Wednesday, September 5, 2012
கோமாதா பூஜை
அட்சய திரிதியை அன்று கோமாதா பூஜை கஜ பூஜை செய்வது மிகவும் நல்லது. யானைகளின் பெயரால் லட்சுமி கஜலட்சுமி என்றழைக்கப்படுகிறாள். அவள் பாற்கடலில் இருந்து வெளிப்பட்டதும், அஷ்டதிக் கஜங்கள் எனப்படும் எட்டு யானைகள் தமது மனைவியரான பெண் யானைகளுடன், அவளுக்கு மங்கல நீராட்டின என்று புராணங்கள் கூறுகின்றன.
பல்லவர்கள் அமைத்துள்ள குடைவறைக்கோவில்களில் பலவற்றில், யானைகள் நீரை முகந்து நீராட்ட, தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகளைக் காண முடியும். யானைகளின் பிளிறலை லட்சுமி விரும்பிக்கேட்கிறாள். என வேதமந்திரமான ஸ்ரீசூகதம் கூறுகிறது. பசுக்களின் ப்ருஷ்ட பகுதியிலும் (பின்பகுதி) லட்சுமி இருக்கிறாள்.
எனவே, பசுக்களின் பின்புறத்தில் மஞ்சள் பூசி, குங்குமம் இட்டு பூஜிக்கன்றனர். கோலட்சுமி என்று பசுக்களை அழைக்கின்றனர். கிரகப்பிரவேசம் நடந்தும்போது, பசுகளை வீட்டிற்குள் அழைத்துச் செல்வதன் மூலம் லட்சுமி தேவி முதலில் செல்கிறாள் என்பது ஐதீகமாக உள்ளது.
பசுக்கூட்டங்களுக்கு நடுவில் திருமகள் வீற்றிருக்கிறாள் என்று சிற்றிலக்கியத்தில் ஒன்றான சதக நூல் குறிப்பிடுகிறது. வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக சாணத்தால் மெழுகும் வழக்கம் உருவானது. எனவே கோமாதா பூஜை, கஜபூஜை செய்தால் லட்சுமி கடாட்சம் உண்டாகும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment