Tuesday, September 4, 2012
துளி அளவு கங்கை தீர்த்தம் போதும்!
புண்ணிய நதிகளில் மகான்கள் வந்து குளிப்பதால் அது பாவங்களைப் போக்கக்கூடிய சக்தியைக் கூடுதலாக அடைகிறது. காசியில் தீபாவளி சமயத்தில் நீராடுவது மிகச் சிறந்ததாகும். இதனால் பித்ருக்கள் நலமடைவார்கள். அதனால் நமது குடும்பம் நலமாக இருக்கும். வறுமை நீங்கும். புத்திர பாக்கியம் ஏற்படும். சந்ததிகள் நலமாக இருப்பார்கள்.
காசியில் உள்ள விஸ்வநாதரின் தரிசனமும், தங்க அன்னபூரணியின் தரிசனமும் புண்ணிய பலனை அளிக்கக்கூடியது. கங்கையில் மடி, தீட்டு பார்ப்பது இல்லை. கங்கை நீரின் துளிகளைத்தலையில் தெளித்துக் கொண்டாலும் கங்கையில் நீராடிய பலன்களை அடைய முடியும்.
கங்கை நீரை சொம்பில் அடைத்து எடுத்து வந்து வைத்துக் கொண்டால் பல காலம் அது கெட்டுப் போகாமல் இருக்கும். அந்தப் புண்ணிய நீரை மரணம் அடைந்தவர்களின் சரீரத்தில் தெளித்தாலும் அதனால் முழுக்காட்டினாலும் காசியில் மரணமடைந்த புண்ணியம் உண்டாகும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment