திருமால் வாமனராக அவதரித்ததும், ஐந்து வயதில் உபநயன நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. சூரியனே நேரில் வந்து வாமனருக்கு காயத்ரி மந்திரத்தை உபதேசம் செய்தார். பார்வதிதேவி முதல் (யாசகம்) இட்டாள். அப்போது பலாச தண்டத்தைக் கையில் ஏந்தி வாமனர் காட்சிஅளித்தார். பலாசதண்டம் வழங்குவதற்கு காரணம் ஒன்று உண்டு. பலாசம் என்பது ஒரு மரம். ஒருசமயம், வேதவிற்பன்னர்கள் பலர் ஒன்றுகூடி, பலாசமரத்தின் அடியில் அமர்ந்து காயத்ரி மந்திரத்தின் மகத்துவத்தைப் பேசினர். அம்மந்திரத்தில் மூன்று பாகம் இருப்பது போல, அந்த மரத்தின் இலைகளும் மூன்றுகூறாக மாறிவிட்டன.
No comments:
Post a Comment