தெய்வ மூலிகையாம் துளசியின் மகிமை அளவு கடந்தது.
2) துளசி விஷ்ணுவிற்கு உகந்தது.
3) ஈசுவரன், குபேரன், இந்திரன், அக்னி, பார்வதி, முருகன் ஆகியோர் துளசியை
வழிபட்டனர்.
4) துளசியை வணங்குவதால் நற்குலம், ஒழுக்கம், மக்கள்பேறு, செல்வம், கல்வி,
நோயற்ற வாழ்வு, வியாபாரம் முதலியன பெருகும்.
5) துளசி 400 விதமான நோய்களை போக்கும்.
6) சல்லிய கரணி என்னும் உயிர் ஊட்ட சக்தியை துளசி வழங்குகிறது என ஆயுர்வேத
நூற்கள் கூறுகின்றன.
7) துளசிச் செடியினை வளர்த்து, நீர் பாய்ச்சி, ஆண்களும் பெண்களும் வழிபட
வேண்டும்.
8) துளசிச் செடியின் வேர் மண்ணை நெற்றியில் இட்டுக் கொள்ள வேண்டும்.
9) திருமணம் ஆகாத பெண்கள் தான் விரும்பிய கணவனை அடையவும், சுமங்கலிப் பெண்கள்
மாங்கல்யம் நிலை பெறவும் துளசியை வழிபட வேண்டும்.
10) வாஸ்து தோஷம் நீங்க துளசி மாடத்தில் துளசியை வைத்து வழிபடலாம்.
No comments:
Post a Comment