"அட்சயம்'' என்றால் "வளர்வது'' என்று பொருள். அட்சய திருதியை தினத்தன்று நாம் எந்த பொருள் வாங்கினாலும் அது பல மடங்கு வளரும், பெருகும் என்பது ஐதீகம். எனவே தான் அட்சய திருதியை திருநாளை அள்ள அள்ள குறையாமல் அள்ளித் தரும் அற்புத திருநாள் என்று போற்றுகின்றனர்.
நீங்கள் மனம் உவந்து ஏழைகளுக்கு செய்யும் தான, தர்மம், பல மடங்காக வளர்ந்து, அதன் புண்ணியத்தை உங்களுக்குக் கொடுக்கும். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் மற்ற நாட்களில் நீங்கள் 10 சதவீதம் தான, தர்மம் செய்தால், உங்களுக்கு 10 சதவீத புண்ணிய பலனே கிடைக்கும்.
ஆனால் அட்சய திருதியை தினத்தன்று நீங்கள் 10 சதவீதம் தானம் தர்மம் செய்தாலே, அது 10 மடங்கு பெருகி உங்களுக்கு 100 சதவீத புண்ணியத்தை தேடித் தரும். இத்தகைய சிறப்பான தினத்தன்று, செல்வத்துக்கு அதிபதியான லட்சுமி பூஜையை ஒவ்வொரவரும் செய்ய வேண்டும்.
இதனால் செல்வம் பெருகும். லட்சுமி கடாட்சயம் உண்டாகும். .
அட்சய திரிதியையன்று நாம் பூஜிக்க வேண்டிய முக்கிய கடவுள்கள் மகாவிஷ்ணு, மகாலட்சுமி, பரமசிவன், பார்வதி, அன்னப்பஞ்சம் போக் கும் அன்னபூரணி, கல்விச்செல்வம் தரும் கலைமகள், குறையற்ற நிதியம் தரும் குபேரன் போன்றவர்கள்.
அட்சய திரிதியையன்று பொன்னும் பொருளும் வாங்கி, பூஜைகள் செய்து இறைவனை வணங்கினால் நன்மை உண்டாகும். மகாலட்சுமி படம் முன்பு நெய்தீபம் ஏற்றி லட்சுமி துதியை மனம் உருக சொல்ல வேண்டும். நிச்சயம் அலைமகள் உங்கள் வீட்டில் அவதரிப்பாள்.
No comments:
Post a Comment