Monday, September 3, 2012

"காங்கேயன்'

சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து புறப்பட்ட தீப்பொறிகளின் உஷ்ணத்தை வாயுவால் தாங்க முடியவில்லை. அதனை வாயு கங்கையில் உள்ள நாணற்காட்டில் சேர்த்தார். சரவணம் என்னும் நாணற் காட்டில் அப்பொறிகள் ஆறும் ஆறு குழந்தைகளாக மாறின. கங்கையில் பிறந்ததால் முருகனுக்கு "காங்கேயன்' என்ற பெயர் உண்டானது. இதற்கு "கங்கையின் மைந்தன்' என்று பொருள். கங்கைக்கும், சந்தனுராஜாவுக்கும் பிறந்தவர் பீஷ்மர். கங்கையின் மைந்தன் என்பதால் இவருக்கும் "காங்கேயன்' என்று பெயருண்டு. வடமாநிலங்களில் கங்கையின் பிள்ளைகளான இந்த இருவரையும் பிரம்மச்சாரிகள் என்பர். ஆம்...அங்கே வள்ளி தெய்வானையுடன் முருகன் இல்லை. பீஷ்மருக்கும் திருமணம் ஆகவில்லை.

No comments:

Post a Comment