Thursday, September 6, 2012
கணபதிக்கு பிரியமான 21
கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்' என்பது ஆன்றோர் வாக்கு. இந்தியாவில் ஒரு சிறு கோவில்கூட இல்லாத கிராமத்தைக் காண்பது அபூர்வம். ஈடிணையற்ற தெய்வங்களான ஈசனுக்கும் பெருமாளுக்கும் எல்லா இடங்களிலும் கோவில் அமைத்துவிட முடியாது. ஆனால் பிள்ளையார் விஷயம் அப்படியில்லை. ஒரு தெருக்கோடியிலோ, முச்சந்தியிலோ விநாயகரை ஸ்தாபித்துவிடலாம். ஏன், வீட்டிலேகூட விளக்கு மாடம் போன்ற சிறு இடத்தில் பிள்ளையார் சிலையை நிறுவி வழிபடுபவர்கள் பலர். பசுஞ்சாணத்தையோ, மஞ்சளையோகூட கையால் பிடித்து பிள்ளையாராக உருவகித்து வழிபடுகிறோம்.
கணபதிக்கு பிரியமான 21
கணபதிக்குப் படைக்கப்படும் இலை, பூ,
அறுகம்புல், அதிரசம், அப்பம், கொழுக்கட்டை, பழம் போன்ற ஒவ்வொன்றும் 21 என்னும் எண்ணிக்கையில் இருக்க வேண்டும் என்பர். அதிலென்ன சிறப்பு?
ஞானேந்திரியங்கள்-5; கர்மேந்திரியங்கள்-5; அவற்றின் காரியங்கள் 5+5=10; மனம்-1. ஆக மொத்தம் 21. விநாயகரை பூஜிக்கும்போது ஞானேந்தி ரியங்களும் கர்மேந்திரியங் களும் ஒன்றுபடாவிட்டால் பலனில்லை. இதை நினைவு படுத்தவே 21 என்னும் எண்ணிக்கை.
மலர்கள் - 21
புன்னை, மந்தாரை, மகிழம், பாதிரி, தும்பை, அரளி, ஊமத்தை, சம்பங்கி, மாம்பூ, தாழம்பூ, முல்லை, கொன்றை, எருக்கு, செங்கழுநீர், செவ்வரளி, வில்வம், குருந்தை, பவளமல்லி, ஜாதிமல்லி, மாதுளம், கண்டங்கத்திரி.
இலைகள் - 21
மாசி, பருஹதி எனும் கிளா இலை, வில்வம், அருக்கு, ஊமத்தை, இலந்தை, நாயுருவி, துளசி, மாவிலை, தங்க அரளி, விஷ்ணு கிரந்தி, மாதுளை, மருவு, நொச்சி, ஜாதிக்காய் இலை, நாரிசங்கை, வன்னி, அரசு, நுணா, எருக்கு, தேவதாரு.
அபிúஷ்கப் பொருட்கள் - 21
தண்ணீர், எண்ணெய், சீயக்காய், சந்தனாதித் தைலம், மாப்பொடி, மஞ்சள் பொடி, திரவியப் பொடி, பஞ்சகவ்யம், ரஸப்பஞ்சாமிர்தம், பழப்பஞ்சாமிர்தம், நெய், பால், தயிர், தேன், கருப்பஞ்சாறு, பழ ரகங்கள், இளநீர், சந்தனம், திருநீறு, குங்குமம், பன்னீர். மேற்கண்ட விவரம் கணபதி பூஜா மந்திரத்தில் உள்ளது.
"பக்கரை விசித்திரமணி' எனத் தொடங்கும்
அருணகிரிநாதர் பாடலில் விநாயகருக்கு உகந்த 21 வகை நிவேதனப் பொருட்களின் பட்டியலைக் காணலாம்.
நிவேதனப் பொருட்கள் - 21
மோதகம், அப்பம், அவல், பொரிகடலை, கரும்பு, சுண்டல், சுகியன், பிட்டு, தேன், தினைமாவு, பால், பாகு, கற்கண்டு, சர்க்கரைப் பொங்கல், பாயசம், முக்கனிகள், விளாம்பழம், நாவற்பழம், எள்ளுருண்டை, வடை, அதிரசம்.
திதிக்குரிய கணபதி
பொதுவாக விநாயகருக்கு சதுர்த்தி திதி உகந்தது என்றாலும், ஒவ்வொரு திதிக்குமே அதற்குரிய கணபதிகள் உள்ளனர். அந்த நாளில் அதற்குரிய கணபதியை வழிபடுவது சிறந்த பலன் தரும் என்பர்.
பிரதமை- பாலகணபதி; துவிதியை- தருண கணபதி; திரிதியை- பக்தி கணபதி; சதுர்த்தி- வீர கணபதி; பஞ்சமி- சக்தி கணபதி; சஷ்டி- துவிஜ கணபதி; சப்தமி- சித்தி கணபதி; அஷ்டமி- உச்சிஷ்ட கணபதி; நவமி- விக்ன கணபதி; தசமி- க்ஷிப்ர கணபதி; ஏகாதசி- ஹேரம்ப கணபதி; துவாதசி- லட்சுமி கணபதி; திரயோதசி- மகாகணபதி; சதுர்த்தசி- விஜய கணபதி;
அமாவாசை, பவுர்ணமி- நித்ய கணபதி.
அந்தந்த திதிக்குரிய கணபதி நாமத்தை 108 முறை கூறி தோப்புக்கரணம் போட்டு பக்தியுடன் வணங்கி வந்தால்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment