ஐந்துக்கு இரண்டு பழுதில்லை:
சைவப் பெருங்கடியினருக்கு மகா மந்திரமாக விளங்குவதும் சைவ மதத்தின் முக்கிய ஆதாரங்களில் ஒன்றான சிவ பஞ்சாட்சரம் எனப்படும் " நமசிவாய" எனும் திருவைந்தெழுத்தாகும், " நமசிவாய" என்பதைத் தூல பஞ்சாட்சரம் எனவும் சிவாய நம எனபதை சூக்கும பஞ்சாட்சரம் எனவும் சிவாய நம என்பதை காரண பஞ்சாட்சரம் எனவும் " ஓம் சிவாய நம " என்பதை மகா காரண பஞ்சாட்சரமாகிய முக்தி பஞ்சாட்சரம் ஆகவும் கூறுவர்,
சிவ ஓம் சிவ என்பதை மகா பஞ்சாட்சரம் எனவும் இந்த பஞ்சாட்சரம் மந்திரமாக விளங்குவதை இறைவனது திருநாமமாகவும் விளங்குவதை:
சிவ ஓம் சிவ என்பதை மகா பஞ்சாட்சரம் எனவும் இந்த பஞ்சாட்சரம் மந்திரமாக விளங்குவதை இறைவனது திருநாமமாகவும் விளங்குவதை:
காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தம்மை நன்னெறிக் குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப் பொருளாவது
நாதன் நாமம் நமசிவாயவே"
----ஞான சம்பந்தர்
ஓதுவார் தம்மை நன்னெறிக் குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப் பொருளாவது
நாதன் நாமம் நமசிவாயவே"
----ஞான சம்பந்தர்
" நமசிவாயவே ஞானமும் கல்வியும் " என்பார் அப்பர் சுவாமிகள்
" உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமசிவாயவே - என்பார் சுந்தரமூர்த்தி சுவாமிகள்
ஆன அஞ்செழுத்துளே அண்டமும் அகண்டமும் ஆன அஞ்செழுத்துளே ஆயான மூவரும் ஆன அஞ்செழுத்துளே அகாரமும் மகாரமும் என்பார் சித்தர் சிவவாக்கியர்
" நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
இமைப் பொழுதும் என் நெஞ்சில்
நீங்காதான் தாள் வாழ்க"
என்று மாணிக்க வாசகப் பெருமான் திருவாசகத்தில் சிவபுராணத்தில் கூறியுள்ளார்,
" நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
இமைப் பொழுதும் என் நெஞ்சில்
நீங்காதான் தாள் வாழ்க"
என்று மாணிக்க வாசகப் பெருமான் திருவாசகத்தில் சிவபுராணத்தில் கூறியுள்ளார்,
அப்பர் பெருமானை கொதிக்கும் எண்ணெய்யில் அழுத்திய பொழுதும், யானையினை ஏவியபொழுதும், ஒரு பெரும் கல்லோடு சேர்த்து கட்டி கடலில் அழுத்திய பொழுதும் அவரை காப்பாற்றியது ஐந்து எழுத்து மந்திரமாகிய " நமச்சிவாயவே ஆகும். இதைப் போல பல்வேறு மகான்களின் வாழ்க்கையிலும் இவ்வாறு நிகழ்ந்துள்ளது.
"ஐந்துக்கு இரண்டு பழுதில்லை " என்பார்கள்.
"ஐந்துக்கு இரண்டு பழுதில்லை " என்பார்கள்.
அதாவது ஐந்து என்பது மெய் , வாய் , கண், மூக்கு செவி என்னும் ஐம்புலங்களாம், இவற்றிலல் கண் வாய் என்னும் புலன்கள் இரண்டாகும். இந்த இரண்டையும் பழுதில்லாமல் பார்த்து கொள்ள வேண்டும் நாம் பார்க்கும் பொழுதும் பேசும் பொழுதும், பழுது ஏற்படும் போல் அறிந்தால் மூடிக்கொள்ள வேண்டும். அதற்காகவே கண்ணுக்கு இமைையும், வாய்க்கு உதடுகளையும் இறைவன் வழங்கியிருக்கிறார், இதற்கு தான் " ஐந்துக்கு இரண்டு பழுதில்லை" என்பார்கள்.
நமசிவாய என்ற இம்மந்திரத்தின் உயர்வை யசூர் வேதமும், திராவிட வேதமாகிய (சைவ) திருமுறைகளும் போற்றி புகழ்கின்றன, சைவ சித்தாந்த சாஸ்திரங்களான சிவஞான சித்தியார், உண்மை விளக்கம் முதலிய நூல்களும் பஞ்சாட்சரத்தின் பொருளை விளக்கி கூறுகின்றன. நடராஜ பெருமானின் திரு உருவமே பஞ்சாட்சரத்தை விளக்குவதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன.
சிவபெருமானின் எழுத்து வடிவினன் எப்படி என்றால்?
திரு வடியில் --- " ந"
உதிரத்தில் ---- " ம"
தோளில் ----- "சி"
முகத்தில் ------ " வா"
முடியில் ----- " ய"
தூல பஞ்சாட்சரமாகிய " நமசிவாய " என்பதை உலகியல் வாழ்வில் பட்டுள்ள நம் போன்றவர்கள் உபதேச முறையில் தக்க குருவிடம் கேட்டு ஓத வேண்டும்,
உதிரத்தில் ---- " ம"
தோளில் ----- "சி"
முகத்தில் ------ " வா"
முடியில் ----- " ய"
தூல பஞ்சாட்சரமாகிய " நமசிவாய " என்பதை உலகியல் வாழ்வில் பட்டுள்ள நம் போன்றவர்கள் உபதேச முறையில் தக்க குருவிடம் கேட்டு ஓத வேண்டும்,
தக்க குருவைத் தேடலும் குருமுகமாக உபதேசம் பெறுதலும் கடினம் என்று நினைத்து நம்மில் பலர் பஞ்சாட்சரத்தை தினமும் ஓதுவதில்லை. மூர்த்தி, தலம், தீர்த்தம், முறையாக தொடங்கினால் சற்குருவும் தானாகவே வருவார், திருமூலர் பெருமானும் தாயுமான சுவாமிகளும் கூறுவர்,
இது வரையில் பஞ்சாட்சரத்திலும் உயிரான இரண்டு எழுத்தான "சிவ" என்ற மந்திரச் சொல்லை நாம் அடிக்கடி சொல்லலாம், சிவ என்பது மகாகாரண பஞ்சாட்சரம் " சி" என்பது மகாமறு, இது பெருவெழுத்து என்றும் பேசா எழுத்து என்றும் வழங்கும், வா என்றால் அருள் என்றும், பொருள். அதாவது "சி" சிவம் " வ" அருள். " ய" உயிர் " ந" மறைப்பாற்றல் , "ம" மலங்கள் என்றும் கூறுவார்கள், இதில் சிவபெமானின் அருள் என்பதே சிவா என்பது ஆகும்.
இதைப் போலவே ஸ்ரீராமனும் அவர்நாமமும் ஒன்றே தான், ஓம் நமோ நாராயணா என்பதில் உள்ள " ரா" என்ற அட்சரத்தையும் , பஞ்சாட்சரமான " நமசிவாய" என்பதில் உள்ள "ம" என்ற எழுத்தையும் சேர்த்து "ராம" என்றானது என்பர்,
நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே "ராம" என்றிரண்டெழுத்தினால்! ---- என்பார் கம்ப இராமயணத்தில் கம்பர்
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே "ராம" என்றிரண்டெழுத்தினால்! ---- என்பார் கம்ப இராமயணத்தில் கம்பர்
பாலிலிருந்து தயிர், தயிரிலிருந்து மோர், மோரிலிருந்து வெண்ணெய் வெண்ணெய்யிலிருந்து நெய் ஆகிறது, அதில் பால், தயிர், வெண்ணெய் மூன்றும் மறைந்து மோர், நெய் இரண்டும் தான் மிஞ்சுகின்றன.
அதுபோலவே பஞ்சாட்சரமாகிய ஐந்தெழுத்தைக் கூற முடியாவிட்டால் சிவா என்ற இரண்டு எழுத்தையாவது கூறி அ(சி)வன் அருளை பெற முயற்சிக்கலாம் அல்லவா?, ஸ்ரீ சிவபெருமானும் அவரின் திருநாமமும் ஒன்றே ஆகும்,, ஆகவேதான் சிவ சிவ என்கிலர் தீவினையாளர் " சிவ சிவ' என்றிட தீவினை மாளும், " சிவசிவ என்றிடத்தே வருமாவர் - சிவசிவ என்ன சிவ கதி தானே என்று திருமூலர் திருமந்திரத்தில் கூறுகிறார்.
ஆகவே இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு தான் " ஐந்துக்கு இரண்டு பழுதில்லை" என்ற பழமொழி உருவானது.
Via : அமைதி தரும் ஆன்மீகம்
No comments:
Post a Comment