Monday, May 6, 2013

இந்து சமயமும் விஞ்ஞானமும்................

இந்து சமயமும் விஞ்ஞானமும்................
கோவிலும் உடலும் ஒன்று. இரண்டுமே ஆத்ம சக்தியின் உறைவிடம். ஆலயம் என்றால் என்ன? ஆலய அமைப்பு நமது அகத்தை பிரதிபலிக்க வைக்கும் கண்ணாடியைப் போன்றது. நமக்குள்ளே பார்க்கும் திறன் நமக்கில்லாத படியால், ஆலய அமைப்பின் மூலமாக நமது உள்ளமைப்புக்களை நாம் அறியும் வகையில் சான்றோர்கள் அமைத்துள்ளார்கள். பிரசாத வடிவில் மருந்துகளையும் பிரார்த்தனை வடிவில் உடற்பயிற்சிகளையும் வகுத்துத் தந்துள்ளார்கள். உடற்பயிற்சியினால் உடலை மட்டுமன்றி உள்ளத்தையும் அதனூடாக ஆன்மாவையும் ஆரோக்கியம் செய்யலாம். நமது உடலையும் மனதையும் சுத்தம் செய்யும் மருத்துவமனை போல ஆலயம் அமைகின்றது. வரையறுக்கப்பட்ட முறைகளைப் பின்பற்றி ஆலயத்தில் இறைவழிபாடு செய்தால் நாம் ஆரோக்கியமாக வாழலாம்.
ஆலயம் என்பது மிகவும் சக்தி வாய்ந்த மருத்துவமனை. ஆலயம் உடல் நிலையையும் மன நிலையையும் சமப்படுத்தி அழுக்குகளை வெளியேற்றி சக்தி கொடுக்கும் இடமாக - தலமாக இருக்கின்றது. நாம் வீட்டில் இருந்தபடியே வழிபாடு செய்வதனால் பலன் பெருமளவில் கிடைக்கும் எனக்கூற முடியாது. ஏனெனில் நாம் ஒருவர் என்பதனால் நமக்குள் இருக்கும் சக்தி சிறியதே. ஆனால் ஆலயத்தில் கூட்டாக மக்கள் பக்தர்களாக சேரும் போது ஆலயத்தில் உள்ள பல சக்திக் கலங்களின் மூலமாக சக்தியை உள்வாங்கி அதை வெளியிடும் பொழுது அந்த சக்தி அலை நம்மை சமன் செய்கின்றது. எனவே தான் ""ஆலயம் தொழுவது சாலச் சிறந்தது"" எனச் சொல்லப்படுகின்றது.
ஆலயத்தின் கோபுரம் மிகவும் முக்கியமான ஒரு அம்சமாகும். கோபுரத்தில் ஏழு நிலைகள் உள்ளன. இந்த ஏழு நலைகளும் நம் உடலில் உள்ள ஏழு சக்திச்சக்கரங்களை குறிக்கும். கோபுரத்தின் உச்சியில் தங்கத்தினால் அல்லது வெள்ளியினால் அல்லது ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக் கலசங்களிலும் அதன் அடியிலும் வைக்கப்படும் தானியங்களும் உலோகங்களும் மின்காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியினை (earth) கலசங்களுக்கு கொடுக்கின்றன.

இத் தானியங்களும் உலோகங்களும் 12 வருடங்களுக்கு ஒரு முறை மாற்றுவது வழக்கம்.
ஏனெனில் இவை பன்னிரண்டு வருடங்களில் தமது சக்தியை இழந்து விடுகின்றன. அதனால் தான் 12 வருடங்களுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் செய்து இவை புதுப்பிக்கப் படுகின்றன. எனவே தான் இக்கலசங்கள் மின்னலை தாங்கும் சக்தியுடையவை. ஆதி காலத்தில் வீடுகளில் மின்னலை எதிர்க்கும் சாதனங்கள் இல்லாத காரணத்தால் (earth) மழை காலங்களில் இடி மன்னலில் இருந்து பாதுகாக்க கோயில்களில் தங்குவது வழக்கம். இதன் காரணமாகத்தான் போலும் ""கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்"" என நம் முன்னோர்கள் கூறினார்கள்.
கோயிலின் பிரதான வாசலாகிய கோபுர வாசலானது ஊடுருவிக்கதிர் ஆய்வுக் கருவி போல் அமைக்கப்பட்டிருக்கின்றது. இதனால் நாம் கோபுர வாயிலினூடாக செல்லும் போது கண்ணுக்குப் புலப்படாத ஊடுருவிக் கதிரானது காந்த அலைகளாக நம் உடல் மீது செல்கின்றது. இதனால் தான் நாம் கோயிலுக்குள் நுழையுமுன்பாக கை கால்களை சுத்தம் செய்வது வழக்கம் போலும்| குதிக்கால்களை மேலிருந்து கழுதுவதால் ஏற்படும் விஞ்ஞான பூர்வமான காரணம் என்னவென்றால்ää குதிக்காலில் தான் நமது மூளையில் அமைந்துள்ள ""பிட்யூட்டரி"" சுரப்பியுடன் தொடர்புள்ள முக்கிய நரம்பு அமைந்துள்ளது.
நாம் உட்பிரகாரத்தில் செல்லும் பொழுது வேகத்தைக் குறைத்து நிதானமாக நடுவில் வைக்கப்பட்டிருக்கும் வாயில் படிகளை ஈரக்கால்களுடன் குனிந்து தொட்டுச் செல்லுதல் வேண்டும். அப்படிக் குனிந்து தொடும் பொழுது ஏற்கனவே கோபுரக் கலசங்களின் ஊடாகச் சேர்க்கப்பட்ட மின்கதிர்களின் முழுப்பயனையும் அடைய முடியும். நாம் அண்டசராசரத்துடன் இணைய வேண்டும் என்பதற்காகவே விஞ்ஞான பூர்வமாகவும் இந்து சமய வழிபாடுகள் அமைக்கப்பட்டுள்ளன.





*


இந்துதர்மத்தில் ஒளிந்திருக்கும் விஞ்ஞானம்:ஜெர்மனியர்களின் ஆராய்ச்சி முடிவு

No comments:

Post a Comment