கிருஷ்ண ஜெயந்தி நாளில், ஒவ்வொரு வீடு தேடியும் கண்ணன் வருவதன் அடையாளமாக அவரது
பாதத்தை, வீட்டு வாசலில் இருந்து பூஜையறை வரை வரைவர். கண்ணன் குழந்தை என்பதால்,
குழந்தைகளுக்கு பிடித்த சீடை, முறுக்கு, அதிரசம், பால்பாயாசம், வெண்ணெய், நெய்
பண்டங்கள், அவல், நாவல்பழம், பால் படையலில் இடம்பெற்றிருக்கும். அன்று மாலையில்
சிறுவர், சிறுமியர் கோலாட்டம், உறியடித்தல், வழுக்கு மரம் ஏறுதல் போன்ற
விளையாட்டுகளில் ஈடுபட்டு மகிழ்வர். கோகுலாஷ்டமியின் மறுநாளில் "நந்தோற்ஸவம்'
என்னும் பெயரில் உறியடி விழா, வடமாநிலங்களில் சிறப்பாக நடக்கிறது
No comments:
Post a Comment