ரத்னாகரன் என்பவன் காட்டின் வழியே வரும் வழிப்போக்கர்களை மிரட்டி கொள்ளையடித்து வந்தான்.ஒருநாள் அவ்வழியே வந்த நாரதரை வழி மறித்தான்.தன்னை ஒரு முனிவர் என்றும் ,தன்னிடம் பொருள் எதுவும் இல்லை என்றும் தெரிவித்தார்.
அத்துடன் நாரதர் ,"ஏனப்பா இந்ததீய செயல்களில் ஈடுபட்டு பழி, பாவங்களை சுமக்கிராயே ? "என்றார். "ஐயா என் மனைவி ,மக்களை காப்பாற்றுவதற்காக இச்செயல்களைச் செய்து வருகிறேன் என்றான். அது சரி நீ செய்யும் இந்த பாவத்தில் உன் மனைவி, மக்களும் பங்கு கொள்வார்களா?"என்றார்.
இதில் என்ன சந்தேகம் .நிச்சயமாய் பாவத்தில் ஒரு பங்கு அவர்களுக்கும் உண்டு "என்றான் திருடன். நீ போய் உன் மனைவி, மக்களிடம் கேட்டு வந்து பதில் சொல் . அதுவரையில் நான் இங்கேயே இருக்கிறேன்"என்றார் நாரதர்.
சரி என்று சொல்லிவிட்டு தான் குடிசைக்கு வந்து மனைவி மக்களிடம், "நான் செய்யும் பாவத்தில் உங்களுக்குப் பங்குஉண்டு தானே ?"என்று கேட்டான். அதற்கு அவன் மனைவி ,"எங்களைக் காப்பாற்றுவது உன் கடமை .நீ செய்யும் பாவங்களுக்கு எவ்வித பங்கும் இல்லை "என்று திட்டவட்டமாக கூறினாள். இதை கேட்டு அவன் அதிர்ச்சி அடைந்தான்.
நடந்த விஷயங்களை நாரதரிடம் தெரிவித்து அவர் காலில் விழுந்து தன்னைக் காப்பாற்றும்படி வேண்டினான். நாரதர் ,"சரி கவலைப்படாதே இந்த மரத்தடியில் உட்கார்ந்து மரா மரா என்று சொல்லிக் கொண்டு இரு ".நான் திரும்பி வரும்வரை தியானம் செய் "என்று சொல்லிவிட்டுச் சென்றார்.
வருடக் கணக்கில் அவனது தியானம் தொடர்ந்தது .மரா மரா என்று அவன் உச்சரித்தது ராம ராம என்று சொல்வது போல்அயிற்று .அவனை சுற்றி புற்று உருவாகி மூடிவிட்டது . ஒரு நாள் நாரதர் திரும்ப அதே பதை வழியாகவே வருகிறார் .புற்று மூடி இருந்த அவனை அழைத்து அவனுக்கு 'வால்மீகி 'யன பெயரிட்டார் . "நீ ராமாயணம் இயற்றி இறவாப் புகழ் பெறுக "என ஆசீர்வதித்தார் இந்த ரத்னாகரன் தான் ராமாயணம் எழுதிய வால்மீகி மகரிஷீ ஆவார்

No comments:
Post a Comment