Monday, September 3, 2012
வேலை பக்தியுடன் வணங்குபவரும், நோக்குபவரும் இறைவனை அடையும் முயற்சியில் வெல்வார்
அவர் (முருகன்) ஏந்துவது அயில், அவரை ஏந்துவது மயில் என்பார்கள். அயில் என்றால் வேல். வேல் என்ற சொல் "வெல்' என்பதன் முதனிலை நீண்ட தொழிற்பெயர். எல்லாவற்றையும் வெல்வதற்கு ஞானம் வேண்டும். சமஸ்கிருதத்தில் "ஞானம்' என்பதை தமிழில் "அறிவு' என்பர். அறிவு எப்படி இருக்க வேண்டும் என்றால், ஆழமாகவும், பரந்தும், கூர்மையாகவும் இருக்க வேண்டும். முருகப்பெருமானின் வேலின் அடிப்பகுதி நீண்டு ஆழமாக இருக்கும். நடுப்பகுதி பரந்திருக்கும். மேல்பகுதி கூர்மையாக இருக்கும். ஆக, வேலை வணங்கினால் ஞானம் (உண்மையான அறிவு) பிறக்கும். உண்மையான அறிவு எது என்றால், அறிவியல் பொருட்களைக் கண்டுபிடிப்பதல்ல. நாம் யார் என்பதை உணர்ந்து, இறைவனை அறியும் பேரறிவாகும். ஆக, வேலை பக்தியுடன் வணங்குபவரும், நோக்குபவரும் இறைவனை அடையும் முயற்சியில் வெல்வார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment