Friday, August 30, 2013

பவுர்ணமி விரத நாளில் உணவு முறை

பவுர்ணமி நாட்களில் விரதம் இருப்பவர்கள் மரக்கறி உணவையே உட்கொள்ள வேண்டும். புளிப்பு, காரம், வெங் காயம், பூண்டு போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

அரை வயிற்றுக்குச் சாப்பாடு, கால் வயிற்றுக்கு தண்ணீர் மீதி கால் வயிற்றில் காற்று என்று எப்போதுமே இருப்பது நல்லது அதிலும் குறிப்பாக பவுர்ணமி நாட்களில் கண்டிப்பாக இப்படி இருக்க வேண்டும்.

சாந்திராயணத்தைப் பவுர்ணமியன்று பதினைந்து கவளம் உணவு சாப்பிட வேண்டும் அதற்கு மறுநாள் பிரதமையன்று பதினான்கு கவளமும் அதற்கு அடுத்த நாள் அதாவது துவிதியை அன்று பதின்மூன்று கவளமுமாக இப்படியே குறைத்துக் கொண்டே போய் அமாவாசை அன்று முழுப்பட்டினி இருக்க வேண்டும்.

பிறகு அமாவாசையின் மறுநாள் சுக்ல பட்சப் பிரதமையன்று ஒரு கவளமும் அதற்கு அடுத்த நாள் துவிதியைக்கு இரண்டு கவளம் என்றும் இப்படி ஒவ்வொரு நாள் திதிக்கும் கவளங்களைக் கூட்டிக்கொண்டு பவுர்ணமி அன்று பதினைந்து கவளம் என்று முடிக்க வேண்டும்.

ஆலயங்களில் குருக்கள் செய்யத் தகாதவை

ஆலயங்களில் செய்யத் தகாதவை

1. பிறருடைய அன்னத்தைப் புசித்த தினத்தில், இறைவனை ஆலயத்தில் வந்து தரிசிப்பது.
2. பிறர் பொருளைக் கொண்டு சுவாமிக்கு நைவேத்யம் செய்வது
3. வீட்டில் செய்துவரும் நித்திய பூஜையை நிறுத்திவிட்டு ஆலயம் செல்வது...
4. ஒருவரைக் கெடுப்பதற்காக சுவாமியை வேண்டிக் கொள்வது
5. தம்பதிகளின் உடலுறுவுக்குப்பின் ஸ்நானம் செய்யாமல் ஆலயம் ப்ரவேசிப்பது
6. ஸ்த்ரீகள் ரஜஸ்வலையாகக்கூடிய நாட்களைக் கணக்கிட்டுக் கருத்தில் கொள்ளாது, அந்நாட்களில் ஆலயம் செல்லுதல்
7. மாதவிடாய்ப் பெண்டிருடன் பேசிக் கொண்டு இருந்தவரோ, அருகில் சென்றவரோ ஸ்நானம் செய்யாமல் ஆலயம் செல்வது.
8. மரணத்தினால் தீட்டு உள்ளவர்கள் ஆலயம் செல்வது
9. பிணத்தைப் பார்த்தவர்கள், பிணத்தோடு உடன் சென்றவர், மரணத்தினால் தீட்டு உள்ளவர்களைத் தீண்டியவர்கள் ஆகியோர் ஸ்நானம் செய்யாமல் ஆலயம் செல்வது.
10. மலஜலங்களை அடக்கிக் கொண்டு ஆலயம் செல்லுதல்.
11. மலஜலம் கழித்தபின் சுத்தி செய்துகொள்ளாமல் ஆலயம் புகுதல்.
12. கருப்பு வஸ்திரம் தரித்துக் கோயிலுக்குச் செல்லுதல், பூஜை செய்தல்
13. கோபத்துடன் ஆலயம் செல்லுதல், பூஜை செய்தல்
14. துவஜஸ்தம்பமும் பலிபீடமும் கடந்து உள்ளே சென்றபிறகு, எங்கேயாவது கீழே விழுந்து நமஸ்காரம் செய்தல்
15. பகவானுக்கும் நந்திக்கும் இடையே குறுக்காக நடத்தல் அல்லது பிரதக்ஷிணம் செய்தல்
16. ஈர வஸ்திரங்களையோ, விழுப்பு வஸ்திரங்களையோ அணிந்து ஆலயம் செல்லுதல்
17. சாப்பிட்டுவிட்டுக் கோயிலுக்கு வழிபாட்டிற்காகச் செல்லுதல்
18. இடுகாடு அல்லது சுடுகாடு சென்று வந்த நாட்களில் ஆலயம் செல்லுதல்
19. புலாலோ, வெங்காயம், பூண்டு போன்றவற்றையோ உண்ட நாட்களில் திருக்கோயில் செல்லுதல்
20. கால் அலம்பாமல் ஆலயத்திற்குள் அடியெடுத்து வைத்தல்
21. மூர்த்திகளைத் தொடுதல்.
22. மூர்த்திகளின் அருகில் கற்பூரம் ஏற்றுதல், அல்லது தீபம் ஏற்றுதல்
23. கோயில் உள்ளே தீபத்தினை விரலால் தூண்டுதல், கைகளைச் சுவரிலும் மற்றுள்ள இடங்களிலும் துடைத்தல்.
24. எச்சில் துப்புதல்
25. நைவேத்யம் ஆகும்போது பார்த்தல்
26. சிவ நிர்மால்யங்களை மிதித்தல் அல்லது தாண்டுதல்
27. விமானம், த்வஜஸ்தம்பம், பலிபீடம், விக்ரஹம் ஆகியவற்றின் நிழலை மிதித்தல்
28. உடலின் மேல் பாகத்தை புருஷர்கள் மூடிச் செல்லுதல்
29. நெற்றிக்கு விபூதி இடாமை
30. சிகை (குடுமி) இல்லாமை
31. தலைமயிரை அவிழ்த்துத் தொங்கவிடுதல்
32. தலைமயிரை ஆற்றுதல்
33. மூக்கைச் சிந்துதல்
34. தும்முதல்
35. கோட்டுவாய் (கொட்டாவி) விடுதல்
36. வாயில் எதையேனும் அடக்கியிருத்தல்
37. பேசுதல்
38. வேகமாக வலம் வருதல்
39. தீபம் அணையும்படி மூச்சுக் காற்று விடுதல்
40. மற்ற ஆலயங்களை பற்றி இங்கு கூறுதல்
41. கை-கால்களை நீட்டிக் கொண்டு உட்காருதல்
42. படுத்தல்
43. உறங்குதல்
44. சிரித்தல்
45. அழுதல்
46. அடித்தல்
47. சண்டையிடுதல்
48. எச்சில் துப்புதல்
49. மலஜலம் கழித்தல்
50. விளையாடுதல்
51. விக்ரஹங்களுக்குப் பின்புறத்தைக் காட்டி நிற்றல்
52. தாம்பூலம் தரித்தல்
53. வாஹனத்தின் மீதமர்ந்தோ, பாதரøக்ஷயுடனோ ஆலயத்துள் செல்லுதல்
54. உற்சவ காலங்களில் விழாக்களைக் கண்டு களித்துவிட்டு, இறை வணக்கம் செய்யாதிருத்தல்
55. தெரிந்து தெரியாமலும் தகாதவற்றைச் செய்தல்
56. உடல் சுத்தம் இல்லாதபோது தொழுதல்
57. ஒரு கையை மட்டும் தூக்கிக் கும்பிடுதல்
58. அப்பிரதக்ஷிணமாகச் சுற்றுதல்
59. மூர்த்திகளுக்கு எதிரில் காலை நீட்டி உண்ணல்
60. தின்பண்டங்களைச் சுவைத்துக்கொண்டிருத்தல்
61. பொய் பேசுதல்
62. உரத்துப் பேசுதல்
63. வாதம் செய்தல்
64. எதையோ நினைத்து வருத்தத்துடன் அழுதல்
65. சண்டை சச்சரவுகளில் ஈடுபடுதல்
66. தன்னை உயர்வாக எண்ணிக்கொண்டு, தன்னை அணுகுபவர்க்கு அருள் புரிதல்
67. தன்னை உயர்வாக எண்ணிக்கொண்டு, மற்றவர்க்குச் சாபம் அளித்தல்
68. ஆடவர் பெண்டிரை நோக்கியும், பெண்டிர் ஆடவரை நோக்கியும் கடும் சொற்களைக் கூறுதல்
69. கம்பளம் முதலியவற்றால் உடலை மறைத்துக் கொள்ளுதல்
70. நர ஸ்துதி செய்தல்
71. பிறரை இழிவு படுத்துதல்
72. அபானவாயு விடுதல்
73. அமங்கலச் சொற்களைக் கூறுதல்
74. வசதிகள் இருந்தும், அவற்றிற்கேற்ப சிறப்பான இறைப்பணிகளும் வழிபாடுகளும் செய்யாமல், நடுத்தரமான அல்லது அதற்கும் குறைவான வகையில் அவற்றைச் செய்தல்
75. கடவுளுக்கு நிவேதனம் செய்யப்படாததைப் புசித்தல்
76. அந்தந்தக் காலகட்டத்தில் விளையும் பழங்கள் போன்ற பொருள்களை இறைவனார்க்கு அளிக்காமல் இருத்தல்
77. வேறு வகைகளில் பயன்படுத்திய பிறகு, எஞ்சியதைக் கடவுளுக்கு அளித்தல்
78. ஸந்நிதிக்குப் பின்புறத்தில் அமர்ந்திருத்தல்
79. ஆலயத்துள், பிறரை வணங்குதல்,
80. ஆலயத்தில் கண்ட தனது ஆசிரியரைக் காணாதது போல் இருத்தல்
81. தற்பெருமை பேசுதல்
82. எந்த ஒரு ஆலயத்தையும் சார்ந்த எந்த ஒரு தேவதையையும் இழிவு படுத்திப்பேசுதல்

Thursday, August 29, 2013

இதுவும் கடந்து போகும்” ...

“இதுவும் கடந்து போகும்” ...
..............................................

ஒரு ஊரில் மக்கள் மத்தியில் புத்தர் பேசத் தொடங்கினார். ஒரு குரல் அவர் பேசுவதை இடைமறித...்தது.

தொடர்ந்து புத்தரை நோக்கி,

“புத்தரேÐ நாங்கள் உங்களைப் போன்ற எத்தனையோ ஞானிகளைச் சந்தித்தும், அவர்களது பிரசங்கங்களை கேட்டும் விட்டோம்.

ஆனால் எங்களுக்கு எவ்வித நன்மையும் ஏற்படவில்லை. இப்போதும் எங்களுக்கு பிரச்சனை இருக்கிறது.

எங்களுக்கு மட்டுமல்ல இவ்வுலகில் உள்ள அனைவருக்குமே ஏதாவது ஒரு பிரச்சனை இருந்து கொண்டே தான் இருக்கிறது.

அதனால் எல்லோருடைய சிக்கலும் தீரும்படியாக, அனைத்து மனிதர்களுடைய வாழ்விலும் பிரகாசம் தெரியும்படி மந்திரங்களைச் சொல்லித் தாருங்கள்.

தேவையற்ற பிரசங்கம் வேண்டாம். நாங்கள் மனப்பாடம் செய்து எல்லோருக்கும் சொல்லத்தக்க அளவில் சிறியதாக இருக்க வேண்டும்.

நாங்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் படியான மந்திரத்தைச் சொல்லுங்கள். உங்களைக் குருவாக ஏற்றுக்கொள்கிறோம்” என்றது அக்குரல்.

மௌனமாக சிரித்த புத்தர்,

“இதுவும் கடந்து போகும்” என்று அழுத்தம் திருத்தமாகச்

சொன்னார்.

அந்த கணமே அக்கூட்டம் ஆடாமல் அசையாமல் அப்படியே அமர்ந்தது. புத்தரின் மந்திரத்தை மனசுக்குள் அசைபோட்டது.

நன்றாகப் படித்திருந்தும் பணம் சம்பாதிக்க முடியாமல் தாழ்வு மனப்பான்மையால் உழன்று கொண்டிருந்த இளைஞனுக்கு தன்னம்பிக்கையைத் தந்தது அந்த வார்த்தை.

“இதுவும் கடந்து போகும்” என்ற வார்த்தையால் என்னுடைய நிலை கண்டிப்பாக மாறிவிடும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது.

இம்மந்திரத்தைத் தினந்தோறும் உச்சரித்து இன்னமும் எனக்கு வேண்டிய பலம் பெற்றுக்கொள்வேன்” என்று உரக்கச் சொல்லிவிட்டு அவ்விடத்தை விட்டு அகன்றான்.

“இம்மந்திரத்தால் என்னுடைய நீண்ட கால நோய் கண்டிப்பாகத் தீர்ந்துவிடும். இனிமேலும் எனக்கு இந்நிலை தொடராது. இது மிகவும் நல்ல மந்திரம் என்று கூறிச் சென்றான்” நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்தவன்.

“இந்த பணம் தொடர்ந்து என்னுடன் இருக்காது என்பதைப் புத்தர் எனக்கு இம்மந்திரத்தின் மூலம் புரிய வைத்துவிட்டார். இனி இந்தப் பணத்தை என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்துகொண்டேன்” என்று கூறிச் சென்றான் பணக்காரனாக இருந்தவன்.

அடுத்து இருந்த அழகான பெண்,

“என்னுடைய அழகு எப்போதும் என்னுடன் வராது என்பதை இம்மந்திரம் எனக்குப் புரிய வைத்துவிட்டது” என்று கிளம்பினாள்.

கடைசியாக, தினந்தோறும் உழைத்து ஓடாய்த் தேய்ந்த பெண்மணி கிளம்பும் போது,

“இத்தனை நாளும் உழைத்துக் கொண்டிருக்கிறேன். மரணம் வரையிலும் உழைக்கத்தான் வேண்டியிருக்கும் என நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் இந்த மந்திரத்தின் மூலம் எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது. என்னுடைய நிலையும் மாறிவிடும்” என்று நம்பிக்கையுடன் சென்றார்..

ஆம்,நண்பர்களே.,

தோல்விகள் தழுவும்போது “இதுவும் கடந்து போகும்”

என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

சோர்ந்து விட மாட்டீர்கள்.

நல்ல மனிதர்களும்,நண்பர்களும் உங்கள் வாழ்வில்

வரும்போது ‘இதுவும் கடந்து போகும்” என்பதை நினைவில்

கொள்ளுங்கள்.

அவர்கள் இருக்கும்போது போது கொளரவிப்பீர்கள்.

அவர்கள் விலகும்போது பாதிக்கடைய மாட்டீர்கள்.

எத்தனையோ மனிதர்களை மாற்றிய இந்த உன்னத சொல்

உங்கள் வாழ்விலும் இனி ஒளி ஏற்றும்.

“இதுவும் கடந்து போகும்” என்பதை

உறுதியுடன் நம்புங்கள். கண்டிப்பாக மாறிவிடும்.

தோல்வியைச் சந்திப்பவர்கள்,

நோயில் இருப்பவர்கள்,

சிக்கலில் மாட்டியவர்கள்,

திசை தெரியாமல் இருப்பவர்கள் அனைவரும் தினமும்

இதை மனதில் சொல்லிக்கொண்டே இருங்கள்.

ஒவ்வொரு நிமிடமும் மகிழ்ச்சியே..,

உடுமலை.சு.தண்டபாணி தண்டபாணி
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

இன்றைய நாள் உற்சாகமும், உத்வேகமும்

தரும் நாளாக உங்களுக்கு அமையட்டும்..

இன்றைய சிந்தனை..

ஆசை அழித்து விடும் ....பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர் சொன்ன கதை ......

ஆசை அழித்து விடும் ....

பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர் சொன்ன கதை ......

முனிவர் ஒருவரின் தவத்தை மெச்சி கடவுள் அவருக்கு காட்சி கொடுத்து, "என்ன வரம் வேண்டும்?" என்று கேட்டார்....

“தங்கள் தரிசனமே எனது தவத்தின் நோக்கம்; வேறெதுவும் வேண்டாம்” என்றார் அந்த முனிவர்.
கடவுள், “நான் உனக்கு ஒரு விருஷத்தை வரமாக தருகிறேன். கற்பக விருஷம் மாதிரி. இதனிடம் கேட்கக் கூட வேண்டாம். அதனடியில் நின்று கொண்டு யார் என்ன நினத்தாலும் அது உடனே நடக்கும்” என்று அருளினார் .

இந்த மரத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது? இது நமக்கு ஆசையை வளர்த்து நம்மை பாவம் செய்ய வைக்கும் என்று சிந்தித்த முனிவர் அங்கிருந்து ஓடி விட்டார்.ஒரு நாள் அந்த வழியே ஆடு மேய்த்துக் கொண்டு வந்த ஒரு இளைஞன் வந்தான். அந்த மரத்து நிழலில் கொஞ்சம் படுத்து ஓய்வெடுக்க நினத்தான்.அந்த மரத்தடியில் வந்து படுத்துக் கொண்டே யோசித்தான், “இது என்ன பொழைப்பு; தினம் தினம் ஆட்டை மேய்ச்சிட்டு, ஒரு நல்ல சாப்பாடு கூட சாப்பிட்ட முடிவதில்லை. அரண்மனையில் சாப்பிடற விருந்து மாதிரி சாப்பாடு கிடைச்சா தேவலை”அந்த மரத்தினடியிலிருப்பவர் எதை நினைத்தாலும் மரம் தரக்கூடியது என்பதால் அவன் கண் முன்னே அவனுக்கு ராஜோபசார விருந்து படைக்கப்பட்டிருந்தது. அவன் பயந்து போய் விட்டான். இது ஏதாவது பிசாசு அல்லது பூதத்தின் வேலையாக இருக்குமோ என்று அந்த மரத்தை சுற்றி சுற்றி வந்தான். ஒன்றுமில்லாததால், பயம் தெளிந்து அந்த விருந்தை ஆவலுடன் சாப்பிட்டா ன்.

அவன் மீண்டும் யோசித்தான், “சாப்பிட்டதுக்குப் பின்னால் வசதியாகப் படுக்க வேண்டும்”அந்த மரம் அவன் நினைத்தபடி அவனை நல்ல கட்டில் மெத்தையில் படுக்க வைத்தது.

தூக்கத்திலிருந்து விழித்த அவன், “நான் நடுக்காட்டில இப்படி மரத்துக்கடியில் படுத்திருக்கிறேனே திடீரென்று புலி வந்து நம்மை அடிச்சுக் கொன்று விட்டால் ….”. அவன் எண்ணப்படியே புலி வந்து அவனை அடித்துக் கொன்றது.

ஆசை மட்டும் ஒன்றைத் தொடர்ந்து ஒன்றாய் வந்து நம்மை அழித்துவிடுகிறது

தர்மன் நினைத்திருந்தால்?

தர்மன் நினைத்திருந்தால்?

மகாபாரத யுத்தம் முடிந்து பாண்டவர்கள்
அரியணை ஏறிய பிறகு, பகவான் கிருஷ்ணரிடம்
ஒரு கேள்வி கேட்கபட்டதாம்....
கிருஷ்ணா... நீ பாண்டவர்கள் மேல்
அளவில்லா அன்பு கொண்டவன். அவர்கள் நலனில்
அக்கறை உள்ளவன். உன் தங்கை சுமித்ராவை கூட ,
அர்சுனனுக்கு திருமணம்
செய்து கொடுத்து இருக்கிறாய்.
இப்படி இருக்க....பாண்டவர்கள் சூதாடி,
நாட்டை இழந்து, நாடோடியாய் காட்டில்
அலைந்தார்கள். நீ நினைத்து இருந்தால்
இதை தடுத்து இருக்க முடியாதா.
அதற்கு கிருஷ்ணன் சொன்ன பதில் இதுதான்.
சூதாடுவது என்பது அரச தர்மம். தர்மன்
சூதாடியத்தில் தவறு இல்லை. ஆனால் துரியோதனன்
சூதாட அழைத்த போதே என் சார்பாக
மாமா சகுனி ஆடுவார் என்று திரியோதனன்
சொன்னான்.
ஆனால் தர்மனோ தான் என்ற எண்ணம் கொண்டு தானே ஆட
முனைந்தான். தர்மன் என் சார்பாக கிருஷ்ணன் ஆடுவார்
என்று சொல்லி இருந்தால்,
முடிவு வேறு மாதிரியாக இருந்து இருக்கும்.
தர்மன் செய்த தவறுதான் இந்த நிலைமைக்கு காரணம்
என்றார்.

பிரதோஷ காலத்தில் செய்யத்தகாத எட்டு விடயங்கள்.

பிரதோஷ காலத்தில் செய்யத்தகாத எட்டு விடயங்கள்.

1. போசனம்- உணவு உண்ணுதல்.
2. சயனம்- தூங்குதல்
3. ஸ்நானம் - குளித்தல்
4. எண்ணெய் தேய்த்தல்
5. வாகனம் ஏறல்- இது வெளியூருக்குப் பயணித்தலைக் குறிக்கும்.
6. நூல் படித்தல் -
7. மந்திர செபம் - பலர் தவறுதலாக பிரதோஷ காலத்தில் பஞ்சாட்சர செபம் செய்கின்றனர். இது தவறு.
8. விஷ்ணு தரிசனம் - விஷ்ணுவே பிரதோஷ காலத்தில் சிவன் கோவிலுக்கு வழிபாட்டுக்கு வந்துவிடுவதால் இக்காலத்தில் விஷ்ணு வழிபாடு இல்லை.
பிரதோஷ காலத்தில் சிவாலயத்துக்குச் சென்று வழிபட வேண்டும் என்பதற்காகவே இந்த விதிகள். ப்லர் இக்காலத்தில் சிவாலயத்துக்குச் செல்லாமல் தாமே பூசை, அபிஷேகங்கள் செய்து வழிபடுதலும், மற்றவர்களையும் அதற்கு அழைத்தலும் தவறாம்.
- ஆதாரம் ஆறுமுக நாவலரின் சைவ வினாவிடை 389

Wednesday, August 28, 2013

திருப்புகழ் -முத்தைத் தரு (திருப்புகழின்) பொருள் விளக்கம்

திருப்புகழ் -முத்தைத் தரு



முகுந்தன், ருத்ரன், கமலன் என்ற மும்மூர்த்திகளையும் தன்னிடத்தே கொண்டவன் மு, ரு, க,  எனும் அழகன்.  அன்றாட வாழ்வின் அல்லல்களில் சிக்கித் தவிக்கும் உள்ளங்களுக்கு அருமருந்தானவன்.

நினைக்க  முக்தி தரும் திருஅண்ணாமலையில் அருணகிரிப் பெருந்தகையார் முன் காட்சி அளித்து,
''முத்தைத் தரு'' என்று அடியெடுத்துக் கொடுத்துப், பாடப் பணித்து மறைந்தார் முருகப் பெருமான்.

திசைகள் நான்கிலும் உள்ள அன்பர்கள் அற்புதம் அற்புதம் என்று ஆனந்திக்கும்,  சித்திர கவித்துவ சத்த மிகுத்து அருளாலும், பொருளாலும், சந்தத்தாலும், ஓசையாலும் உயர்ந்தது திருப்புகழ்.

எல்லாம் வல்ல முருகப்பெருமானின் திருவருளினால்
 இந்தத் திருப்புகழின் பொருள் விளக்கம்
                                                          நூல்

ராகம்: ஷண்முகப்ரியா                                                            தாளம்: த்ரிபுடை


                          முத்தைத்தரு பத்தித் திருநகை
                                 அத்திக்கிறை சத்திச் சரவண
                                 முத்திக்கொரு வித்துக் குருபர                        எனவோதும்-

                          முக்கட்பர மற்குச் சுருதியின்
                                  முற்பட்டது கற்பித் திருவரு
                                  முப்பத்துமு வர்க்கத் தமரரு                             மடிபேணப்;

                          பத்துத்தலை தத்தக் கணைதொடு
                                  ஒற்றைக் கிரிமத்தைப் பொருதொரு
                                   பட்டப்பகல் வட்டத் திகிரியி                          லிரவாகப் -

                          பத்தற்கிர தத்தைக் கடவிய
                                 பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
                                 பக்ஷத்தொடு ரக்ஷித் தருள்வது                         மொருநாளே;

                          தித்தித்தெய வொத்தப் பரிபுர
                                   நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
                                   திக்கொட்கந டிக்கக் கழுகொடு                  கழுதாடக்-

                          திக்குப்பரி யட்டப் பயிரவர்
                                  தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
                                  சித்ரப்பவுரிக்குத்  த்ரிகடக                             எனவோதக்;

                          கொத்துப்பறை  கொட்டக் களமிசை
                                   குக்குக்குகு குக்குக் குகுகுகு
                                   குத்திப்புதை புக்குப் பிடியென                      முதுகூகை

                          கொட்புற்றெழ நட்பற் றவுணரை
                                    வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
                                    குத்துப்பட வொத்துப் பொரவல                   பெருமாளே.


முத்தைத் தரு பத்தித் திருநகை-
பத்தியென்றால் வரிசை. முத்துப் போன்ற பல்வரிசை தெரியுமாறு புன்னகை பூக்கிறான் முருகன். அது முருகப் பெருமானுடைய முகத்தில் -'திருநகை'-முத்தால் ஆன ஆபரணம் போல-ஒளி வீசுகிறது. அது பக்தர்களுக்கு 'திரு'வைக் கொடுக்கிறது. திரு என்றால் செல்வம். என்ன செல்வத்தைக்  கொடுக்கிறது? பக்தியைக் கொடுத்து, மோட்ச சாம்ராஜ்யமாகிய அழியாத செல்வத்தைக் கொடுக்கிறது.

அத்திக்கிறை-
அத்தி-தெய்வானை. தெய்வானை முத்தின் தலைவனை

சத்திச் சரவண
மலைமுத்தான உமையம்மையின் புதல்வன், சரவணப் பொய்கையில் தோன்றியவன். எனவே 'சத்திச் சரவணன்.'அன்னையிடம் இருந்து சக்தி மிக்க வேலாயுதத்தைப் பெற்றவன்.

முத்திக்கொரு வித்து
முக்தி அடைய விரும்புபவர்கள் முருகவேளுடைய திருவடிகளிலே கருத்தைச் செலுத்தி பக்தி எனும் விதையை இதயத்தில்  நடவேண்டும்.

குருபரன்
கு - அந்தகாரம் அல்லது இருள்
ரு -   நீக்குபவர். ஆணவ இருளை நீக்குபவர்
பக்குவப்பட்ட ஆன்மாக்களுக்கு குருவடிவாய் வந்து அருள் புரிபவர் குருபரன்.

எனவோதும்
என்று போற்றிய

முக்கட் பரமற்குச் சுருதியின் முற்பட்டது கற்பித்து
மூன்று கண்களையுடைய சிவபெருமானுக்கு, நான்கு வேதங்களிலும் முதன்மையான 'ஓம்'என்ற பிரணவ மந்திரப் பொருளை உபதேசித்து

இருவரும் முப்பத்து முவர்க்கத்து அமரரும் அடிபேண
பிரமனும், திருமாலும், முப்பத்து முக்கோடி தேவர்களும் திருவடிகளிலே வணங்கப் பெரும் பெருமை உடையவன்,

பத்துத்தலை தத்தக் கணைதொடு
இராமாவதாரத்தில் இலங்காபுரி அரசனான இராவணனின் பத்துத் தலைகளும் வீழுமாறு அம்பு தொடுத்த வீரனும்

ஒற்றைக் கிரி மத்தைப் பொருதொரு
தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது மந்தரமலையை மத்தாக்க, அதைத் தாங்கும் பொருட்டு கூர்மாவதாரம் எடுத்தவனும்

பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாகப் 
மகாபாரதப் போரில், கண்ணனாய், பட்டப்பகலில் சூரியன் மறைந்து விட்டது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி  ஜெயத்ரதன்  மாளும்படிச் செய்தவனும்

பத்தற்கு இரதத்தைக் கடவிய
தன் நண்பனும், பக்தனுமான அர்ச்சுனனுக்குத்  தேரோட்டியாய் இருந்து அருள் புரிந்தவனும் ஆகிய

பச்சைப்புயல் மெச்சத் தகு பொருள்
நீலமேக வண்ணனான திருமாலும்லும்  பாராட்டப் பெற்ற பெருமை உடைய முருகப்  பெருமானே.

பக்ஷத்தொடு ரக்ஷித் தருள்வது  ஒரு நாளே
பரிவோடு  என்னைக்  காத்து  அருள் புரிதல் வேண்டும்.

தித்தித்தெய வொத்தப் பரிபுர           

கால்களில் அணிந்த சிலம்புகள் தித்தித்தோம் என ஒத்து ஒலிக்கவும்

நிர்த்தப்பதம்  வைத்துப் பயிரவி
காளியானவள் நடனமிட

திக்கொட்க நடிக்கக் கழுகொடு-  கழுதாட
திசைதொறும்  ஒலிக்குமாறு ஆட, உடன் கழுகுகளும் பேய்களும் ஆடுகின்றன.

திக்குப்பரி யட்டப் பயிரவர்
எட்டுத் திக்குகளையும் காக்கும் அஷ்ட பயிரவர்களும்

தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
தொ..க்..குத்.... தொ....கு... என

சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக - எனவோதக்
அழகிய வாத்ய ஒலிக்கு ஏற்றவாறு கூத்தாட

கொத்துப்பறை கொட்டக் களமிசை
பல பறைகள் முழங்க, போர்க்களத்தில்

குக்குக்குகு குக்குக் குகு
குத்திப்புதை புக்குப் பிடியென  - முதுகூகை
குத்து, வெட்டு, பிடியென கிழக்கோட்டான்கள்  சுழன்று ஆட,

கொட்புற்றெழ நட்பற்ற அவுணரை
சுழன்றாடும்  எதிரிகளாகிய அசுரர்களை

வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
கொன்று குவித்து கிரவுஞ்சமலையை வேலால் துளைத்து

குத்துப்பட ஒத்துப் பொரவல - பெருமாளே.
பொடிப்பொடியாக்கி  வெற்றிவாகை சூடிய முருகப்பெருமானே.
என்னையும் கருணையுடன் காத்து அருள் புரிவீராக.

குறிப்பு;
குலகிரியான  பொன்னிறமான கிரவுஞ்சமலை மாயைக்கு எடுத்துக்காட்டு. தாரகாசுரன் அரசு புரிந்த மாயமாபுரியில் கிரவுஞ்சன் என்ற ஓர் அரக்கன் இருந்தான். இவன் முனிவர்கள் செல்லும் வழியில் மாயையின் ஆற்றலினால் மலைவடிவாக நின்று, மலைக்குள் வழியிருப்பது போலக் காட்டி, உள்ளே நுழையும்  முனிவர்களை மயக்கிக் கொன்று தின்பான்.

அகத்திய முனிவர் மேருமலையிலிருந்து  தென்திசையில் உள்ள பொதியமலைக்கு வந்தார். அவர் வரும் வழியில் பெருமலை உருவாக நின்று அதற்குள் வழியிருப்பது போல் காட்ட, அவரும் உள் நுழைந்து வெகு தூரம் போய் வழிகாணாமல், அறிவுக் கண்ணால் அசுர மாயையை அறிந்து, வெளி வந்து ''அறுமுகப் பெருமான் அயில் வேலால் அழியக் கடவாய்" எனச் சபித்தார். சூரனுடன் போர் புரிந்த போது  கிரவுஞ்சன் மலைவடிவாய் நின்று வீரவாகுத் தேவர் முதலியோரை மலைக்குள் புகுமாறு செய்து மயக்கினான். கந்தவேள் கிரவுஞ்சத்தைப் அழித்தார்.

அயிகிரி நந்தினி நந்தித மேதினி பொருள்/ மஹிஷாசுரமர்த்தினி ஸ்தோத்திரம் பொருள்

1. அயிகிரி நந்தினி நந்தித மேதினி
விச்வ வினோதினி நந்தநுதே
கிரிவர விந்த்ய சிரோதி நிவாஸினி
விஷ்ணு விலாஸினி ஜிஷ்ணுநுதே
பகவதி ஹே சிதிகண்ட குடும்பினி
பூரிகுடும்பினி பூரிக்ருதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

பொருள்: மலையரசனின் மகளே, உலகை மகிழ்விப்பவளே, விளையாட்டாக உலகை நடத்திச் செல்பவளே, நந்தனால் வழிபடப்பட்டவளே, சிறந்த மலையான விந்திய மலையில் உறைபவளே, திருமாலுக்குப் பெருமை சேர்ப்பவளே, வெற்றி வீரர்களால் துதிக்கப்படுபவளே, பகவதீ, நீலகண்டரின் பத்தினியே, உலகமாகிய பெரிய குடும்பத்தை உடையவளே, அரியவற்றைச் சாதிப்பவளே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.

2. ஸுரவர வர்ஷிணி துர்தர தர்ஷிணி
துர்முக மர்ஷிணி ஹர்ஷரதே
த்ரிபுவன போஷிணி சங்கர தோஷிணி
கில்பிஷ மோஷிணி கோஷரதே
தனுஜ நிரோஷிணி  திதிஸுத ரோஷிணி
துர்மத சோஷிணி ஸிந்துஸுதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

பொருள்: நல்லோருக்கு வரங்களை மழைபோல் பொழிபவளே. கொடியவர்களை அடக்கி வைப்பவளே, கடுமையான வார்த்தைகளையும் பொறுப்பவளே, மகிழ்ச்சியுடன் பொலிபவளே, மூன்று உலகங்களுக்கும் உணவளித்துக் காப்பவளே, சிவபெருமானை மகிழ்விப்பவளே, பாவங்களைப் போக்குபவளே, பேரொலியில் மகிழ்பவளே, தீயவர்களிடம் கோபம் கொள்பவளே, கொடியவர்களை அடக்குபவளே, அலை மகளே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.

3. அயி ஜகதம்ப மதம்ப
கதம்பவன ப்ரிய வாஸினி ஹாஸரதே
சிகரி சிரோமணி துங்க ஹிமாலய
ச்ருங்க நிஜாலய மத்யகதே
மதுமதுரே மதுகைடப கஞ்ஜினி
கைடப பஞ்ஜினி ராஸரதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

பொருள்: உலகின் அன்னையே, என் தாயே, கதம்ப வனத்தில் வசிப்பதை விரும்புபவளே, சிரிப்பில் மகிழ்பவளே, மலைகளில் சிறந்த இமயமலையில் உச்சியிலுள்ள ஸ்ரீசக்கரத்தின் நடுவில் வீற்றிருப்பவளே, தேன்போல் இனியவளே, மது கைடப அசுரர்களை அழித்தவளே, கேளிக்கைகளில் மகிழ்பவளே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.

4. அயி சதகண்ட விகண்டித ருண்ட
விதுண்டித சுண்ட கஜாதிபதே
ரிபுகஜ கண்ட விதாரண சண்ட
பராக்ரம சுண்ட ம்ருகாதிபதே
நிஜபுஜ தண்ட நிபாதித கண்ட
விபாதித முண்ட பதாதிபதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

பொருள்: சதகண்டம் என்ற ஆயுதத்தால் முண்டாசுரனை வீழ்த்தியவளே, யானை முகத்தினனான கஜாசுரனின் தும்பிக்கையைத் துண்டித்தவளே, எதிரிகளான யானைகளின் கழுத்தைத் துண்டித்து எறிவதில் திறமை மிக்கவளே, தண்டாயுதம் போன்ற தன் தோள்களின் வலிமையால் முண்டாசுரனின் சேனாதிபதியைக் கண்டதுண்டமாக வெட்டியெறிந்தவளே,  மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.

5. அயிரண துர்மத சத்ரு வதோதித
துர்தர நிர்ஜர சக்தி ப்ருதே
சதுர விசார துரீண மஹாசிவ
தூதக்ருத ப்ரமதாதிபதே
துரித துரீஹ துராசய துர்மதி
தானவ தூத க்ருதாந்தமதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

பொருள்: அருவிபோல் எதிரிகளின் பிணக் குவியலைப் பொழிகின்ற ஆற்றல் பெற்றவளே, பகுத்து ஆராய்வதில் வல்லவரான சிவபெருமானை எதிரிகளிடம் தூதாக அனுப்பியவளே, தீய சிந்தனையும் கெட்ட நோக்கமும் கொண்ட அசுரர்களை அழிப்பவளே,  மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.

6. அயி சரணாகத வைரிவ தூவர
வீர வராபய தாயகரே
த்ரிபுவன மஸ்தக சூலவிரோதி
சிரோதி க்ருதாமல சூலகரே
துமிதுமி தாமர துந்துபி நாத
மஹோ முகரீக்ருத திங்மகரே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

பொருள்: தஞ்சம் அடைந்த எதிரிகளின் மனைவியருக்கும் சரணடைந்த வீரர்களுக்கும் அடைக்கலம் தந்து காத்தவளே, மூன்று உலகங்களுக்கும் தலைவியாக விளங்குபவளே, எதிரிகளின் கழுத்தில் திரிசூலத்தை நாட்டியவளே, தும் தும் என்று முழங்குகின்ற துந்துபி வாத்தியத்தையே வெட்கப்படச் செங்கின்ற கம்பீரக் குரல் படைத்தவளே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.

7. அயி நிஜஹுங்க்ருதி மாத்ர நிராக்ருத
தூம்ர விலோசன தூம்ரசதே
ஸமரவிசோஷித சோணிதபீஜ
ஸமுத்பவ சோணித பீஜலதே
சிவசிவ சும்ப நிசும்ப மஹாஹவ
தர்ப்பித பூத பிசாசரதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

பொருள்: தூம்ரவிலோசனன் முதலிய நூற்றுக்கணக்கான அசுரர்களை ஹூங்காரத்தினாலேயே தோற்று ஓடச்செய்தவளே, போரில் மாண்ட அசுரர்களின் ரத்தக்கடலில் தோன்றிய அழகிய சிவந்த கொடி போன்றவளே, சும்ப நிசும்ப அசுரர்களை அழித்ததாகிய மாபெரும் வேள்வியால் பூதகணங்களை மகிழ்வுறச் செய்தவளே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.

8. தனுரனு ஸங்க ரணக்ஷண ஸங்க
பரிஸ்ஃபுர தங்க நடத்கடகே
கனக பிசங்க ப்ரிஷத்க நிஷங்க
ரஸத்பட ச்ருங்க ஹதாபடுகே
க்ருத சதுரங்க பலக்ஷிதிரங்க
கடத்பஹுரங்க ரடத்படுகே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

பொருள்: வில்லை வளைத்துப் போர் செய்வதால் நடனமாடுவது போல் அசைகின்ற கைவளைகளை அணிந்தவளே, பொன் அம்புகளில் ஒரு கையும் அம்பறாத்தூணியில் மற்றொறு கையுமாக விரைந்து அம்புகளைப் பொழிந்து, ஒலி எழுப்புகின்ற வீரர்களைக் கொன்றவளே, நால்வகை சேனைகளும் நிறைந்த போர்க்களத்தில் வெட்டப்பட்ட தலைகளைச் சதுரங்கக் காய்களைப்போல் விளையாடுபவளே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.

9. ஜய ஜய ஜப்ய ஜயே ஜய சப்த
பரஸ்துதி தத்பர விச்வ நுதே
ஜணஜண ஜிஞ்ஜிமி ஜிங்க்ருத நூபுர
ஸிஞ்ஜித மோஹித பூதபதே
நடித நடார்த்த நடீ நட நாயக
நாடித நாட்ய ஸுகான ரதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

பொருள்: பகைவர்களால் வெல்ல முடியாதவளே, ஜெய ஜெய என்ற கோஷத்துடன் உலகினரால் போற்றப்படுபவளே, ஜண ஜண என்று ஒலித்து சிவபெருமானை மோகத்தில் ஆழ்த்துகின்ற கொலுசுகளை அணிந்தவளே, நடனம், நாட்டியம், நாடகம், பாடல்கள் என்று விதவிதமான கேளிக்கைகளில் ஆர்வம் உடையவளே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.

10. அயி ஸுமன: ஸுமன: ஸுமன:
ஸுமன: ஸுமனோஹர காந்தியுதே
ச்ரித ரஜனீ ரஜனீ ரஜனீ
ரஜனீ ரஜனீகர வக்த்ர வ்ருதே
ஸுநயன விப்ரமர ப்ரமர ப்ரமர
ப்ரமர ப்ரமரா திபதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

பொருள்: நல்மனம் படைத்த தேவர்களின் அழகிய சோலையில் மலர்ந்த பாரிஜாத மலர்களைப்போல் பிரகாசிப்பவளே, பாற்கடலில் பிறந்து இரவில் ஒளிரக்கூடிய நிலவை ஒத்த முகம் உடையவளே, பார்த்தவர் வியந்து நிற்கும் வண்ணம் சுழல்கின்ற அழகிய விழிகளைப் பெற்றவளே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.

11. ஸஹித மஹாஹவ மல்ல மதல்லிக
மல்லி தரல்லக மல்லரதே
விரசித வல்லிக பல்லி கமல்லிக
ஜில்லிக பில்லிக வர்கவ்ருதே
சிதக்ருத ஃபுல்லஸ முல்லஸி தாருண
தல்லஜ பல்லவ ஸல்லலிதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

பொருள்: மற்போரில் பல்வேறு திறமைகள் காட்டுகின்ற மாமல்லர்களுடன் மற்போர் செய்வதை விரும்புபவளே, மல்லிகை, முல்லை, பிச்சி போன்ற பல்வேறு மலர்களைச் சூடிய பெண்களால் சூழப்பட்டவளே, தளிரின் இளஞ்சிவப்பும் வெட்கப்படுகின்ற சிவப்பு நிறம் கொண்டவளே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.

12. அவிரலகண்ட கலன்மத மேதுர
மத்த மதங்கஜ ராஜபதே
த்ரிபுவன பூஷண பூதகலாநிதி
ரூப பயோநிதி ராஜஸுதே
அயிஸுத தீஜன லாலஸ மானஸ
மோஹன மன்மத ராஜஸுதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

பொருள்: ஓயாமல் மதநீரைப் பெருக்குகின்ற யானையின் இன்பநடையை ஒத்த நடை உடையவளே, மூன்று உலகங்களுக்கும் ஆபரணமான நிலவை ஒத்தவளே, பாற்கடலாகிய அரசனுக்குப் பிறந்தவளே, அழகிய பெண்களின் மனத்தில்கூட மோகத்தையும் ஆசையையும் தூண்டுகின்ற அழகுவாய்ந்த இளவரசியே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.

13. கமல தலாமல கோமல காந்தி
கலா கலிதாமல பாலலதே
ஸகல விலாஸ கலாநிலய க்ரம
கேலிசலத்கல ஹம்சகுலே
அலிகுல சங்குல குவலய மண்டல
மௌலிமிலத் பகுலாலிகுலே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

பொருள்: தாமரை இதழ்போன்ற மென்மையும் அழகும் வாய்ந்த பரந்த நெற்றியை உடையவளே, எல்லா கலைகளின் இருப்பிடமும் நீயே என்பதை உணர்த்துகின்ற அன்னநடை உடையவளே, தாமரை மலர்களை வண்டுகள் சூழ்வதுபோல், வண்டுகள் சூழ்ந்து மொய்க்கின்ற வகுள மலர்களைத் தலையில் சூடியவளே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.

14. கர முரலீரவ வீஜித கூஜித
லஜ்ஜித கோகில மஞ்ஜுமதே
மிலித புலிண்ட மனோஹர குஞ்ஜித
ரஞ்சித சைல நிகுஞ்ஜகதே
நிஜகுணபூத மஹா சபரீகண ஸத்குண ஸம்ப்ருத கேலிதலே
ஜய ஜய ஹே மஹிஷாசுர மர்தினி
ரம்யக பர்தினி சைலஸுதே

பொருள்: உன் கையிலுள்ள புல்லாங்குழல் வெட்கப்படுகின்ற அளவுக்கு குயில்போல் இனிய குரல் படைத்தவளே, மலைவாசிகள் பாடி மகிழ்ந்து திரிகின்ற மலைகளில் மகிழ்ச்சியுடன் உறைபவளே, நற்குணங்கள் அனைத்தும் சேர்ந்து ஓர் உருவம் பெற்றதுபோல் வேட்டுவப் பெண்களின் கூட்டத்தில் சிறந்து விளங்குபவளே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.

 15. கடிதடபீத துகூல விசித்ர
மயூக திரஸ்க்ருத சந்த்ரருசே
ப்ரணத ஸுராஸுர மௌலி மணிஸ்ஃபுர
தன்சுல ஸன்னக சந்த்ரருசே
ஜிதகனகாசல மௌலி பதோர்ஜித
நிர்பர குஞ்ஜர கும்பகுசே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

பொருள்: நிலவின் தண்ணொளியைக்கூட தோற்கச் செய்கின்ற அழகிய கிரணங்கள் பிரகாசிக்கின்ற பட்டாடையை இடுப்பில் அணிந்தவளே, உன் திருவடிகளைப் பணிகின்ற தேவர் மற்றும் அசுரர்களின் கிரீடங்களில் பதிக்கப்பட்ட மாணிக்கக் கற்களைப் பிரதிபலிக்கச் செய்கின்ற நிலவொளி போன்ற ஒளியை வீசுகின்ற நகங்களை உடையவளே, யானையின் மத்தகத்தைப் போன்றதும், அழகில் பொன்மலையான மேருவை நிகர்த்ததுமான மார்பகங்களை உடையவளே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.

16. விஜித ஸஹஸ்ர கரைக ஸஹஸ்ர
கரைக ஸஹஸ்ர கரைகநுதே
க்ருத ஸுர தாரக ஸங்கர தாரக
ஸங்கர தாரக ஸூனுஸுதே
ஸுரத சமாதி ஸமான ஸமாதி
ஸமாதி ஸமாதி ஸுஜாதரதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

பொருள்: உன்னால் வெல்லப்பட்ட கோடி சூரியர்களால் துதிக்கப்படுபவளே, தேவர்களைப் பாதுகாக்கவும் தேவ-அசுரப் போரை முடிவிற்கு கொண்டு வரவும் முருகப்பெருமானை மகனாகப் பெற்றவளே, சுரதன், சமாதி ஆகியோரின் உயர்ந்த நிலைகளைப்போல் உயர்நிலைகளை நாடுபவர்களிடம் ஆர்வமும் அக்கறையும் உடையவளே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.

17. பதகமலம் கருணா நிலயே
வரிவஸ்யதியோ ஸ்னுதினம் ஸுசிவே
அயி கமலே கமலா நிலயே
கமலா நிலய ஸகதம் நபவேத்
தவ பதமேவ பரம்பதமித்
யனு சீலயதோ மமகிம் ந சிவே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

பொருள்: கருணையின் இருப்பிடமே! தினமும் உன் திருவடித் தாமரைகளை வணங்குபவர்களின் இதயத் தாமரையை உறைவிடமாகக் கொள்கின்ற மகாலட்சுமியே! நீ அடியவர்களின் நெஞ்சில் வாழ்ந்தால் அவர்களே திருமால் ஆகிவிட மாட்டார்களா? உனது திருப்பாதங்களே மிக உயர்ந்த செல்வம் என்று கருதுகின்ற எனக்கு அதைவிட வேறு செல்வம் வேண்டுமா? மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.

18. கனகல ஸத்கல ஸிந்துஜலைரனு
ஸிஞ்சிநுதே குண ரங்கபுவம்
பஜதி ஸகிம் நசசீ குசகும்ப
தடீ பரிரம்ப ஸுகானுபவம்
தவ சரணம் சரணம் கரவாணி
நதாமரவாணி நிவாஸிசிவம்
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

பொருள்: பொன்போல் பிரகாசிக்கின்ற சிந்து நதியின் நீரினால் பக்தர்கள் உன்னை நீராட்டுகின்றனர். அவர்கள், தேவர்களின் தலைவியான இந்திராணியின் மார்பகங்களைப் போன்ற பெரிய மார்பகங்களை உடைய பெண்கள் தழுவுகின்ற சுகத்தைப் பெறமாட்டார்களா என்ன? அந்த சுகத்தைப் பெரிதென்று கருதாமல் உன்னையே நான் தஞ்சமடைந்துள்ளேன். என் நாவில் கலைமகளை எழுந்தருளச் செய்வாய். மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.

19. தவ விமலேந்து குலம் வதனேந்துமலம்
ஸகலம் நனு கூலயதே
கிமு புரஹூத புரீந்துமுகீ
ஸுமுகீபிரஸெள விமுகீ க்ரியதே
மமது மதம் சிவநாமதனே
பவதீ க்ருபயா கிமுத க்ரியதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

பொருள்: எல்லா முகங்களையும் மலரச் செய்வதற்கு நிலவை ஒத்த உன் முகம் போதும். தேவலோகப் பெண்கள் உன்னை விடுத்து ஏன்தான் நிலவை நாடுகிறார்களோ? அதுவும் உன் செயல்தான் என்பது எனக்குத் தெரியும். சிவை என்ற பெயர் பெற்றவளே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.

20. அயி மயி தீனதயாலு தயா
க்ருபயைவ த்வயா பவித்வயமுமே
அயி ஜகதோ ஜனனீ க்ருபயாஸி
யதாஸி ததாஸனு மிதாஸிரதே
யதுசித மத்ர பவத்யுரரீ
குருதா துருதா பமபாகுருதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

பொருள்: அம்மா! உமையே! கதியற்ற என்னைக் கருணையுடன் காக்க வேண்டும். எல்லையற்ற கருணையால் நீ இந்த உலகிற்கெல்லாம் தாயாக விளங்குகிறாய். எது சரியானது என்று உனக்குப் படுகிறதோ அதைச் செய். என் மன ஏக்கத்தை அதுவே போக்கும். மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை டையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்

அயிகிரி நந்தினி நந்தித மேதினி


அயிகிரி நந்தினி நந்தித மேதினி

விஸ்வ வினோதினி நந்தனுதே

கிரிவர விந்த்ய ஸிரோதி நிவாஸினி

விஷ்ணு விலாசினி ஜிஸ்துனுதே

பகவதி ஹே ஸிதிகண்ட குடும்பினி

பூரி குடும்பினி பூரி க்ருதே

ஜய ஜயஹே மஹிஷாசுரமர்த்தினி

ரம்ய கபர்த்தினி ஷைலஸுதே!




இமவான் புத்ரியும், ஜடா முடியுடன் திகழும் சிவ பெருமானின் துணைவியும், மஹிஷாசுரனை சம்ஹரித்தவளுமான அன்னையே!

மகிஷாசுரமர்த்தினியே! உனக்கு வெற்றி! உனக்கு வெற்றி!

தாயே! உனக்கு அனந்த கோடி நமஸ்காரம்.

எங்களை காப்பாற்றுவாயாக

யார் இந்த மகிஷாசுரன்?

மகிஷாசுரமர்தினி என்று அந்தப் பரமேஸ்வரிக்கு ஒரு பெயர் உணடு. ஸ்ரீ அனந்தராம தீக்ஷதர் அவர்களால் இயற்றப்பட்ட அயிகிரி நந்தினி நந்தித மேதினி விஸ்வ வினோதினி நந்தினுதே" என்ற ஸ்லோகம் நவராத்திரி நேரத்தில் பலர் சொல்லுவார்கள்.
அந்த அம்பாளுக்கு அப்படி ஒரு பெயர் வரக் காரணம் என்ன? யார் இந்த மகிஷாசுரன்? ரம்பா என்ற அசுரன் இருந்தான். அவன் அசுரர்களின் அரசனாகவும் இருந்தான். ஒரு நாள் அவன் ஒரு நதியின் பக்கம் வந்து கொண்டிருக்க, அங்கு ஒரு அழகிய பெண் எருமை தண்ணீரில் ளித்துக் கொண்டிருந்தது. அந்தப் பெண் எருமை தன் முன் பிறப்பில் சியாமளா என்ற அழகிய ராஜகுமாரியாக இருந்தது. எதோ ஒரு சாபத்தினால் எருமையானது.

அந்த எருமையைக் கண்டு அதன் அழகை ரசித்து அதை அடைய விரும்பினான் அந்த அசுரன். அவனுக்கு நினைத்தபோது தன்னை மாற்றிக்கொள்ள முடியும். ஆதலால் அவன் ஒரு ஆண் எருமையாக மாறி அந்தப் பெண் எருமையுடன் மகிழ்ந்து இருந்தான். பின் அந்தப்பெண் எருமைக்கு மகிஷாசுரன் என்ற அரக்கன் பிறந்தான். அரக்கனாக இருந்தாலும் சில நல்ல குணங்கள் அவனிடம் இருந்தன. இதனால் அவன் பிரும்மாவை நோக்கித் தவம் இருந்தான். பிரும்மா அவனுடைய கடும் தவத்தில் மனம் மகிழ்ந்து அவனுக்குத் தரிசனம் தந்தார். பின் அவனுக்கு வேண்டிய வரத்தை அளித்தார். அவன் கேட்ட வரம், "நான் மனிதனாலும் அல்லது மிருகத்தினாலும் அழிக்கப்படக் கூடாது." என்பதே.
எல்லாப் புராணக் கதைகளிலும் வருவது போல் இங்கும் வரம் கிடைத்ததும் அசுரன் எல்லோரையும் வதைக்க ஆரம்பித்தான். இந்திரன் மீது படையெடுத்து தேவர்களை ஒடோட விரட்டினான். தேவ்ர்கள் பயந்து கண்கலங்கி என்ன செய்யலாம் என்று யோசித்தனர். மகிஷாசுரன் ஆண்களின் கண்களுக்குப் புலப்பட மாட்டான் என்பதால் ஒரு தேவியின் சிருஷ்டி உண்டாயிற்று. அவளே துர்க்கை. தேவர்கள் தங்களது ஆக்ஞா சக்கரத்தில் மனதை வைத்து தியானம் செய்து சக்திகளெல்லாம் ஒன்று திரட்டி துர்க்கையை உண்டாக்கினார்களாம். துர்கை வந்தவுடன் தேவர்கள் தங்கள் தேவியைத் துதித்துப் பாடினர்கள். ஹிமாவன் அவளுக்கு சிங்கத்தைப் பரிசாகக் கொடுத்தார். விஷ்ணு அவளுக்கு சங்கு சக்கரம் கொடுத்தார். பிரும்மா ஒரு கதையைக் கொடுத்தார். சிவன் அவளுக்குத் திரிசூலம் மற்றும் வில்லும் அம்பும் கொடுத்தார். விஸ்வகர்மா அழகிய ரத்ன ரதத்தைக் கொடுத்தார். அவளுடைய சக்தி புகுந்து பிரும்மா பிராம்மி என்ற கன்னியானார், விஷ்ணு வைஷ்ணவி ஆனார், மகேஸ்வரன் மகேச்வரி ஆனார், குமரன் கௌமாரியானார், விநாயகர் விநாயகி ஆனார், வராஹர் வராஹியானார், நரசிம்மர் நாரசிம்ஹி ஆனார். துர்க்கையைச் சூழும் சப்த கன்னிகைகளாக இவர்கள் இருந்து இவர்களது சக்தியாலும் மகிஷாசுரன் வதம் நிகழ்ந்தது. இத்தனையும் பெற்று துர்க்கை மகிஷாசுரனை வதம் செய்தாள். தவிர சுமபா நிசும்பா என்ற அசுரர்களையும் வென்றாள். இந்த அசுரர்களுக்கு இடையே இரக்தபீஜம் என்ற அசுரன் இருந்தான். அவனைக் கொல்வது மிகக் கடினம், ஏன் என்றால் அவனது ஒரு சொட்டு இரத்தம் கீழே விழ, புதிதாக ஒரு அசுரன் முளைத்து விடுவான். அவனைக் கொல்ல அவனது இரத்தத்தைக் கீழே விழாமல் உரிஞ்சிக் குடிக்க வேண்டும். இதற்காக துர்க்கை மஹாகாளியை உண்டாக்கினாள். அந்தக் காளியின் நாக்கு மிகப் பெரியது. கறுப்பு வர்ணத்தில் காளி தன் சக்தியினால் சிவந்த நாக்கைச் சுழற்றி ரக்தபீஜத்தைக் கொன்றவுடன் இரத்தம் கீழே சொட்டாமல் எல்லாவற்றையும் உறிஞ்சி விட்டாள். வடநாட்டில் இந்தக் கதை பிரசித்தம். அங்கு காளியைப் பெரிய நீண்ட சிவந்த நாக்குடன் காணலாம்.

ஸ்ரீகிருஷ்ணர், வழங்கிய ஒப்பற்ற உபதேசங்கள்

ஸ்ரீகிருஷ்ணர், வழங்கிய ஒப்பற்ற உபதேசங்களை கவனத்துடன் கேளுங்கள். ஸ்ரீ கிருஷ்ணர் கூறினார் " உன்னை எவரேனும் ஏளனம் செய்து சிரித்தால், அதை ஒரு பொருட்டாகக்கருதாதே, உடல் உணர்வை மறந்து விடு. அவமானத்தைத் தாங்கிக் கொள்.

மண்ணில் சாஷ்டாங்கமாக விழுந்து, மிக அற்பமாகக் கருதுகின்ற நாய், கழுதை மற்றும் சண்டாளனைக் கூட நமஸ்காரம் செய். எல்லா உயிரிலும் நான் உள்ளேன், என்னுள் எல்லா உயிரினங்களும் உள்ளன. என்னைச் சரணாகதி அடைந்துவிடு.

எனக்காகவே எல்லாக் கர்மங்களையும் செய். பற்றுகளிலிருந்து விலகி விடு. தடையில்லாத, தடு மாற்றம் இல்லாத பக்தியினை என் மீது வை. எனது புகழ்பாடு''

தற்பெருமையையும், அகந்தையையும் உன் மனதை எப்போதும் நெருங்க விடாதே.

சிறந்த வில்வித்தை காரனாக தன்னை கருதிக் கொண்ட அர்ஜூனன், அதன் காரணமாக இறுமாப்புடன் இருந்தான். யமுனை நதியின் ஓடும் தண்ணீரில், தன்னால் ஒரு அம்புப் பாலத்தையே கூட அமைக்க முடியும் என்று பெருமையாக சொன்னான். கிருஷ்ணர் அவன் மனதில் தற்பெருமை தலைதூக்குவதை கண்டுகொண்டார்.

அவனிடம் அர்ஜூனா உனக்குள்ளாகவே ஏதேதோ பேசிக்கொண்டே சிரிக்கிறாய் போல் தெரிகிறது என்று கிருஷ்ணர் கேட்டார். அதற்கு அர்ஜூனன் நான் சிரித்தது உண்மைதான். ராமன் இலங்கைக்கு போகும் போது கடல் மீது பாலம் கட்ட குரங்கு கூட்டத்தை அமர்த்திக்கொண்டார்.

நான் மட்டும் அங்கு இருந்திருந்தால் அம்புகளாலேயே கண்சிமிட்டும் நேரத்தில் ஒரு பாலம் அமைத்திருப்பேன். இதை நினைத்துதான் சிரித்தேன் என்று பெருமையோடு சொன்னான். அர்ஜூனனின் அகந்தையை அடக்க கிருஷ்ணர் உறுதிக்கொண்டார்.

அர்ஜூனா இந்த யமுனை நதியில் உன் அம்புகளால் ஒரு பாலத்தை அமை. ராமாயண காலத்தில் இருந்த ஒரே ஒரு குரங்கு இப்போதும் இந்த பூமியில் இருக்கிறது. அது அந்த பாலத்தின் வலிமையை சோதிக்கட்டும். உன் பாலம் பலமானது என அது சொன்னால் உன் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன் என்றார் கிருஷ்ணர்.

அர்ஜூனன் மிகுந்த ஆர்வத்துடன் யமுனையின் மீது அம்புகளை பாய்ச்சினான். மிகச்சிறப்பான பாலம் ஒன்று அமைந்தது. கிருஷ்ணர் மகிழ்ச்சி அடைந்தவராய், ஹே! ஹனுமான் வா! என அழைத்தார். அப்போது ஒரு குரங்கு வந்து கிருஷ்ணரை வணங்கியது. கிருஷ்ணர் அந்த குரங்கை அம்புப் பாலத்தின் மீது நடக்கச் சொன்னார்.

குரங்கின் கால் பட்டது தான் தாமதம். அடுத்த காலை உயர்த்தும் முன்னரே பெரும் சப்தத்துடன் முழு பாலமும் நொறுங்கி விழுந்தது. அர்ஜூனனை பார்த்து கிருஷ்ணர் சிரித்தார். அர்ஜூனன் அவமானத்தால் குன்றிப்போய் வில்லையும் அம்பையும் வீசி எறிந்துவிட்டு கிருஷ்ணரது திருவடிகளில் விழுந்தான். கிருஷ்ணர் அவனுக்கு அறிவுரை வழங்கினார்.

அர்ஜூனா வலிமை மிக்க இந்த குரங்குகளை தாங்கும் வகையில் ராமரால் கூட அம்புகளால் பாலம் அமைக்க முடியவில்லை. அவராலேயே முடியாது என்ற நிலை இருக்க, உன்னால் பாலம் அமைக்க இயலாமல் போனதற்காக நீ அவமானப்பட்டதாக கருத முடியாது.

ஆனால், எப்போதும் ஒரு பாடத்தை நினைவில் வைத்துக்கொள். தற்பெருமையையும், அகந்தையையும் உன் மனதை எப்போதும் நெருங்க விடாதே. ஒரு வீரனுக்கு தவறாது வீழ்ச்சியைத் தரக்கூடிய மிக மோசமான எதிரிகள் இவை என்றார். கிருஷ்ணரது அறிவுரையை அர்ஜூனன் ஏற்றுக்கொண்டான்.

Tuesday, August 27, 2013

குழந்தை கிருஷ்ணரின் பாதத்தை ஏன் வீட்டில் கோலமாக வரைகிறோம் தெரியுமா?

குழந்தை கிருஷ்ணரின் பாதத்தை ஏன் வீட்டில் கோலமாக வரைகிறோம் தெரியுமா?

நாரதமுனிவர் ஒருசமயம் ஒவ்வோரு கிருஷ்ண பக்தர்களின் வீட்டுக்கும் சென்றபோது எல்லோரின் இல்லத்திலும் கண்ணன் இருப்பதைக் கண்டு அதிசயித்தார். அதேபோல் பிருந்தாவனத்தில் ஒவ்வோரு வீட்டிலும் கிருஷ்ணர் ஆடிப் பாடினார். இந்தக் காட்சியை சிவபெருமானே தரிசித்து பரவசமும் ஆனந்தமும் அடைந்தார். இப்படி ஒரே நேரத்தில் பல்லாயிரம் இடங்களில் இருக்கிறார் நம் கிருஷ்ணபரமாத்மா.“ நான் எங்கும் இருப்பேன். எத்தனை கோடி பக்தர்கள் இருந்தாலும், அத்தனை பக்தர்களையும் பார்ப்பேன, காப்பேன் என்பதைக் குறிப்பிடவே ஒவ்வோருவர் வீட்டிலும் கிருஷ்ணஜெயந்தியன்று கிருஷ்ணதிருவடிக் கோலம் போடுகிறார்கள்.

பலாப்பழத்தினுள் உள்ள சுளைகளின் எண்ணிக்கையை அறிய

சங்க காலத்திலேயே எழுதப்பட்ட கணக்கதிகாரம் என்ற நூலில் பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையை அறிந்துகொள்ளும் வழிமுறை மிக எளிமையாகக் கூறப்பட்டுள்ளது.

""பலாவின் சுளையறிய வேண்டுதிலேல் ஆல்கு
சிறுமுள்ளுக் காம்பரு எண்ணி - வருவதை
ஆறிற் பெருக்கியே ஐந்தனுக் கீந்திடவே...
வேறெண்ண வேண்டாஞ் சுளை.""
- கணக்கதிகாரம்-

விளக்கம் :
பலாப்பழத்தின் காம்புக்கு அருகில் உள்ள சிறு முட்களை எண்ணி ஆறாலே பெருக்கி ஐந்தால் வகுக்க பலாப்பழத்தினுள் உள்ள சுளைகளின் எண்ணிக்கையை அறியலாம் !

திருஷ்டி சுத்தி போடுவது எப்படி?

திருஷ்டி சுத்தி போடுவது எப்படி?
*****************************
திருஷ்டி என்பது சம்ஸ்கிருத சொல். தமிழில் கண். திருஷ்டி கழித்தலை தமிழர்கள் கண்ணேறு கழித்தல் என்று கூறுவார்கள்.

குழந்தை திருஷ்டி;...

பிறக்கும் குழந்தை எல்லாம் அழகுதான். அழகோ அழகுன்னு எல்லாரும் கொஞ்சறப்போ ஏற்படுற திருஷ்டிக்கு பரிகாரம் தான் கருப்பு திருஷ்டி பொட்டு. எளிமையான இது எல்லோராலும் செய்யக்கூடிய ஒன்று.நெற்றியிலும் கன்னத்திலும் இடப்படும் மைப்பொட்டு குழந்தையின் திருஷ்டியை போக்கும். கோயில்கள்ல தருகின்ற ஹோம ரட்சையை வைத்தால் இன்னும் கூடுதல் பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை!.

வாலிப திருஷ்டி;

ஒருகைப்பிடி உப்பை எடுத்து கையை நல்லா மூடிகிட்டு இளைஞனையோ/வாலிப பெண்ணையோ கிழக்கு நோக்கி இருத்தி இடமிருந்து வலமா மூணுதடவையும் வலமிருந்து இடமா மூணு தடவையும்சுத்தி அப்படியே சுத்தி அந்த உப்பை தண்ணியில போட்டுடுங்க. தண்ணியில உப்பு கரையரா மாதிரி திருஷ்டி எல்லாம் கரைஞ்சி போய்விடும்.

பெரியவங்களுக்கு;

புதிய சட்டி ஒன்று, ஊமத்தங்காய், படிகாரம் தெருமண் , இவைகளை சேகரித்துக் கொண்டு பெரியவர்களை தெருவாசலில்கிழக்கு முகமாக நிறுத்தி மண்சட்டிக்குள் ஊமத்தங்காய், படிகாரம், தெருமண் இவை மூன்றையும் போட்டு மண்சட்டியை தலைக்கு இடமிருந்து வலமாகவும் வலமிருந்து இடமாகவும் மூன்று முறை சுற்றி தலை முதல் பாதம் வரை இறக்கி அப்படியே எடுத்துச் சென்று முச்சந்திகள் கூடும் இடத்தில் போட்டு உடையுங்கள். கையோடு ஒரு துடைப்பம் எடுத்துச் சென்று ஓரமாக பெருக்கித் தள்ளுங்கள். இதனால் யாருக்கும் பாதிப்பு ஏற்படாமல் போகும். பின்னர் வீடு திரும்பி கைகால் கழுவி தலையில் சிறிது தண்ணீர் தெளித்துக் கொண்டு வீட்டிற்குள் நுழையவும் . பிள்ளையையும் அவ்வாறே செய்ய செய்து உள்ளே அழைத்துச் செல்லவும்.

சில திருஷ்டி பரிகாரங்கள் வெளிநாடுகளில் உள்ளவர்களுக்கு செய்யமுடியாது அவர்கள் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

கடுகுமிளகாய், உப்பு சிறிது தெருமண், தலைமுடி இவற்றினை கையில் எடுத்துக் கொண்டு குழந்தையை உட்காரவைத்து ஊருகண்ணு, உறவு கண்ணு, நாய் கண்ணு, நரிக் கண்ணு, நோய்கண்ணு, நொள்ள கண்ணு கண்டக்கண்ணு, கள்ளக் கண்ணு, அந்த கண்ணு, இந்த கண்ணு எல்லாம் கண்ணும் கண்டபடி தொலையட்டும் கடுகு போல வெடிக்கட்டும் என்று இடமிருந்துவலமாகவும் வலமிருந்து இடமாகவும் சுற்றி போடுவார்கள்.இதுவும் ஒரு எளிமையான திருஷ்டி பரிகாரமே!

இந்த திருஷ்டி பரிகாரங்கள் நம்முடைய முன்னோர்கள் தொன்றுதொட்டு கடைபிடித்து வந்தவை ஆகும்.இதை கடைபிடிப்பது அவரவர் விருப்பம் ஆகும்.

படித்ததில் பிடித்தது

படித்ததில் பிடித்தது...!!

ஒரு குரு இருந்தார். முற்றும் துறந்தவர். எல்லாம் கற்றவர். அவரை பிரசங்கம் செய்ய ஒரு ஊரில் கூப்பிட்டிருந்தார்கள். கூட்டத்திற்கு ஆயிரம் பேர் வருவார்கள் எனச் சொன்னார்கள். குறிப்பிட்ட தேதியில் குருவும் அவ்வூருக்கு வந்தார். அன்று நல்ல மழை. கூட்டத்திற்கு வந்தவர்களும் கலைந்து சென்று விட்டார்கள். குரு ...வந்த போது யாருமில்லை. பேசுவதற்கு நிறைய தயார் பண்ணி வந்திருந்ததால் அவருக்கு ஏமாற்றம். அங்கு இருந்ததோ அவரை அழைத்து வந்த குதிரை வண்டிக்காரன் மட்டும் தான்.

என்ன செய்யலாம் என்று அவனையே கேட்டார்.
அவன் சொன்னான், ”ஐயா, நான் குதிரைக்காரன். எனக்கு ஒன்றும் தெரியாது. அனால் ஒன்றே ஒன்று மட்டும் தெரியும். நான் முப்பது குதிரை வளர்க்கிறேன். புல்லு வைக்கப் போகும் போது, எல்லாக் குதிரைகளும் வெளியே சென்றிருக்க, ஒரே ஒரு குதிரை மட்டும் இருந்தாலும், நான் அந்தக் குதிரைக்குப் புல்லை வைத்து விட்டுத்தான் வருவேன்.”

படாரென்று அறைந்தது போல் இருந்தது குருவுக்கு.

அந்தக் குதிரைக் காரனைப் பாராட்டி விட்டு, அவனுக்கு மட்டும் தன பிரசங்கத்தை ஆரம்பித்தார். தத்துவம், மந்திரம், பாவம், புண்ணியம், சொர்க்கம், நரகம் என்று சரமாரியாகப் பேசிப் பிரமாதப் படுத்தி விட்டார். பிரசங்கம் முடிந்ததும், எப்படி இருந்தது என்று அவனைப் பார்த்துப் பெருமையாகக் கேட்டார்.

ஐயா, நான் குதிரைக்காரன். எனக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் ஒன்று மட்டும் தெரியும். நான் புல்லு வைக்கப் போன இடத்தில் ஒரே ஒரு குதிரை தான் இருந்தது என்றால், அதற்கு மட்டும் தான் புல் வைப்பேன். முப்பது குதிரைக்கான புல்லையும் அந்த ஒரு குதிரைக்கே கொட்டி விட்டு வர மாட்டேன், ”என்றான் அவன். அவ்வளவு தான்! குரு அதிர்ந்து விட்டார்.

பச்சிலை சாறும் அதன் பயன்பாடுகளும்..

பச்சிலை சாறும் அதன் பயன்பாடுகளும்..

அருகம்புல் சாறு – இது ரத்ததை சுத்த படுத்தும்,வாய் புண் ஆற்றும்,
மற்றும் தாய்பால் சுரக்க உதவும்
...
இளநீர் – இளமையாகவும் ஆனந்தமாகவும் இருக்க உதவும், அசிடிட்டியை குறைக்க உதவும் மற்றும் வெய்யில் காலத்தில் உடம்பை குளிர்விக்க கூடியது.

வாழைதண்டு சாறு – சிருநீரக கல்லை அகற்ற கூடியது, மூட்டு வலியை நீக்கும், உடல் இடையை குறைக்கும். ஊல சதையை குறைக்க உதவும்.

வெல்ல பூசணிசாறு – குடற் புண்னை நீக்கும்.

வல்லாரை சாறு – நரம்பு சமந்தபட்ட நோய்களை நீக்கும், நாபகசக்தியை
அதிகரிக்கும்

வில்வம் சாறு – அனைத்து விதமான நோய்களுக்கும் ஏற்றது, நரம்பு
சமந்தபட்ட நோய்களுக்கும் உகந்தது. சர்க்கரையின் அளவை குறைகவல்லது சீரான இரதத்த ஓட்டத்திற்கு உதவுகிறது.

கொத்தமல்லி சாறு – அனைத்து விதமான நோய்களுக்கும் ஏற்றது.

புதினா சாறு – இருமலை குணபடுத்தும். முகபருவை நீக்க வல்லது. மற்றும் அணைத்து ரத்த சமந்தமான, வாயு சமந்தமான நோய்களுக்கும் ஏற்றது.

நெல்லிக்காய் சாறு - அழகு தரும் மருந்து.

துளசி சாறு - சளி மற்றும் சோம்பேரிதனத்தை குறைக்க வல்லது.
அளவுக்கு அதிகமாக துளசி உட்கொள்ளுவது விந்தணுவை குறைத்துவிடும்.

அகத்தி சாறு- மலசிக்கலை குணபடுத்தும் , சர்க்கரை நோயை குணபடுத்தும்.

கடுக்காய் சாறு - முக நிறம் நல்ல பொலிவாகும். கர்ப்பிணி பெண்களுக்கு உகந்தது.

முடக்கத்தான் சாறு - மூட்டு வலிக்கு நல்லது, வாயு தொல்லைக்கு
நல்லது

கல்யாண முருங்கை சாறு - உடல் எடை குறைக்க உதவும். இதை
வாயில் மென்று நம் உமிழ் நீருடன் கலந்து சாபிட்டால், உடனடியாக
மலச்சிக்கலுடன் வாய்வு தொல்லை நீங்கும். ஆனால் கர்ப்பிணி
பெண்களுக்கு நல்லது இல்லை கருக்கலைய கூடியது.

தூதுவளை சாறு - சளி தொல்லை நீங்கும்

ஆடாதோடா சாறு - ஆஸ்மாவைய் குணப்படுத்த வல்லது

கரிசலாங்கண்ணி சாறு - கண் பார்வைக்கு நல்லது,
முடி வளர்ச்சிக்கு நல்லது

மருதாணி வைப்பது ஏன்?

பண்டிகை, சுபநிகழ்ச்சி காலங்களில் பெண்கள் மருதாணி பூசி அழகுபடுத்துவர். இப்போது  மெகந்தி என்ற பெயரில் இது அவதாரமெடுத்துள்ளது.  என்ன தான் நவீனம் வந்தாலும், ஒரிஜினல்  மருதாணியின் மகத்துவமே தனி தான். இதைப் பூசினால் உடல்சூடு தணியும். தோல், நகக்கண்களில் இருக்கும் கிருமிகளைக் கொல்லும் சக்தி இதற்குண்டு. மருதாணி இலையை நிழலில் காய வைத்து பொடியாக்கி,  தலையில் தேய்த்துக் குளித்தால்  முடி உதிர்தல் தவிர்க்கப்படும். தலையில் அரிப்பு, பொடுகு வருவது தவிர்க்கப்படும். மருதாணி பூசுவது மங்கலத்துக்காகவும், அலங்காரத்துக்காகவும் மட்டுமல்ல!  சில நோய்களை தடுக்கவும் தான்! புரிந்து விட்டதா அறிவியல்  காரணங்கள்!

எத்தகைய படுக்கையில் படுத்து உறங்கினால் என்ன பலன் ஏற்படும்

எத்தகைய படுக்கையில் படுத்து உறங்கினால் என்ன பலன் ஏற்படும் என்பதை "மருத்துவ திறவுகோல்’ என்னும் சித்த மருத்துவ நூல் விளக்கியுள்ளது.

கம்பளிப் படுக்கை- குளிருக்கு ...இதம். குளிர் சுரம் நீங்கும்.

கோரைப்பாய்- உடல் சூடு, மந்தம், சுரம் போக்கும், உடலுக்குக் குளிர்ச்சியும், உறக்கமும் ஏற்படும்.

பிரம்பு பாய்- சீதபேதி, சீதளத்தால் வரும் சுரம் நீங்கும்.

ஈச்சம்பாய்- வாதநோய் குணமாகும். உடல் சூடு, கபம் இவை
அதிகரிக்கும்.

மூங்கில் பாய்- உடல் சூடும், பித்தமும் அதிகரிக்கும்.

தாழம்பாய்- வாந்தி, தலை சுற்றல், பித்தம் நீங்கும்.

பேரீச்சம்பாய்- வாதகுன்மநோய், சோகை நீங்கும். ஆனால் உடலுக்கு அதிக உஷ்ணம் தரும்.

இலவம்பஞ்சு படுக்கை- உடலில் ரத்தம், தாது பலம் பெறும். தலை முதல் பாதம் வரையிலான அனைத்து நோய்களும் நிவாரணம் பெறும்.

மலர்ப்படுக்கை- ஆண்மை அதிகரிக்கும். நன்றாகப் பசியெடுக்கும்.

இரத்தினக் கம்பளம்- நஞ்சுகளின் பாதிப்பால் ஏற்படும் நோய்களை நீக்கும்.

1008 இதழ் தாமரை எப்படி மலரும்?

1008 இதழ் தாமரை எப்படி மலரும்?

காலை எழுவது முதல் இரவு படுக்க போவது வரை ஒரு மனிதன்
எப்படி, எப்படி இருக்கவேண்டும் என்பதை நித்திய கரும விதி என்று
உபதேசம் செய்து உள்ளார்....

உடல் மலங்களை நீக்குபவன் ஆரோக்கியமாக வாழலாம்!? மன மலங்களை
போக்குபவனே, மரணமிலாது வாழலாம்!?

உடல் மலத்தில், ஏழாவது ஆதாரமாக சகஸ்ரதளமாக நம் உச்சந்தலையில் உள்ள கோழை சொல்லபடுகிறது. இதை நீக்குவது தவம் செய்பவர்களுக்கு மட்டுமே சாத்தியம்! இந்த கோழை முழுவதும் நீங்கினாலே, நம் மூளை கொஞ்சம் கொஞ்சமாக இயங்க ஆரம்பிக்கும்.

தலையிலுள்ள கோழை நீங்க ஒரே வழி தவம் செய்வதுதான்! குரு உபதேசம் பெற்று நம் மெய்பொருளாகிய - திருவடியை நம் கண்களில் உள்ள ஒளியை குரு தீட்சை மூலம் உணர்ந்து , அந்த ஒளியை நினைந்து உணர்ந்து தவம் இயற்ற நெகிழ்ச்சி உண்டாகும், கண்ணில் கனல் பெருகும். அந்த ஞானக்கனல் உள்நாடி மூலமாக அக்னி கலையை அடைந்து அங்கிருந்து மேலே சகஸ்ரதளம் நோக்கி செல்லும் ஞானக்கனல் பெருக பெருக அந்த உஷ்ணத்தால் பல காலங்களாக உறைந்து போன கோழை மெல்ல மெல்ல உருகி மூக்கு வழியாகவும் தொண்டை வழியாகவும் வெளியேறும் . எவ்வளவு கோழை உள்ளதோ அவ்வளவு காலம் நாம் கடுமையாக தவமியற்ற வேண்டும்.

"தவம் செய்வார்க்கு அவம் ஒருநாளுமில்லை"

நாம் செய்யும் தவம், நம் ஞானத்தீயை நம் கண்வழி பெருக்கி அதனால் அது
சகஸ்ரதளத்தை அடைந்து உணர்வு உண்டாகி அனலால் இளகி கோழை
கரைத்து ஒழுகும். இது சாதனை அனுபவம்.

தலைப் பகுதியிலுள்ள கோழை முழுவதமாக வெளியேறும் பட்சத்தில் மூளையின் ஒவ்வொரு பகுதியும் ஒளி அலைகளால் அதிர்வு ஏற்பட்டு கொஞ்சங் கொஞ்சமாக இயங்க ஆரம்பிக்கும். கோழையால் கவிழ்ந்து இருந்த மூளை பகுதி கனம் குறைந்ததும் மலர ஆரம்பிக்கும். அதுவரை கவிழ்ந்து இருந்த தாமரை இதழ்கள் மலர ஆரம்பிக்கும். 1008 பகுதியாக சிறு சிறு பகுதியாக மூளை இருப்பதால் தான் 1008 இதழ் தாமரை என்றனர். ஒளி - சுத்த ஒளி, பொன்னொளி எழும்பி பிரகாசிப்பதால் இதை வள்ளலார் 1008 மாற்று பொற்கோவில் என்றார்.

ஒவ்வொரு மனிதனும் தன் தலையிலுள்ள 1008 மாற்று பொற்கோவிலில், நடுநாயகமாக ஒளிவிட்டு பிரகாசிக்கும் அருட்பெருஞ்சோதியை தரிசிக்க வேண்டும். அவனே மரணமிலா பெருவாழ்வு பெறுவான்.

எத்தனையோ பிறவிகள் பிறந்து விட்டோம். இனிமேல் இந்த விளையாட்டு , வினை ஆட்டுவிக்கும் பிறவி வேண்டாம்! பிறந்த இப்பிறப்பிலே தானே இனி பிறவாமல் இருக்க இறவாமல் இருக்க வழி தேடுவோம். விழியிலே இருக்கும் ஒளியை உணர்ந்து மேன்மை அடைவோம்.

Monday, August 26, 2013

கண்ணன் ஆலிலையில் படுத்திருப்பது ஏன்?

தாவர வகைகளிலேயே மிகவும் உயர்ந்த இடத்தை பெறுவது ஆலமரம். ஆலமரத்தின் நிழலில் அமர்ந்து தான் தட்சிணாமூர்த்தி ஞானம் தருகிறார். பொன், பொருள், குடும்ப சுகம் மட்டுமின்றி மறைந்த முன்னோர்கள் மோட்சம் பெற பிதுர் தர்ப்பணத்துக்குரிய பிண்டம் போடும் சடங்கை ஆலமரத்துக்கு கீழே அமர்ந்து தான் செய்வார்கள்.

எனவே தான் ஞானமும் கர்மத்திற்குரிய பலனையும் தருகின்ற ஆலமரத்தின் இலையில் கண்ணன் படுத்துக் கொண்டான். மேலும் ஆலிலைக்கு ஒரு விசேஷ சக்தி உண்டு. இது வாடினாலும் கூட நொறுங்கிப் போவதில்லை.

சருகானாலும் கூட மெத்தை மாதிரி இருக்கும். இதுவும் கண்ணன் ஆலிலையை தேர்ந்தெடுக்க ஒரு காரணம் ஆகும். ஓரளவு காய்ந்த ஆலிலையின் மேல் தண்ணீர் தெளித்தால், அது இழந்த பச்சையை பெறும் சக்தி வாய்ந்தது.

கண்ணன் வாடாத வதங்காத ஆத்மா என்பதை இதன்மூலம் நிரூபிக்கிறான். ஆலிலையில் படுத்திருக்கும் கண்ணன் நமக்கு ஒரு பாடத்தையும் போதிக்கிறான். அடே பக்தனே! நீ எதற்கும் கவலைப்படாதே. என்னைப் போலவே நீ குழந்தை உள்ளத்துடன் இருந்தால், உலக வாழ்க்கை என்ற கொடுமையான அலையால் தாக்கப்படமாட்டாய்.

குடும்பம் என்ற சம்சாரக்கடலில் அனுபவிக்கும் இன்ப துன்பங்களை ஒரு விளையாட்டாக எடுத்துக் கொண்டு என்னைப் போல் ஆனந்தமாய் இரு என்கிறான். இதுதான் கண்ணன் ஆலமர இலையில் மிதக்கும் தத்துவம் ஆகும்.

சுதர்சன சக்கர மகிமை

கிருஷ்ணரின் கையில் உள்ள சுதர்சன சக்கரம் மகிமை வாய்ந்தது அதன் ஆற்றல் அளவிட முடியாதது. சுதர்ஷன் என்றால் மங்களகரமானது என்று பொருள் `சக்ரா' என்றால் எப்பொழுதும் செயல்பாட்டில் இருப்பது என்று அர்த்தம். எல்லா ஆயுதங்களைக் காட்டிலும் இது ஒன்றே எப்பொழுதும் சுழன்று கொண்டிருக்கிறது.

சாதாரணமாக `சுதர்சன சக்கரம்' கிருஷ்ணனின் சுண்டு விரலில் காணப்படும் ஆனால். விஷ்ணுவோ ஆள்காட்டி விரலில் வைத்துக் கொண்டிருக்கிறார். யார் மீதாவது ஏவும் பொழுது கிருஷ்ணனும், ஆள்காட்டி விரலில் இருந்து தான் ஏவுகிறார்.

எதிரிகளை அழித்த பின் சுதர்சனசக்கரம் மறுபடியும் அதன் இடத்திற்கே திரும்பி விடுகிறது. சுதர்சன சக்கரம் ஏவப்பட்ட பிறகும் ஏவி விட்டவனின் கட்டளைக்கு அது கீழ்ப்படிந்து நடக்கிறது. எவ்வித அழுத்தமும் இல்லாத சூன்யப்பாதையில் செல்வதால் சுதர்சன சக்கரத்தால் எந்த இடத்திற்கும் கண்மூடி கண் திறக்கும் நேரத்திற்குள் செல்ல முடிகிறது.

ஏதாவது தடை எதிர்பட்டால். சுதர்சன சக்கரத்திரன் வேகம் அதிகரிக்கிறது. இதை `ரன்ஸகதி' என்பர். சுழலும் போது அது சத்தம் எழுப்புவதில்லை. அதனுடைய உருவம்/வடிவம் எத்தகையது என்றால்.சின்னஞ்சிறு துளசி தளத்தில் அடங்கக்கூடியது. அதே சமயம் இப்பிரபஞ்சம் அளவு பரந்து விரிந்தது.

கோவிந்தா... கோவிந்தா

வைணவத் தலங்களுக்கு சென்றால் கோவிந்தா என்ற குரல் ஆங்காங்கே எதிரொலிப்பதை கேட்கலாம். கோவிந்தா என்ற சொல்லுக்கு "பசுக்களின் தலைவன், கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருபவன்'', "பூமியை தாங்குபவன்'' என்று பொருளாகும். எனவே தான் பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்கிறார்கள்.

வழிபாடு செய்யும் போது, கோவிந்தா என்று அழைத்து வழிபட்டால் கூடுதல் பலன்களைப் பெறலாம். `கோவிந்தா' என்று சொன்னால் `போனது வராது' என்று பொருள்படும் இதனால்தான் கடன் வாங்கியவன், திருப்பித்தராமல் ஏமாற்றி விட்டால், `பணம்' கோவிந்தா தானா? என கேட்கும் வழக்கம் வந்தது.

கோவிந்தா எனும் சொல்லுக்கு வேறொரு பொருளும் உண்டு. இதை `கோ இந்தா' என்றும் பிரிக்கலாம். அப்போது `கோ' என்றால் `பசு' `இந்தா' என்றால் `வாங்கிக்கொள்' என்று பொருள் வரும்.

கோவிந்தா... கோவிந்தா... என சொல்லச்சொல்ல பசுதானம் செய்த புண்ணியம் கிடைத்துக் கொண்டே இருக்குமாம். எப்போதும் கோவிந்த நாமம் சொல்லிக்கொண்டே இருங்கள். பசுக்களுடன் விளையாடி மகிழ்ந்த கிருஷ்ணனின் அருள் பூரணமாகக் கிடைக்கும்

8 வகை கிருஷ்ணர்கள்

1.சந்தான கோபால கிருஷ்ணர்:யசோதையின் மடியிலே அமர்ந்த கோலம்.

2.பாலகிருஷ்ணன்:தவழும் கோலம். பலரின் பூஜை அறையில் இப்படத்தையே காணலாம்.

3.காளிய கிருஷ்ணன்:காளிங்க மர்த்தனம் புரியும் கிருஷ்ணன்.

4.கோவர்த்தனதாரி:கிருஷ்ணன் தன் சுண்டு விரலால் கோவர்த்தன கிரியைத் தூக்கும் கோலம்.

5.ராதா-கிருஷ்ணன் (வேணுகோபாலன்):வலது காலை சிறிது மடித்து இடது காலின் முன்பு வைத்து பக்கத்தில் ராதை நின்றிருக்க குழலூதும் கண்ணன்.

6.முரளீதரன்:இதில் கிருஷ்ணன் நான்கு கைகளுடன்,ருக்மணி மற்றும் சத்யபாமா சமேதனாய் நின்றிருக்கும் திருக்கோலம். இது தென் இந்தியாவில் மிகவும் புகழ் பெற்றது.

7.மதன கோபால்: அஷ்ட புஜங்களை உடைய குழலூதும் முரளீதரன்.

8.பார்த்தசாரதி: அர்ஜுனனுக்கு கீதை உபதேசிக்கும் திருக்கோலம்.

பாலைவன வாழ்க்கை சோலைவனமாக மாற!


 வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வித மாக அமைகிறது. நேற்று இருந்ததைப் போல் இன்று இல்லையே? இன்று இருப்பதைப் போல், நாளை இருக்குமா? என்ற கேள்விகள் ஒவ்வொருவரின் மனதிலும் இடம் பிடிக்கத்தான் செய்கின்றன.

அந்த அடிப்படையில் ஒவ்வொரு நாளும் நாம் தூங்குவதற்கு முன்னால் ஒரு கணம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். வாழ்நாளில் ஒரு நாள் குறைந்து விட்டதை புரிந்து கொள்ள வேண்டும். நாளைய பொழுதாவது நல்ல பொழுதாக மலர வேண்டும்.

நான் நினைத்தது நிறைவேற வேண்டுமென்று நினைத்து தனது இஷ்ட தெய்வத்தின் பெயரை உச்சரித்து விட்டு தூங்கத் தொடங்க வேண்டும். சிவாய நம! என்றோ ஓம் நமோ நாராயணாய நமக!

என்றோ உள்ளத்தில் இடம் பெற்ற தெய்வத்தின் பெயரை உச்சரித்து விட்டு படுத்தால் ஒப்பற்ற பலன்களை காணலாம். தூங்கி எழும் பொழுதும் இதே போல் உச்சரிக்க வேண்டும். அப்போது தான் பாலைவனமாக இருக்கும் வாழ்க்கை கூட சோலைவனமாக மாறும். 

பவுர்ணமிகளில் விளக்கேற்றுவதால் ஏற்படும் பலன்கள்

சித்ரா பவுர்ணமியில் விளக்கேற்றினால் தான்யம் பெருமளவில் கிடைக்கும். வைகாசி பவுர்ணமியில் விளகேற்றினால் திருமணமாகாத பெண்களுக்கு நல்ல இடத்தில் வரன் பேசி முடிக்கப்பட்டு திருமணம் கைகூடும். ஆனி மாதப் பவுர்ணமியில் விளக்கேற்றினால் குழந்தையில்லாத பெண்களுக்கு புத்திர பாக்கியம் ஏற்படும்.

புரட்டாசி மாதப் பவுர்ணமியில் விளக்கேற்றினால் பசுக்கள் விருத்தியாகி பால் வியாபாரம் அதிகரிக்கும் லட்சுமி கடாட்சம் பெருகும். ஐப்பசி மாதம் பவுர்ணமியில் விளக்கேற்றினால் உணவு தான்யம் பெருகி பசிப்பிணிகள் நம்மை விட்டு அகலும். கார்த்திகை மாதப் பவுர்ணமியில் விளக்கேற்றினால் பேரும் புகழும் வளர்ந்து அது நிலைத்து நிற்கும்.

மார்கழி மாதப் பவுர்ணமியில் விளக்கேற்றினால் தேக ஆரோக்கியம் ஏற்பட்டு உடல் பலம் பெறும். மாசி மாதப் பவுர்ணமியில் விளக்கேற்றினால் துன்பம் விலகி இன்பமும் மகிழ்ச்சியும் பெருகும். பங்குனி மாதப் பவுர்ணமியில் விளக்கேற்றினால் தர்மமும், புண்ணியமும் செய்த பலன் கிட்டும்.

பவுர்ணமி அன்று பூஜை அறையில் ஐஸ்வர்ய கோலத்தை போட்டு நமது பிரார்த்தனையை மனத்தில் நினைத்தோ அல்லது ஒரு தாளில் எழுதி ஐஸ்வர்ய கோலத்தில் வைத்து விளக்கேற்றி பூஜை செய்து வந்தால் நாம் நினைத்தது வெற்றி பெறும்.

அப்பூதி அடிகள்

திருநாவுக்கரசர் ஒரு சமயம் உழவாரப் பணி செய்ய திங்களூர் சென்றிருந்தார். அச் சமயம் அங்கு அப்பூதி அடிகள் என்பவர், நாவுககரசர் பெயராலே பல தர்ம காரியங்களை செய்து வருவதைக் கண்டு அவர் இல்லம் சென்றார். நாவுக்கரசரை கண்ட அப்பூதி அடிகள் உள்ளம் மகிழ்ந்து விருந்தோம்பலுக்கு ஆயத்தமானார்.

தனது மகனை வாழை இலை பறிக்க தோட்டத்திற்கு அனுப்ப, அங்கு அந்த சிறுவனை பாம்பு தீண்ட உயிரிழந்தான். இச் செய்தியை அறிந்தால் எங்கே நாவுக்கரசர் விருந்து உண்ண மாட்டாரோ என்றெண்ணிய அப்பூதி அடிகள் மகன் இறந்ததை மறைத்து நாவுக்கரசருக்கு அமுது படைத்தார்.

இதனை அறிந்த நாவுக்கரசர், இறந்த அப்பூதி அடிகளின் மகனை இத்திருத்தலத்திற்கு எடுத்து சென்று, " ஒன்று கொலாம் அவர் சிந்தை " எனத் தொடங்கும் பதிகம் பாடி இறந்த பிள்ளையை உயிர்ப்பித்தார். இத்தகைய பெரும்பேறு பெற்ற தலம் திருப்பதி.

சந்திர பகவான் மக்களின் மூச்சுக் காற்றில் சந்திரன் இட கலை ஆனவர். சந்திரன் சூரியனிடம் இருந்து முழுவதும் பிரிந்திருக்கும் நாள் பௌர்ணமி. சந்திரனை ராகு அல்லது கேது பற்றும் நாள் சந்திர கிரகணம். இது பௌர்ணமி தினங்களில் நடைபெறும்.

வலக்கையில் கதையும், இடக்கையில் வரதமும் கொண்டு காட்சி தருபவர். வெள்ளாடை உடுத்தி, முத்து மாலை, வெண்சந்தனம், பல நிறம் கொண்ட மலர் மாலைகள் அணிந்து காட்சி தருபவர். சந்திர தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இத்திருத்தலம் வந்து கைலாச நாதரையும், பெரியநாயகி அம்பாளையும், பின்னர் சந்திர பகவானையும் தரிசிக்க தோஷ நிவர்த்தி பெறலாம்.

திருப்பதி ஏழுமலையான் தலமும் சந்திர அமைப்பு அம்சம் கொண்டதாகும். இத்தலத்தில் சந்திரன் பூஜித்து பெரும் பேறு பெற்றார். எனவே திருப்பதியில் வழிபட்டால் சந்திர கிரக பலன்கள் அனைத்தும் கிடைக்கும்.

ராமரின் விரதத்தை சோதித்த பெண்!


 சீதையை இரண்டாவது முறையாக பிரிந்து மன துயரத்தில் ஆழ்ந்து போயிருந்தார் ராமர். அவரது மனம் முழுவதும் மனைவியைப் பிரிந்த துக்கம் அடைபட்டுக் கிடந்தாலும், சீதையைப் பற்றியேஅவர் எப்போதும் சிந்தித்துக் கொண்டிருந்தாலும் ராமரின் முகம் வாட்டத்தை வெளிக்காட்டியதில்லை.

அவரது நல்லாட்சியில் நாடு செழித்து, மக்கள் துன்பத்தை மறந்திருந்தனர். ராமரின் மனதில் மட்டும் துயரம் மறையாத வடுவாய் குடிகொண்டிருந்தது. சலவை தொழிலாளி ஒருவனின் தகாத பேச்சு காரணமாக சீதையை வனத்திற்கு அனுப்பி விட்டதால், ராமரின் மனம் மட்டுமே நிம்மதியின்றி தவித்து வந்தது.

ஆனால் அவரது பண்புகளும்,பரிவுகாட்டும் உயர்ந்த குணமும்,இணையில்லா வீரமும், செறிந்த அறிவும் செறிந்த அறிவும் நாளுக்கு நாள் கொண்டே சென்றது. சென்றது. உயர்ந்து ஒரு முறை ராமரைப் ராமரைப் பார்ப்பதற்காக நடனக் கலையில் சிறந்த பெண் ஒருத்திதிருந்தாள்.

அவள் அவள் தன் நடனத்தை அரசவையில் அரங்கேற்ற அனுமதி தரும்படி ராமரிடம் கேட்டாள்.எவர் கேட்டும் இல்லை என்று சொல்லாத ராமபிரானும், அந்த நடனப் பெண்,அவையில் நடனம்புரிய நடனம்புரிய அனுமதி வழங்கினார்.

அந்தப் பெண்ணும் தான் கற்ற கலையின் திறமையை கிடைத்த சிறந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டாள். அவளது நடனம் நடனம் அனைவரும் மெச்சும்படியாக படியாகஇருந்தது. இளமை ததும்பும் அழகும், கண்களாலும், கைகளாலும் காட்டும் அபிநயமும் நடனத்திற்கு மெருகூட்டும் விதமாக அமைந்தது.

கலைக்கு அதிபதியானகடவுளே நேரில் வந்து நடனம் புரிவது போல் இருந்தது அந்தப் பெண்ணின் நடனம். அவையில் கூடியிருந்த அனைவரும் நடனத்தை மெய்மறந்து ரசித்தனர். மன துயரத்துடன் இருக்கும் ராமருக்கும் அந்த நடனம் இனிமையூட்டியது. நடனம் முடிந்ததும் அவையில் எழுந்த கரவொலி பிரம்மாண்ட சத்தத்தை உண்டாக்கியது.

அந்தப் பெண்ணுக்கு விலை உயர்ந்த பொன் ஆபரணங்களை பரிசாக வழங்கினார் ராமர். ஆனால் அதனைப் பெற்றுக்கொள்ள நடனப்பெண் மறுத்தாள். அவையோரும், ஏன் ராமரும் கூட இதைக் கண்டு வியக்கவே செய்தனர். பொன் பிடிக்காத பெண்உலகில் உண்டா என்ன!. 'நடனத்தால் என்னையும் அவையோரையும் மகிழச்செய்தபெண்ணே!

இந்தபரிசுவேண்டாமா? அல்லது போதாதா? வேறு வேண்டுமாலும் அழகும், கண் நீ கேட்டுப் பெற்றுக்கொள்!' என்றார் ராமர். அதற்கு அந்தப் பெண், 'அரசே! நான் என்ன கேட்டாலும் தருவீர்களா?' என்றாள். 'கேட்பவர்களுக்கு இல்லை என்று என் நாடு என்றும் சொன்னதில்லை.

எனவே கூச்சம் எதுவும் தேவையில்லை. தாராளமாக, நீ எதை வேண்டுமானாலும் கேள், தருகிறேன்' என்று கூறினார் ராமபிரான். 'அரசே! நீங்கள் சிறந்த வள்ளல் தன்மை கொண்டவர் என்பதைஅறிந்துதான் நான் இங்கு வந்தேன்.

உங்களைப் போன்ற அழகும், அறிவும், அன்பும், பரிவும், வீரமும், வெற்றியும் நிறைந்த ஒரு மகனை எனக்கு தாங்கள் தந்தருள வேண்டும்!' என்றாள் நடனப்பெண். அவையினர் அதிர்ச்சி அடைந்து மறுகணம் சிந்தனையில் ஆழ்ந்தனர். 'சீதையைத் தவிர மற்றொருப் பெண்ணை தன்மனதாலும் நினைத்திடாதவர் ராமர்.

இப்போது இந்தப்பெண்ணுக்கு அவரைப் போன்றதொரு மகனை கொடுக்க வேண்டுமானால் அவளை , மணந்து தானே ஆக வேண்டும். இல்லையெனில் எப்படி ஒரு மகனை பரிசாகத் தர முடியும். சிக்கலில் மாட்டி கொண்டாரே அரசர் என்று கூடியிருந்த அனைவ ரும் வாதிட்டுக் கொண்டனர்.

ராமரின் முகத்தில் எவ்வித சலனமும் சலனமும் இல்லை. மாற்றமும் இல்லை.அவர் முகம் தெளிந்த தெளிந்த நீரோடைப் போல், புதிதாக பூத்தமலர்போல் பொலிவுடன் காணப்பட்டது. அரியணையை விட்டு கீழே இறங்கிய ராமர், நடனப்பெண்ணின் அருகில் சென்றார். 'ஒரு மகனைப் பெற்றெடுப்பது என்றால் அதற்கு ஓராண்டாவது ஆகுமே.

அவ்வளவு தாமதம் செய்வானேன். என்னைப் போன்ற மகன்தானே வேண்டும். இங்கேயே, இப்போதே என்னையே தங்கள் மகனாக ஏற்றுக் கொள்ளுங்கள் தாயே!' என்று கூறி அவள் முன்பாக மண்டியிட்டு அமர்ந்தார் ராமபிரான். நடனப்பெண் அதிர்ந்து போனாள்.

அவள் மட்டுமா? அந்த நாடும் கூடத்தான். 'அரசே! மனைவியைத் தவிர வேறு பெண்ணை மனதாலும் நினைக்காத, உங்கள் விரதத்தை சோதிப்பதற்காகவே, இதுபோன்ற ஒரு வரத்தை நான் கேட்டேன். நீங்கள் வென்று விட்டீர்கள். நான் அறியாமையால் செய்த தவறை மன்னிக்க வேண்டும்' என்று கூறி ராமரின் கால்களில் விழுந்த நடனப்பெண், அவரிடம் விடைபெற்று திரும்பினாள். 

நவாவரண பூஜை என்றால் என்ன தெரியுமா

காஞ்சி காமாட்சி அம்மன் தலத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக அன்னைக்கு பணி விடைகள் செய்த 75 வயதாகும் நீலக்கல் சி.என்.ராமச்சந்திர சாஸ்திரிகள் இதற்கு விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:-

காஞ்சீபுரத்தில் காமாட்சி அம்மன் தமிழ்நாட்டில் வேறு எந்த தலத்திலும் இல்லாத விசேஷமாக லட்சுமி, சரஸ்வதி, பார்வதி ஆகியோரின் ஒரே உருவமாக இருக்கிறாள். பார்வதியின் (காமாட்சி) இரு கண்களாக லட்சுமியும் சரஸ்வதியும் உள்ளார்கள்.

எனவே பவுர்ணமி, நவராத்திரி போன்ற முக்கிய தினங்களில் இத்தலத்துக்கு வந்து அம்மனை தரிசனம் செய்வது மிகவும் விசேஷமாகும். சாந்த சொரூபமாக காட்சியளிக்கும் காமாட்சி அன்னை இத்தலத்தில் மூன்று ஸ்வரூபமாக அதாவது காரணம் (பிலாஹாசம்) பிம்பம் (காமாட்சி) சூட்சமம் (ஸ்ரீசக்கரம்) ஆக வீற்றிருக்கிறாள்.

அவள் வீற்றிருக்கும் இடம் காயத்ரி மண்டபம் என்று அழைக்கப்படுகிறது. அந்த மண்டபத்தில் பல ரிஷிகள் தவம் இருந்து காமாட்சியின் அருள் பெற்றுள்ளனர். இந்த மண்டப பகுதியில் இருந்து பார்த்தால் அன்னை முன்பு ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருப்பதை பார்க்க முடியும்.

காமாட்சிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும் போது, இந்த ஸ்ரீசக்கரத்துக்குதான் குங்கும அர்ச்சனை நடத்தப்படும். இந்த சக்கரத்தை சிலாரூபமாக இங்கு ஸ்ரீஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்துள்ளார். இதனால் இத்தலத்தில் ஸ்ரீவித்யா உபாசன வழிபாடு நடத்தப்படுகிறது. இது ஸ்ரீசக்கரத்தை அடிப்படையாகக் கொண்டது.

அதிசக்தி வாய்ந்த இந்த ஸ்ரீசக்கரத்தை சுற்றி 64 கோடி தேவதைகள் வீற்றிருக்கிறார்கள். இந்த ஸ்ரீசக்கரம் 9 ஆவரணங்களைக் கொண்டது. ஆவரணம் என்றால் பிரகாரம் அல்லது சுற்று என்று பெயர். ஸ்ரீசக்கரத்தின் ஒவ்வொரு சுற்றிலும் அதாவது ஒவ்வொரு ஆவரணத்துக்குள்ளும் ஒரு முத்ரா தேவதை, ஆவரண தேவதைகள், யோகினி தேவதைகள், பரிவாரம் தரும் சக்தி தேவதைகள், மற்றும் சித்தியை தரும் அணிமா, லகிமா, மகிமா, ஈப்சித்வ், வசித்வ, பிரகாம்ய, புத்தி, கிச்சா, பிராப்தி ஆகிய 9 சித்தி தேவதைகள் உள்ளனர்.

பவுர்ணமி தினத்தன்று இந்த 9 நவாவரண சுற்றுக்கும் ஒவ்வொரு சுற்று வீதமாக சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். 9 சுற்றுக் களுக்கும் பூஜை நடக்கும் போது சங்கு தீர்த்தமும் இடம் பெற்றிருக்கும். 9 ஆவரணத்துக்கும் பூஜைகள் முடிந்த பிறகு பிந்து ஸ்தானத்தில் வீற்றிருக்கும் காமாட்சி அம்பிக்கைக்கு ஆராதனைகள் நடைபெறும்.

இதுதான் நவாவரண பூஜை ஆகும். இந்தப் பூஜை மிகச் சிறப்பானது. விசேஷமான பலன்களைத் தரவல்லது. நன்கு உபதேசம் பெற்றவர்கள்தான் இந்த பூஜையை செய்ய முடியும். நவாவரண பூஜையின் அளவிடற்கரிய பலன்களை ஏழை-எளியவர்களும், சாதாரண மக்களும் பெற வேண்டும் என்ற நோக்கத்தில்தான் காமாட்சி அன்னை முன்பு ஸ்ரீசக்கரத்தை ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்துள்ளார்.

அந்த ஸ்ரீசக்கரத்தை சாதாரணமாக தரிசனம் செய்தாலே பலன்கள் வந்து சேரும். அப்படி இருக்கும் போது புனிதமான பவுர்ணமி தினத்தில் ஸ்ரீசக்கரத்தின் 9 சுற்றுக்களிலும் உள்ள தேவதைகளுக்கு பூஜைகள் நடப்பதை கண்டு தரிசனம் செய்தால் கோடான கோடி பலன்கள் நம்மை நாடி வரும் என்பதை புரிந்து கொள்ளலாம்.

அது மட்டுமல்ல.... ஸ்ரீசக்கரத்தை சுற்றியுள்ள கவசங்களில் அஷ்ட லட்சுமிகள் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்கள். எனவே ஸ்ரீசக்கரத்தில் இருந்து பெறப்படும் குங்குமத்துக்கு எல்லையற்ற சக்தி உண்டு. இந்த குங்குமத்தை பெற்ற பிறகு நவாவரண பூஜையில் படைக்கப்பட்ட சங்கு தீர்த்த பிரசாதத்தையும் நீங்கள் பெற்று விட்டால் பாக்கிய சாலிதான்.

எனது இத்தனை வருட அனுபவத்தில் இத்தலத்தில் ஸ்ரீசக்கரத்துக்கு செய்யப்படும் நவாவரண பூஜையில் கலந்து கொண்டு வாழ்வில் மேன்மை பெற்றுள்ள எத்தனையோ பேரை பார்த்துள்ளேன்.
இந்த உலகில் படைப்புத் தொழிலை செய்ய பிரம்மாவை விஷ்ணு தோற்றுவித்தார். அதோடு வேதங்களையும் கற்றுக் கொடுத்தார். இதனால் பிரம்மாவுக்கு கர்வம் தோன்றியது. இதை அறிந்த விஷ்ணு பகவான், பிரம்மாவுக்கு பாடம் புகட்ட மது, கைடபர் என்ற 2 அரக்கர்களைத் தோற்றுவித்தார்.

அந்த இரு அரக்கர்களும் பிரம்மாவிடம் இருந்த வேதங்களை பறித்து சென்று விட்டனர். இதனால் பிரம்மா படைப்பு தொழிலை செய்ய முடியாமல் திணறினார். பிறகு கர்வத்தை உதறி விட்டு விஷ்ணுவிடம் சரண் அடைந்தார்.

உடனே விஷ்ணு குதிரை முகம் கொண்ட ஹயக்ரீவர் உருவம் எடுத்து அரக்கர்களிடம் இருந்த வேதத்தை பறித்து வந்து பிரம்மாவிடம் ஒப்படைத்தார். அப்படி அவர் வேதத்தை ஒப்படைத்த தினம் ஆவணி பவுர்ணமி தினமாகும். எனவே நாளை ஹயக்ரீவரை வணங்கினால் கல்வி மற்றும் வேதங்களில் மேன்மை பெறலாம்.

Saturday, August 24, 2013

விளக்கேற்றியவுடன் செய்ய கூடாதவை எவை?

விளக்கேற்றியவுடன் செய்ய கூடாதவை எவை?

காலை 3 மணி முதல் 5 மணிக்குள் விளக்கேற்ற சர்வமங்கள யோகத்தை தரும். மாலை 6 மணி அளவில் வீட்டில் விளக்கேற்றி மகாலட்சுமியை வழிபட வேலை, நல்ல கணவன், குடும்ப சுகம், புத்திர சுகம் ஆகியவை கிட்டும். காலை விளக்கேற்றும்போது உடல், மனம் சுத்தத்துடன், வாசலில் சாணம் தெளித்து, கோலம் போட்ட பின்னரே விளக்கேற்ற வேண்டும்.

மாலையில் விளக்கேற்றும்போது, வாசலில் தண்ணீர் தெளித்துக்கோலம் போட்ட பின்னரே விளக்கேற்ற வேண்டும். காலை, மாலை விளக்கேற்றும்போது கொல்லைப்புறக் கதவைச் சாத்திடவேண்டும். கொலைப்புறக்கதவு இல்லாதவர்கள் பின் பக்கம் உள்ள ஜன்னல் கதவைச் சாத்தியே விளக்கேற்ற வேண்டும்.

விளக்கேற்றும்போது, விளக்கிற்கு பால், கற்கண்டு, நிவேதனம் வைத்து வழிபட்டால் எல்லா நன்மைகளும் கிட்டும். விளக்கேற்றிய பிறகு தலை சீவக்கூடாது. வீட்டைப் பெருக்கிக் கூட்டக்கூடாது. சுமங்கலிப் பெண் விளக்கேற்றியவுடன் வெளியே செல்லக் கூடாது.

விளக்கேற்றியவுடன் துணி துவைக்கக் கூடாது. விளக்கேற்றியவுடன் தலை குளிக்கக் கூடாது. விளக்கேற்றும் நேரத்தில் உறங்கக் கூடாது. விளக்கேற்றியவுடன் சாப்பிடக்கூடாது. விளக்கேற்றிய பிறகு பால், மோர், உப்பு, தவிடு, சுண்ணாம்பு, அரிசி, கடன் ஆகியவற்றைக் கொடுக்கக்கூடாது.
 

Thursday, August 22, 2013

வறுமையிலும் தர்மம் செய்ய முடியுமா?

மனிதன், மனம்,மொழி, மெய் மூன்றாலும் தர்மம் செய்யலாம் என்கிறது சாஸ்திரம். பணம் உள்ளவன் மட்டுமே தர்மம் செய்ய முடியும் என்பதில்லை. மனதால் நல்ல எண்ணங்களை சிந்தியுங்கள். வாயில் நல்ல சொற்கள் மட்டும் வரட்டும். கைகளால் நல்ல பணிகளைச் செய்யுங்கள். நல்லவன் வாழ்வான் என்று பூரணமாக நம்புங்கள். இப்படிப்பட்ட நல்லவனுக்கு இறைவனே துணை நிற்பான்.