Thursday, May 9, 2013

விருப்பம் நிறைவேற வீட்டிலேயே பரிகாரம்!

விருப்பம் நிறைவேற வீட்டிலேயே பரிகாரம்!

மனிதவாழ்வில் பலவிதமான விருப்பங்கள் இருக்கின்றன. திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் என்றில்லாமல், பலவித பொருட்களை வாங்குவதும் நமக்கு விருப்பமாக உள்ளது. இவ்வகை விருப்பங்கள் பல காரணங் களால் தடைபட்டுப் போகலாம். இந்த தடை நீங்க மாவிளக்கு பரிகாரத்தை வீட்டிலேயே செய்யலாம். விருப்பங்களை நிறைவேற்றும் திருப்பதி வெங்கடாஜலபதிக்காக சனிக் கிழமைகளிலும், விநாயகர், முருகன், மாரி, காளி, காமாட்சி போன்ற தெய்வங்களிடம் விருப்பத்தை தெரிவிக்க விரும்பினால் செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமைகளிலும் இவ்வழிபாட்டை செய்யலாம். இடித்து சலித்த பச்சரிசி அல்லது தினைமாவில் ஏலக்காய், வெல்லப்பாகு சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ள வேண்டும். அதை காமாட்சி விளக்குபோல குழிவாகப் பிடித்து, அதனுள் நெய்விட்டு பஞ்சுத்திரி போட வேண்டும். இஷ்ட தெய்வத்தின் முன் ஒரு வாழை இலை அல்லது தாம்பாளத்தில் இரண்டு தேங்காய் முறிகள், பழம், வெற்றிலை பாக்கு மற்றும் மாவிளக்கை வைத்து ஏற்ற வேண்டும். விளக்கேற்றியதும் நாம் எந்த தெய்வத்தை நினைத்து ஏற்று கிறோமோ அந்த தெய்வம் வீட்டிற்குள் எழுந்தருளி இருப்பதாக எண்ணி, நம் விருப்பத்தை நிறைவேற்றித் தரும்படி வேண்டிக் கொள்ள வேண்டும். அந்தந்த தெய்வங்களுக்குரிய ஸ்லோகம் அல்லது பாடல்களைப் பாடுவது சிறப்பு. ஒரு நாழிகையாவது (24நிமிடம்) விளக்கு எரிவது அவசியம். வேண்டுதல் நிறைவேறிய பிறகும், இதே முறையில் இன்னும் ஒருமுறை மாவிளக்கேற்ற வேண்டும்.

1 comment:

  1. அய்யா வணக்கம்

    உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமையாகவும் பயனுள்ளதாகவும் உள்ளன.
    ரோகிணி நட்சத்திரத்தில் குழந்தை பிறந்தால் தாய் மாமாவுக்கு ஆகாது என்று சொல்கிறார்கள். என் பெண் குழந்தையின் பிறந்த நேரம் 24.05.2009, இரவு 7 மணி 29 நிமிடம். இதில் ஜோதிடரிடம் ஜாதகம் எழுதுயதில் ரிசப ராசி கார்த்திகை நட்சத்திரம் 4-ம் பாதம் என்று வருகிறது. ஆனால் கம்ப்யூட்டர் ஜாதகத்தில் ரோகிணி நட்சத்திரம் என்று வருகிறது. நாங்கள் மிகவும் குழப்பத்தில் உள்ளோம். நாங்கள் எதை பின்பற்றுவது என்று தயவு செய்து வழிகட்டுங்கள். மேலும், ரோகிணி நட்சித்திரமாக இருந்தால் எதாவாது பரிகாரம் கூறுங்கள் தாய் மாமாவுக்கு கஷ்டம் வராமல் இருக்க.

    இது என் mail id, amutharidhu@gmail.com

    thanks

    amutha

    ReplyDelete