Monday, April 27, 2015

இரவு உறங்க செல்லும் முன்விபூதி தாரணம்செயய்து விட்டு தான் உறங்க வேண்டும்


இரவு உறங்க செல்லும் முன்விபூதி  தாரணம்செயய்து விட்டு தான் உறங்க வேண்டும் காலையில்எழுந்த உடன் விபூதி தரிக்க வேண்டும் தலை மாட்டில் விபூதி பையை வைத்துஇருப்பது உத்தமம்
விபூதி தாரண பலன்
விபூதியை யணிந்தவர் எவ்விடத்திற் போசனஞ் செய்கின்றாரோ அவ்விடத்திற் பார்வதி சமேதராகிய பரமசிவனும் உண்கின்றனர். உடம்பு முழுதுந் திருநீற்றை யணிந்தவரை எவர் பின்செல்கின்றனரோ அவர்கள் மகாபாதகராயினும் பரிசுத்தராகின்றனர் எனச் சூரசங்கிதை கூறுகின்றது. காலை, உச்சி, மாலையென்னு முக்காலங்களினுந் தரிக்கின்ற மெய்யன்பர் எக்குலத்தவராயினும் அவரைச் சிவபெருமான் என்றே பாவிக்கக்கடவர் என மானவ சங்கிதையிற் சொல்லப்பட்டிருக்கின்றது. மெய்யன்புடன் விபூதிதரிப்பவரைச் சிவபெருமான் நீங்காது நிற்பர். அதனால் சர்ப்பம், சூரியன் முதலிய கிரகங்கள், நட்சத்திரங்கள், திசைத் தெய்வம், யமன், காலன், யமதூதர், அக்கினி, கொடுநோய்கள், அவுணர், இடி, பூதங்கள், சிங்கம், புலி, கரடி முதலிய கொடியனவற்றால் வருந் துன்பங்கள் அவரை யணுக மாட்டா வாம். அவர் இருவினைகளையும் வென்று சிவஞானம் பெற்று முத்தியடைவார் என்பது சத்தியம், முக்காலுஞ் சத்தியமே யாம்.
பகைபிணி மண்ணைபன் மந்தி ரத்தினாமிகையறன் கடையுள வெருட்சி பித்திடர்வகையெனைத் தையுமற மாற்றி யாவர்க்குந்தகைநல மளிப்பது தவள நீறரோ.
- தணிகைப் புராணம்

No comments:

Post a Comment