கார்த்திகை விரதத்தை மேற்கொள்வோர் மேலான பதவிகளை அடைவர். நாரத மகரிஷி 12ஆண்டுகள்
இந்த விரதத்தை அனுஷ்டித்ததால், எல்லா முனிவர்களிலும் மேலான பதவி பெற்றார். இந்த
விரதநாளில், பகலில் சாப்பிடக்கூடாது. முருகனுக்குரிய பாராயணநூல்களான கந்தசஷ்டி
கவசம், சண்முக கவசம், கந்தபுராணம் படிக்கவோ, கேட்கவோ வேண்டும். முருகப்பெருமானுக்கு
இந்நாளில் பால் அபிஷேகம் செய்வது சிறப்பு. இரவில் முருகன் கோயிலுக்குச் சென்று
வணங்கிய பிறகு, எளிய உணவுடன் விரதத்தை முடிக்க வேண்டும். குழந்தைகளுக்கு கல்விதானம்
செய்வது இந்நாளில் சிறப்புடையது.
No comments:
Post a Comment