கோவிலில் அர்ச்சனை ஏன்?.....
- ஆய்வு கட்டுரை
இறைவனை மனத்தூய்மையோடு வழிபட்டால் கடவுள் நிச்சயம் நிறைவேற்றுவார் என்பது நூற்றுக்குநூறு உண்மை. கோயில் வழிபாடு மனத்தூய்மையைப் பெறுவதற்கான ஒரு முயற்சியே. உடல் தூய்மைக்காக தினமும் குளிப்பது போல, மனம் தூய்மை பெற தினமும் வழிபாடு அவசியம். மனிதமனம் பண்பட வேண்டும் என்பதற்காகவே பெரியவர்கள் கோயில் வழிபாடு, அர்ச்சனை, தியானம், விழாக்கள், கிரியைகள் ஆகியவற்றை ஏற்படுத்தி வைத்தனர்.
- ஆய்வு கட்டுரை
இறைவனை மனத்தூய்மையோடு வழிபட்டால் கடவுள் நிச்சயம் நிறைவேற்றுவார் என்பது நூற்றுக்குநூறு உண்மை. கோயில் வழிபாடு மனத்தூய்மையைப் பெறுவதற்கான ஒரு முயற்சியே. உடல் தூய்மைக்காக தினமும் குளிப்பது போல, மனம் தூய்மை பெற தினமும் வழிபாடு அவசியம். மனிதமனம் பண்பட வேண்டும் என்பதற்காகவே பெரியவர்கள் கோயில் வழிபாடு, அர்ச்சனை, தியானம், விழாக்கள், கிரியைகள் ஆகியவற்றை ஏற்படுத்தி வைத்தனர்.
இதில் அர்ச்சனையின் காரணம் மிகவும் ஆழமானது, ஆறாபக்கமும் ஆராச்சி செய்து நடமுறையில் கொண்டு வந்தது. எமது சமயம் மிக மிக scientific and micro-economics oriented ஆகும். ஏழைகள் ஆரம்பகாலத்தில் மலிவாக கிடைக்ககூடிய பொருட்களான வெற்றிலை, பாக்கு, வாழை, பூ போன்ற பூஜை திரவியங்களை விற்று, அதில் வரும் வருமானத்தினை நம்பியே வாழ்க்கை நடாத்தினர். பூக்களை விற்றும் பழங்களை விற்றும் குடும்பங்கள் வாழ்ந்து வந்தது. இறைவனை வழிடட செல்லும் போது காணிக்கை கொண்டு செல்ல வேண்டும் என்ற முறையில்; வற்றிலை , பழம் முதலியவற்ரை கானிக்கைக்கு/அர்ச்சனைக்கு வாங்க வைத்து பணத்தை கை மாறவைக்கும் பழக்கம் ஏற்பட்டது. அதே நேரத்தில், பூஜையின் பின் அப்பழங்களை பாதியாவது அர்ச்சகர் எடுத்து ஆலையத்திற்கு வரும் சிறுவர்களுக்கு கொடுத்து, அவர்களுக்கு கோவில் வரும் ஆசையை தூண்டினர், அல்லாமல் பழங்கள் அரிய மருந்து! தவிர அர்சனை செய்பவர் மற்றவர்களுக்கு கொடுக்கும் தன்மை வளர்க்கபடுகிறது.
அர்ச்சகர் இல்லையேல் கோவில் இல்லை. எப்போதும் முன்கூட்டியே நமது வருகையை அறிவிக்க ஒரு தூதுவர் இருப்பது போல, ஆலயங்களில் இறைவனிடத்தில் நம் தேவைகளை தெரிவிக்க "அர்ச்சகர்" இருப்பார். அவரே நம் குறைகளை இறைவனிடம் எடுத்து கூறி அருள் கிடைக்க செய்பவராக விளங்கினார். இதனால் ஆலையத்தினையும், அங்கே இடம்பெறும் கிரியைகள், திருவிழாக்களை நம்மி இருப்பவர் அர்ச்சகர். அதுபோல ஊதி பத்தி, தேங்காய், கடலை, உணவுப்பண்டம், பலூன், விளையாட்டுப் பொருட்கள் போன்ற பொருட்களை விற்கும் வியாபாரிகளும் கோவில் அவற்றை விற்றே வருமானம் சேர்ப்பது வழக்கம். ஒரு நிமிடம் அர்ச்சனை இல்லாலாமல் கோவிலை யோசித்தால் ஊரில் வியாபாரம் இல்லை; வீடுகளில் வருமானம் இல்லை; சேர்ந்து வாழும் பழக்கம்; விட்டுக்கொடுப்பது; சமூக ஒற்றுமை; கூட்டு முயற்சி இவை அனைத்தும் இல்லானமல் போய்விடும். இதனை வளர்க்கவே கிராமங்களில் ஆலயமும் கூழலும் உருவானது.
இறைவன் ஒருபோதும் கேட்கவில்லை அர்ச்சனை செய்ய ஆனால் அந்த ஊரார், குடும்பம் அர்ச்சகரை வாழவைப்பதாலும் ஊரின் micro-econimics தளராமலிருக்க உதவுகிறதாலும் அர்ச்சனை தேவையாக இருந்தது. அதுமட்டுமில்லாது; ஒரு ஊரின் அல்லது கிராமத்தின் கோவில்கள் தான் அந்த கிராம மக்களை இயக்கும் இருதயம் போன்ற கருவியாக இருந்தது. ஊர் மக்களை காக்கும் தெய்வம் கோவிலுக்குள் இருப்பதால் அவ் ஆலயத்தினை மேம்படுத்த "நன்கொடை" ஏற்பட்டது. விழாக்கள், கிரியைகள், பூஜைகள், நேர்த்திக்கடன்கள், நிகழ்ச்சிகள் என்பன மக்கள் தேவை கருதியே உருவாக்கப்பட்டது. இதனால் சமூக ஒற்றுமை வளர்க்கப்பட்டது. மக்கள் கோவிலுக்கு செல்லும் பழக்கமும் விழாக்களில் பங்கு கொள்ளும் பழக்கமும் ஏற்பட்டது. அதற்க்காக மக்கள் ஒவ்வொரு நாளும் உழைப்பதில் ஒரு சிறு பகுதியை வருட திருவிழாவுக்கு என ஒதுக்குவார்கள். திருவிழாவுக்கு செலவு செய்வதால் மேலும் அவர்கள் உழைப்பு தூண்டப்படுகிறது.
"கோவில் இல்லா ஊர் என்றால் அது சுடு காடு" எனவும் "கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் "என்ற ஒளெவையார் வாக்கு உண்மையானது. இதனால் மக்கள் கோவிலை அண்டியே வாழ்ந்து வந்தனர். கோவில் இல்லா ஊரில் மக்கள் அங்கு ஒரு காவல் தெய்வமாக வைரவரை வைத்து வணங்கி வந்தனர். கோவில்கள் உங்களை உழைக்க தூண்டுகிறது ஒரு புத்துணர்ச்சியாக விளங்கியது. ஊர் மக்களின் சோம்போறித்தனத்தை நீங்கி உற்சாகம், நம்பிக்கை, தெளிவு, பிடிப்பு, கவலை மறத்தல் போன்றவற்றை உருவாக்கியது. கோவிலுக்கு போவதால் தேவைகள் நிவர்த்தியாக்கப்படுகிறது. எனவே கோவில் ஊர் மக்களை இயக்கும் இயந்திரம் எமக்கு இருதயம் போல ஆலயங்கள் அமைந்திருப்பதால்; மக்கள் தமது துன்பங்களை சொல்லி அழதுவிட்டு அடுத்த காரியத்துக்கு போய்விட முடிகிறது.
மேலும் கடவுள் நம்பிக்கையால் ஊர் ஒன்று சேர்கிறது; ஒற்றுமை மேம்படுத்தப்படுகிறது. தேவைகள் நிறைவு செய்ய, மனஅமைதி கிடைக்கும் இடமாக கோயில்கள் அமைந்ததால் கடவுளுக்கும் சிறு காணிக்கையாக அர்ச்சனை உருவாகப்பட்டது, இதனால் தன் கஷ்டத்தை சொல்ல ஒருவர் ஊரில் உண்டு என எண்ணி மக்கள்; அர்ச்சகரிடத்தில் அர்ச்சனை செய்வதால் இடேறும் என்ற நம்பிக்கையின் காரணமாகவே ஆலயத்தில் அர்ச்சனை ஏற்பட்டது. கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் அர்ச்சனை பொருட்களை கோவிலுக்கு கொடுக்கும் வழக்கத்தினை ஏற்படுத்தினர். இதன் காரணமாகவே கோவில்களில் அர்ச்சனை செய்யும் வழமை ஏற்பட்டது.
ஆக்கம்; ஜெ.சீதாதேவி
No comments:
Post a Comment