Wednesday, February 22, 2017

மகாசிவராத்திரி அன்று நாம் செய்ய கூடாதவை –


மகாசிவராத்திரி அன்று நாம் செய்ய கூடாதவை

 

மகாசிவராத்திரி அன்று நாம் செய்ய கூடாத சில நடைமுறை பழக்கத்தை பற்றி தெரிந்து கொள்ள இந்த பதிவு ....

 

நான் கடந்த வருடம் சிவராத்திரி அன்று பெருமானை தரிசிக்க கோவில் சென்ற பொழுது ஒரு புரம் உணவு வழங்க பட்டு கொண்டுஇருந்தது , மக்கள் உணவுகளை உண்டு விட்டு கோவிலில் இலைகளை சிதறி கோவிலை அசுத்த படுத்தி கொண்டு இருந்தார்கள் .

 

 மஹா சிவராத்திரி அன்று செய்ய கூடாத மிக முக்கியமான தவறு பக்தர்களுக்கு உணவு அளிப்பது...

 

அடியார்கள் ,சிவாச்சாரியார்கள் ,கோவிலில் உள்ள குருக்கள் ஏன் இதை கவனித்து தானம் செய்பவர்களிடம் சொல்ல தவறுகிறார் -கள் என்று புரிய வில்லை ..

 

உண்மையில் சிவராத்திரி நமக்கு அருளப்பட்டது காரணம் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

 

மனிதர்களுக்கு ரொம்ப முக்கியானது இரண்டு விஷயம். உணவு, நல்ல தூக்கம், இந்த இரண்டையும் விலக்கி, சிவனுக்காக நாம் விரதமிருப்பது தான் இந்த நாளின் நோக்க மாகும்.

 

உணவையும் உறக்கத்தையும் விலக்கினால் புலன்கள் தானாகவே அடங்கும். அப்போது இறையுணர்வு பெற முடியும். நினைத்த காரியம் சித்தி ஆகும்.

 

வைகுண்ட ஏகாதேசியும் இந்த நோக்கம் தான் .

 

கோவில் என்ன சிற்றுண்டி கடையா ? இப்படி பிரசாதம் என்று அவர்கள் பசியை வெல்ல உதவாமல் தரிசிக்க வரும் பக்தர்களை பசியாற்றி மஹா சிவராத்திரி நோக்கத்தை கெடுத்து சாபத்தை பெறுகிறார்கள் என்ற காரணத்தை யார் சொல்வது ...

 

கோவில் நிர்வாகம் கண்டு கொள்வது இல்லை ,

மகாசிவராத்திரி அன்று அம்பாளே உணவு அருந்தாமல் இருக்கும் பொழுது நமக்கு ஏன் உணவு ? ..

 

மேலும் சிவ பெருமான் ஆரவாரத்தை விரும்பாதவர் ,

ஏகாந்தம் ;ஏகாந்தம் ;ஏகாந்தம் .முற்றிலும் அமைதி இவர் விரும்புவது அமைதி.

 

மஹா சிவராத்திரி அன்று சிவபுராணம், கோளறு பதிகம், லிங்காஷ்டகம், பஞ்சாட்சர ஸ்தோத்திரம், நடராஜப் பத்து, பரமசிவன் ஸ்தோத்திரங்களைப் படிக்கலாம். தமிழில் திருமறை -களையும் ஓதலாம்.

 

சிவராத்திரியன்று பஞ்சாட்ச மந்திரம் உச்சரிப்பதால் மற்ற நாள்களில் நூறு முறை பஞ்சாட்சரம் ஜெபித்த பலன் கிட்டும் என்கிறது சாஸ்திரம்.

 

ஆனால் பக்தர்களின் ஆரவாரம் ,கேளிக்கைகள் , சப்தம் கோவிலை பிளக்கிறது -சிவராத்திரி விழாவாக மாறிக்கொண்டு இருக்கிறது ….

 

முடிந்தால் முறையாக வழிபாடு செய்யுங்கள், தவறுகளும் ,மாற்றுதலும் செய்யவேண்டாம் ...

பெண்களை அம்மனின் அம்சமாக கூறுவது ஏன்..?


பெண்களை அம்மனின் அம்சமாக கூறுவது ஏன்..?

 

கோயிலில் உள்ள அம்மனுக்கு பட்டுப்புடவை கட்டி மலர் மாலை சூட்டினாலும், தாலி, தோடு, மூக்குத்தி, வளையல், ஒட்டியானம், மோதிரம் ஆகிய அணிகலன்கள் அணிவித்தாலே அலங்காரம் முழுமையடையும்.

 

பெண்களை அம்மனின் அம்சமாக கூறுகின்றனர். எனவே தான் பெண்கள் அணியும் கீழ்கண்ட அணிகலன்களுக்கும் சில காரணங்கள் கூறப்படுகிறது.

 

1.தாலிதாயாகி, தாலாட்டுப்பாட கணவன் தரும் பரிசு சின்னம்.

2. தோடுஎதையும் காதோடு போட்டுக் கொள். வெளியில் சொல்லாதே !

3. மூக்குத்திமூக்கு தான் முதலில் சமையலை அறியும் உத்தி என்பதை உணர்த்துகிறது.

4. வளையல்கணவன் உன்னை வளைய, வளைய வர வேண்டும், என்பதற்காக,

5. ஒட்டியாணம்கணவன், மனைவி இருவரும் ஈருடல் ஓருயிராய் ஒட்டியானோம் என்பதற்காக !

6. மோதிரம்எதிலும் உன் கைத்திறன் காண்பிக்க.

 

இவை தவிர நகைகள் உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்காக உருவானவை, அதிகமான ஆபரணங்கள் தங்கத்தில் அணியப்படுவதன் காரணம் வெப்பமான நாடுகளில் வெப்பத்தை குறைத்து, உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க தங்கம் ஏற்றது.

 

அத்துடன் தங்கம் எப்பொழுதும் எமது உடலை தொட்டுக்கொண்டிருப்பதால் நாளடைவில் உடலின் அழகை அதிகரிக்கும் ஆற்றலுள்ளது.

 

கொலுசு: பொதுவாக எல்லா நகைகளையும் தங்கத்தில் அணியும் நாம், காலில் அணியும் நகைகளை வெள்ளியில் தான் அணிகிறோம்.

 

இதற்கு காரணம் தங்கத்தில் மகாலட்சுமி இருப்பதால் காலில் அணியும் நகைகள் தங்கத்தில் அணிவதில்லை. அத்துடன் வெள்ளி நம் உடல் சூட்டை அகற்றி குளிர்ச்சியாக்கி சருமத்தை ஆரோக்கியமாக்கும்.

 

வெள்ளி கொலுசு குதிகால் நரம்பினை தொட்டுகொண்டிருப்பதால் குதிகால் பின் நரம்பின் வழியாக மூளைக்கு செல்லும் உணர்சிகளைக் குறைத்து கட்டுப்படுத்துகிறது.

 

மெட்டி: மெட்டி என்பது திருமணமான பெண்கள் மட்டும் அணியும் ஆபரணம். பெண்களது கருப்பைக்கான முக்கிய நரம்புகள் கால் விரல்களிலேயே இருக்கிறது.

 

வெள்ளியில் இருக்கும் ஒருவித காந்த சக்தி கால் நரம்புகளில் ஊடுருவி நோய்களை தடுக்கும் ஆற்றல் உள்ளது. மெட்டியும் கட்டாயம் வெள்ளியில் தான் அணிய வேண்டும்.

 

மோதிரம்: விரல்களில் அணியப்படும் மோதிரம் பதற்றத்தை குறைக்கவும், இனிமையான பேச்சு திறன், அழகான குரல் வளத்திற்கு உதவுகிறது.

 

அதிலும் மோதிர விரலில் அணியப்படுவதன் முக்கிய காரணம் ஆண் பெண் இனவிருத்தி உறுப்புகளை ஸ்திரப்படுத்தவும் பாலுணர்வுக்கும் உதவுகிறது.

 

விரல்களில் மோதிரம் அணிவதால் இதயக் கோளாறுகள் மற்றும் வயிறு கோளாறுகள் நீங்கவும் உதவுகிறது. சுண்டு விரலில் மோதிரம் அணியக்கூடாது.

 

மூக்குத்தி: மூக்குத்தி அணிதல் என்பது காலம் காலமாக நடைமுறையில் இருக்கும் ஒரு பழக்கம் இன்றும் கூட நவீன உலகில் முக்கியத்துவம் பெறுகிறது.

 

பருவப் பெண்களுக்கு மண்டை ஓட்டுப் பகுதியில் சில வாயுக்கள் காணப்படுகிறது. இந்த வாயுக்களை உடலில் இருந்து அகற்றுவதற்கு தான், மூக்கில் துளை இடும் பழக்கம் உருவானது.

 

இதனால் பெண்களுக்கு மூக்கு தொடர்பான பிரச்சனைகள் நிவர்த்தியாகும். காற்றை வெளியேற்றுவதில் ஆண்களுக்கு வலப்புறமும் பெண்களுக்கு இடப்புறமும் பலமான வலுவான பகுதிகளாகும்.

 

வலது புறமாக சுவாசம் செல்லும் போது தான் உடலுக்கும் மனதுக்கும் பலன் கிடைக்கும். முறையான சுவாச பரிமாற்றத்துக்கு உதவுகிறது மூக்குத்தி.

 

சாஸ்திரப்படி பெண்கள் இடப்புறம் அணிய வேண்டும். இடப்புறம் அணிவதால் சிந்தனை சக்தி,மனம் ஒரு நிலைப்படுத்தபடுகிறது.

 

காதணி: தோடு என்பது காதில் அணியும் ஆபரணம். பெண்கள்; அனைவரும் அணியும் இந்த ஆபரணத்தை ஆண்களும் அணிவார்கள்.

காது குத்துதல் என்பது சமூகத்தில் ஒரு முக்கிய சடங்காகவே கொண்டாடப்படுகிறது. காதில் துவாரமிட்டு காதணி அணிவதன் முக்கிய நோக்கம் கண் பார்வையை வலுப்படுத்தவே ஆகும்.

Wednesday, February 8, 2017

பிறந்தநாளன்று செய்யவேண்டியது -- செய்யக்கூடாதது

பிறந்தநாளன்று செய்யவேண்டியது செய்யக்கூடாதது ..
ஒருவர் பிறந்தநாளன்று செய்யவேண்டியவைகளையும் செய்யக்கூடாதவைகளையும் பார்ப்போம்.
ஒருவர் பிறந்த நாள் என்பது அவரது ஆயுளை இறைவன் மேலும் நீட்டித்து வழங்கும் நாளாகும். இறைவனின் நேரடி பார்வை அன்று நம்மீது இருக்கும். எனவே பிறந்தநாளை ஒருவர் சரியாகப் பயன்படுத்திக்கொண்டு இறையருளுக்கு பாத்திரமாகவேண்டும்.
...
பிறந்தநாளன்று ஒருவர் செய்யவேண்டியது என்ன ?
1) காலையில் சீக்கிரம் எழுந்து எண்ணை தேய்த்துக் குளிக்க வேண்டும்.
2) புத்தாடைகள் இருப்பின் அவற்றை பெரியோரிடம் தந்து குங்குமம் வைத்து வாங்கி அணியலாம். (ஆடைகளில் தோஷம் ஏதேனும் இருந்தால் குங்குமம் வைப்பது மூலம் அவை நீங்கிவிடும்).
3) பெற்றோர் மற்றும் மூத்தோரின் கால்களில் விழுந்து ஆசி பெறவேண்டும்.
4) அவர்கள் கையால் இனிப்புக்களை பெற்று அதை உண்ணவேண்டும்
5) குல தெய்வத்தின் கோவிலுக்கு செல்லவேண்டும்.
6) ஆலயத்தில் உங்கள் பெயர் ராசி நட்சத்திரப்படி அர்ச்சனை, அபிஷேக, ஆராதனைகள் செய்யவேண்டும்
7) வீட்டிலும் கோவில்களிலும் முடிந்த எண்ணிக்கையில் விளக்கேற்றவேண்டும்.
8) ஏழைகளுக்கு அன்னதானம், வஸ்திர தானம் உள்ளிட்ட தர்ம காரியங்கள் செய்யலாம். (தவிர ரத்த தானம், கண் தானம், உடல் தானம் போன்ற மிகுந்த புண்ணியம் தரக்கூடிய தானங்களை கூட செய்யலாம்.)
9) அன்று ஆயுஷ் ஹோமம் செய்வது நன்று.
10) கோ-பூஜை செய்வது சாலச் சிறந்தது. கோ-பூஜை செய்ய இயலாதவர்கள் பசுவுக்கு உணவளிக்கலாம்.
11) புதிதாக ஏதாவது கற்றுக்கொள்ள விரும்பினாலோ அல்லது புதிய வகுப்பில் சேர விரும்பினாலோ அன்று அதை செய்யலாம்.
12) அலுவலகத்தில் புதிய பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ளலாம்.
13) புதிய சொத்துக்கள் வாங்கலாம்.
14) வாகனங்கள் வாங்கலாம்
15) புதுமனைப் புகு விழா (கிரஹப் பிரவேசம்) செய்யலாம்.
16) உபநயனம் செய்துகொள்ளலாம்
17) பெற்றோர்களோ, ஆசிரியர்களோ, நண்பர்களோ அளிக்கும் பரிசுகளை ஏற்றுக்கொள்ளலாம். நல்ல எண்ணத்துடன் எந்த வித எதிர்பார்ப்புமின்றி அந்த பரிசு கொடுக்கப்படவேண்டும். ஏற்றுக்கொள்ளப்படவேண்டும்.
18) இராமாயண, மகாபாரத, இதிகாசங்களை படிக்கலாம். பக்தி நூல்களை, ஸ்தோத்திரங்களை படிக்கலாம்.
பரபரப்பான வாழ்க்கையில் உழல்பவர்கள் அன்றைக்கு அலுவலகத்திற்கு ஒரு நாளோ அறைநாளோ விடுப்பு எடுத்துக்கொண்டால் மேற்கூறியவைகளை பதட்டமின்றி செய்யமுடியும்.
பிறந்த நாளன்று செய்யக்கூடாதவை :
1) புதிய மருந்து உட்கொள்வது கூடாது.
2) திருமணம் செய்துகொள்வது கூடாது
3) சீமந்தம், வளைகாப்பு செய்யக்கூடாது
4) சாந்தி முஹூர்த்தம் வைத்துக்கொள்ளக்கூடாது
5) அசைவ உணவு சாப்பிடுவது அல்லது அசைவ உணவு விருந்தளிப்பது கூடாது.
6) கேக்கில் மெழுகுவர்த்தி ஏற்றுதல், அதை வாயால் ஊதி அணைத்தல் கூடவே கூடாது. (அன்றைய நாளில் விளக்கேற்ற வேண்டுமே தவிர அணைக்கக் கூடாது.)
7) வம்பு தும்பு வழக்கு, வாதம், சண்டை ஆகியவற்றில் ஈடுபடுவதை அன்று நிச்சயம் தவிர்க்க வேண்டும்.
8) முக்கியப் பொறுப்பில் இருப்பவர்கள் அன்று தங்களுக்கு கீழ் உள்ளவர்களை தண்டிக்கக் கூடாது. முடிந்தால் அவர்களை மன்னிக்கலாம்.
9) தங்களின் புதிய சொத்துக்கள், பரிசுகள், வருவாய் ஆகியவை குறித்து தம்பட்டம் அடித்துக்கொள்ளுதல் கூடவே கூடாது.
மொத்தத்தில் இறைவன் நம்முள் நுழையும் நாளான நம் பிறந்தநாளன்று கேளிக்கைகளை தவிர்த்துவிட்டு அன்றைய தினத்தை ஆத்ம சுத்திக்காக ஒதுக்கிடவேண்டும். இப்படி செய்தால் இறையருளுக்கு பரிபூரணமாக பாத்திரமாவதுடன் நோயற்ற வாழ்வையும் குறைவற்ற செலவத்தையும் நல்லோர் நட்பையும் ஒருவர் பெறலாம்.

Thursday, February 2, 2017

மூதேவி எங்கேல்லாம் இருப்பாள்?

மந்திரம் - காத்தல் என்று பொருள்படும் சொல்லில் இருந்து மருவி மாந்திரீகம் என்று கூறப்பட்டது.
அதாவது மாந்திரீகம் என்பதற்கு, ஒருவரின் துன்பத்தை நினைத்து, அதை அறிந்து அவர்களை காப்பது என்று பொருளாகும்.
நாம் மாந்திரீகத்தில் ஈடுபடும் போது, நம் மனதை ஒருமுகப்படுத்தி, மனதின் மூலம் மந்திரங்களை உருவேற்றி, நினைத்த காரியங்களை நிறைவேற்றி கொள்வதைக் குறிக்கும்.
மாந்திரீகம் பற்றி தெரியாத சில உண்மைகள்
  • நம் கர்மாவை மாற்றக் கூடிய சக்தி அன்னதானத்திற்கு உண்டு.வீடு, வாசல் இல்லாத அனாதைகளுக்கு அன்னதானம் செய்வதே நிஜமான அன்ன தானம் ஆகும்.
  • சனிக்கிழமை அன்று நவதானிய அடைதோசை செய்து, நல்லெண்ணெய் விட்டுச் சாப்பிட்டால் நவக்கிரகங்கள் திருப்தியடையும். இதனால், அஷ்டமச்சனி, கண்டகச்சனி, ஏழரைச்சனி முதலியவற்றின் தாக்கம் நமக்கு ஏற்படுவது குறையும்.
  • தினமும் ஏதாவது ஒரு மந்திர ஜபம் செய்து விட்டு நமது தினசரி செய்யும் கடமைகளைத் துவக்க வேண்டும். மேலும் மந்திர ஜபம் முடிந்தவுடன் ஒரு டம்ளர் இளநீர் அருந்த வேண்டும். இதனால் நாம் ஜபித்த மந்திர அலைகள் நமது உடலுக்குள்ளயே பதிவாகி இருக்கும்.
  • கடலை எண்ணெய் தொடர்ந்து பயன்படுத்தினால், அது நமது குடும்பத்தில் கலங்கத்தை உண்டாக்கும். எனவே, உணவில் அதிகமாக கடலை எண்ணெயைப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
  • பாமாயில் என்ற சமையல் எண்ணெய்யை உணவில் சேர்த்துக் கொள்வதால், துர்தேவதைகள் நமது உடலுக்குள் புகுந்து நம்முடைய கை மற்றும் கால்களை முடக்கிவிடும். எனவே தொடர்ந்து பாமாயில் பயன்படுத்துவதை குறைத்துக் கொள்ள வேண்டும்.
  • நமது வீடு மற்றும் தொழிற்சாலைகளில் மற்றவர்கள் விட்ட பெருமூச்சு நீங்க வேண்டுமானால் சாம்பிராணிப்புகை அல்லது 60 வகை மூலிகை சேர்க்கையால் செய்யப்பட்ட மூலிகைப்புகை போடுவது மிகவும் நல்லது.
  • பெண்கள் அணிகலன்கள் அணிவது மிகவும் அவசியமாகும். ஏனெனில் பெண்களின் நெற்றிச்சுட்டி அறிவுக்கண்ணைத் திறக்கும், காதணி நல்ல கண்பார்வையையும், ஒட்டியாணம் துர் ஆவிகள் பெண்களின் தொப்புள் வழியாக உடலுக்குள் நுழையாமல் தடுக்கும், காலில் அணியும் மிஞ்சி பெண்ணின் காமத்தைக் குறைக்கும்.மூக்குத்தியும் மோதிரமும் சுவாசக்காற்றிலுள்ள விஷகலையை நீக்குகிறது.
மூதேவி எங்கேல்லாம் இருப்பாள்?
வீட்டில் விடி விளக்கு எரியச் செய்து சுத்தமான நறுமணம் கமழும் பத்தியை எரிய விட்ட பின் தூங்கச் செல்ல வேண்டும். இல்லையெனில் ஜேஷ்டாதேவி எனப்படும் மூதேவியின் தாக்குதல் இருக்கும்.
சில நிறுவனங்கள்,கடைகள்,வீடுகள் இவைகளில் மதியம் 12 மணிக்கு எல்லா விளக்குகளை ஏற்றிய பின்பும் கூட இருளடைந்து காணப்பட்டால், .அங்கு மூதேவி வாசம் செய்கிறாள் என அர்த்தமாகும்.
துர்வாடை,அழுக்குத்துணிகள்,துன்பம்,புலம்பல்,அலங்கோலமாக ஆடுதல், எதிர்மறையான எண்ணங்கள், அடிக்கடி கொட்டாவி விடுதல், தீராத மனக்கஷ்டம், எப்போதும் அழுக்கு ஆடைகளை அணிதல், இவை அனைத்து செயல்களுமே மூதேவியின் அடையாளங்களாகும்.
மேலும் நமது வீட்டில் மூதேவி வராமல் இருப்பதற்கு, தீபம், உப்பு, மஞ்சள், கண்ணாடி, பட்டு ஆடைகள், தேங்காய், பால், வெண்ணெய், மாவிலை, கோமியம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை வைத்திருக்க வேண்டும்.

ஒரே கோத்திரத்தில் இருப்பவர்கள் திருமணம் செய்துக் கொள்ளக் கூடாது ஏன்?

இந்து மதத்தில் வெவ்வேறு ஜாதிகளில் திருமணம் செய்வதற்கு பெரும் எதிர்ப்பை தெரிவிப்பார்கள். அதற்கான அர்த்தங்கள் கூட நமக்கு தெரியும்.
ஆனால் ஒரே கோத்திரத்தில் இருப்பவர்களை கூட திருமணம் செய்துக் கொள்ளக் கூடாது என்று கூறுவதற்கு என்ன காரணம் தெரியுமா?
ஒரே கோத்திரத்தில் இருப்பவர்கள் திருமணம் செய்துக் கொள்ளக் கூடாது ஏன்?
கோத்திரம் என்பது நமது மூதாதையர் வழிதோன்றலின் ஆரம்பத்தில் இருந்து தந்தை மகன் வழியாக பின்பற்றப்படும் ஒரு வழக்கமாகும்.
ஆனால் இந்த கோத்திர வழக்கமானது, தந்தை மகள் என்ற வழியில் பின்பற்றப்படுவது இல்லை.
ஏனெனில் மகளுக்கு திருமணம் ஆனால் அவள் அவருடைய கணவன் கோத்திரத்தின் வழியில் சேர்ந்து விடுவார்கள்.
ஒருவருடைய வம்சாவளி தடைப்பட்டு போய்விடக் கூடாது என்பதற்காக ஆண் மகன் வேண்டும் என அனைவரும் விரும்புவார்கள்.
எப்படியெனில் ஒரு மனிதனின் உடலில் 23 குரோமோசோம்கள் இருக்கும். அதில் தந்தையிடம் இருந்து, அன்னையிடம் இருந்து என மொத்தமாக ஒருவருக்கு 46 இருக்கும்.
இதில் ஒன்று தான் உடலுறவு கொள்வதற்கான குரோமோசோம் ஆகும். அந்த வகையில் ஆணுக்கு xx, பெண்ணுக்கு xy குரோமோசோம்கள் இருந்தால், அவர்களின் வம்சாவலி தொடரும் என்று நம்புகின்றார்கள்.
இதனால தான் இந்துக்கள் ஒரே கோத்திரத்தில் பெண், எடுக்கவோ, கொடுக்கவோ கூடாது என்று காரணம் கூறுகின்றார்கள்.
அதே போல இந்துக்கள் நெருங்கிய ரத்த பந்தத்தில் திருமணம் செய்துக் கொள்வதை தடுப்பார்கள்.
ஏனெனில் அப்படி திருமணம் செய்தால், ஹார்மோன்களின் தாக்கம் ஏற்பட்டு, அது அவர்கள் குழந்தையின் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்பதற்காக தான் இந்த கோத்திரங்களை பின்பற்றி வருகின்றார்கள்.