Saturday, September 27, 2014

இறைவனுக்கு படைக்கும் நைவேத்தியம்..

இறைவனுக்கு படைக்கும் நைவேத்தியம்..
எப்படி அமைய வேண்டும் என்று சிவாகமம் கூறுகிறது பாருங்கள்..
11.1வண்டு மலரை முகர்ந்து தேனைப் பருகி, அந்தத் தேனை திருப்பித் தருகிறது; மலரின் மணமோ சுவையோ தண்மையோ நீரோட்டமோ கெடுவதில்தல. அதுபோல இறைவர்க்கு நிவேதித்த பிரசாதங்களின் ரஸம் போவதில்லை. மேகம் சூர்ய கிரகணங்களைக் கொண்டு நீரைக் குடித்து, அதையே பிறகு மழையாகப் பொழிகின்றது, அவ்வாறே, இறைவன் நிவேதனத்தைத் தன் பார்வையால் ஏற்றுக் கொண்டு, கருணை மழை பொழிந்து, நம்மைக் காக்கிறான்.
11.2 அபிஷேகத்தில் நிறைவு, அர்ச்சனையின் முடிவு ஆகிய இரண்டு சமயங்களில் நைவேத்யம் செய்ய வேண்டும்
11.3 மந்த்ராந்நம், நைவேத்யம் : மந்த்ரம் என்பது ரஹஸ்யம். பல்லிலும், உதட்டிலும், முகவாய்க்கட்டிலும் உற்பத்தி ஆவதால் மந்த்ரங்கள் ரஹஸ்யம் எனப்படுகின்றன. எந்த அந்தமானது ரஹஸ்யமாக நிவேதிக்கப்படுகிறதோ அதற்கு மந்த்ராந்நம் என்று பெயர். அத்தகைய மந்த்ராந்தமாகிய மஹாநிவேதனத்தை ஒரு பாத்திரத்தில் முக்காலியின் மேல் வைத்து, அதைச் சுற்றி, பாகம் பண்ணப்பட்ட (சமைக்கப்பட்ட) பதார்த்தங்களைத் தனித் தனிப் பாத்திரங்களில் வரிசையாக வைத்து, அவற்றை ஒன்றொன்றாகச் சோதனை செய்து, ஹ்ருதய மந்திரத்தினால் ப்ரோக்ஷிக்க வேண்டும். அந்த நிவேதனத்தை அம்ருதமயமாகப் பாவித்து, தேனு முத்திரை காட்டி, புஷ்பத்தை வைத்து, நைவேத்யத்தை ஸ்வாமியினுடைய தக்ஷிண ஹஸ்தத்திலே கொடுத்து, தீர்த்த பானத்தையும் கொடுக்க வேண்டும்.
11.4 மயிர், புழு, மணல், உமி இவை கலந்துள்ள அரிசிச்சோறு (அன்னம்) நைவேத்யத்திற்கு ஆகாது ; அரை அரிசிச் சோறு, குழைந்த அன்னம், துர்நாற்றம் உள்ள அன்னம் ஆகியவையும் கூடாது; மிகச் சூடாக நிவேதனம் செய்யக்கூடாது.
11.5 ஈசான முகத்திற்கு சுத்த அன்னமும், தத்புருஷ முகத்திற்கு சர்க்கரைப் பொங்கலும், அகோர முகத்திற்கு எள் அன்னமும், வாமதேவ முகத்திற்கு தயிர் அன்னமும், ஸத்யோஜாத முகத்திற்கு வெண்பொங்கலும் படைப்பது சிறந்தது.
11.6 தாம்பூலத்தின் நுனியில் லக்ஷ்மி, மத்தியில் ஸரஸ்வதீ, பின்பகுதியில் மூதேவி ஆகியோர் உள்ளதாக ஐதீகம். எனவே, பின்பாகத்தை நீக்கிவிட்டு தான் வெற்றியையை நிவேதனம் செய்ய வேண்டும்.
11.7 ஜலம் உள்ள தேங்காயைத்தான் உடைத்து நிவேதனம் செய்ய வேண்டும்; சமமாக இரு பாதியாக உடைப்பதே சிறந்தது; குடுமி இல்லாமல் உடைத்தால் அரசுக்கு கேடு; முழுக் குடுமியும் உள்ளதாக உடைத்தால் நாட்டுக்கு கேடு; எனவே, கொஞ்சம் குடுமி உள்ளதாகச் செய்துகொண்டு உடைக்க வேண்டும்; உடைத்த பின்னர், அந்தச் சிறிதளவு குடுமியையும் நீக்கி விட்டு நிவேதனம் செய்ய வேண்டும்.
11.8 நந்திக்கு நிவேதனம் : அரிசியையும், பயத்தம் பருப்பையும், வெல்லத்தையும், திருகின தேங்காயையும் ஒன்றாகக் கலந்து ப்ரதோஷ காலத்தில் நந்தி தேவருக்கு விசேஷமாக நைவேத்யம் செய்திடல் வேண்டும்
11.9 திரை இடுதல் : பூஜையின் போது, நிவேதன காலத்தில் திரை இடாவிட்டால், பாபிகள் அதைப் பார்க்க நேரிட்டு, அதனால் அந்த நிவேதனமும், அது அங்கமாக உள்ள பூஜையும் பலனற்றதாகப் போய்விடும்.11

சிவாச்சாரியார்... பற்றி சிவாகமம் தரும் விளக்கம்....!!!

சிவாச்சாரியார்... பற்றி சிவாகமம் தரும் விளக்கம்....!!!
ஆலயக் கிரியை வகைகள்: சிவாலயங்களில் நடைபெறும் கிரியைகள் மூவகைப் படுத்தப் பட்டுள்ளன:
1. நித்தியக் கிரியைகள் 
2. நைமித்திகக் கிரியைகள் 
3. காமியக் கிரியைகள்.
தினந்தோறும் (குறைந்தது ஒரு காலம், அதிகபக்ஷம் 12 காலம்) நிகழும் பூஜைகள் நித்தியக் கிரியைகள். ஏதாவது காரணங் கொண்டு நிகழ்வன நைமித்திகக் கிரியைகள் (நிமித்தம் என்றால் காரணம்). இவை நித்தியக் கிரியைகளை அன்னியில், செய்யப்பெறும்
விசேஷக் கிரியைகள், அதாவது, சதுர்த்தி, ஷஷ்டி, சிவராத்திரி, ப்ரதோஷம், பௌர்ணமி, நடராஜர் அபிஷேகம், ஆவணி மூலம், பெரிய கார்த்திகை, மாசி மகம், ஆருத்ரா, விஷு, ஆடிப்பூரம், அன்னாபிஷேகம், ப்ரஹ்மோத்ஸவம், மகாமகம், அர்த்தோதயம், மஹோதயம், கும்பாபிஷேகம் போன்ற நாட்களில், அல்லது காலங்களில், அல்லது முஹூர்த்தங்களில் விசேஷமாகத் திட்டமிடப்பட்டுச் செய்யப்பெறும் நிகழ்ச்சிகள்.
ஒரு குறிப்பிட்ட பேறு பெற விழைந்து, ஒருவராலோ அல்லது பலர் ஒரு குழுவாகச் சேர்ந்தோ, செய்யப்படும் கிரியைகள் காமியக் கிரியைகள். (காமிகாகமம்). திருக்கோவில் பூஜைகள் பெரும்பாலும் பொது ஜனங்கள் அனைவரது நன்மையயும் வேண்டிப் பொதுவாகச் செய்யப்படும்
3.1 நிஷ்காம்யக் கிரியைகளே. ஒரு அன்பரோ அல்லது குழுவோ தமக்கென்று ஒரு பேற்றினை வேண்டி பூஜைகள் நிகழ்வித்தாலும், அவை திருக்கோவிலில் நிகழ்ந்தால், மஹா ஸங்கல்பமாக, பூஜையின் ஆரம்பத்தில் அனைவருக்கும் பொதுவாக அனைத்து நன்மைகளையும் வேண்டி, நிஷ்காம்யக் கிரியையாக வழிபாடுகளை நிகழத்துதலே முறை.
3.2 சிவபூஜை வகைகள்: சிவபூஜை ஆத்மார்த்தம், பரார்த்தம் என இரு வகைப்படும். இவ்விரு பூஜைகளுள்,சிவதீøக்ஷ பெற்ற யாவரும் ஆத்மார்த்த பூஜை செய்யலாம், பரார்த்த பூஜைகளே திருக்கோவிலில் நிகழ்வன. சிவதீøக்ஷ பெற்ற ஆதிசைவர்கள் (சிவாச்சாரியார், குருக்கள்), குருமுகமாகப் பயிற்சி பெற்று, ஆசார்யராக இருக்கத் தகுதி பெற்றபின்னரே பரார்த்த பூஜை செய்ய உரிமை பெறுவர்.
3.3. சிவாச்சாரியார்: சிவாலயங்களில் பூஜை செய்யும் அருகதை உள்ள சிவாச்சாரியார்கள் பதினாறு வயதுக்கு மேற்பட்டவர்களாகவும், எழுபது வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும் என்று காமிகாமம் கூறிகின்றது.
3.4 சிவாச்சாரியாருக்கு விதிக்கப்பட்ட கிரியைகள்: சிவாச்சாரியார் (அல்லது சிவ தீøக்ஷ செய்து கொண்ட எவரும்) தினமும் செய்ய வேண்டி விதிக்கப்பட்டுள்ள ஸ்நானம், பூஜை, ஜபம், த்யானம், ஹோமம் போன்றவற்றிற்கும், சிவாச்சாரியாருக்கு உருடய நித்தியக் கிரியைகள் என்றே பெயர். தீøக்ஷ செய்துகொள்ளுதல் ப்ரதிஷ்டை செய்தல் போன்றவை அவருக்கான நைமித்திகக் கிரியைகள் எனப்படும்
3.5 சிவ த்யானம்: நம்முடைய ஹ்ருதய கமலத்திலாவது, துவாதசாந்தத்திலேயாவது சிவனை நிறுத்தி தியானம் செய்ய வேண்டும். நிஷ்களமான சிவனை, குரு உபதேசித்தபடி த்யானம் செய்து மூல மந்திரத்தால் (ஓம் ஹாம் சிவாய நம: அல்லது ஓம் ஹாம் ஹம் ஹாம் சிவாய நம:) ஜபம் செய்யவேண்டும். அப்படி நிஷ்களமான சிவனை த்யானம் செய்யும் சாமர்த்தியம் இல்லாதவர் சிவபெருமானுடைய விக்ரஹங்களில் தனக்குப் பிடித்தமான ஒருவரை மனதில் நிலைக்கச் செய்து, த்யானம், ஜபம் செய்தல் வேண்டும்
3.6 சைவக் கிரியைகளின் அங்கங்கள்: பாவனை, கிரியை, மந்திரம் என்னும் மூன்றும் சேர்ந்து பரிமளிப்பனவே சைவக் கிரியைகள். பாவனை என்றால் எண்ணுவது என்று பொருள். கிரியைகள் என்பதை முத்திரைகளுடன் செய்யப்படும் செய்கைகள். . மந்திரங்கள் என்பதை எண்ணங்களுக்கு ஏற்ற கிரியைகளின் பயன்களைத் தர வல்ல சொற்றொடர்கள். ஒவ்வொரு கிரியையும், அதற்கேற்ற பாவனை, மற்றும் மந்திரங்களுடனே தான் செய்யப்படுதல் வேண்டும். பாவனை இல்லாது மந்திரங்களுடன் மட்டும் கரியைகளைச் செய்தால் அவை பயனற்றவையாகும். பாவனையும் இல்லாது, மந்திரங்களையும் மொழியாது, கிரியைகளைச் செய்தால், அச்செய்கைகள் தேவர்களை மகிழ்விக்காது; அசுரர்களையே மகிழ்விக்கும்; அதனால் புண்ணியம் தேய்ந்து பாவமே வளரும். எனவே, பூஜைகளில் முழுப்பயனும் மக்களைச் சென்றடைய, பாவனை, கிரியை, மந்திரம் ஆகிய மூன்றிலுமே லோபம் (குறைகள்) இல்லாமல் அனுஷ்டானத்தைச் செய்யுமாறு சிவாச்சாரியார்கள் குருமுகமாகப் பயிற்சி அளிக்கப்படுகிறார்கள்.
3.7 பக்தியில்லாத சிவாச்சாரியார்: தீக்ஷிதனாகிய ஆச்சாரியார், பக்தி இல்லாதவனாக பூஜித்தால், ராஜா. ராஜ்யம் இவர்களுக்கு கெடுதல்; அது எவ்விதம் எனில், காட்டில் இருக்கிற துஷ்ட மிருகமாகிற ஸிம்ஹத்தைக் கண்ட யானையானது எப்படி பயம் அடையுமோ, அதுபோல் பக்தியில்லாத ஆச்சாரியனைப் பார்த்த உடனே சிவபெருமான் பயம் அடைந்து (விலகி விடுவார்) மந்திரம் இல்லாமல் அர்ச்சனை செய்தால், அந்த ஈச்வரன் பயம் அடைவார்

Friday, September 26, 2014

கும்பாபிஷேகம் செய்வது ஏன்?


கும்பாபிஷேகம் செய்வதற்கு முன்பு மூல விக்கிரத்தில் உள்ள சக்தியை கும்பத்துக்கு வரவழைப்பார்கள். அதாவது மூலவர் ஆற்றல் பிம்பத்தில் இருந்து கும்பத்துக்கு வந்து விடும். இதையடுத்து திருப்பணிகள் நடைபெறும். இதற்கிடையே கும்பத்தில் உள்ள சக்தியை பாலாயம் செய்து பூஜைகள் செய்து வருவார்கள்.

யாக சாலை பூஜைகள் தொடங்கியதும் பாலாலயத்தில் இருந்து சக்தியை பெற்று புனித நீர் நிரம்பிய கும்பத்தில் வைத்து சிறப்பு ஆராதனைகள் நடத்தப்படும். யாக சாலை பூஜைகள் முடிந்ததும் வேத பாராணயங்களால், திருமுறை பாராயணயத்தால் சக்தி ஏற்றப்பட்ட புனித நீர் அபிஷேகம் செய்யப்படும்.

இதன் மூலம் மூலவர் விக்கிரகம் புதிய சக்தியை பெறும். மக்களும் அதன் அருளால் நன்மைகள் பெறுவார்கள். மகா கும்பாபிஷேகத்தின் போது புனித நீர் பக்தர்கள் மீதும் தெளிக்கப்படும். இந்த புனித நீர் நம் மீது பட்டால் நமது பாவம் எல்லாம் தொலைந்து போகும். நம் சுத்தப்படுத்தப்பட்டு விட்டோம் என்பது ஐதீகமாகும்.

புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடக்கூடாது.ஏன் தெரியுமா?


புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடக்கூடாது.
ஏன் தெரியுமா?
புரட்டாசி மாதம் வெயிலும் காற்றும் குறைந்து மழை ஆரம்பிக்கும் மாதம்.
ஆனால் பூமி குளிர மழை பெய்யாது. இத்தனை மாதமாக வெயிலால் சூடாகியிருந்த பூமி மழைநீரை ஈர்த்து வெப்பத்தை குறைக்க ஆரம்பிக்கும்.
சூட்டை கிளப்பிவிடும் காலம் என்பார்கள்.
இது வெயில் கால வெப்பத்தை காட்டிலும் கெடுதல் தரக்கூடியது.
இந்த நேரத்தில் அசைவம் சாப்பிடுவது உடல் சூட்டை அதிகப்படுத்தி உடல் நலத்தை குறைக்கும். வயிறு சம்பந்தமான பிரச்சனையை ஏற்படுத்தும்.
அதனால் தான் புரட்டாசி மாதம் அசைவத்தை ஒதுக்கினர் நம் முன்னோர்.
அது மட்டுமன்றி சரிவர பெய்யாத மழை திடீர் வெப்ப மாறுதல் நோய்கிருமிகளை உருவாக்கிவிடும். காய்ச்சல் சளி தொந்தரவு அதிகரிக்கும்.
துளசி இதை கட்டுப்படுத்தும். இதற்காகவே புரட்டாசியில் விரதம் இருந்து (அசைவம் ஒதுக்கி) பெருமாள் கோவிலுக்கு போகும் வழக்கத்தை ஏற்படுத்தினர்.

Thursday, September 25, 2014

* ஈரத் துணியுடன் பூஜை செய்யலாமா?


* ஈரத் துணியுடன் பூஜை செய்யலாமா?
இல்லத்தில் ஈரத்துணியோ, ஈர துண்டினையோ அணிந்துக் கொண்டு பூஜை செய்யக் கூடாது. ஆனால், குழந்தைப் பேறு இல்லாதவர்கள் ஈர ஆடையுடன் அரச மரத்தை வலம் வரலாம். பெண்கள் குளித்துவிட்டு தலையில் ஈரத்துண்டினைச் சுற்றி முடிச்சுப் போட்டு வழிபாடு செய்யக்கூடாது.

கிரகப் பிரவேசத்திற்குப் பசுமாடும் கன்றும் வீட்டிற்குள் பிரவேசிக்கச் செய்வது ஏன்?


* கிரகப் பிரவேசத்திற்குப் பசுமாடும் கன்றும் வீட்டிற்குள் பிரவேசிக்கச் செய்வது ஏன்?

கிரகப் பிரவேசத்தின் போது பசுவும்,கன்றும் வீட்டினுள் பிரவேசிக்கச் செய்வதன் மூலம் லட்சுமி கடாட்சம் வீட்டில் ஏற்படுகிறது. அருட் செல்வமும் பொருட் செல்வமும் வீட்டில் பெருகுமாம்.

பசுமாட்டை லக்ஷ்மியின் அம்சமாகவே குறிப்பிடுகிறோம். பசுமாட்டில் அனைத்து தெய்வங்களும் வசிப்பதாகவும் ஐதீகம்.

வீட்டு வாசலில் துளசிச் செடியை வளர்ப்பது ஏன்?


வீட்டு வாசலில் துளசிச் செடியை வளர்ப்பது ஏன்?

வீட்டு வாசலில் துளசிச் செடியை வைப்பதினால் ¢நம் முன் ஜென்ம பாவங்கள் அகல்கின்றது. தீய எண்ணங்களை போக்கும் தன்மையும், தீய சக்திகளை, விஷ ஜந்துக்களை விரட்டும் தன்மையும் துளசிக்கு உண்டு.

திருவிளக்கை ஏற்றுவதன் பொருள் யாது? திருவிளக்கை அணைக்கும் முறை என்ன?


* திருவிளக்கை ஏற்றுவதன் பொருள் யாது?

இறைவன் ஜோதிமயமாக எங்கும் நிறைந்திருப்பவர் என்பதைக் குறிப்பிடவே திருவிளக்கை ஏற்றுகின்றோம். திருவிளக்கை மகாலட்சுமியின் அம்சமாக நாம் கருதுகின்றோம்.

* திருவிளக்கை அணைக்கும் முறை என்ன?

வழிபாட்டிற்குப் பின்னர் ஒரு மணி நேரம் கழித்து ஒரு மல்லிகை பூவினால் தீபத்தை அணைக்கலாம் அல்லது திரியை எண்ணெயில் அமிழ்த்தி அணைக்கலாம்.

இறைவழிபாட்டில் மணியடிப்பதன் காரணம் என்ன?


* இறைவழிபாட்டில் மணியடிப்பதன் காரணம் என்ன?

ஓங்கார நாதத்தையே மணி ஒலிக்கிறது. ஓம் எனும் பிரணவ மந்திரம் சொல்லியே இறைவனை வழிபடுகிறோம். இறைவழிபாடு நடைபெறுகிறது என்பதை குறிக்கவும், பக்தர்கள் அமைதியுடன் இறைதரிசனம் செய்யவேண்டும் என்பதை அறிவிக்கவும் மணியோசை எழுப்பப்படுகிறது. மணியின் அதிர்வலைகள் தீய சக்திகளை விரட்டுகிறது என்றும் கூறுவர்.

இல்லத்தில் பூஜை மாடம் எத்திசையில் அமைக்கலாம்?


* இல்லத்தில் பூஜை மாடம் எத்திசையில் அமைக்கலாம்?

பூஜை மேடை கிழக்கு திசையை நோக்கி அமைவது சிறப்பு. அறையின் நடுப்பகுதியிலும், மூலை ஓரமாகவும் பூஜை மாடத்தை வைக்கக்கூடாது என்பர். கிழக்கு திசை நோக்கியே திருவிளக்கையும் வைப்பது நல்லது.

* பூஜை மாடத்தில் தெய்வத் திருவுருவப் படங்களை எப்படி வைக்க வேண்டும்?

பூஜை மேடையின் மத்தியில் அவரவர் இஷ்ட தெய்வத்தின் திருவுருவப் படங்களை வைத்து, வலது இடது புறங்களில்வேறு தெய்வங்களின் திருவுருவப் படங்களை வைக்கலாம். இஷ்ட தெய்வத்தின் படம் சற்று பெரிதாகவும் வைக்கலாம்.

கற்பூர தீபம் காட்டுவது ஏன் ?


கற்பூர தீபம் காட்டுவது ஏன் ?

பரம் பொருள் ஒளிமயமானவர். அதைக்குறிக்கவே தீபாரதனை வழிபாடு. தீபாரதனை ஒளியில் இறைவனின் திருவுருவம் கண்களுக்கு பிரகாசமாய் தெரிகிறது. மனதில் பக்தி ஒளிரும்போது தான் இறைவனை தரிசிக்க முடியும் என்று கொள்ளலாம்.

கற்பூரம் என்பது வாசனைகள் ஒன்று சேர்ந்த பொருள். கற்பூரத்தைக் கொளுத்தி இறைவனுக்கு முன் காட்டி எரிய விடும்போது நமது உணர்வுகளைப் பற்றும் வாசனைகள் எரிந்து உருவமழிந்துப் போகிறது என்பதையே பாவனையாகக் காண்கிறோம்.

மூலஸ்தானம் என்ற கருவறை எப்போதும் இருட்டாக இருக்கும் பகுதி, காற்றும் ஒளியும் வெளியிலிருந்து அங்கே செல்ல முடியாது. பிற எண்ணங்களுக்கு இடம் தராத நம்முடைய உள் மனதையே இந்த கர்ப்பக்கிகரம் பிரதிபலிக்கிறது.

அத்தகைய உள்மனதில் உறையும் இறைவன் சாதாரணமாக நமக்குப் புலப்படுவதில்லை. நடைதிறந்து , திரை விலகி மணி ஓசையுடன் தீபாரதனை நடைபெறும் போது இருள் நிறைந்த மூலஸ்தானத்தில் தூய்மையான ஓளிப்பிழம்பில் இறைவனை நாம் காண்கிறோம்.

அதுபோலவே ஞானம் பிரகாசிக்கும் போதும் நம் உள்ளத்தில் அறியாமை இருள் மறைந்து உள்ளே ஒளிரும் இறைவனின் தரிசனம் நமக்கு கிட்டும் என்பதையே தீபாராதனை மூலம் நமக்கு சொல்லப்படும் செய்தி.

கற்பூரம் தன்னை முற்றிலும் அழித்துக் கொண்டுவிடுகிறது. பூரணமாய் கரைந்து போய்விடுகிறது. அதைப் போலவே இறைவன் முன் நம்மை நாம் பூரணமாய் கரைந்து போய்விட வேண்டும்.

இறைவனுக்கு அவன் தந்த அனைத்தையும் அர்ப்பணித்து, தன்னையே ஆத்ம சமர்ப்பணம் செய்வதையே, கற்பூர தீபாரதனையும் அதனைக் கண்களில் ஒற்றிக்கொண்டு இறைவனது திருவடியில் வீழ்ந்து வணங்கும் நிகழ்வும் நமக்கு உணர்த்துகின்றன.

சிந்தாமணி பஞ்சகவ்யம் !


சிந்தாமணி பஞ்சகவ்யம் !
கோமூத்திரத்துக்கு வருணனும், கோமயத்துக்கு அக்னியும், பாலுக்கு சந்திரனும் தயிருக்கு வாயுவும் நெய்க்கு விஷ்ணுவும் அதிபதிகள் என்று ஸ்ம்ருதிகள கூறுகின்றன. இதை பஞ்சகௌவ்யம் என்றும் கூறுவர். ஆபிசாரப்ரயோகம், காத்து, கருப்பு, துர்தேவதை தொல்லை போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பஞ்சகவ்யம் கொடுத்தால் அவை நீங்கிவிடும்.

அபிதான சிந்தாமணி என்னும் நூலில் ஐந்து வெவ்வேறு நிறத்தில் உள்ள ஐந்து பசுக்களிடம் இருந்து கிடைத்த ஐந்து பொருட்களைக் கொண்டு பஞ்சகவ்யம் தயாரிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

அறிவியல் ரீதியாக இது எந்த அளவுக்கு நிரூபிக்கப்பட்டுள்ளது என்று தெரியவில்லை. ஆனால் தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் உள்ள ஓலைச்சுவடி பிரிவில் பஞ்சகவ்யம் பற்றி அரிய தகவல்கள் பல உள்ளன.

பஞ்சகவ்யம் சாப்பிடுவோர்க்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பல நோய்களைக் குணப்படுத்தும் ஆற்றல் பஞ்சகவ்யத்துக்கு உண்டு.

பசு மாட்டிலிருந்து கிடைக்கும் ஐந்து பொருட்களை ஒரு குறிப்பிட்ட விகிதாசாரத்தில் கலந்து தயாரிக்கப்படும் கலவைக்கு பஞ்சகவ்யம் என்று பெயர். பசும்பால் 7 பங்கு, பசுந்தயிர் 3 பங்கு, பசு நெய் 1 பங்கு, கோஜலம் (பசுவின் சிறுநீர்) 1 பங்கு, பசுங்சாணத்தைக் கரைத்து வடிகட்டிய நீர் (கோமய ரஸம்) அரைபங்கு என்னும் ஐந்தையும் கலந்து தர்பைப் புல் ஊறிய நீரில் கலந்து உடனடியாக உட்கொள்ள வேண்டும். வேதம் கற்றவர்கள் கோ சூக்தம் என்னும் மந்திரத்தை உச்சரித்து பஞ்சகவ்யம் தயாரிப்பார்கள்.

இதை அருந்தினால் மனித சரீரம் தூய்மை அடைகிறது என்று நமது சாஸ்திரம் கூறுகிறது. பழங்காலத்தில் ஆலயங்களில் பூஜை செய்பவர்கள் தினசரி பஞ்சகவ்யம் அருந்திவிட்டுத்தான் கர்பகிரகத்துக்குள் பிரவேசிக்க வேண்டும் என்னும் விதி பின்பற்றப்பட்டு வந்தது.