Sunday, September 30, 2012

சமஸ்கிருத நாளிதழ்--சமஸ்கிருதம் பேசும் ஒரிசா கிராமம்

சமஸ்கிருதம் பேசும் ஒரிசா கிராமம்; மத்திய அரசின் அட்டவணையைப் பட்டியலில் சமஸ்கிருதம் இருந்தாலும், இன்று சமஸ்கிருதம் என்பது, பேச்சு மொழியாக இந்தியாவில் இல்லை. உலக செம்மொழிகளில் தமிழ் மட்டுமே, வழக்கத்தில் உள்ள பேச்சு மொழியாக உள்ளது. சமஸ்கிருதம் தற்போது இலக்கிய, பாட மொழியாக மட்டுமே உள்ளது. கோயில்கள், ஆன்மிக நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்படும் மொழியாக உள்ளது. யு.ஜி.சி.,யால் அங்கீகரிக்கப் பட்ட சில பல்கலைக்கழகங்கள் நடத்தும் எம்.ஏ., சமஸ்கிருதம் கூட, ஆங்கில மொழியில் தான் கற்பிக்கப்படுகிறது. தேர்வுகளும் ஆங்கில மொழியில் தான் எழுதப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் உள்ள மாத்துரைத் தொடர்ந்து, ஒரிசா மாநிலத்தில் கந்தர்புரா மாவட்டத்தில் சியாம்சுந்தர் கிராம் பஞ்சாயத்தில் உள்ள சசனா கிராமம், சமஸ்கிருதம் பேசும் கிராமமாக மாறியுள்ளது. சமஸ்கிருத மொழி மட்டுமின்றி, பாரம்பரிய வரலாற்றை வெளிப் படுத்தும் வகையில், இந்த கிராமத்தின் பழக்க வழக்கங்கள் உள்ளன. மொழியியல் வல்லுனர்கள் இந்த கிராமத்தை வந்து பார்ப்பதால், சசனா கிராமம் ஒரிசாவின் புகழ்பெற்ற கிராமமாக மாறி வருகிறது. சம்ஸ்க்ருதம் சரளமாக பேசப்பட்டு வருகிறது. அது தமிழிலும் மற்ற மொழிகளிலும் கலந்திருப்பதால் அது சமஸ்க்ருதப் புழக்கம் என்பது உணரப்படுவதில்லை. கர்நாடக மாநிலத்தில் சிமோகா அருகில் உள்ள மதூர் என்ற கிராமத்தில் 3,000 பேர் இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் தம் வீடுகளிலும், பள்ளிகளிலும், அலுவலகங்களிலும் அங்காடிகளிலும், வயல்வெளிகளிலும் பேசும் மொழி சம்ஸ்க்ருதம். இந்த ஊரைச் சேர்ந்தவர்கள் 150 பேர் தகவல் தொழில் நுட்பத் துறையில் பணியாற்றுகின்றனர் என்பது கூடுதல் தகவல். ‘சம்ஸ்க்ருத பாரதி’ என்ற இயக்கத்தின் முயற்சியால் லட்சக்கணக்கானவர்கள் சம்ஸ்க்ருதத்தில் உரையாடும் திறன் பெற்றுள்ளனர். இதற்கான வகுப்புகள் இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கிலும் நடக்கின்றன. சமஸ்க்ருதப் பேச்சுப் பயிற்சி அளிப்பதற்காக 250 முழு நேர ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். பகுதி நேரமாக 5,000 ஊழியர்கள் வகுப்புகளை நடத்துகின்றனர். கடந்த 25 வருடங்களாக இந்தப்பணி நடைபெறுகிறது. சமஸ்க்ருத மொழியில் நடத்தப்படும் இதழ்கள் இப்போது நூற்றுக்கும் மேற்பட்டவையாகும். இதில் குழந்தைகளுக்கான மாத இதழான ‘சந்தாமாமா’ வும் உண்டு. டாக்டர். வே. ராகவன் என்ற அறிஞர் சமஸ்க்ருத நாடகங்களையும், சிறு கதைகளையும் எழுதியிருக்கிறார். தாய்லாந்துநாட்டு மொழியில் சமஸ்க்ருத அகராதியைத் தயாரித்திருக்கிறார் சத்ய விரத சாஸ்திரி என்ற அறிஞர். இந்தப் பணியைப் பாராட்டி 2008 ஆம் ஆண்டுக்கான ஞான பீட விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஜீ.வி. ஐயர் என்ற புகழ்பெற்ற இயக்குனர் எடுத்த சமஸ்க்ருத திரைப்படங்களை லட்சக்கணக்கானவர்கள் பார்த்து ரசிக்கின்றனர். தொலைக்காட்சியில் சமஸ்க்ருதச் செய்தியும் ஒளிபரப்பாகிறது. எம்.ஐ.டி. என்றழைக்கப்படும் அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் விண்வெளி ஆராய்ச்சியாளர் ஒருவர் சமஸ்க்ருத வகுப்புகளை நடத்துகிறார். ஹார்வர்டு, யேல் மற்றும் சிகாகோ பல்கலைக்கழகங்களில் சமஸ்க்ருதப் பாடத்திட்டம் உள்ளது. கலிபோர்னியா, பிட்ஸ்பர்க், நியூயார்க் மற்றும் டல்லச் ஆகிய நகரங்களில் சமஸ்க்ருதப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சமஸ்க்ருதப் பட்டப்படிப்பு உள்ளது. ஆகவே, ‘சம்ஸ்க்ருதம் பேச்சு வழக்கில் இல்லாத மொழி’ என்பது தவறான தகவல். சம்ஸ்க்ருதம் தன்னுடைய உயிரோட்டத்தை இழந்து விட்டது’ என்று எந்த மொழியறிஞரும் கூறவில்லை. ஆங்கிலேயர்களின் தேசிய கீதம் ‘god save the king’ இந்த மெட்டில் ஸந்ததம் பாஹிமாம் என்ற பாடலை எழுதினார் திருவாரூரில் வாழ்ந்த ஸ்ரீ முத்துசுவாமி தீட்சிதர். ஸ்ரீ முத்துசுவாமி தீட்சிதரின் சமஸ்க்ருதக் கீர்த்தனைகளை இப்போதும் ஆயிரக்கணக்கானவர்கள் ரசித்துக் கேட்கிறார்கள். சம்ஸ்க்ருதம் இப்போதும் புத்துணர்வோடும் புத்துயிரோடும் இருக்கிறது என்ற காரணத்தால் தமிழகத்தின் முக்கியப்புள்ளி ஒருவர் எழுதிய நூல் ஒன்று சமஸ்க்ருதத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. அந்த முக்கியப் புள்ளி தமிழக முதல்வர் மு. கருணாநிதி. அவர் எழுதிய குறளோவியத்தின் சமஸ்க்ருத மொழிபெயர்ப்பு வெளிவந்துள்ளது. மொழிபெயர்த்தவர் கண்ணன். இவர் தனித்தமிழ் இயக்கத்தின் தலைவரான கி.ஆ.பெ. விசுவநாதத்தின் மருமகன். உலகின் ஒரே சமஸ்கிருத நாளிதழ் உலகின் ஒரே சமஸ்கிருத நாளிதழாக வெளியாகி வரும் "சுதர்மா” பத்திரிகை ஆதரவு இன்றித் தள்ளாடி வருகிறது. தற்போது 43ம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் சுதர்மா நாளிதழ் பல்வேறு ஜாம்பவான்கள் ஆதரவளித்து நடத்தி வந்த நிலையில், தற்போது கணவன் - மனைவி இருவரால் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இதற்குத் தேவையான பொருளாதார பலத்தை அதன் ஆலோசகர்களால் அளிக்க முடியாத சூழ்நிலையில், பத்திரிகை நடத்துவது கேள்விக்குறியாகி வருவதாக அதன் வெளியீட்டாளர் ஜெயலட்சுமி வருத்தத்துடன் கூறியுள்ளார். சுதர்மா இதழின் ஆசிரியர் சம்பத் குமார் இது பற்றிக் கூறியபோது, பல்வேறு தடைகளையும் தாண்டி பத்திரிகையை நடத்தி வருகிறோம். இது எங்களுக்கு ஒரு இயக்கத்தைப் போன்றது என்றார். இவர் அண்மையில் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு இரண்டு மாதங்களுக்குப் பிறகு தற்போதுதான் அலுவலகம் திரும்பியுள்ளார். "நாங்கள் எக்காரணம் கொண்டும் முன்வைத்த காலை பின்வாங்கப் போவதில்லை. லட்சியத்துடன் நடத்துகிறோம். ஆனால் எங்களுக்கான ஆதரவாளர்கள் குறைந்து வருகின்றனர். 4 ஆயிரம் சந்தாதாரர்கள் மற்றும் பள்ளி கல்லூரி அமைப்புகளை வைத்தே இயங்குகிறோம். செய்தி, செய்திக் கண்ணோட்டம் என நாளிதழுக்கான அம்சங்களுடன் இயங்கி வருகிறோம். சம்ஸ்கிருத மொழி மற்றும் இலக்கியத்தின் வரலாற்று முக்கியத்துவத்தை அனைவரும் உணரவேண்டும். கர்நாடக மாநில அரசின் விளம்பரத்துறை மற்றும் டிஏவிபி இயக்குநரகம் விளம்பரம் தந்து ஊக்குவிப்பதில் அலட்சியம் காட்டுகிறது” என்றார் வெளீயீட்டாளர் ஜெயலட்சுமி. சுதர்மா இதழ், சம்பத்குமாரின் தந்தையார் வரதராஜ ஐயங்காரால் 1970ல் தொடங்கப் பெற்றது. தன் தந்தையார் மரணப் படுக்கையில் இருந்தபோது, எக்காரணம் கொண்டும் அவர் தொடங்கிய பத்திரிகையை மூடமாட்டேன் என்று சத்தியம் செய்து கொடுத்தாராம் சம்பத் குமார். அதன் பின்னர் பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையிலும் தொடர்ந்து நடத்தி வருகிறேன் என்கிறார் அவர். மேலும், நாட்டின் கௌரவத்தை உலக நாடுகளுக்குப் பறைசாற்றும் ஒரு மொழியினை நாம்தான் பாதுகாக்க வேண்டும். உலகமயமாக்கல் அதிகரித்தபிறகு ஆங்கிலமே அனைத்துக்கும் என்று நாம் எண்ணி மாய்ந்து போகிறோம். இந்த நிலை மாற வேண்டும் என்றார் சம்பத் குமார்

No comments:

Post a Comment