Thursday, September 6, 2012
சரஸ்வதிக்கு உகந்த நைவேத்யம்
<தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு கொண்டைக்கடலை மாலை அணிவித்து வழிபாடு செய்வார்கள். அதேபோன்று, சரஸ்வதிக்கு கொண்டைக்கடலை நைவேத்யம் செய்வார்கள்.
இதற்கு என்ன காரணம் தெரியுமா?
சரஸ்வதி, தட்சிணாமூர்த்தி இருவருமே ஞானத்தை அருள்பவர்கள். இருவருமே ஜெப மாலை, ஏட்டுச்சுவடிகளை ஏந்தியுள்ளனர். மனத்தூய்மை, சாந்தம், மெய்ஞானம் ஆகிய உயர் குணங்களை உணர்த்தும் வகையில் ஸ்படிக மாலை, ஜடா மகுடம், சந்திரக்கலை ஆகியவற்றை இருவரும் கொண்டுள்ளனர். கொண்டைக் கடலை உயிர் காக்கும் சத்துக்களைக் கொண்டது.
ஒருவரது ஜாதகத்தில் குரு பலம் இல்லையென்றால், அவரது உயிருக்கு பாதகம் வரலாம். எனவே, குரு பார்வை வேண்டி நவக்கிரகங்களில் குருவுக்கும், குருவின் அம்சமான தட்சிணாமூர்த்திக்கும் கொண்டைக்கடலை மாலை படைத்து தீர்க்காயுள் கிடைக்க வேண்டுகின்றனர். மனித வாழ்வின் உயிர்நாடி கல்வி. அந்த கல்வியில் சிறந்து விளங்க, சரஸ்வதிக்கு கொண்டைக்கடலை நைவேத்யம் செய்கிறோம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment