப்படுத்தும் பண்டிகையே தீபாவளி. நம்மை சுற்றி ஒளியேற்றுவோம்...
-நன்றி சர்மா சாஸ்திரிகள்
-நன்றி சர்மா சாஸ்திரிகள்
No comments:
Post a Comment