தெய்வமொழி என வழங்கப்படும் ஸம்ஸ்க்ருதம், இறைவனை மனிதன் அடைய ஒரு வழியாக அருளப்பட்டது. இதைப் புரிந்துகொள்ளாத நன்றிகெட்ட மனிதர்கள், குறிப்பாகச் சில ஆட்சியாளர்கள், இதனை அழிக்கக் கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கின்றனர்.
இவர்களது இந்த செயல்களின் விபரீத விளைவுகளைச் சாமானிய மக்கள் அறிந்துகொள்ளவில்லை. ஒட்டுமொத்த மனித இனத்தின் நன்மைக்காக இறைவனால் உருவாக்கப்பட்ட இந்த மொழி நமது அறியாமையினால் அழிந்துபோக விட்டுவிடக்கூடாது.
எனவே, இந்த தெய்வீக மொழியை சமுதாயத்தில் அனைவரும் அறிந்துகொள்ளும் விதத்தில் நமது முயற்சிகள் இருந்தாக வேண்டும். இது நமது தலையாய கடமை. இந்தக் கட்டுரையில் சொல்லியிருக்கும் செய்தியை அனைவரும், குறிப்பாக இந்துக்கள் அனைவரும்,இதன் மேன்மையை நன்கறிந்து, இது மீண்டும் தழைக்க முன்வரவேண்டுமென குருவருள் நாடி அவரடி பணிவோம்.
ஸம்ஸ்க்ருத மொழியின் தோற்றுவாயைப் பற்றி ஆராய்ச்சி செய்த மேலை நாட்டினர் சிலர், 'ஒலி என்பது முதன் முதலில் அவர்களது வாயிலிருந்து கிளம்பி, அவையே சங்கேதங்களாகவும், சப்தங்களாகவும் பிறகு எழுத்துகளாகவும் ஆரம்பித்து, பின்னர், ' இவையே பலவிதமாக உருமாறின' எனச் சொல்லுகின்றனர். இது முற்றிலும் தவறான கருத்து.
ஸம்ஸ்க்ருதம் இறைவனின் ஆணையால் உருவானது. மனித குலத்தைப் படைத்த இறைவன், அவர்களுக்குத் தேவையான அனைத்தையுமே கூடவே படைத்தார். எவையெல்லாம் மனிதனுக்கு வேண்டியிருக்கும் என முடிவு செய்து அவற்றையும் முன்னமே படைத்திருந்தார். அப்படித்தான், முக்தி அடைய மனிதனுக்குத் தேவையானது எனக் கருதி, இந்தத் தெய்வீக மொழியையும் படைத்தார். இதுவே ஸம்ஸ்க்ருதம். த்ரேதா யுகத்தில், மொழிக்கும் அப்பாற்பட்ட ஞானத்தை அறிய இயலாமல் தவித்தனர். இந்தக் கால கட்டத்தில்தான், குரு தத்தாத்ரேயர் மனித குலம் முக்தி பெறவென ஸம்ஸ்க்ருத மொழியை மீண்டும் உயிர்ப்பித்தார்.
ஸம்ஸ்க்ருத மொழியில் எந்தவொரு இழிச்சொல்லும் இல்லை. 'மத்'[பைத்தியம்] எனும் ஒரு சொல் ஏதோ ஓரளவுக்கு வேண்டுமானால் இழிச் சொல்லாகச் சிலர் கருதிக் கொள்ளலாம். மொழியின் சிறப்பால், மக்களின் நன்னடத்தை புரிகிறது. எனவே, நாங்கள் சொல்ல விரும்புவதெல்லாம் இதுவே:: 'ஸம்ஸ்க்ருதம் கற்று நன்னடைத்தையில் உயர்க!'
Tags; சமஸ்கிருதம் என்பதன் பொருள், சமஸ்கிருதம் என்று அழைக்கப்படும், சமஸ்கிருதம் மந்திரம், சமஸ்கிருதம் கற்க, சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம்
இவர்களது இந்த செயல்களின் விபரீத விளைவுகளைச் சாமானிய மக்கள் அறிந்துகொள்ளவில்லை. ஒட்டுமொத்த மனித இனத்தின் நன்மைக்காக இறைவனால் உருவாக்கப்பட்ட இந்த மொழி நமது அறியாமையினால் அழிந்துபோக விட்டுவிடக்கூடாது.
எனவே, இந்த தெய்வீக மொழியை சமுதாயத்தில் அனைவரும் அறிந்துகொள்ளும் விதத்தில் நமது முயற்சிகள் இருந்தாக வேண்டும். இது நமது தலையாய கடமை. இந்தக் கட்டுரையில் சொல்லியிருக்கும் செய்தியை அனைவரும், குறிப்பாக இந்துக்கள் அனைவரும்,இதன் மேன்மையை நன்கறிந்து, இது மீண்டும் தழைக்க முன்வரவேண்டுமென குருவருள் நாடி அவரடி பணிவோம்.
1. ஸம்ஸ்க்ருத மொழியின் தோற்றம்:
1.1 'பிரபஞ்சம் தோன்றும் முன்னரே இறைவன் ஸம்ஸ்க்ருத மொழியைப் படைத்தார். குரு தத்தாத்ரேயா த்ரேதா யுகத்தில் இதனை மீண்டும் தோற்றுவித்தார்.'ஸம்ஸ்க்ருத மொழியின் தோற்றுவாயைப் பற்றி ஆராய்ச்சி செய்த மேலை நாட்டினர் சிலர், 'ஒலி என்பது முதன் முதலில் அவர்களது வாயிலிருந்து கிளம்பி, அவையே சங்கேதங்களாகவும், சப்தங்களாகவும் பிறகு எழுத்துகளாகவும் ஆரம்பித்து, பின்னர், ' இவையே பலவிதமாக உருமாறின' எனச் சொல்லுகின்றனர். இது முற்றிலும் தவறான கருத்து.
ஸம்ஸ்க்ருதம் இறைவனின் ஆணையால் உருவானது. மனித குலத்தைப் படைத்த இறைவன், அவர்களுக்குத் தேவையான அனைத்தையுமே கூடவே படைத்தார். எவையெல்லாம் மனிதனுக்கு வேண்டியிருக்கும் என முடிவு செய்து அவற்றையும் முன்னமே படைத்திருந்தார். அப்படித்தான், முக்தி அடைய மனிதனுக்குத் தேவையானது எனக் கருதி, இந்தத் தெய்வீக மொழியையும் படைத்தார். இதுவே ஸம்ஸ்க்ருதம். த்ரேதா யுகத்தில், மொழிக்கும் அப்பாற்பட்ட ஞானத்தை அறிய இயலாமல் தவித்தனர். இந்தக் கால கட்டத்தில்தான், குரு தத்தாத்ரேயர் மனித குலம் முக்தி பெறவென ஸம்ஸ்க்ருத மொழியை மீண்டும் உயிர்ப்பித்தார்.
1.2 'துவாபர யுகத்தின் முடிவு வரையில், ஸம்ஸ்க்ருத மொழியே பிரபஞ்சத்தின் ஒரே மொழியாக இருந்தது!'
ஸத்ய, த்ரேதா, துவாபர யுகங்களில் ஸம்ஸ்க்ருத மொழி மட்டுமே அகில உலகத்துக்கும் பொதுவான மொழியாக இருந்தது. எனவேதான், இது 'உலக மொழி' என அழைக்கப்பட்டது. கௌரவ, பாண்டவர்கள் காலத்தில்கூட இந்த மொழியே பிரதான மொழியாக இருந்தது.2. ஸம்ஸ்க்ருத மொழியிலிருந்து பிற மொழிகள் தொடங்கின.::
மஹாபாரதப் போர் முடிவடைந்ததும், இந்துக்களின் சாம்ராஜ்ஜியம் சுருங்கத் தொடங்கவே, ஸம்ஸ்க்ருத மொழியும் முறையற்ற உச்சரிப்புகளால் சிதைக்கப்பட்டு, அந்தந்த வட்டாரங்களில் வெவ்வேறு மொழிகளாக உருமாறியது. இதனால்தான், ஆங்கிலம் முதலான பிற மொழிகளிலும் கூட ஸம்ஸ்க்ருத மொழியின் சொற்கள் உருமாறி, 'Gow' என்பது cowஎனவும், தந்த என்பது tooth எனவும் வழக்கபெறுகின்றன என்னும் உதாரணங்களால் அறியலாம்3. 'விலங்கினம், பொருள், இறைவன் முதலானவற்றிற்கு ஸம்ஸ்க்ருத மொழியில் பல்வேறு பெயர்கள்!'::
ஸம்ஸ்க்ருத மொழியில், ஒரு மிருகம் பலவிதமான பெயர்களால் அழைக்கப்படும் அளவிற்கு செழுமை வாய்ந்ததாக இருந்தது. உதாரணமாக, OX என்னும் எருதுக்கு balad, vrushabh, gonath etc.;,என 60-க்கும் மேற்பட்ட பெயர்கள் இருக்கின்றன. யானைக்கு gaja,kunjar,hastin, dantin, vaaran etc.; என 100-க்கும் மேற்பட்ட, சிங்கத்திற்கு vanaraj,kesarin, mrugendra,shardul etc.; என 80-க்கும் மேலாக இருக்கின்றன. இப்படியே நீர் [jala, jivan, udak, paya, toya, aap;] தங்கம் swarna, kanchan, hem,kanak, hiranya etc;] போன்றவற்றிற்கும் உண்டு. சூரியக் கடவுளைப் பனிரண்டு நாமங்களாலும், விநாயகர், விஷ்ணு முதலான கடவுள்களை ஒவ்வொரு பெயருக்கும் ஒரு குணாதிசயமாக வழங்கும் 1000 நாமங்களாலும் அழைக்கும் துதிகளை அறிந்தவர் பலருண்டு.4. இறை நாமங்கள்::
ஒரே கடவுள் வேதங்களில் பல்வேறு நாமங்களால் குறிப்பிடப்படுகிறார். அதேபோல ஒரே பெயரால் பல்வேறு தெய்வங்களும் அறியப்படலாம். மஹாபாரதத்தில் சிவனைக் குறித்து 10,000-க்கும் மேற்பட்ட நாமங்கள் இருப்பதாகவும், அவற்றுள், 1800 இந்த இதிஹாஸத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் அறிஞர்கள் கூறுகின்றனர். நமது மனம் ஆன்மீகமயமாகும்போது, அனைத்துப் பெயர்களுமே இறை நாமங்களாகத் தோன்றும்' என ஸ்ரீ ராமஸ்வரூப் கர்க் என்பவர் கூறுகின்றார்.5. ஸம்ஸ்க்ருத மொழியில் ஒரு இழிச்சொல் கூட கிடையாது!::
இந்த அற்புத மொழியின் சிறப்பைப் பற்றிக் குறிப்பிட வருகையில், வார்த்தைகளின்றித் தவிக்கிறோம்! இத்தனை ஆயிரம் சொற்கள் இருந்தபோதும், இந்த ஸம்ஸ்க்ருத மொழியில் 'பூட்டு' என்பதைக் குறிக்கும் ஒரு சொல் கூட இல்லை என்பதை அறிந்து அதிசயிக்கிறோம்! ஏன் இப்படி? கௌத்ஸ என்பவர் குருதக்ஷிணை அளிப்பதற்கென, குபேரன் ரகுராஜப் பட்டணம் முழுவதிலும் தங்கக் காசுகளைப் பொழிந்தானாம். ஆனால், ஒரு காசைக் கூட அந்த நாட்டு மக்கள் எடுக்கவில்லையாம். அந்த தேசத்தில் திருட்டு பயமே இல்லாததால், அவர்களுக்கு பூட்டு என்பதன் அவசியமே இருந்திருக்கவில்லை!ஸம்ஸ்க்ருத மொழியில் எந்தவொரு இழிச்சொல்லும் இல்லை. 'மத்'[பைத்தியம்] எனும் ஒரு சொல் ஏதோ ஓரளவுக்கு வேண்டுமானால் இழிச் சொல்லாகச் சிலர் கருதிக் கொள்ளலாம். மொழியின் சிறப்பால், மக்களின் நன்னடத்தை புரிகிறது. எனவே, நாங்கள் சொல்ல விரும்புவதெல்லாம் இதுவே:: 'ஸம்ஸ்க்ருதம் கற்று நன்னடைத்தையில் உயர்க!'
Tags; சமஸ்கிருதம் என்பதன் பொருள், சமஸ்கிருதம் என்று அழைக்கப்படும், சமஸ்கிருதம் மந்திரம், சமஸ்கிருதம் கற்க, சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம்
No comments:
Post a Comment