Thursday, April 23, 2015

பற்றில்லாத வாழ்வில் உள்ளவனுக்கே ஆத்மா ஞானம் கிடைக்கும்

கதாபோனிஷத் என்ற உபநிஷத்தில் பல நீதிக் கதைகள் உள்ளன. இது அவற்றில் ஒன்றாகும்.முன்னொரு காலத்தில் பரத கண்டத்தில் உத்தாலகா என்ற முனிவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு நாச்சிகேடா என்ற மகன் உண்டு. அவன் தந்தைக்கு கீழ் படித்து நடப்பவன். அவரை மீறி எதையும் செய்ய மாட்டான். ஒழுக்க சீலன். உத்தாலகா நல்லவரே
என்றாலும், முனிவராக இருந்தாலும் பொருளாசைக் கொண்டவர். அவர் அவ்வபோது யாகங்கள், பூஜைகளை செய்து அனைவரையும அழைத்து சிறிய அளவில் தானம் தருவார்.
அவரிடம் ஏராளமான பசுக்களும் இருந்தன. அவற்றில் பல நோஞ்சான் பசுக்களும் இருந்தன. அவற்றை பராமரிப்பதே பெரும் காரியமாக இருந்தது. அவற்றை கொல்லவும் முடியாது, விரட்டவும் முடியாது. அப்படி செய்தால் லஷ்மி தேவியை அவமதித்தக் குற்றம் ஆகிவிடும்.
இப்படி இருக்கையில் ஒருமுறை உத்தாலகா பெரிய பூஜை ஒன்றை செய்தார். பூஜை முடிவில் அங்கு வந்திருந்த பிராமணர்களுக்கு அந்த நோஞ்சான் பசுக்களை தானமாகத் தந்து அனுப்பினார். 'ஆஹா, பசுக்களை தானம் தருகிறாரே, எத்தனைப் பெரிய மனது' அவருக்கு என அவரை வாயார வாழ்த்தி விட்டுப் போனார்கள். ஆனால் அவர் தானம் தந்திருந்த பசுக்கள் அனைத்துமே நோஞ்சான் பசுக்கள். அவற்றுக்கு போடும் தீனிக்கான காசு கூட அவை கொடுக்கும் பால் மூலம் கிடைக்காது என்பது பிறகே அதை தானமாக பெற்றவர்களுக்கு தெரிய வந்தது.
தன்னுடைய தந்தை செய்தது நாச்சிகேடாவிற்கு பிடிக்கவில்லை. ஆகவே பூஜை முடிந்து அனைவரும் சென்றப் பின் தனது தந்தையிடம் சென்று அவன் அவர் செய்த காரியம் குறித்து தனது வருத்தத்தைக் கூற அவரும் கோபமுற்று அவனை 'உன்னால் எனக்கு பெரிய ரோதனை ஏற்படும் போல் தெரிகிறது. எங்காவது சென்று செத்துப் போ' என்று கூறி விட்டார். அதுவே சாபம் போல் ஆகி அவன் மரணம் அடைந்து விட்டான்.

மரணம் அடைந்தவனின் ஆத்மா மேலுலகம் சென்றது. ஆனால் அப்போது யமராஜர் யமலோகத்தில் இல்லை. அவர் திரும்பி வருவதற்கு மூன்று நாட்கள் ஆகும் என்பதினால் அவனை மூன்று நாட்கள் அவர் தர்பாரின் வாயிலில் அமர வைத்து இருந்தார்கள். அவன் வாழ்க்கையில் முழுவதுமாக புண்ணியம் செய்தவன் என்பதினால் அவனை யமலோகத்துக்கு அனுப்பவில்லை. யமனின் ஆணையைப் பெற்றுக் கொண்டு சொர்கத்துக்கு அனுப்ப வேண்டி இருந்தது. யமனின் ஆணை இல்லாமல் அவர்கள் ஆத்மாக்களை வேறு இடத்துக்கு அனுப்ப இயலாது.

மூன்று நாட்களுக்குப் பிறகு யமராஜர் திரும்பி வந்தார். வந்தவர் நாச்சிகேடாவைப் பார்த்து வருத்தம் அடைந்தார். ஒரு பிராமணனை இப்படி வாயிலில் அமர வைத்து விட்டோமே. அதுவும் ஏராளமான புண்ணியங்களை செய்துள்ளவனை அப்படி விட்டு வைத்தது தவறு என உணர்ந்தவர் சிறுவன் என்றும் பாராது அவனிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டு தான் செய்த தவறுக்கு மூன்று வரங்களை அவனுக்கு அளிப்பதாகக் கூறி விட்டு, 'உனக்கு என்ன வரம் வேண்டும். கேள். தருகிறேன்' என்றார்.

நாச்சிகேடாவும், தன்னுடைய தந்தை செய்துவிட்ட தவறை மன்னித்து அவர் இறந்தப் பின் அவருக்கு சொர்கத்தை தர வேண்டும் என்று கேட்டான். அதை அவனுக்கு யமராஜர் அருளினார். அடுத்து தனக்கு அடுத்தப் பிறவி ஏற்பட்டால் அதில் தான் முற்றிலும் மற்றவர்களுக்கு சேவை செய்யும் மனத்தைக் கொண்டவனாகவே பிறக்க இருக்க வேண்டும் என்று கேட்டான். அதையும் அவனுக்கு யமராஜர் அருளினார். மூன்றாவதாக அவன் தனக்கு ஆத்மா ஞானம் வேண்டும் என்றும் தான் விரும்பும்போது தன உடலை விட்டு வெளியேற உரிமை தர வேண்டும் என்றும் கேட்டதும், யமராஜார் துணுக்குற்றார். அப்படி செய்தால் தன்னுடைய சக்தியில் ஒன்றை அவனுக்கு தந்துவிட்டதாக ஆகிவிடுமே என்று பயந்தவர் அதைத் தவிர வேறு எதை வேண்டுமானாலும் கேள் தருகிறேன், செல்வம் வேண்டுமா, பொருள் வேண்டுமா, புகழ் வேண்டுமா என எதை எதையோ கேட்டும் அவர் கொடுப்பதாகக் கூறிய எதையுமே அவன் ஏற்க மறுத்து தனக்கு ஆத்மா ஞானமும் தான் விரும்பும்போது மரணம் அடையும் சக்தியை மட்டுமே வேண்டும் என்று கேட்க வேறு வழி இன்றி யமராஜரும் அவனுக்கு அதைக் கொடுக்க வேண்டி வந்தது. அதன் பின் நாச்சிகேட்டா எத்தனைப் பிறவி எடுத்தாலும், தான் விரும்பியபோது மரணம் அடைய முடிந்தது.

நீதி:
(1) அன்னையும் பிதாவும் முன்னேறி தெய்வம்
(2) மக்கள் சேவையே மகேசன் சேவையாகும்
(3) பற்றில்லாத வாழ்வில் உள்ளவனுக்கே ஆத்மா ஞானம் கிடைக்கும்

No comments:

Post a Comment