சனிப் பிடியிலிருந்து விலக அகத்தியர் கூறும் வழிமுறை
மனிதர்கள் வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து துன்பங்களையும் கண்டறிந்து அவைகளை இன்பமயமானவாழ்க்கையாக மாற்று வத ற்காக சித்தர்களாலும் முனிவர்களாலும் ரிஷிகளாலும் இறைவனின் அருளால் தங்கள் ஞானத்தால் கண்டறிநத தெய்வீக கலைகள்தான் மணி, மந்திரம், அவுஷதம் என்ற முப்பெரும் கலைகள் ஆகும்.
இவை ஜோதிடம், மந்திரம், மருத்துவம் எனப்படும் இப்பெரும் கலைகளினால் மனித குலம் இன்று வரை மனம் உடல் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களில் இருந்து விடுபட்டு பெரும்நன்மை அடைந் து வருகின்றது. மனிதர்களின் வாழ்க்கை யில் ஏற்படும் பல்வேறு துன்பங்களுக்கு நவக்கிரகங்களின் பார்வை (கதிர்வீச்சு)ஒருகாரணம் என ஜோதிட சாஸ்திரம் வலியுறுத்துகிறது
நவகிரகங்கள் எனப்படும் ஒன்பது கிரகங்களில் மூன்று கிரகங்கள் தீய பலன்கள் அளிப்பதில் வலி மை வாய்ந்தவை. அவை ராகு, கேது ,சனி ஆகும். இவைகளில் முதன்மையானது சனி என்ற சனீஸ்வர பகவான்தான். சனீஸ்வர பகவானின் பிடியிலிருந்து யாரும் தப்ப முடியாது என்பர். இறைவனாகிய சிவபெருமானையே ஒரு கணம் பிடித்ததால் தான் சனி ஈஸ்வரபட்டம் கிடை த்து சனீஸ்வரன் ஆனார்
பனிரென்று ராசிகளில் உள்ள ராசிக்காரர்களுக்கு சுமார் ஏழு ராசிக ளின் அமைப்பு உள்ளவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் ஏழரை சனி, கண்ட சனி அஷ்டமசனி போன்ற பாதிப்பு இருந்து கொண்டே இருக்கும். இதனால் அவர்களுக்கு வாழ்வில் எடுத்த காரியங்களில் தோல்வி, பண முடக்கம், வம்பு, சண்டை, விரக்தி, தொழில் முன்னே ற்றமின்மை எதிர்கால மே சூன்யமானது போன்ற இன்ன ல்களுக்கு ஆட்பட்ட வாழ்க்கை யை மிகவும் சிரமமாக அனுபவித்து கொண்டிரு ப்பார்கள்.
சனீஸ்வர தோஷத்தின் பிடியில் உள்ளவர்கள் பல்வேறு கோவில்க ளுக்கு சென்று நவகிரங்களுக்கு தீபம் போட்டு அர்ச்சனை அபிஷே கம் செய்தும் சரிவர பலன் காணாமல் மனம் நொந்த நிலையில் இரு ப்பார்கள். இதற்கு பரிகாரமாக சித்தர்கள் மிக எளிய வழிமுறைகள் வகுத்துள்ளனர். சனிதோஷம் பிடி யிலிருந்து விலக அகத்தியர் கூறு ம் வழிமுறை பாடல் வருமாறு:-
கோனவனார் குடியிருந்த பிடரிதன்னில்
கொள்கிநின்றார் சனியனெனும் பகவான்றானே
தானென்ற சனிபகவான் பிடரிமேலே
தானேறி நின்று கொண்டு தலைகால் வேறாய்
கோனென்ற அறிவுதனை நிலைக்கொட்டாமல்
குடிலமென்ற குடிலமெல்லாங் கூறாய்ச் செய்து
நானென்ற ஆணுவமே நிலைக்கப்பண்ணி
நன்னையென்ற வெளிகளெல்லா மிருளாய்க் கட்டி
கொள்கிநின்றார் சனியனெனும் பகவான்றானே
தானென்ற சனிபகவான் பிடரிமேலே
தானேறி நின்று கொண்டு தலைகால் வேறாய்
கோனென்ற அறிவுதனை நிலைக்கொட்டாமல்
குடிலமென்ற குடிலமெல்லாங் கூறாய்ச் செய்து
நானென்ற ஆணுவமே நிலைக்கப்பண்ணி
நன்னையென்ற வெளிகளெல்லா மிருளாய்க் கட்டி
கானென்ற கபடமதுக் கேதுவாய் நின்று
கரையேற வொட்டாமல் கருதுவானே
கருதுகின்ற சனி பகவான் பிடரிமேலே
கவிழ்ந்து நின்ற பாசமதைக் களையவேண்டி
சுருதி பொருளானதொரு நாதன்பாதம்
தொழுதுமன துறுதியினால் துகளறுத்து
நிருதியெனுஞ் சாபமது நிவர்த்தியாக
நீமகனே சொல்லுகிறே னன்றாய்க்கேளு
கரையேற வொட்டாமல் கருதுவானே
கருதுகின்ற சனி பகவான் பிடரிமேலே
கவிழ்ந்து நின்ற பாசமதைக் களையவேண்டி
சுருதி பொருளானதொரு நாதன்பாதம்
தொழுதுமன துறுதியினால் துகளறுத்து
நிருதியெனுஞ் சாபமது நிவர்த்தியாக
நீமகனே சொல்லுகிறே னன்றாய்க்கேளு
பருதிஎனும் ரவிதனையே நமஷ்கரித்து
பாங்குடளே ஓம் கிலி சிவவென்று சொல்லே
சொல்லிடுவாய் தினம்நூத்தி யிருபத்தெட்டு
சோர்வின்றி மண்டலமே செபித்தாயாகில்
வல்லுடும்பாய் நின்றசனி மாறிப்போகும்
மகத்தான மந்திரமுஞ் சித்தியாகும் .
பாங்குடளே ஓம் கிலி சிவவென்று சொல்லே
சொல்லிடுவாய் தினம்நூத்தி யிருபத்தெட்டு
சோர்வின்றி மண்டலமே செபித்தாயாகில்
வல்லுடும்பாய் நின்றசனி மாறிப்போகும்
மகத்தான மந்திரமுஞ் சித்தியாகும் .
அதிகாலை குளித்து முடித்து கிழக்கு நோக்கி நின்று கொண்டு பருதி எனும் சூரிய பகவானை வணங்கி “ஓம் கிலி சிவ” என்ற மந்திரத்தை 128முறை செபிக்கவும். இப்படி ஒரு மண்டலம்- 48 நாட்கள் தொடர் ந்து செபித்துவர உடும்புபோல் பற்றிநின்ற சனீஸ்வர தோஷம் விலகி வி டும். இது ஏராளமானோர் செய்து பயன டைந்த முறையாகும்..
No comments:
Post a Comment