Tuesday, September 11, 2012
தீப பரிகாரம் /தோஷம் நீங்க ஏற்ற வேண்டிய தீபங்கள்
1 தீபம்: மன அமைதி
9 தீபங்கள்: நவக்கிரக பிணி நொடியில் அடங்கும்.
12 தீபங்கள்: ஜென்ம ராசியில் உள்ள தோஷம் நீங்கும்.
18 தீபங்கள்: சக்தி தரும் சக்தி தீபம்.
27 தீபங்கள்: நட்சத்திர தோஷம் நீங்கும். நல்லன கிட்டும்.
48 தீபங்கள்: தொழில் வளரும், பயம் நீங்கும்.
108 தீபங்கள்: நினைத்த காரியம் கை கூடும்.
508 தீபங்கள்: திருமண தடை நீங்கும்.
1008 தீபங்கள்: சந்தான பாக்கியம்.
. ராகு தோஷம் -21 தீபங்கள்
2. சனி தோஷம் -9 தீபங்கள்
3. குரு தோஷம் -33 தீபங்கள்
4. துர்க்கைக்கு 9 தீபங்கள்
5. ஈஸ்வரனுக்கு 11 தீபங்கள்
6. திருமண தோஷம் -21 தீபங்கள்
7. புத்திர தோஷம் -51 தீபங்கள்
8. சர்ப்ப தோஷம் -48 தீபங்கள்
9. கால சர்ப்ப தோஷம் -21 தீபங்கள்
10. களத்திர தோஷம் -108 தீபங்கள்
கவலை போக்கும் தீபம் வழிபாடு
தீபத்தில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி என்ற 3 சக்திகளும் உள்ளன. தீப ஒளி புற இருளை அகற்றுகிறது. தீப பூஜை உள்ளத்தின் இருளைப் போக்குகிறது. அதாவது தீய சிந்தனைகள் ஏற்படாத வண்ணம் தடுக்கிறது. மனதில் உள்ள கவலைகளைப் போக்குகிறது. தினமும் மாலையில் தீபம் வைத்து வணங்கிப் பூஜை செய்ய வேண்டும்.
பொது இடங்களில் பலரும் சேர்ந்து கூட்டாகத் தீபவழிபாடு செய்யலாம். வீட்டிலே சாமிக்கு முன்னால் சின்னதாக அகல் விளக்கு ஏற்றி, மணி நேரமாவது எரிவதற்கு எண்ணை விட்டு, பூட்டுபோட்டு, தேவியை மனதில் தியானித்துப் பூஜை செய்ய வேண்டும். அப்படிச் செய்பவர்களுக்கு வாழ்க்கையில் எல்லாக் கஷ்டங்களும் நீங்கி எல்லாவிதமான சந்தோஷங்களும், சவுபாக்கியங்களும் ஏற்படும். வீட்டிலே நாம் இம்மாதிரி தீபபூஜை செய்யும்போது, பக்கத்திலேயே குழந்தைகளை வைத்துக்கொண்டு செய்ய வேண்டும். அவர்களையும் நல்ல சுலோகங்களை பாடல்களைப் படிக்க வைத்து பூஜையில் ஈடுபடுத்த வேண்டும்.
தினமும் காலையிலும், மாலையிலும், வீட்டிலும், வியாபார இடங்களிலும் விளக்கேற்றி வழிபட்டு வருபவர்களின் வறுமை அகலும். லட்சுமியின் அருள் கிடைக்கும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment