காசி நகரின் துர்க்கா தேவி ஆலயத்தில் அம்பிகையைத் தரிசித்து விட்டு ஓர் ஒற்றையடிப் பாதை வழியாகத் திரும்பி கொண்டிருந்தார் .அந்த ஒற்றையடிப் பதையில் ஒரு புறத்தில் ஒரு பெரிய குளம். இன்னொரு புறத்தில் மதில் சுவர் . சுவாமிஜி அந்தப் பதையில் சென்று கொண்டிருந்த போது சில குரங்குகளை காண்டார் , அவை உருவத்தில்
பெரியவை , கறுத்த முகமும் கொடிய பார்வையும் கொண்டவை . தன் முன் வந்து நின்ற குரங்குக் கூட்டத்தைக் கண்டு அஞ்சித் திரும்பி வந்த வழியே நடக்க தொடங்கினார் சுவாமிஜி .
அவரைத் துரத்தத் தொடங்கியது குரங்குகள் கூட்டம் .நடக்க தொடங்கியவர் பிறகு ஓடத் தொடங்கினார் . இவர் ஓடுவதைப் பார்த்த குரங்குகள் கூட்டம் அதிவேகமாக இவர் பின்னால் ஓடி வந்தன .இந்தக் குரங்குகளை எப்படி சமாளிப்பது என்று தெரியவில்லையே, என்ற நிலையில் மூச்சிரைக்க ஓடிக்கொண்டிருந்த வரை பார்த்த முதியவரான ஒரு துறவி
சுவாமிஜியின் பரிதாப நிலையைப் பார்த்து விட்டு "face the brutes "என்று கத்தினார் .இந்த வார்த்தைக்களைக் கேட்டதும் ,சுவாமிஜிக்குப் பொறி தட்டியது போல இருந்தது.அவ்வளவுதான் ஓடிக்கொண்டிருந்த சுவாமிஜி நின்று குரங்குகளை முறைத்து பார்த்தார் .முதலில் ஒடி வந்த குரங்குகள் பின் மெதுவாகப் பின் வாங்க தொடங்கியது .அப்புறம் திரும்பி ஓடியேவிட்டன .
பிற்காலத்தில் சுவாமிஜி தமது சொற்பொழிவில் இந்தச் சம்பவத்தை விவரித்துவிட்டுக் கூறியதாவது . ''அன்றுதான் என் வாழ்வில் புதிய பாடம் ஒன்றைக் கற்று கொண்டேன் .வாழ்க்கையில் நம்மைப் பிரச்சனைகள் எதிர்கொள்கின்ற போது அவற்றை எதிர்கொள்ள முடியாமல் அஞ்சி ஓடினால் அவை நம்மை வேகமாகத் துரத்தும்.மேலே விழுந்து கடிக்கும் .ஆனால் நாம் அந்தப் பிரச்சனைகளைத் துணிச்சலோடு எதிர்கொள்வோமானால் அவை இல்லாமலே போய்விடும் .பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான முதல்படி அவற்றை எதிர்கொள்வதே

No comments:
Post a Comment