Tuesday, September 11, 2012
கிருஷ்ணன் திருப்பாதத்தின் மகிமை
கிருஷ்ணஜெயந்தியன்று குழந்தை பாத சுவட்டை மாக்கோலமாக வரைவது நாடெங்கும் எல்லா இடங்களிலும் மரபுவழி பழக்கமாக உள்ளது. இப்படி பாதம் வரைவதில் சைவ- வைணவ ஒற்றுமை இருப்பதாக சொல்கிறார்கள். குழந்தைகளின் பாத வடிவ சுவடு பார்ப்பதற்கு எட்டு (8) போன்ற வடிவுடன் இருக்கும். அதற்கு மேல் 5 விரல் பதிவுகள் இருக்கும்.
அதாவது ஓம் "நமோ நாராயணா'' என்ற எட்டு எழுத்து மந்திரமும் "நமசிவாய'' என்ற ஐந்தெழுத்து மந்திரமும் ஒருங்கிணைந்து இருப்பதை திருப்பாதம் பிரதிபலிக்கிறது. கிருஷ்ணர் சிறுவனாக இருந்தபோது வெண்ணை திருடி தின்றார்.
அப்போது வெண்ணை சிதறி அவர் உடம்பு மற்றும் கால்களில் விழுந்தது. அதோடு கிருஷ்ணர் நடந்ததால் கிருஷ்ணர் கால் தடம் பதிந்தது. அதை நினைவுப்படுத்தும் விதமாக கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று மாவால் கால் சுவடு பதிக்கப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment