Tuesday, September 11, 2012
பிதுர் தோஷ பரிகாரம்
பலமான பிதுர்தோஷம் உள்ளவர்கள் காசி அல்லது ராமேஸ்வரத்தில் வேதம் அறிந்த பண்டிதர்களால் திலா ஹோமம் செய்தால் பிதுர் தோஷங்கள் நீங்கும், திலா ஹோமம் எனப்படுவது நெல்லையும், எள்ளையும் கலந்து செய்யப்படும் ஹோமமாகும்.
காலையில் எள் நீரால் தர்ப்பணத்தை கடற்கரையில் கொடுத்து விட்டு பின்னரே திலா ஹோமம் செய்ய வேண்டும். திலா ஹோமம் செய்பவர்கள் அன்று இரவு தலத்தில் தங்கி போக வேண்டும். ராமேஸ்வரம் கோவில் முன்புள்ள தீர்த்தம் அக்னி தீர்த்தம்.
இது ராமேஸ்வரத்தில் உள்ள தீர்த்தங்களில் மிக முக்கியமானது. மகாவிஷ்ணு ராம அவதாரம் எடுத்த பின்பு அக்னி தீர்த்தத்தில் நீராடி சிவபெருமானை பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.
சீதை தீக்குளித்த போது அக்னி தேவன் சீதா தேவியை தீண்டிய பாவத்தை போக்க அக்னி தீர்த்தத்தில் நீராடியதால் இது அக்னி தீர்த்தம் எனப்படுகிறது. அக்னி தீர்த்தத்தில் நீராடினால் கடுமையான பிதுர் தோஷங்கள் நிவர்த்தியாகும். ராமேஸ்வரத்தில் மட்டும் எல்லா நாட்களிலும் பிதுர் தோஷப் பரிகாரம் செய்யலாம்.
பிதுர் தோஷ பரிகாரம்
நம் குடும்பத்தில் மறைந்த முன்னோர்க்கு தர்ப்பணம் செய்யாமல் போனால் பிதுர் தோஷம் ஏற்படும். இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி குறையும். நன்மைகள் தடைபடும். சிலருக்கு கனவிலும் வந்து ஏதாவது தேவைகளைக் கேட்கக்கூடும். சிலர் வயதான காலத்தில் பெற்றோரைச் சரிவர கவனிக்காமல் விட்டு, அவர்களின் இறப்புக்கு பின் பிதுர் சாபத்திற்கு ஆளாவதும் உண்டு.
இந்த தோஷம் நீங்க அமாவாசை விரதம் இருந்து, பசுமாட்டிற்கு புல்,கீரை,பழம் கொடுத்து வழிபட வேண்டும். காலையில் நீராடி, பசுவை மும்முறை வலம் வந்து, வணங்கவேண்டும். வசதியிருப்பவர்கள் சமுத்திரக்கரையில் நீராடி, ஏழை அந்தணருக்கு பசுவும் கன்றும் தானம் கொடுக்கலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment