Wednesday, April 1, 2015

காலையில் எழுந்தவுடன் வலது உள்ளங்கையைப் பார்க்க வேண்டும் என்பது ஏன்?

காலையில் எழுந்தவுடன் வலது உள்ளங்கையைப் பார்க்க வேண்டும் என்பது ஏன்?
வலது உள்ளங்கையை மட்டுமல்ல. இரு கைளையும் சேர்த்து விரித்து வைத்து பார்க்க வேண்டும்.
""கராக்ரே வஸதே லக்ஷ்மீ
கரமத்யே சரஸ்வதி
கரமூலேது கௌரீஸ்யாத்
ப்ரபாதே கரதர்சனம்''
என்பது அதற்கான ஸ்லோகம். அதாவது கைகளின் நுனியில் மகாலட்சுமியும், நடுவில் சரஸ்வதியும், அடிபாகத்தில் பார்வதிதேவியும் வீற்றிருக்கிறார்கள். அவர்களைப் பக்தியுடன் வழிபட்டு கைகளைப் பார்ப்பதால், நாள் முழுவதும் கல்வி, செல்வம், மனதைரியம் குறைவின்றி சிறப்பாக அமையும். 

No comments:

Post a Comment