Wednesday, December 31, 2014

ஆங்கில புத்தாண்டு நள்ளிரவில் தெய்வ தரிசனத்தை கோவில் செல்வதை தவிர்ப்போம் ...

ஆங்கில புத்தாண்டு நள்ளிரவில் தெய்வ தரிசனத்தை கோவில் செல்வதை தவிர்ப்போம் ...
ஆங்கிலப் புத்தாண்டு என்னும் பெயரில் கிறிஸ்தவ தினத்தை முன்னிட்டு நம் திருக்கோவில் ஆகம விதிகளை அவமதிப்பது சரியா ?
ஆகம விதிகளை மீறுவதும் அவமதிப்பதும் ஒன்றுதான் ....
இந்தக் கிறிஸ்தவ தினத்திற்காக பல ஆலயங்களில் நள்ளிரவிலும் சன்னதியை திறந்து வைப்பதும்,சிறப்பு வழிபாடுகள் செய்வதும் ஆகம விதி மீறல் இல்லையா ?இது நம் தர்மத்திற்கும், ஆலய ஆகம விதிகளுக்கும் எதிரானதல்லவா ? . நமது வழிபாட்டு முறையையே கேலிக் கூத்தாக்கும் செயல்களை நாம் புறக்கணிக்க வேண்டாமா ?...
உணருங்கள்...
குறிப்பிட்ட நேரத்தில் நடை சாத்துவதும் பிறகு மறுநாள் காலை நடை திறப்பதும்தான் ஆகம விதி இதற்கு சில நாட்கள் மட்டுமே விதிவிலக்கு ....
சிவராத்ரி,,ஆருத்ரா தரிசனம் போன்ற நாட்களில் இரவு அபிஷேக அலங்காரங்கள் நடைபெறும் . வைகுண்ட ஏகாதசியன்று கூட இரவில் கோவில் திறந்து பஜனை உபன்யாசங்கள் நடைபெறுமே தவிர சன்னதி அடைத்து விட்டு மறுநாள் காலை மூன்று மணியளவில் வைகுண்ட வாசல் திறந்து பெருமாள் எழுந்தருளுவார்...
நமது விதிமுறைகள் இப்படியிருக்க அர்த்தமற்று கிறிஸ்தவ வருடப்பிறப்பை நம் ஆலயங்களில் நள்ளிரவில் கொண்டாடுவது ஆலய நிர்வாகத்தின் வர்த்தக நோக்கமேயன்றி வேறென்ன ?. ஆலயத்தையும் ஆகம விதிகளையும் கட்டிக் காக்க வேண்டிய நிர்வாகத்தினர் செய்யும் இத்தகைய செயல்கள் அவர்களது குடும்பத்திற்கு சர்வ நாசத்தையே ஏற்ப்படுத்தும்.
நாமென்ன திருடர்களா ?அர்த்தராத்திரியில் கோவிலுக்குள் செல்ல?.. அந்தந்தக் கோவில்களின் ஆகம நடைமுறைகளின் படி இரவு கால பூஜை முடிக்க வேண்டும் . இந்த பூஜை முடிந்த பின் அதற்குப் பின் அவர்கள் வர்த்தக நோக்கில் திறந்திருந்தாலும் இரவுக் காலத்தில் பத்து மணி மற்றும் அதற்கு மேல் செல்வது பக்தர்களுக்கும் நல்லதல்ல...
உணருங்கள்
நள்ளிரவு கொண்டாட்டங்களை ஸ்டார் ஓட்டலில் நடத்தி ,
கலந்து கொண்டு உருப்படாமல் போகிறவர்கள் போய்த் தொலையுங்கள் ஆனால் திருக் கோவில்களையும் உங்களது கொண்டாட்ட ஸ்பாட் ஆக்காதீர்கள்...
இந்தப் புனிதமான மார்கழி மாதத்தில் தினமும் அதிகாலை எழுந்து நீராடி திருப்பாவை திருவெம்பாவை பாடி அதிகாலையில் திருக்கோவில்களுக்கு சென்று சர்க்கரை பொங்கல் , வெண்பொங்கல் , போன்ற பிரசாதங்களை வாங்கிக் கொண்டு வீடு திரும்பும் போது ஏற்படும் சொல்ல இயலாத ஒரு புத்துணர்ச்சி ,.அமைதி இன்னும் ஏதோ
ஒன்று எப்படி சொல்வது தெரியவில்லை !
ஆங் இறைவனே நம்மிடம் தோழமை கொண்டு நம்முடனேயே கூட வருவது போன்ற உணர்வு வரும் பாருங்கள் . இது அனுபவம் . இதற்கு இணையாக சனவரி கொண்டாட்டத்தை சொல்ல முடியுமா ?
நமது தர்மங்களை நாமே நீர்த்துப் போகச் செய்து விட்டு இறைவனை வணங்குவது சரியா என்று யோசியுங்கள் .படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோயில் என்ற கதைதான் இத்தகைய ஆகம மீறல்களும் ....
ஆங்கில புத்தாண்டு நள்ளிரவில் தெய்வ தரிசனத்தை செல்வதை தவிர்ப்போம் ...

No comments:

Post a Comment