Monday, September 3, 2012
சனிக்கிழமை மாவிளக்கு
மாவிளக்கு வழிபாடு நமது கோயில்களில் முக்கியமானது. திருப்பதி வெங்கடேசப் பெருமாளை மனதில் எண்ணியும் சிலர் வேண்டுதல் வைத்து மாவிளக்கு ஏற்றுவர். முதலில் நமது கோரிக்கையை வெங்கடாஜலபதியை மனதில் நினைத்துச் சொல்ல வேண்டும். அது நிறைவேறியதும், சனிக்கிழமை அல்லது திருவோண நட்சத்திரத்தில் நம் வீட்டு பூஜையறையில், வெங்கடாஜலபதி படம் வைத்து மாவிளக்கு ஏற்ற வேண்டும். நெய் தீரும் வரை விளக்கை அணைக்கக்கூடாது. தவறுதலாக காற்றில் அணைந்தால் திரும்ப ஏற்ற வேண்டும். விளக்கு முழுமையாக எரிந்து தானாக அணைந்ததும், குழந்தைகளுக்கும், அருகிலுள்ளவர்களுக்கும் மாவை கொடுக்க வேண்டும். இந்த வேண்டுதலை சனிக்கிழமைகளில் செய்வது மிகமிக சிறப்பு.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment