அபயம், வரத முத்திரை
அபய முத்திரை என்பது, இறைவன் அல்லது இறைவியின் வலது கை விரல்கள் மேல் நோக்கி நீட்டிய நிலையிலும், உள்ளங்கை எதிரில் இருக்கும் பக்தர்களுக்கு அடைக்கலம் தரும் நிலையிலும் இருப்பது. இந்த முத்திரைதான் எதிரில் நின்று தன்னை வணங்கும் பக்தர்களுக்கு `யாமிருக்க பயம் ஏன்? உன்னை காப்பாற்றுவேன்’ என உணர்த்துவதாக உள்ளது.
வரத முத்திரை என்பது, இறைவன் அல்லது இறைவியின் இடது கை உள்ளங்கை எதிரில் இருக்கும் பக்தர்களின் பக்கமும், விரல்கள் திருவடிகளை சுட்டிகாட்டிய நிலையிலும் இருக்கும். இது இறைவன், என் திருவடிகளை பற்றினால் அனைத்து நன்மைகளையும் பெறலாம், முக்தி பெறுவீர்கள் என்பதை உணர்த்துவதாக உள்ளது.
பயனுள்ள செய்தி மிக்க நன்றி
ReplyDeleteநன்றி
ReplyDelete