Wednesday, April 27, 2016

வெற்றிலை

வெற்றிலை  யார் தின்றாலும் அவர்களுக்கு ஞானம் வராது , மூதேவி என்னும் வறுமையே உண்டாகும், ஏனெனில் காம்பு பகுதி மூதேவிக்கு உரிய பாகமாகும், யாரிடம் என்ன இருக்கிறதோ அதைத்தான் கொடுப்பார்கள் அல்லவா, எனவே வெற்றிலை உண்ண வேண்டுமாகின் காம்பை அடியோடு கிள்ளி எரிந்து விட்டு சாப்பிடவும், மேலும் முனை ஒடிந்த வெற்றிலை சாப்பிட்டாலும் பலன் இல்லை , காரணம் வெற்றிலை முனையில் ஸ்ரீதேவி குடிகொண்டிருப்பார், அவரை நீக்கி சாப்பிட்டால் செல்வ வளம் சேராது , பூஜைக்கு வெற்றிலை வைக்கும் போது முனை ஒடியாத அழகல் . சொத்தை இல்லாத ஓட்டை இல்லாத வெற்றிலையே படையலுக்கு சிறந்தது , வெற்றிலை கிழந்தோ. காய்ந்தோ இருந்தால் கூட படையலுக்கு உதவாது , வெற்றிலையின் ஒவ்வொரு பகுதியிலும் ஒரு தேவதை வாழ்கிறார்கள், எனவே வெற்றிலையின் எந்த பகுதி பாதிக்கப்பட்டிருந்தாலும் அந்த பாக தேவதை பாதிக்கப்படும், பின்பு அருள் கிடைக்காது, சாபம் தான் கிட்டும் கவன

Sunday, April 24, 2016

சமஸ்கிருதத்தில் ஓரேழுத்து பாடல்...

சமஸ்கிருதத்தில் ஓரேழுத்து பாடல்...

இலக்கியச் சுவை...எஸ்.கண்ணன் கோபாலன்
'தாதிதூ தோதீது தத்தைதூதோ தாது’ என்று 'த்’ என்ற ஒரே மெய்யெழுத்தை மட்டுமே பயன்படுத்தி, காளமேகப் புலவர் எழுதிய ஒரு பாடல் குறித்து, சக்தி விகடன் 4.3.2014 இதழில், இந்திரா சௌந்தர்ராஜன் தனது 'சித்தம் சிவம் சாகசம்’ தொடரில் குறிப்பிட்டிருந்தார். அதைப் படித்து மகிழ்ந்த சக்தி விகடன் வாசகி, மீனாக்ஷி ராமமூர்த்தி, சமஸ்கிருதத்திலும் அதேபோல் சொல் நயமும். சுவை நயமும் பொருந்திய பல பாடல்கள் இருப்பதாகக் கூறி, அதற்குச் சான்றாக 'ஹிந்துயிஸம் டுடே’ என்ற ஆங்கில இதழில் வெளியாகி இருந்த The Wonder That Is Sanskrit என்ற கட்டுரையின் பிரதியை நமக்கு அனுப்பி இருந்தார். அதில் இருந்து சில பகுதிகள் இங்கே.
சமஸ்கிருதத்தில் பல உயர்ந்த இலக்கியங்கள் உள்ளன. அதே நேரம், எளிமையான முறையில் அமைந்த பல பாடல்களும் உள்ளன. மேலோட்டமாகப் பார்க்கும்போது எளிமையானதாக இருந்தாலும், அதன் உட்பொருளைப் புரிந்துகொள்ள சமஸ்கிருதத்தின் முழுமையான இலக்கண அடிப்படைகளை நாம் அறிந்து வைத்திருக்க வேண்டும். எளிமையான, அதேநேரம் நுட்பமாகப் புரிந்து அனுபவிக்க வேண்டிய அத்தகைய பாடல்கள் 'அதம காவியம்’ என்று அழைக்கப்படுகின்றன. கவிஞர்கள் இப்பாடல்களில் தங்கள் கற்பனைத் திறனைப் பூரணமாகப் பயன்படுத்தி, பாடல்களை உயர்ந்த தரமுள்ளதாகவும், பொருள்சுவை கொண்டதாகவும் செய்துள்ளனர்.
காளிதாசன், பர்த்ருஹரி, மேகா, ஸ்ரீஹர்ஷா போன்ற பிரசித்தி பெற்ற சமஸ்கிருத கவிஞர்கள், தங்களுடைய உயர்ந்த படைப்புகளில்கூட இதுபோன்ற வார்த்தை ஜாலங்கள் கொண்ட பல பாடல்களை இயற்றியுள்ளனர்.
வர்ணசித்ரா, ஸ்வரசித்ரா, கதிசித்ரா எனப் பல வகைகளில் சமஸ்கிருத மொழியில் இத்தகைய பாடல்கள் காணப்படுகின்றன.
வர்ணசித்ரம்: 33 உயிர் மெய்யெழுத்துக் களைக் கொண்டு இயற்றப்படுவதாகும். அதேபோல், பாடலின் ஒவ்வொரு வரி முழுவதும் ஒவ்வொரு எழுத்து மட்டுமே வருவதுமாகும்.
ஜ ஜௌ ஜோ ஜா ஜி ஜி ஜ் ஜா ஜி
தம் த தோ தி தம் தா த து த
பா போ  பா பி பூ பா பூ
ரா ரா ரி ர ரி ரீ ர ர:
இங்கு செய்யுளின் முதல் பாதத்தில் (பகுதியில்) 'ஜ’ என்ற எழுத்தும், இரண்டாம் பாதத்தில் (பகுதியில்) 'த’ என்ற எழுத்தும், மூன்றாம் பாதத்தில் (பகுதியில்) 'ப’ என்ற எழுத்தும், நான்காம் பாதத்தில் (பகுதியில்) 'ர’ என்ற எழுத்தும் அதனதன் பல உயிர் மெய்யெழுத்துக்களோடு வந்துள்ளதைக் காணலாம்.
பொருள்: பலராமர், சிறந்த போர்வீரர்; பல போர்களில் வெற்றி கண்டவர்; சுக்ரன் மற்றும் பிருஹஸ்பதியைப் போன்று விளங்குபவர்; திரிகின்ற எதிரிகளை அழிப்பவர்; சிங்கத்தைப் போன்று போர்க்களம் சென்றவர்; எதிரிகளின் முன்னேற்றத்தைத் தடுத்தவர்; நான்குவித படைகளைக் கொண்டவர்.
யாயா யாயா யாயா யாயா யாயா யாயா யாயா யாயா
யாயா யாயா யாயா யாயா யாயா யாயா யாயா யாயா
இதை எப்படிப் பிரித்துப் படிக்க வேண்டும் என்பதை இங்கு குறிப்பிடுகிறோம்.
யாயாயா (yayaya) ஆய (aya) ஆயாய (ayaya)
அயாய (ayaya) அயாய (ayaya) அயாய (ayaya)
அயா ய (aya ya) அயாயா (ayaya) யாயாய (yayaya)
ஆயாயாய (ayayaya) ஆயாயா (ayaya)
யா (ya) யா (ya) யா (ya) யா (ya) யா (ya)
யா (ya) யா (ya) யா (ya)
பொருள்: எந்தப் பாதுகை இறைவனின் திருப்பாதங்களை அலங்கரிக்கிறதோ, எது மங்களகரமான அனைத்து நன்மைகளையும் அடைய உதவுகிறதோ, எது ஞானத்தைத் தருகிறதோ, எது தீவிரத் தன்மையைப் போக்கடித்து இறைவன் மீது ஆசையை உருவாக்குகிறதோ, எது உலகெங்கும் சஞ்சரித்து உதவுகின்றதோ, அது (பாதுகை) விஷ்ணு பகவானின் உடைமை.
கதி சித்ரம்: எழுத்துக்கள் வலமிருந்து இடமாகவும், இடமிருந்து வலமாகவும் எப்படிப் பார்த்தாலும் ஒரே மாதிரியாக வரும். தமிழில் இதனை 'மாலைமாற்று’ எனக் குறிப்பிடுவார்கள். ஆங்கிலத்தில் இது palindrome எனப்படும்.
பின் வரும் செய்யுள்களின் எழுத்துக்கள் வலமிருந்து இடமாகவும் இடமிருந்து வலமாகவும் அமையப் பெற்றுள்ளன. இது 'கதிசித்ரம்’ என்று அழைக்கப்படுகிறது.
வாரணாககபீரா ஸா ஸாரா பீக  கணாரவா
காரீ தாரீ வதா ஸேனா னாஸேதாவரீ  தாரீகா
பொருள்: குன்றுபோல் உள்ள யானைகள் நிறைந்த இப்படையை வெல்லுவது கடினம். இப்பெரும் படையின் பேரொலியைக் கேட்ட மக்கள் அஞ்சினர். இப்படை எதிரிகளைக் கொல்கிறது.
இதிலேயே மற்றொரு வகையும் உண்டு.
''ஓ! தேவர்களே, கூரிய வாளை விரும்புகிறவர்களே, கோழையைப் போன்று நடுங்கமாட்டான் வீரன். பேராசை என்னும் போரில் அழகிய ரதங்களும், அசுரர்களும் நிறைந்த இந்தப் போரில்...'' என்று பொருள் தரும் இந்தப் பாடல் வரிகளைப் பாருங்கள்.
நி சி தா சிர தோ பி கோ யேன்ஜதே மரணாரு சா 
சாருணா ரமதே ஜன்யே கோ பிதோ ரசி தாசிநி
முதல் வரியில் இடம் பெற்றுள்ள எழுத்துக்களே இரண்டாவது வரியில் தலைகீழாக இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. சமஸ்கிருதம் இன்றைக்கு வழக்கொழிந்த மொழியாகிவிட்டது. ஆனால், அந்த மொழியை நன்கு கற்றுணர்ந்தால், இது போன்று இன்னும் பலப்பல சுவாரஸ்யங்கள் நமக்குக் கிட்டும்.

எந்த ராசிக்காரங்ககிட்ட எப்படி பேசனும்..?

எந்த ராசிக்காரங்ககிட்ட எப்படி பேசனும்..?
‪#‎மேசம்‬ ராசிக்காரங்க கிட்ட எச்சரிக்கையா பேசனும்..பாராட்டி பேசலாம் ஆனா வாக்குவாதம் செய்யக்கூடாது.
‪#‎ரிசபம்‬ ராசிக்காரங்க கிட்ட கனிவா பக்குவமா பேசனும்....
‪#‎மிதுனம்‬ ராசிக்காரங்க கிட்ட அதிகமா வெச்சிக்காதீங்க..லைட்டா பேசுவாங்க ஹெவியா உங்களை ஆராய்ச்சி பண்ணுவாங்க...
‪#‎கடகம்‬ ராசிக்காரங்ககிட்ட பாசமா பேசலாம் எல்லா உதவியும் கிடைக்கும்..
‪#‎சிம்ம‬ ராசிக்காரங்கக்கிட்ட பொறுமையா பேசனும்..படபடன்னு பேசிட்டு போய்ட்டே இருப்பாங்க..நேர்மையா பேசலைன்னா கட்டம் கட்டிடுவாங்க...
‪#‎கன்னி‬ ராசிக்காரங்க நட்பை முறிச்சிக்க கூடாது அவர்களால் நிறைய ஆதாயம் உண்டு அதுவே உத்திரம் கன்னின்னா கொஞ்சம் எச்சரிக்கையா பார்த்து பேசுங்க...
‪#‎துலாம்‬ ராசின்னா ஜாலியா பேசலாம்..சுவாதி கம்பீரமா நடந்துக்குவாங்க..கொஞ்சம் கவனமா இருங்க.உங்களை எடை போட்டு நீங்க இவ்வளவுதான்னு மார்க் போட்ருவாங்க
‪#‎விருச்சிகம்‬ :- ‪#‎அன்பா‬ ‪#‎அனுசுரனையா‬ ‪#‎பேசலாம்‬..கொஞ்சம் சால்ட்டா கிண்டலடிச்சா நீங்க வாழ்க்கையில வாங்காத நோஸ்கட் வாங்கிக்குவீங்க..‪#‎அன்புல_தென்றல்‬.....BUT ‪#‎கோபத்துல_சுனாமி‬..
‪#‎தனுசு‬ ராசிக்காரங்க கிட்ட அன்பா பேசி காரியம் சாதிக்கலாம்,..நாலு வார்த்தை பாராட்டுங்க...அன்புக்கு நான் அடிமை என்பது தனுசுவின் குணம்...அர்ஜுனன் கிருஷ்ணர் மீது வைத்திருந்தது சாதாரண அன்பு இல்லை..அந்த அன்புக்குத்தான் பகவானே மயங்கி கிடந்தார்..தேரோட்டியாக வந்தார்...வில்லுக்கு அர்ஜுனன் தனுசு ராசி.
‪#‎மகரம்‬ ராசிக்காரங்க நிறைய புலம்புவாங்க..அப்படியே நம்ப வேண்டாம். அவங்க இயல்பு அது.கடுமையான உழைப்பாளிகள் பேச்சுதான் முன்ன பின்ன இருக்கும்.
‪#‎கும்பம்‬ ..அடுத்த அம்பானி இவர்தான்னு நம்புற மாதிரி பேசுவாங்க..உம் கொட்டிட்டு நீங்களும் உங்க சாதனைகளை சொல்லுங்க...
‪#‎மீனம்‬..அசந்தா ஆத்துல இல்ல காத்துல கூட மீன் பிடிப்பாங்க..மத்தவங்க ரகசியங்கள் எல்லாம் இவர்கிட்ட தெரிஞ்சிக்கலாம்..
நண்பர்களே!!! நீங்கள் இதில் என்ன இராசி?

உயிர்வாழ உடல் அவசியம்

உயிர்வாழ உடல் அவசியம்
சிறிது காலமே பயன்படும்
ஒரு செறுப்பை தேரந்தெடுக்க தரும் முக்கியத்துவம் கூட நம்
உடம்புக்கு நாம் தருவதில்லை
என்பதே மிக பெரிய பரிதாபம்.
மனதின் தூலவடிவம் உடல்
உடலின்சூக்கும வடிவமே மனம்
ஒன்றின் பாதிப்பு
மற்றொன்றை தாக்கும்
ஒவ்வொரு கெட்ட குணங்களும் ஒவ்வொரு நோயை உருவாக்கும்
பெருமையும் கர்வமும் இதய நோய்களை உருவாக்கும்
கவலையும் துயரமும் வயிற்று நோய்களை உருவாக்கும்
துக்கமும் அழுகையும் சுவாச நோய்களை உருவாக்கும்
பயமும் சந்தேகமும் சிறுநீரக நோய்களை உருவாக்கும்
எரிச்சலும் கோபமும் கல்லீரல் நோய்களை உருவாக்கும்
அமைதியை விரும்புவதே அனைத்தையும் குணமாக்கும்.
ஆரோக்கியமான உடலிலிருந்தே ஆரோக்கியமான சிந்தனைகள் பிறக்கும். உடலின், மனதின் தேவைகளுக்கு மதிப்பளியுங்கள்.
பசிக்கும் போது உணவருந்துங்கள். பசியை நீங்கள் புறக்கணித்தால் பசி உங்களைப் புறக்கணிக்கும். எப்போதும் உடலின் அழைப்பை புறக்கணிக்காதீர்கள்.

மயில் இறகின் மகத்துவம்

மயில் இறகின் மகத்துவம்


மயில் இறகு என்று கேட்டதும், சிறு வயதில் மயில் இறகை புத்தகத்தினுள் வைத்து, அது குட்டி போடும் என்று நம்பி பலர் வைத்திருந்தது கட்டாயம் ஞாபகத்திற்கு வரும்.
மேலும், மயில் கடவுள் முருகனின் வாகனம் என்பதால், அதன் இறகை புனிதமானதாக கருதி, பலரும் தங்களது வீட்டு பூஜை அறையில் வைத்திருப்போம்.
ஆனால் இந்த மயில் இறகு பல தோஷங்களை நீக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
சனி தோஷம்
மூன்று மயில் இறகை ஒன்று சேர்த்து கருப்பு நிற கயிற்றினால் கட்டி, சிறிது பாக்கை நீரில் போட்டு, அந்நீரைத் தெளித்தவாறு ‘ஓம் சனீஸ்வராய நமஹ’ என்று தினமும் 21 முறை உச்சரிக்க வேண்டும் இவ்வாறு செய்தால் சனி தோஷம் நீங்கும்.
வாஸ்து தோஷம்
வீட்டின் வாஸ்து தோஷத்தை நீக்க எட்டு மயில் இறகை ஒன்று சேர்த்து, ஒரு வெள்ளை நிற கயிற்றினால் கட்டி, பூஜை அறையில் வைத்து ‘ஓம் சோமாய நமஹ’ என்ற மந்திரத்தை உச்சரித்து வர வேண்டும்.
அலுமாரி
நகை மற்றும் பணம் வைக்கும் அலமாரியில் ஒரு மயில் இறகை வைக்க வேண்டும். இதனால் அந்த அலமாரியில் செல்வம் அதிகம் சேர்வதோடு, நிலைக்கவும் செய்யுமாம்.
எதிர்மறை ஆற்றல்கள்
மயில் இறகை வீட்டின் முன் வைப்பதால், வீட்டினுள் எதிர்மறை ஆற்றல்கள் நுழைவதைத் தடுப்பதோடு, வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்களும் நீங்கும்.
அலுவலக இடம்
ஒருவர் அலுவலகத்தில் தாம் அமரும் இடத்தில் மயில் இறகை வைப்பதன் மூலம், அவரது இடத்தின் அழகு மேம்படுவதோடு, உற்பத்தி திறனும் அதிகரிக்குமாம்.
பூச்சிகள் வராது
மயில் இறகு வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும். அதுவும் இதனை வீட்டின் சுற்றில் வைத்தால், பல்லிகள் மற்றும் இதர பூச்சிகள் வருவதைத் தடுக்கலாம்.
அன்யோன்யம் மற்றும் புரிதல்
திருமணமான தம்பதியர்கள், தங்களின் படுக்கை அறையில் மயில் இறகை வைத்திருப்பதன் மூலம், தம்பதியருக்குள் இருக்கும் பிரச்சனைகள் நீங்கி, அன்யோன்யம் மற்றும் புரிதல் அதிகரிக்கும்.

ஒரு வரியில் இயற்கை மருத்துவம் பற்றி தெரிந்து கொள்வோம்!!!

ஒரு வரியில் இயற்கை மருத்துவம் பற்றி தெரிந்து கொள்வோம்!!!
01. வரட்டு இருமலுக்கு சிறந்தது திராட்சை.!
02. முதுகுத்தண்டு வலிக்கு பாப்பாளிப்பழம் சாப்பிடு!
03. இரத்த அழுத்தம் குறைய எலுமிச்சை!
04. மூளைக்கு வலியூட்ட வல்லாரை!
05. காது மந்தம் போக்கும் தூதுவளை!
06. மூத்திரக்கடுப்பு மாற்ற பசலைக் கீரை!
07. பித்த மயக்கம் தீர புளியாரை!
08. உடற் சூடு அகல முருங்கைக் கீரை!
09. நீரிழிவு நோய்க்கு துளசி இலை!
10. இரத்தத்தை சுத்திகரிக்க வெள்ளைப்பூடு!
11. கண் பார்வை அதிகரிக்க கரட், புதினா, ஏலக்காய்!
12. கடுமையான ஜலதோசத்திற்கு தேனும் எலுமிச்சையும்!
13. வாழ்நாளை நீடிக்க நெல்லிக்கனி!
14. சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் வெந்தயம்!
15. கொழுப்புச் சத்தை மிளகு குறைக்கும்!
16. இளைத்த உடல் பெருக்க மிளகு!
17. பொடுகைப் போக்க தயிரில் குளி!
18. மூலநோய்க்கு கருணைக்கிழங்கு!
19. இதயப் பலவீனம் போக்க மாதுளை!
20. வெள்ளை வெட்டை தீர அன்னாசி!
21. காதுவலி தீர எலுமிச்சம் சாறு நாலு துளி காதில் விடுக!
22. பீனீசம் தலைவலி நீங்க மிளகுப் பொடியுடன் வெல்லம் சேர்த்து உண்!
23. பொன்னாங்காணி உண்டால் நோய் தணிந்து உடல் தேறும்!
24. வாழைத்தண்டு சிறு நீரகக்கற்களை கரைக்கும்!
25. மலத்தை இளக்கும் ரோஜா இதழ்கள்!
26. மாதுளம் பிஞ்சு பேதியை நிறுத்தும்!
27. கருப்பை நோய்க்கு வாழைப்பூ!
28. ஜீரண சக்தியை அதிகரிக்கும் மிளகும் இஞ்சியும்!
29. மூளைக்கு வலுவூட்டுவது பேரிச்சம்பழம் பாதாம் பருப்பு!
30. மருதோன்றி வேர்ப்பட்டையை அரைத்துக்கட்ட கால் ஆணி குணமாகும்.!

முன்னோர்கள் சொன்ன உணவே மருந்து

முன்னோர்கள் சொன்ன உணவே மருந்து
வெயிலினால் ஏற்படும் உடல் உஷ்ணத்தையும், களைப்பையும் பானகம் பருகி ஓட ஓட விரட்டுங்கள்
பானகம் என்பது இனிப்பு, புளிப்பு, லேசான காரம் என மூன்று சுவைகளும் ஒன்றாகக்கலந்த ஒரு பானம். வெல்லம், புளி, ஏலக்காய், சுக்கு, மிளகு சேர்த்து தயாரிக்கப்படும் நீராகாரம். உடலின் களைப்பை நீக்கி குளிர்ச்சியும், புத்துணர்ச்சியும் தரக்கூடிய பானம்.
இது அடுப்பில்வைத்து காய்ச்சாமல் அப்படியே கலக்கி பருகக்கூடிய பானவகையைச் சேர்ந்தது.(Raw and Uncooked). தேர்த்திருவிழாவன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒன்றுகூடி தேரை வடம்பிடித்து இழுத்துவருவார்கள்.
வேர்க்க, விறுவிறுக்க தேர் இழுத்துவரும் பக்தர்களுக்காக பானாக்கம் வீட்டிற்கு வீடு தயாரித்துக் கொடுப்பார்கள். தாகமும், களைப்பும் தீரும் அளவுக்கு வயிறுநிறைய வாங்கி, வாங்கி பருகுவார்கள். இனிப்பும், புளிப்பும் கலந்த இந்த பானாக்கம் உள்ளே சென்றதும் உடலின் மொத்த களைப்பும் நீங்கி புதுத்தெம்புடன் தேரை இழுத்து கோவிலுக்கு கொண்டு சேர்ப்பார்கள்.
நீங்கள் இதுவரை பானகம் குடித்திராத நபராக இருந்தால் ஒருமுறை தயாரித்து சுவைத்துப்பாருங்கள். கண்டிப்பாக உங்களுக்கும் பிடித்துவிடும். இனிப்பும், புளிப்பும் கலந்த இந்த பானத்தின் சுவை உங்களை மீண்டும் மீண்டும் பருகத்தூண்டும்.
தேவையான பொருட்கள்:
புளி – சிறிய எலுமிச்சை அளவிலான உருண்டை
வெல்லம் – 2 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் பொடி – 1/4 டீ ஸ்பூன்
சுக்குப்பொடி – 1/4 டீ ஸ்பூன்
மிளகுத்தூள் – 1/4 டீ ஸ்பூன்
தண்ணீர் – 2 கப்
செய்முறை:
வெல்லத்தை தட்டி பொடியாக்கிக்கொள்ளவும். புளியை 2 கப் தண்ணீரில் நன்கு கரைக்கவும். கரைத்த புளிநீரில் வெல்லத்தை சேர்க்கவும். வெல்லம் முழுவதுமாக கரையும்படி ஸ்பூன் கொண்டு கலக்கிவிடவும். வெல்லம் முழுமையாக கரைந்தபின் வடிகட்டியால் இறுக்கவும். இதனுடன் ஏலக்காய்பொடி, சுக்குப்பொடி, மிளகுத்தூள் சேர்த்து கலக்கவும். இதை அப்படியே அல்லது சிறிது நேரம் மண்பானையில் வைத்திருந்து பருகவும். மிளகு மற்றும் சுக்கு தொண்டைபிடிப்பை குணமாக்கும் நல்ல மருந்து. சளியையும் குணப்படுத்தும். கோடையில் வெயிலினால் ஏற்படும் உடல் உஷ்ணத்தையும், களைப்பையும் பானாக்கம் பருகி ஓட ஓட விரட்டுங்கள்

வீட்டுக்கு பெயிண்ட் அடிக்கப் போறீங்களா? இத படிச்சுட்டு போங்க!!

வீட்டுக்கு பெயிண்ட் அடிக்கப் போறீங்களா? இத படிச்சுட்டு போங்க!!


பண்டிகைகள் வர இருப்பதால், பெரும்பாலான வீடுகளில் பெயிண்ட் அடிக்க நினைப்பார்கள். அப்படி வீட்டிற்கு பெயிண்ட் அடிக்கும் போது, எப்போதும் போல வெள்ளை நிறத்தை அடிக்காமல், சற்று வித்தியாசமாக வீட்டிற்கு வரும் விருந்தாளிகள் அசந்து போகும் வகையில், ஒவ்வொரு அறைக்கும் பொருத்தமான பெயிண்ட் நிறங்களை தேர்ந்தெடுத்து அடிக்கலாம்.
இதனால் வீடு அழகாக இருப்பதுடன், மனமும் அமைதியாகவும் சந்தோஷமாகவும் இருக்கும். எப்படியெனில் வீட்டிற்கு வந்தால் சந்தோஷமும், அமைதியும் கிடைக்க வேண்டுமானால், வீட்டின் சுவற்றில் சரியான நிறமுள்ள பெயிண்ட்டை அடிக்க வேண்டுமென்று பல்வேறு வாஸ்து சாஸ்திரங்கள் கூறுவதைக் கேட்டிருப்போம்.
ஆகவே வீட்டில் பெயிண்ட் அடிப்பதற்கு முன்பு, எந்த அறைக்கு எந்த நிறத்தில் பெயிண்ட் அடிக்கலாம் என்று ஒன்றுக்கு பலமுறை யோசித்து பின் அடிக்க ஆரம்பியுங்கள். சரி, இப்போது எந்த அறைக்கு எந்த நிறத்தில் பெயிண்ட் அடித்தால் நன்றாக இருக்கும் என்று பார்ப்போம்.
படுக்கை அறை:
சிவப்பு மற்றும் வெள்ளை
படுக்கை அறையில் பெயிண்ட் அடிக்கும் போது, நன்கு ரொமான்டிக்காக இருக்கும் சிவப்பு நிறத்தைப் பயன்படுத்தலாம். அதிலும் சிவப்பு பாதி, வெள்ளை பாதி என அடித்தால், இன்னும் சூப்பராக இருக்கும்.
க்ரே
இது மற்றொரு சிறப்பான தோற்றத்தைக் கொடுக்கும் நிறம். இந்த நிறத்தைப் பயன்படுத்தினால், படுக்கை அறை மிகவும் ராயலான மற்றும் அழகான தோற்றத்தைக் கொடுக்கும். அதிலும் இந்த நிறமானது புதுமணத் தம்பதியர்களுக்கு ஏற்றதாக இருக்கும்.
சந்தன நிறம்
சந்தன நிறத்தில் படுக்கை அறைக்கு அடித்தால், அறையானது பளிச்சென்று ஸ்மார்ட்டான தோற்றத்தைக் கொடுக்கும்.
ஹால்:
ஆரஞ்சு மற்றும் வெள்ளை
ஹாலுக்கு ஆரஞ்சு மற்றும் வெள்ளை கலந்து அடித்தால், ஹால் பிரகாசமாக இருப்பதோடு, பெரிய ஹால் போன்ற தோற்றத்தைக் கொடுக்கும்.
க்ரே
ஹால் வித்தியாசமான தோற்றத்தைக் கொடுக்க வேண்டுமானால், மெட்டாலிக்/க்ரே நிறத்தை அடிக்கலாம்
நீல நிறம்
ஹாலுக்கு அடிப்பதற்கு ஏற்ற நிறங்களில் ஒன்று தான் நீல நிறம். இது ஹாலுக்கு ஒரு தனி லுக்கைக் கொடுக்கும்.
சமையலறை:
சாக்லெட் நிறம்
உங்களுக்கு சாக்லெட் ரொம்ப பிடிக்குமா? அப்படியெனில் சமைக்கும் அறைக்கு சாக்லெட் நறத்தை அடியுங்கள். இது சற்று வித்தியாசமாக இருக்கும்.
சந்தன நிறம்
சிலர் தங்களது சமையலறை பெரியதாக காட்சியளிக்க வேண்டுமென்று நினைப்பார்கள். அப்படி நினைத்தால், சமையலறைக்கு சந்தன நிற பெயிண்ட்டை அடியுங்கள்.
பச்சை
இயற்கை விரும்பியாக இருந்தால், சமையலறைக்கு பச்சை நிற பெயிண்ட் அடிக்கலாம். இதனால் அது வீட்டை எப்போதும் புத்துணர்ச்சியுடன் பளிச்சென்று வெளிப்படுத்தும்.
குளியலறை:
காபி
குளியலறைக்கு காபி நிறத்தை அடித்தாலும், அது குளியலறையை பிரகாசமாகவும், அழகாகவும் வெளிக்காட்டும்.
பிங்க்
பெண்களுக்கு எப்போதுமே பிங்க் தான் அதிகம் பிடிக்கும். ஆகவே உங்கள் வீட்டில் பெண் குழந்தைகள் இருந்தால் இருந்தால், வீட்டின் குளியலறைக்கு பிங்க் நிற பெயிண்ட் அடியுங்கள்.
சில்வர்
நிறைய பேருக்கு இந்த நிறம் பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் இந்த நிறத்தை அடித்தால், அது குளியலறைக்கு ராயல் லுக்கை கொடுப்பதோடு, இது தான் ட்ரெண்ட்.

பாம்பு கனவில் வந்தால் நடக்கும் பலன்கள்

பாம்பு கனவில் வந்தால் நடக்கும் பலன்கள்
1. ஒற்றை நல்ல பாம்பைக் கனவில் கண்டால் விரோதிகளால் தொல்லை உண்டாகும்.
2. இரட்டைப் பாம்புகளை கண்டால் நன்மை உண்டாகும்.
3. பாம்பை கொல்வதாக கனவு கண்டால் விரோதிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.
4. பாம்பு கடித்து விட்டதாக கனவு கண்டால் தனலாபம் உண்டாகும்.
5. பாம்பு விரட்டுவதாக கனவு கண்டால் வறுமை உண்டாகும்.
6. காலைச்சுற்றி பாம்பு பின்னிக்கொள்வது போல் கனவு கண்டால் சனி பிடிக்கப் போகிறது என்று பொருள்.
7. பாம்பு கடித்து ரத்தம் வருவதாக கனவு கண்டால் பிடித்த சனி நீங்கிவிட்டது என்று அர்த்தம்.
8. கழுத்தில் மாலையாக பாம்பு விழுவதாக கனவு கண்டால் பணக்காரன் ஆகலாம்
இரவில் முதல் ஜாமத்தில் கண்ட கனவு ஒரு வருஷத்திலும், 2ஆம் ஜாமத்தில் கண்ட கனவு 3 மாதத்திலும், 3ம் ஜாமத்தில் கண்ட கனவு 1 மாதத்திலும் அருணோதயத்தில் கண்ட கனவு 10 தினங்களிலும் பலிதமாகும். நல்ல கனவு கண்டால் மறுபடியும் நித்திரை செய்யலாகாது. கெட்ட கனவு கண்டால் கடவுளை தியானித்து பிறகு நித்திரை செய்ய வேண்டும்.

Saturday, April 23, 2016

உண்மையில் எதற்காக குளிக்கிறோம்

உண்மையில் நம்மில் பல பேருக்கு எதற்காக குளிக்கிறோம் என்றே தெரியவில்லை.
அழுக்கு போகவா.....! நிச்சயம் கிடையாது.....!
மாத மளிகை பட்டியலில் சோப்பு டப்பாவை வாங்கி அடுக்கி வைத்து கொள்கிறோம்.
சோப்பு எதற்காக கண்டுபிடிக்கப்பட்டது தெரியுமா... கப்பலில் இயந்திரத்தோடு இயந்திரமாக வேலை செய்வோருக்கு உடலில் திட்டு திட்டாக ஆயில் படிந்துவிடும்.
இந்த கடின எண்ணெய்யை நீக்குவதற்காக சோப்பு பயண்படுத்தினார்கள். கப்பலில் மட்டும் அல்ல எண்ணெய் புழங்கும் மற்ற இடங்களிலும் கூட இது பயன்பட்டது.
சோப்பு போடுவதற்கு நாம் எந்த கப்பலில் வேலை பார்த்தோம். எந்த சேறு, சகதி எண்ணெய்க்குள் புரண்டு எழுந்து வந்தோம்.
வணிக பெருமுதலை கும்பல் சும்மா இருப்பார்களா, ஆயிலில் புரண்டெழுந்து வேலை செய்வோர் மட்டுமே பயண்படுத்தி வந்த இந்த சோப்பை,
எல்லோரும் பயண்படுத்தும் படி பல திட்டம் தீட்டி. கிருமி உருவாக்கி, அதன் மேல் பயம் உருவாக்கி.
நடிகர்களை நடிக்க விட்டு. நம் தலையில் கட்டிவிட்டார்கள்.
இதன் மூலம் என்ன ஆனது..
சோப்பு போட்டு நம் தோல்களின் மேல் இயற்கையாக உருவாகும் மெல்லிய பாதுகாப்பு கொழுப்பு படலத்தை நீக்கி விட்டேம், இப்பொழுது பாதுகாப்பற்ற நிலை உருவாகிறது. இதை திரும்ப சீர் செய்யவே உடல் பெரும்பாடுபடுகிறது.
நமக்கு வாய் முகத்தில் மட்டும் அல்ல தோலின் மேல் இருக்கும் ஒவ்வொறு வியர்வை துவாரங்களும் வாயே. சோப்பை போடுவதன் மூலம் வியர்வை துவாரம் வழியே இரசாயண நச்சு இரத்தத்தில் கலந்து கல்லீரலை பாதிக்கிறது.
சோப்பு போடுவதன் மூலம் தோல் மூலமாக நம் உடல் கிரகிக்கும் பிரபஞ்ச சக்தி தடுக்கப்படுகிறது.
இன்னும் இதன் தீமைகள் பல உண்டு. சொல்லி மாளாது.
நாம் சோப்பு போடுவதற்கு எந்த சேறு, சகதி, எண்ணெய் இயந்திரங்களுக்குள் புரண்டு வருவதில்லை.
சரி பின் எதற்கு தான் குளிக்கிறோம் என்று கேட்கிறீர்களா....?
குளியல் = குளிர்வித்தல்
குளிர்வித்தலோ மருவி குளியல் ஆனது.
மனிதர்களுக்கு உள்ள 75% நோய்களுக்கு காரணம் அதிகப்படியான உடல் வெப்பம்.
இரவு தூங்கி எழும்போது நமது உடலில் வெப்பக் கழிவுகள் நேங்கியிருக்கும்.
காலை எழுந்ததும் இந்த வெப்பகழிவை உடலில் இருந்து நீக்குவதற்காக குளிந்தநீரில் குளிக்கிறோம்.
வெந்நீரில் குளிக்க கூடாது. எண்ணெய் குளியலின் போது மட்டுமே மிதமான வெந்நீர் பயன்படுத்த வேண்டும்.
குளிர்ந்த நீரை அப்படியே மொண்டு தலைக்கு ஊற்றிவிடக்கூடாது. இது முற்றிலும் தவறு.
நீரை முதலில் காலில் ஊற்ற வேண்டும், பின், முழங்கால், இடுப்பு, நெஞ்சு பகுதி, இறுதியாக தலை.
எதற்கு இப்படி. காலில் இருந்து ஊற்றினால் தான் வெப்பம் கீழிருந்து மேல் எழும்பி, விழி மற்றும் காது வழியாக வெளியேறும்.
நேரடியாக தலைக்கு ஊற்றினால் வெப்பம் கீழ் நோக்கி சென்று வெளியில் போக முடியாமல் உள்ளேயே சுழன்று கொண்டிருக்கும்.
இப்பொழுது நம் முன்னோர்களின் குளியல் முறையை கண்முன்னே கொண்டு வாருங்கள்.
குளத்தில் ஒவ்வொறு படியாக இறங்குவார்கள். காலில் இருந்து மேல் நோக்கி நினையும். வெப்பம் கீழ் இருந்து மேல் எழுப்பி இறுதியில் தலை முங்கும் போது கண், காது வழியே வெப்பக் கழிவு வெளியேறிவிடும்.
இறங்கும் முன் ஒன்று செய்வார்கள் கவனித்ததுண்டா. உச்சந்தலைக்கு சிறிது தண்ணீர் தீர்த்தம் போல் தெளித்துவிட்டு இறங்குவார்கள்.
இது எதற்கு... உச்சந்தலைக்கு அதிக சூடு ஏறக்கூடாது. சிரசு எப்போதும் குளிர்ச்சியாக இருக்க வோண்டும்.
எனவே உச்சியில் சிறிது நினைத்து விட்டால் குளத்தில் இறங்கும் போது கீழ் இருந்து மோலாக எழும் வெப்பம் சிரசை தாக்காமல் காது வழியாக வெளியேறிவிடுகிறது.
வியக்கவைக்கிறதா... ! நம் முன்னோர்களின் ஒவ்வொறு செயலுக்கும் ஆயிரம் அர்த்தங்கள் உண்டு.
குளித்துவிட்டு சிறிது நேரம் ஈரத் துணியோடு இருப்பது மிக நல்லது.
அதே ஈரத்துணியோடு நாம் அரச மரத்தை சுற்றி வந்தால் 100% சத்தமான பிராணவாயுவை நமது உடல் தோல் மூலமாக கிரகித்துக்கொள்ளும்.
பித்தம் நீங்கி பிராணவாயு அதிகரித்தால் அனைத்து நோய்களும் ஓடிவிடும்.
புத்தி பேதலிப்பு கூட சரியாகும்.
குளியலில் இத்தனை விடையங்கள் இருக்கும் போது. குளியல் அறை என்றாலே அதில் ஒரு ஹீட்டர் வேர, இப்படி சுடு தண்ணீரில் சோப்பும், ஸ்சேம்பையும் போட்டு குளிச்சிட்டு வந்தா நாம நோயாளியா இல்லாம வேற எப்படி இருப்போம்.
குளிக்க மிக நல்ல நேரம் - சூரிய உதயத்திற்கு முன்
குளிக்க மிகச் சிறந்த நீர் - பச்சை தண்ணீர்.
குளித்தல் = குளிர்வித்தல்
குளியல் அழுக்கை நீக்க அல்ல
உடலை குளிர்விக்க.
இறைவன் கொடுத்த இந்த உடல் மீது உங்களுக்கு அக்கறை இருந்தால் மாற்றிக்கொள்ளுங்கள்.
நலம் நம் கையில்

ஆறு குளங்களில் குளிக்கும் போது முச்சை அடக்கி இரண்டு காதுகளும் தண்ணிரில் இருக்கும்படி பார்த்துகொண்டு ஒரு இரண்டு நிமிடம் மிதந்து பாருங்கள் கண்வழியாக நம் உடமபு சூடு வெளிவருவதை காணலாம்

நன்றி
Gefällt mir
Kommentier

5 விதமான தோஷங்கள்

5 விதமான தோஷங்கள்
ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் 5 விதமான தோஷங்கள் ஏற்படலாம் என்று ஆதி தமிழர்கள் கணித்து எழுதிவைத்துள்ளனர். ஒருவர் செய்யும் பாவங்கள், தவறுகள் எல்லாம் இந்த 5 வகை தோஷத்துக்குள் வந்து விடுகிறது. அந்த தோஷங்கள் 1.வஞ்சித தோஷம், 2.பந்த தோஷம், 3.கல்பித தோஷம் 4.வந்தூலக தோஷம் 5.ப்ரணகால தோஷம் எனப்படும்.
1.வஞ்சித தோஷம்: பார்க்கக் கூடாத படங்கள், வெறிïட்டும் காட்சிகள் காம சிந்தனைகள் உடலில் சூட்டை உண்டாக்கி, அவை பித்த நாடிகளைப் பாதிக்கச் செய்கிறது. இது உடலில் பல வியாதிகளை உண்டாக்குகிறது. இதற்கு வஞ்சிததோஷம் எனப்பெயர். உடன் பிறந்த சகோதரிகளை வணங்கி அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்ய வேண்டும். சகோதரிகள் இல்லாதவர்கள் ஏழைப் பெண்களுக்குத் தானம் அளிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் வஞ்சித தோஷம் விலகிவிடும்.
2.பந்த தோஷம்: நம்மை நம்பி பழகியவர்களுக்குத் துரோகம் செய்வது அல்லது பழிவாங்குதல் பந்த தோஷமாகும். இந்த தோஷத்துக்கு தந்தை, தாய் வழிகளில் உள்ள மாமா, அத்தை, சித்தப்பா, பெரியப்பா ஆகியோருடைய பெண்களுக்குத் தான தர்மங்கள் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் பந்த தோஷம் விலகும்.
3. கல்பித தோஷம்: பிறர் தன்னை விரும்புவதாக எண்ணிக் கொண்டு முறை தவறிப் பழகுதல் கல்பித தோஷமாகும். இத்தகைய தோஷம் ஏற்பட்டால் தன்னை விட வயதில் மூத்த பெண்களுக்குத் தன்னால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் கல்பித தோஷம் உடனடியாக விலகி விடும்.
4.வந்தூலக தோஷம்: ஒருவர் தன்னைவிட வயது அதிகமுள்ள பெண்ணை திருமணம் செய்தால், அவருக்கு சுவாசக் கோளாறுகள், நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படலாம். இவ்வாறு உருவாகும் தோஷத்திற்கு வந்தூலக தோஷம் எனப்படும். வந்தூலக தோஷம் நீங்க வேண்டுமானால் வயதான தம்பதிகளுக்குத் தான தர்மங்கள் செய்ய வேண்டும். வேஷ்டி, புடவை, துண்டு, ரவிக்கைத் துணி ஆகியவற்றைத் தானமாக வழங்க வேண்டும். அறுபடை வீடுகளில் ஒன்றான பழமுதிர்ச் சோலைத் தலத்திற்குச் சென்று முருகனைத் தரிசித்துப் பின் ஏழைத் தம்பதிகளுக்குத் தான தர்மங்கள் செய்ய வேண்டும்.
5. ப்ரணகால தோஷம்: திருமணப் பொருத்தங்கள் பார்க்காமல், பணம், புகழ், அந்தஸ்து, பதவி ஆகியவற்றுக்கு ஆசைப்பட்டு ஒருவர், திருமணம் செய்து கொண்டால், அவருக்கு ப்ரணகால தோஷம் ஏற்படும். இதனால் வாழ்க்கையில் பிடித்தம் இல்லாத நிலை காணப்படும். இந்த தோஷத்தை தவிர்க்க வேண்டுமானால் அனாதை விடுதியியில் உள்ள பெண்களுக்குத் தான தர்மங்கள் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் ப்ரணகால தோஷங்கள் நிவர்த்தியாகும்...

Friday, April 22, 2016

குரு

குரு
குரு என்பவர், மந்திரத்தின் சூட்சமம் அறிந்தவர், ஒவ்வொரு மந்திரத்தின் அதிர்வும் எத்தகைய எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்பது, அவரது அனுபவத்தில் தெரியும்.
சிலர் ஞானிகளும், முனிவர்களும், ரிஷிகளும், குருவானவர்களும் மந்திரத்தை உருவாக்கியவர்கள் தங்களது புலமையினால் மந்திர சாஸ்திரத்தை உண்டாக்கியவர்கள் என்று நினைக்கிறார்கள்
இது முற்றிலும் தவறு.
மந்திரம் நாற்காலி அல்ல உருவாக்குவதற்கு. அது கிணறும் அல்ல பத்துபேரின் கூட்டு முயற்சியால் தோண்டுவதற்கு.
தானாக தோன்றிய சுயம்பு. எப்போதுமே பிரபஞ்ச வெளியில் இருந்து கொண்டே இருக்கும். சாஸ்வதம் ரிஷிகளும், ஞானிகளும் அந்த சாஸ்வதத்தை காதுகளால் மட்டும் கேட்கவில்லை. கண்களாலும் பார்த்தார்கள். அதனால் தான், அவர்களுக்கு மந்த்ர த்ரஷ்டா என்று பெயர். அதாவது அவர்கள் மந்திரங்களை நேருக்கு நேராக நமக்கு பார்த்து சொன்னவர்கள். அந்த மந்திரங்கள் ஏடுகளில் எழுதப்பட்டது மிகவும் சொற்பம். குரு பரம்பரை வழியாக வாழையடி வாழை என வந்து கொண்டு இருப்பதே அதாவது எழுதப்படாத மந்திரங்களே மிக அதிகம்.
பரம்பரையாக குரு உபதேசம் பெற்று வருகின்ற குருமார்கள், இந்த மந்திரர்களை இன்னாருக்கு இன்னது என்று அடையாளம் கண்டு கொடுப்பதில் வல்லவர்கள். அவர்களுக்கு மட்டும் அந்த திறன் எப்படி கிடைக்கிறது? என்று யோசிப்பதில் பொருள் இல்லாமல் இல்லை. ஒவ்வொரு மனிதனும் மூன்று வகையான உடம்பை பெற்றிருக்கிறான் ஒன்று உணவுகளால் ஆன சரீரம். இரண்டாவது உணர்வுகளால் ஆன மனது. மூன்றாவது அதிர்வுகளால் ஆன வெளிச்சம்.
ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது உடம்பை சுற்றி இயற்கை ஒரு ஒளிவட்டத்தை கொடுத்திருக்கிறது. அது வெண்மை, நீலம், சிவப்பு மற்றும் மஞ்சள் என்று பலவகை வண்ணங்களால் ஆனது. ஒவ்வொரு வண்ணமும் குறிப்பிட்ட அந்த மனிதனின் எண்ணங்களை, ஆத்மாவின் தன்மையை அடையாளப்படுத்துவது ஆகும்.
ஊதா நிறத்தில், ஒருவனை சுற்றி ஒளிவட்டம் இருந்தால் அவன் கடினமான சித்தம் கொண்டவனாக இருப்பான்
வெள்ளை மற்றும் மஞ்சள் நிறத்தில் ஒளிவட்டம் இருந்தால் அவன் மலர்ச்சியானவனாக இருப்பான். இந்த வட்டத்தை என்னவென்று பார்க்கும் ஆற்றல் யோகிகளுக்கும், ஞானிகளுக்கும், இயற்கையாகவே தெய்வீக சக்திகள் நிறைந்த ஒருசில மனிதருக்கும் உண்டு
மந்திரங்கள் என்பது இரண்டு அல்லது மூன்று எழுத்தில் முடிந்து விடும் சக்தி மிகுந்த ஒசைகளாகும். இந்த ஓசைகள் இல்லாமல் உலகம் இல்லை. இந்த ஓசைகளுக்குள் தான் நமக்கு வரம் தரும் சக்தி மறைந்து கிடக்கிறது. நமக்கான பீஜ மந்திரத்தை குருமூலம் உபதேசம் பெற்று மீண்டும் மீண்டும் அந்த மந்திரத்தை நாம் சொல்கிற போது, அந்த மந்திர அதிர்வு நமது உடம்பிற்குள் மறைந்து கிடக்கும் சக்தி மையங்களை விழிப்படையச்செய்கிறது. அப்படி விழிப்படைந்த சக்தி மையங்கள் பீஜ மந்திரங்களின் அதிர்வுகளோடு கலக்கும் போது பிரபஞ்ச ஆற்றலை மிக சுலபமாக ஈர்க்கிறது அதன் பிறகு நாம் நினைத்தது நடக்கிறது.
தாகம் தீர்க்கும் நதி எதிரே வருகிறது. குளிர்ச்சியை தரும் தென்றல் உங்கள் வீட்டு வாசலில் வீசுகிறது. வாசனை நிறைந்த மல்லிகை பூ உங்கள் பந்தலில் படர்ந்திருக்கிறது. சந்தன குழம்பை வாரி இறைக்கும் வண்ண நிலவு நீலவானில் பவனி வருகிறது. நீங்கள் மட்டும் ஏன் கதவை சாற்றி நாலு சுவற்றிற்குள் உங்களை சிறைப்படுத்தி கொள்ள வேண்டும்.
ஆகவே தகுந்த குருவை தேடி அவரிடம் திட்ஷை பெற்று உபதேசமந்திரம் வாங்கி தினம் தினம் பீஜ மந்திரத்துடன் கூடிய உபதேச மந்திரத்தை தினம் தினம் ஜெபம் செய்து முக்திக்கு வழி தேடுவோம்

வில்வத்தில் இருக்கும் விஞ்ஞானம்!

வில்வத்தில் இருக்கும் விஞ்ஞானம்!
தேவலோகத்தைச் சேர்ந்த ஐந்து தெய்வீக விருட்சங்களில் ஒன்று வில்வம். பாதிரி, வன்னி, மா, மந்தாரை ஆகிய ஐந்து விருட்சங்களைப் பஞ்ச விருட்சங்கள் என்று போற்றுகின்றன புராணங்கள். இந்த ஐந்து மரங்களில் ஒன்றான வில்வத்தை நாம் தொட்டாலே, அது நம்மைப் புனிதப்படுத்தும் தன்மை கொண்டது. இதை ஸ்பரிசித்து உட்கொண்டாலே மோட்சம் கிட்டும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.
வில்வம் சிவபெருமானின் அம்சம் என்பது மட்டுமல்ல, முருகனுக்கும் மிகவும் பிரியமானது. முருகனின் அர்ச்சனை நாமங்களில், 'வில்வ பிரியா' என்பதும் ஒன்று.
பெரும்பாலான சிவாலயங்களில் வில்வ விருட்சமே தலவிருட்சமாக அமைந்திருக்கிறது. ஒரே ஒரு வில்வ இலையை எடுத்து பக்தி சிரத்தையுடன் உட்கொள்ள, பிறவியின் தோஷங்கள் அனைத்தும் நிவர்த்தி ஆகிவிடும்.
திரிதளஞ்ச; திரிகுணாகாரம்;
திரிநேத்ரஞ்ச; திரியாயுதம்;
திரிஜன்ம பாப சம்ஹாரம்
ஏக பில்வம் சிவார்ப்பணம்
என்ற மந்திரத்தை உச்சரித்து உண்பது பெரியோர்களின் வழக்கம்.
வில்வத்தின் விஞ்ஞான குணம்:
ஆங்கிலத்தில் வில்வத்துக்கு ஆங்கில பெயர் Aegle marmelos. ஒரு தேவதையைப் போல் அதீத சக்திகள் வாய்ந்தது இந்த மரம். வில்வ இலைகளில் சுழலும் எலெக்ட்ரான், தீட்சண்யமான அதிர்வலைகளை வெளியிட வல்லவை. வில்வ இலைகளை, குறைந்தது பன்னிரெண்டு மணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து, அந்த நீரைப் பருகுவதால் உடலின் ஒவ்வோர் அணுவும் புத்துயிரூட்டப்படுகிறது.
வில்வ இலை நீருக்குள் செலுத்திய மின்காந்த அலைகள், நம் உடலுக்குள் புகுந்து செயல்படுவதே இதற்குக் காரணம். செப்புக்குவளையில் வைத்த நீரில் வில்வ இலையை ஊறப் போடும்போது, அதிர்வலைகளின் செயல்வேகம் மேலும் அதிகரிக்கிறது.
நிலத்தில் ஆழமாக வேரோடும் வில்வமரத்தின் வேர்கள், மண்ணைக் கவ்விப் பற்றி நிலச்சரிவு ஏற்படாமல் காக்கின்றன. காலம்காலமாக மண்ணின் இறுக்கத்துக்குப் பெரிதும் உதவி உள்ளன வில்வ வனங்கள்.
மருத்துவ குணம்:
வில்வமரத்தின் வேர் முதல் நுனி வரை அனைத்து பாகங்களும் மருத்துவப் பயன் கொண்டவை. வில்வ இலைகள் ஊறவைக்கப்பட்ட நீரில் குளித்து, சோப்பு போடாமல் பாசிப்பருப்புப் பொடி தேய்த்துக் கொண்டால், தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படாது. வில்வ இலைத் தளிர்களை லேசாக வதக்கி, இமைகளில் ஒத்தடம் கொடுக்க, கண் தொடர்பான நோய்கள் நீங்கும்.
பெண்களுக்கு மாதவிலக்கின்போது அதிக அளவு ரத்தப்போக்கு ஏற்பட்டால்..வில்வ இலையை அரைத்து சிறிதளவு உண்ணக் கொடுத்தால் அதிக ரத்தப்போக்கு கட்டுப்படும். வில்வ வேரை இடித்து ஒரு குவளை நீரில் கொதிக்கவைத்து, அதை காய்ச்சிய பசும்பாலில் சேர்த்து தினமும் உண்ணும் ஆண்களுக்கு உடல் ஆரோக்கியம் மேம்படும்.