Friday, February 28, 2014

வேதத்தை படித்து அதன் நுண் பொருளை உணர்ந்து தவம செய்பவரே "அந்தணர்" ஆவார்!

"நூலுஞ் சிகையும் உணரார்நின் மூடர்கள்
நூலது வேதாந்தம் நுண்சிகை ஞானமாம்
பாலோன்றும் அந்தணர் பார்ப்பர் பரமுயிர்
ஒரொன் றிரண்டெனில் ஓங்காரம் ஓதிலே" - பாடல் - 1665

நூலும் சிகையும் உணராதவர்கள் மூடர்கள் என திருமூலர் தெளிவாக கூறுவதை பாருங்கள்! நூல் - பருத்தி - பஞ்சு நூலல்ல! ஞான நூல்! வேத புராண புனித நூற்கள்! அவற்றின் முடிந்த முடிபான ஞான விளக்கங்கள்! நூலை படிப்பது நுண்ணறிவு துலங்குவதற்கே! சிகை - குடுமி! தேங்காய் குடுமி போல தலைமுடியை வைப்பதல்ல! தோளிலே மூன்று நூல்களை இணைத்து பூணுல் போடுவதல்ல! நூல் என்றால் வேதாந்தம் சிகை என்றால் வேதத்தின் பொருளை கற்று தெளிந்த நுண் அறிவை குறிப்பதை! பரிபூரண அறிவே ஞானமாம்! "பாரப்பா பலவேத நூலும் பாரு" என அகத்தியரும் கூறுகிறார். இங்ஙனம் வேதத்தை படித்து அதன் நுண் பொருளை உணர்ந்து தவம செய்பவரே "அந்தணர்" ஆவார்!

Thursday, February 27, 2014

சிவராத்திரி நான்கு யாம வழிபாட்டு முறை


சிவராத்திரி நான்கு யாம வழிபாட்டு முறை

 • முதல் யாமம் 
 • சிவராத்திரி முதல் ஜாம நேரம்: இரவு 7.30 முதல் 9.30 மணி வரை

      வழிபட வேண்டிய மூர்த்தம் - சோமாஸ்கந்தர்


இரண்டாம் யாமம்

சிவராத்திரி 2ஆம் ஜாம நேரம்: இரவு 11.00 முதல் 12.30 மணி
 

மூன்றாம் யாமம் 

சிவராத்திரி 3ஆம் ஜாம நேரம்: அதிகாலை 2.30 மணி முதல் 3.30 மணி வரை


நான்காம் யாமம்

4ஆம் ஜாம நேரம்: அதிகாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை

 • வழிபட வேண்டிய மூர்த்தம் - சந்திரசேகரர்(இடபரூபர்)
 • அபிஷேகம் - கருப்பஞ்சாறு, வாசனை நீர்
 • அலங்காரம் - கரு நொச்சி
 • அர்ச்சனை - நந்தியாவட்டை
 • நிவேதனம் - வெண்சாதம்
 • பழம் - நானாவித பழங்கள்
 • பட்டு - நீலப் பட்டு
 • தோத்திரம் - அதர்வண வேதம் , போற்றித்திருவகவல்
 • மணம் - புணுகு சேர்ந்த சந்தணம்
 • புகை - கர்ப்பூரம், இலவங்கம்

நீங்கள் தீர்மானமாக இருந்தால், கோள்களால் உங்களை எதுவும் செய்ய முடியாது.

கிருஷ்ண தேவராயர் ஒருமுறை எதிரியைத் தாக்கப் படையோடு புறப்பட்டுப் போனார். ஒரு ஆற்றங்கரையைக் கடக்க வேண்டிய நேரத்தில், அரசவை ஜோசியர், “மன்னா, இன்றைக்கு நாள் நன்றாக இல்லை. அடுத்த திங்கள்கிழமை போருக்குப் போனால் வெற்றி நிச்சயம்” என்று சொன்னார்.

கிருஷ்ணதேவராயர் குழம்பினார். அவ்வளவு நாட்கள் கொடுத்தால், எதிரி உஷாராகிவிடுவான். அவன் எதிர்பாராத நேரத்தில் உடனே தாக்கினால்தான் வெற்றி. ஆனால், ஜோசியர் சொன்ன பின் சந்தேகம் வந்துவிட்டது. தெனாலிராமனிடம் ஆலோசனை கேட்டார்.

தெனாலிராமன் ஜோசியரை அழைத்...தான். “எல்லோருக்கும் ஆருடம் சொல்கிறீர்களே, நீங்கள் இன்னும் எத்தனை வருடம் உயிரோடு இருப்பீர்கள் என்று சொல்ல முடியுமா?” என்று கேட்டான்.

“இன்னும் இருபது வருடங்கள் வாழ்ந்திருப்பேன்” என்றார் ஜோசியர்.
தெனாலிராமன் சடக்கென்று வாளை உருவி அவர் கழுத்தில் பதித்து, “இந்த விநாடியே உங்கள் ஆரூடத்தை என்னால் பொய்யாக்க முடியுமா, முடியாதா?” என்று கேட்டான்.

ஜோசியரின் விழிகள் அச்சத்தில் பிதுங்கின. “முடியும்.. முடியும்” என்று அலறினார்.

“அவ்வளவுதான் மன்னா ஜோசியம்! உங்களுக்கு எதிரான எந்த ஜோசியத்தையும் உங்களால் பொய்யாக்க முடியும்” என்று புன்னகைத்தான் தெனாலிராமன்.

கிருஷ்ண தேவராயர் ஆற்றைக் கடந்தார். எதிரியை வெற்றி கொண்டார்.
நீங்கள் தீர்மானமாக இருந்தால், கோள்களால் உங்களை எதுவும் செய்ய முடியாது.

வீண் சந்தேகங்களை விலக்கி, உங்கள் மீது நம்பிக்கை வைத்துத் திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். முழுமையான ஈடுபாட்டுடன் செயல்படுங்கள். தானாகக் கனிந்து வரும் வெற்றிக்கனி!

சிவராத்திரி விரத முறையும் அதன் பலன்களும்

சிவராத்திரி விரத முறையும் அதன் பலன்களும்

 

சிவராத்திரிக்கு முதல் நாள் ஒரு பொழுது மட்டும் உணவு உண்ண வேண்டும். சிவராத்திரி அன்று காலை நீராடி, இறைவனை நினைத்து, விரதம் நன்முறையில் நிறைவேறப் பிரார்த்திக்க வேண்டும். அன்று முழுவதும் உபவாசம் இருந்து, இறைச்சிந்தனையில் இருக்க வேண்டும்....

மாலையில் வீட்டில் சிவலிங்கத்திற்கு அபிஷேக ஆராதனைகள் செய்து, வில்வத்தால் பூஜை செய்ய வேண்டும். இரவு நான்கு காலங்களிலும் பூஜை செய்ய வேண்டும். சிவராத்திரி இரவு 11.30 மணி முதல் 1 மணி வரையே லிங்கோற்பவ நேரம் எனப்படுகிறது. ஆகவே நான்கு காலங்களிலும் பூஜை செய்ய முடியாதவர்கள், லிங்கோற்பவ காலத்திலாவது பூஜை செய்ய வேண்டும். இயலாதவர்கள், கோவிலில் நடைபெறும் நான்கு கால வழிபாடுகளிலும் பங்கு கொள்ளலாம்.

சிவபெருமான் அபிஷேகப் பிரியர். ருத்ராபிஷேகம், என்பது சிவனாருக்கு செய்யப்படும் அபிஷேகம். மந்திரபூர்வமாகச் செய்யப்படும் இது மிகச் சிறப்பு வாய்ந்தது. ருத்ராபிஷேகத்தைப் பற்றிய விவரங்கள் அறிந்து, இதை இல்லத்தில் செய்ய இயலாவிட்டால், ஆலயங்களில் செய்யலாம். சிவராத்திரி அன்று ருத்ராபிஷேகம் செய்வது மிகச் சிறப்பு.

மறுநாள் காலை தீபாரணை செய்து விரத நிறைவு செய்ய வேண்டும். இல்லத்தில் பூஜை செய்திருந்தால், புனர் பூஜை செய்து, சிவனாரை உத்யாபனம் செய்ய வேண்டும்.

சிவராத்திரி விரதம் இருப்பதால் ஏற்படும் பலன்கள்:
யார் வேண்டுமானாலும் சிவராத்திரி விரதத்தை மேற்கொள்ளலாம். மற்ற விரதங்கள் அனைத்தும் கடைபிடித்தவருக்கு மட்டுமே நன்மை தரும். ஆனால் சிவராத்திரி விரதம், கடைபிடித்தவருக்கு மட்டுமின்றி அவரது தலைமுறைக்கே ஈடு இணையற்ற புண்ணியத்தைத் தரும்.

ஒருவர் தொடர்ந்து 24 வருடங்கள் சிவராத்திரி விரதம் இருந்தால் அவர் சிவசாயுஜ்ய நிலையை அடைவதுடன், அவரது 21 தலைமுறைகளும் முக்தியை அடைவார்கள் என்பது ஐதீகம்.

அர்ஜூனன் சிவராத்திரி விரதத்தைக் கடைபிடித்தே பாசுபதாஸ்திரம் பெற்றான். கண்ணப்ப நாயனார் தம் கண்களை சிவனாரின் திருமேனியில் இட்டு, தம் அசையாத பக்தியால் முக்தி பெற்ற தினமும் சிவராத்திரியே. சிவராத்திரி விரத மகிமையாலேயே, அம்பிகை இறைவனின் உடலில் சரிபாதியைப் பெற்றார். சிவபெருமான், மார்க்கண்டேயருக்காக, காலனை உதைத்து, காலகண்டேசுவரர் என்ற திருநாமம் பெற்றதும் சிவராத்திரி தினத்தன்றே.

லிங்கோற்பவ’காலம்

லிங்க உற்பவம்?
சிவராத்திரி அன்று இரவு முழுவதும் கண் விழித்து ஸ்வாமியை தரிசித்து வழிபாடு செய்ய முடியாவிட்டால் கூட, ‘லிங்கோற்பவ’ காலமாகிய இரவு 11:30 மணி முதல் 1 மணி வரை உள்ள காலத்திலாவது சிவ தரிசனம் செய்து வழிபட வேண்டும்.
சிவராத்திரி தோன்றிய திருத்தலம் திருவண்ணாமலை. அதுபோல், பொய் சாட்சி சொன்ன தாழம்பூவை அது அழகும் வாசனையும் நிறைந்ததாக இருந்தாலும் அதை சிவபெருமான் விலக்கி வைத்தார் என்பதும் தெரியும்.
ஆனால், ‘சிவ ராத்திரியன்று ஒரு நாள் மட்டும், அதுவும் இரவுப் பொழுதில் லிங்கோற்பவ கால...த் தில் தாழம்பூவால் என்னை பூஜை செய்யலாம். அலங்கரிக்கலாம்!’ என்று சிவபெருமான் சொன்னார் என்று ஒரு தகவலும் உண்டு. அதற்கு எந்த விதமான ஆதாரமும் கிடையாது.
அடுத்து, லிங்க உற்பவம் மற்றும் லிங்கத்தைப் பற்றிய உண்மையைப் பார்க்கலாம்.
சிவபெருமான் லிங்க வடிவமாகத் தோன்றிய காலம் & லிங்கோற்பவ காலம் எனப்படுகிறது. சிவலிங்கம் பற்றிய உண்மையான விளக்கம், ஞான நூல்களில் தெளிவாக உள்ளது.
சம்ஸ்கிருத மொழியிலுள்ள ஸ்காந்த புராணத்தில் பார்வதி கல்யாணத்தை விவரிக்கும் பகுதியில் லிங்கத்தைப் பற்றிய உண்மையான தகவல் இருக்கிறது. தமிழில் திரு மந்திரத்தில் சிவலிங்கத்தைப் பற்றிய உண்மையான தகவலைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார் திருமூலர்.

Tuesday, February 25, 2014

கர்ம விதி மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது. பகவத் கீதை

கர்மா - பகவத் கீதை
பிரபஞ்சத்தில் காணப்படும் நிகழ்வுகள் அனைத்தும் காரணம், விளைவு என்ற அடிப்படையில் விளக்கப்படுகின்றன. எல்லா நிகழ்வுகளும் இதன் அடிப்படையிலேயே நிகழ்கின்றன. கர்மா என்பது செயலுக்கு தூண்டுதலாக அமைகிறது.அதுவே சுமையாகவும் அமைகிறது. ஆகவே சுமையை குறைக்க விரும்புபவர்கள் மேற்கொண்டு கர்மாவை ஏற்ப்படுதிக்கொள்ளாமல் இருக்க வேண்டும். செயல்களின் விளைவுகள் அடுத்தக் சுற்று கர்மாவாக சேர்ந்து விடுகின்றன.

செயல்களின் விளைவுகள் கர்மாவாக செயல்பட முடியாதவாறு அமைய வேண்டுமென்றால், பலன்க...ளை இறைவனுக்கு அர்ப்பணிக்கும் மன நிலையுடன் விருப்பு, வெறுப்பு அற்ற நிலையில் செயலில் ஈடுபட வேண்டும். செயல்களின் பயன்களை துறந்து விடுதல் தியாகம்; பலன்களை எதிர்பார்த்து செய்யப்படும் செயல்களையே துறந்து விடுதல் சந்நியாசம் என்று விளக்கப்பட்டு, கர்மத்தளையிளிருந்து விடுபடும் மார்க்கத்தை பகவத் கீதை அறிவுறுத்துகிறது. கர்ம விதி மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது.

௧, சஞ்சித கர்மம், ஒட்டு மொத்தமாக முற்பிறப்பில் ஏற்ப்பட்ட கர்மாவாகும்.

௨, பிராரப்த கர்மம், இது இந்த பிறவியில் அனுபவிக்க வேண்டிய நல்ல மற்றும் தீய பலன்களாகும்.

௩, ஆகாமிய கர்மம், பிராரப்த கர்மாவை அனுபவிக்கும் போது ஏற்ப்படும் விளைவுகள் அடுத்தடுத்த பிறப்புகளில் அனுபவிப்பதற்கான ஆகாமிய கர்மாவாக உருவாகிறது

Monday, February 24, 2014

சூரிய நமஸ்காரம்

சூரிய நமஸ்காரம்

உலகத்தில் உள்ள உயிர்கள் அனைத்து வாழ்வதற்கு சூரியனே காரணம்.சூரியனை கடவுளாக வணங்கும் பழக்கம் பழங்கால தொட்டெ இருந்துவருகிறது.சூரிய நமஸ்காரம் நமது ஆன்மீக வாழ்வுடனும், ஆரோக்கிய வாழ்வுடனும் ஒன்றிய அறிவியல் மருத்துவக் கூறுகளை உள்ளடக்கிய நோய் தீர்க்கும் யோக பயிற்சியாகும்.

கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா? என்ற பழமொழி உண்டு...சூரிய நமஸ்காரத்திற்கும் கண்ணிற்கும் உள்ள நெருக்கமான தொடர்பை இது காட்டுகிறது. கண்ணொளி வழங்கும் சூரியனின் சக்தி உடலில் ஏற்படும் நோய்களை நீக்கி உடல...் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது.

அதிகாலைநேரத்தில் நம் உடலில் படும் சூரிய ஒளி தேக ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. இதைத்தான் நமது பாரத பூமியில் வாழ்ந்த சித்தர்கள் காலை வெயிலில் ஆரம்பிக்கும் பித்தம், மாலை வெயிலில் தணிந்து போகும் என்றனர். சூரிய ஒளியைக் கொண்டு கொடிய நோயான காமாலையையும் குணப்படுத்தலாம் என்கிறது அதர்வண வேதம்.

இதனை அடிப்படையாகக் கொண்டு தோன்றியதுதான் சன்பாத் எனப்படும் சூரிய ஒளிக் குளியல்.சூரியக் குளியலால் சிறுவர்களின் மன ஆற்றல் பத்து முதல் இருபது சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக மேலை நாட்டு நவீன மருத்துவ ஆய்வு நிரூபித்துள்ளது.

சூரிய நமஸ்காரம் செய்வதற்கு மிகவும் உகந்த நேரம் சூரிய உதயமாகும் அதிகாலை நேரம். இளஞ்சூரியனிலிருந்து வெளிப்படும் ஒளிக்கதிர்கள் எண்ணற்ற நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்டுள்ளது. இரவில் தூக்கத்தால் உடலுக்கும், மனத்திற்கும் ஓய்வு கிடைப்பதால், அதிகாலையில் உடற்தசைகள் உடற்பயிற்சி செய்வதற்கு ஏதுவாக இருக்கும்.

மூளையின் அலைகள், அதிர்வுகள் குறைந்து அமைதியாக இருப்பதும் அதிகாலையில்தான். அதிகாலையில் வெப்பம் குறைவாக இருப்பதால் சூரிய நமஸ்கார பயிற்சியின் போது நமது உடலும் உள்ளமும் சோர்வடைவதில்லை. சூரிய நமஸ்காரம் செய்வதற்கு உகந்த திசை கிழக்கு. சூரியனின் கதிர்கள் உடல் முழுவதும் படும் வகையில் சுத்தமான காற்று இருக்கக்கூடிய திறந்த வெளியில் நின்றபடி செய்ய வேண்டும்.

12 மந்திரங்களை சொல்லி சூரிய நமஸ்காரம் செய்து வந்தால் நம் உடல் நோய்கள் யாவும் தீர்ந்துவிடும்.

ஓம் மித்ராய நமஹ- சிறந்த நண்பன்

ஓம் ரவயே நமஹ -போற்றுதலுக்குரியவன்

ஓம் சூர்யாய நமஹ- ஊக்கம் அளிப்பவன்

ஓம் பானவே நமஹ -அழகூட்டுபவன்

ஓம் ககாய நமஹ -உணர்வுகளுக்கு வலிமை தருபவன்

ஓம் பூஷ்ணே நமஹ-புத்துணர்ச்சி தருபவன்

ஓம் ஹிரண்யகர்ப்பாய- நமஹ 0ஆற்றல் அளிப்பவன்

ஓம் மரீசயே நமஹ- நோய்களை அழிப்பவன்

ஓம் ஆதித்யாய நமஹ -கவர்ந்திழுப்பவன்

ஓம் சவித்ரே நமஹ -சிருஷ்டிப்பவன்

ஓம் அர்க்காய நமஹ -வணக்கத்திற்கு உரியவன்

ஓம் பாஸ்கராய நமஹ- ஒளிமிகுந்து பிரகாசிப்பவன்.

மேற்கண்ட மந்திரத்தை உச்சரித்தவாறு சூரிய நமஸ்காரம் செய்யும்போது நமது மனம் சிதறாமல் ஒருமுகப்படுகிறது. மந்திரத்தை உச்சரிக்கும்போது அதன் அதிர்வு நமது உடலின் எல்லா பகுதிகளுக்கும் சென்று பல உணர்வுகளை ஏற்படுத்தும் என்பது விஞ்ஞான பூர்வமான உண்மையாகும்.

மனித உடலும் ஐம் பூதங்களால் ஆன சிறிய பிரபஞ்சம்

உடலெனும் பிரபஞ்சம்... பிரபஞ்சம்
இந்து-சாஸ்திரங்கள் சம்பிரதாயம்

ஐம் பூதங்களின் மொத்த உருவே பிரபஞ்சம். இதுபோல் மனித உடலும் ஐம் பூதங்களால் ஆன சிறிய பிரபஞ்சம் என்கிறார்கள் சித்தர்கள். இதைத்தான் அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும் உள்ளது என்கின்றனர்.

இந்த பஞ்ச பூதங்கள் எவ்வாறு மனித உடலை தீர்மானிக்கின்றன, அவற்றின் செயல்பாடுகள் என்ன என்பதை விரிவாக அறிந்துகொள்வோம்.

மண், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் இவையே பஞ்ச பூதங்கள்.

இவையனைத்தும் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து உருவானது தான் மனித உடல் எனும் பிரபஞ்சம்.

நிகழ்ந்த சீர்ப் பிருதிவியும் அப்பு நானும்

நேரான தேயுவோடு வாயுமாகும்

அகழ்ந்தவா காயத்தோ டைந்து பூதம்

அரிதான பிருதிவியு மண்ணு மாகும்

தகழ்ந்தவப்பு சலமாகும் நெருப்பாற் தேயு

தாக்கான வாயுவது காற்றுமாகும்

இகழ்ந்தவா காயமது சத்தமாகும்

ஏற்றபிரு திவியும் பொன்னிறமதாமே

யூகி வைத்திய சிந்தாமணி

மண்ணின் கூறுகள்

மண்ணை பிருத்திவி என்று அழைக்கின்றனர். எலும்பு, தோல், நரம்பு, தசை, மயிர் இவை அனைத்தும் மனித உடம்பின் மண் கூறு கொண்டவை.

பிருத்திவியில் பிருத்திவி அதாவது மண்ணில் மண் சேர்ந்ததால் உருவானதுதான் எலும்பு என்றும், மண்ணுடன் நீர் சேர்ந்து உருவானது தசை என்றும், மண்ணுடன் நெருப்பு சேர்ந்து உருவானது தோல் என்றும், மண்ணுடன் வாயு சேர்ந்து உருவானது நரம்பு என்றும், மண்ணுடன் ஆகாயம் சேர்ந்து உருவானது மயிர் என்றும் குறிப்பிடுகின்றனர்.

நீரின் கூறு (புனலின் கூறு)

நீரின் தன்மை கொண்டவை இரத்தம், விந்து (வெந்நீர்), சிறுநீர், மூளை, கொழுப்பு. நீரினை புனல் என்று அழைக்கின்றனர். நீருடன் நீர் சேர்ந்து வெளியேறுவது சிறுநீர் என்றும், நீருடன் மண் (பிருத்திவி) சேர்ந்து உருவானதுதான் உமிழ்நீர் என்றும், நீருடன் நெருப்பு சேர்ந்துதான் வியர்வையானது எனவும், நீருடன் வாயு சேர்ந்துதான் இரத்தம் (குருதி, செந்நீர்) உண்டானது எனவும், நீரின் கூறுடன் ஆகாயம் சேர்வதால் உருவானதுதான் சுக்கிலம் எனப்படும் விந்து எனவும் சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

நெருப்பின் கூறு

உணவு, தூக்கம், அச்சம், சேர்க்கை, சோம்பல் முதலியவை நெருப்பின் கூறாகும். நெருப்பை தேயு (தீ) என அழைக்கின்றனர்.

நெருப்பு கூறுடன் நெருப்பு சேரும்போது தூக்கம் ஏற்படுகிறது எனவும், நெருப்புடன் மண் சேரும் போது பசி உருவாகிறது எனவும், நெருப்புடன் நீர் சேரும்போது தாகம் ஏற்படுகிறது எனவும், நெருப்புடன் வாயு சேரும்போது அச்சம், சோம்பல் உருவாகிறது எனவும், நெருப்புடன் ஆகாயம் சேரும்போது ஆசை, சேர்க்கை உருவாகிறது எனவும் குறிப்பிடுகின்றனர்.

வளியின் (காற்று) கூறு

ஓடல், நடத்தல், நிற்றல், உட்காருதல், படுத்தல்.

வாயுவுடன் வாயு சேரும்போது ஓடுதல் நடைபெறும் என்றும், வாயுவின் கூறுடன் மண் (பிருத்திவி) சேரும்போது படுத்தல் எனவும், வாயுடன் நீர் சேரும்போது நடத்தல் நடைபெறும் என்றும், வாயுவுடன் நெருப்பு இணையும்போது உட்காருதல் நிகழும் என்றும் வாயுவுடன் ஆகாயம் சேரும்போது தாண்டுதல், குதித்தல் நடைபெறும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

விண்ணின் (ஆகாயம்) கூறு

இன்பம் (காமம்), உட்பகை (குரோதம்), ஈயாமை (உலோபம்), பெருவேட்கை (மோகம்), கொழுப்பு (மதம்)

விண்ணின் தன்மையுடன் ஆகாயம் சேரும்போது மோகம் உண்டாவதாகவும், ஆகாயத்துடன் மண் சேரும்போது இராகம் உருவாவதாகவும், ஆகாயத்துடன் நீர் சேரும்போது துவேசம் ஏற்படுவதாகவும், ஆகாயத்துடன் நெருப்பு இணையும்போது பயம் உருவாவதாகவும், ஆகாயத்துடன் வாயு சேரும்போது நாணம் ஏற்படுவதாகவும் குறிப்பிடுகின்றனர்.

மனித உடலில் ஐம்பூதங்களின் செயல்பாடுகளை சித்தர்கள் இவ்வாறு விளக்கியுள்ளனர்.

மண்ணின் தன்மையால் மயிர் வளர்கிறது. எலும்பு வலுவடைகிறது. நரம்புகள் அதிக வேகத்துடன் செயல்படுகின்றன. தசைகள் இறுக்கம் கொள்கின்றன.

இவ்வாறு பஞ்ச பூதங்களின் செயல்பாடுகளால் தான் மனித உடல் உருக்கொண்டுள்ளதாக சித்தர்கள் கூறுகின்றனர்.

இதே கருத்தையே ஆன்மீகம் தெரிவிக்கிறது. சைவ சமயத்தில் பஞ்ச பூதங்களுக்கும் கோவில்கள் அமைத்துள்ளனர்.

காஞ்சிபுரம் மண் (பிருத்திவி)

திருவாணைக்கால் நீர்

திருவண்ணாமலை நெருப்பு

காளஹஸ்தி காற்று

சிதம்பரம் ஆகாயம்.

பஞ்ச பூதங்களையே தெய்வ வடிவமாக வணங்கி வரச் செய்துள்ளனர்.

விநாயகர் வழிபாட்டு ஊர்வலம் ஏன் ? சுகி.சிவம் பதில்

விநாயகர் வழிபாட்டு ஊர்வலம் ஏன் ? சுகி.சிவம் பதில்

இந்த கேள்விகளுக்கு பக்தி திருமகன் "திரு.சுகி.சிவம் தன்னுடைய நினைப்பதும் நடப்பதும் புத்தகத்தில் தெளிவானதொரு பதிலை கொடுத்திருக்கிறார்".அதனை இங்கே தருகிறோம்........

இந்நாள் முதல்வரும் எந்நாளும் தலைப்பு செய்திகளில் இடம் பிடிப்பவரும்மான கலைஞர் அவர்கள் எந்தாளும் முதல்வரான விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் பற்றி, விநாயகர் வழிப்பாடு பற்றி சில கருத்துக்களை முன் வைத்திருக்கிறார்.அதில் யோசிக்க வேண்டியவை சில,பதில் கூற வேண்டியவை பல....

!கும்பிட்ட விநாயகரை வீட்டில் வைக்காமல் இப்படி ஆற்றிலும்,குளத்திலும் எறிவதுதான் பக்தியா? என்று கேட்டு இருக்கிறார்.

அய்யா! விநாயகர் என்பது நீங்கள் நினைத்துக்கொண்டிருப்பது போல் வெறும் சாமி பொம்மை அல்ல.இந்த பூமியின் உருவகம்.இந்த பூமியில் மனிதன் உண்டு,பூத ராட்ஸ கூட்டம் உண்டு,தெய்வீகதன்மை கொண்டவர்கள் உண்டு,விலங்குகள் உண்டு,எல்லாம் சேர்ந்ததுதான் பூமி.அதனால்தான் விலங்கு தலை,மனித உடல்,பூத ராட்ஸக் கால்கள்,தெய்வீகதன்மை கொண்டவராக விநாயகர் உருவானார்.நாங்கள் வாழ்வதற்க்கு உதவிய உலகத்தை வணங்குவதே விநாயகர் வழிபாட்டின் தத்துவம்.உலக உருண்டைதான் அவரது உருண்டைவயிறு.

இந்த உலகம் தண்ணீர் துப்பிய துண்டு. அதாவது கடலில் மூழ்கி இருந்த உலகம் கொஞ்சம்,கொஞ்சம்மாக நீர் வடிய,வடிய வெளியே வந்ததுதான் இந்த தரைப்பகுதி.இதுவும் பல்லாண்டுகளுக்கு ஒரு முறை கடலால் உட்கொள்ளப்பட்டு வேறு ஒரு தரைப்பகுதி மேலே வரும்.இந்த உலகம்மானது இந்த கடல் விட்டுவைத்த மிச்சம்.இது கடலில் மறையக்கூடியது.அழியக்கூடியது.இதை உணர்தவே விநாயகரை கடலில் கரைக்கும் பழக்கம் வந்தது.

உலகம் மண்.அதனால்தான் வேறு எந்த வழிபாட்டிலும் இல்லாதபடி களிமண்ணே விநாயகராக வழிபடப்படுகிறது.பூமிதான் சாமி,சாமிதான் பூமி.இது விநாயகர் வழிபாட்டின் நுட்பம்.கடலில் இருந்து வெளிபட்டு நாம் வாழ வழி வகுக்கும் மண்[பூமி]கட்லில் மீண்டும் மறையும் என்பதை உணர்தவே களிமண் கணேசரை கடலில் கரைக்கும் முயற்சி.

கடல் இல்லாத ஊர்களில் குளங்களில்,ஏரிகளில்,குட்டைகளில் கரைப்பது மரபு.அந்த விநாயகர் தலையில், வயிற்றில், நெற்றியில்,காசை வைத்து கரைப்பது ஒரு சமூக சிந்தனை.அதாவது ஏரி குளம் வற்றும் போது இந்த காசுகளை எடுக்க கூடை கூடையாக மண்ணை வெளியில் கொண்டு வந்து கொட்டுவார்கள்.இதனால் ஏரி,குளம் ஆழம்மாகும்.மழை காலத்தில் நீர் பிடிப்பு அதிகம்மாகும்.உழைத்தவனுக்கு காசு கிடைக்கும்.

எனவே வீட்டிலேயே விநாயகரை வீட்டிலேயே வைத்து வழிபடுங்கள் என்ற உங்கள் யோசனையை விட ஏரி,குளம்,ஆறு, இவற்றில் கரைப்பது என்பதே சமய,சமூக உண்மைக்கான ஏற்ப்பாடு.

யாரையும் குறை கூறாதீர்கள்:

நீங்கள் எதை செய்தாலும் குற்றம் கண்டுபிடித்துக் கொண்டே உள்ளனரா உங்களுடன் இருப்பவர்கள்?அல்லது நீங்கள் பிறரை குறை கூறுபவரா?

பிறரை குறை காண்பதற்கு நாம் நிறைவான த...குதி பெற்றிருக்க வேண்டும். அந்த தகுதிகள் நம்மிடம் இருக்கிறதா என்று எண்ணி பார்த்து செயல்படுங்கள்.

இறைவன் ஒருவன் மட்டுமே குறை காணும் நிறையை பெற்றவர் என்றும், இறைவனுக்கு அடுத்தபடியாக குரு அந்த நிறையை பெற்றவர் என்றும் வள்ளலார் கூறுகிறார். இறைவனோ, குருவோ தன் பக்தனை அல்லது சீடனை முன்னேற்ற பாதையில் இட்டு செல்ல, அவனுடைய குறைகளை சுட்டி காட்டி உணர்த்துகின்றனர். உங்களுடைய நிறைகளை மட்டுமே கண்டு புகழ்ந்து செல்வார் எனில், உங்கள் குறைகள் குறைகளாகவே நின்று விடும். நீங்கள் முழுமை பெற்ற மனிதனாக வேண்டும் எனில் உங்கள் குறைகளை சுட்டி காட்ட வேண்டிய கட்டாயத்தில் இறைவனோ, குருவோ இருக்கின்றனர்.

உங்களை உங்களுடன் இருப்பவர் எவேரேனும் குறை கூறுவார் எனில், முதலில் அங்கே நீங்கள் செய்ய வேண்டியது என்ன என்று சிந்தியுங்கள். இறைவனே இவர் மூலமாக நம் குறையை சுட்டி காட்டுகிறார் என்று நீங்கள் சிந்தித்தால்; அறிந்தோ அறியாமலோ தவறு செய்திருப்பின் அதை திருத்தி கொள்ள முட்படுங்கள். எப்பொழுது உங்கள் சிறு சிறு பிழைகளை ஒப்புகொண்டு நீங்கள் மாற விரும்புகிறீர்களோ அங்கே குருவோ, இறைவனோ உங்களுக்கு வெகு அருகாமையில் இருந்து வழி நடத்துவர்.

அப்படியல்லாது அங்கே வெறுமனே அந்த குறை கூறுதல் நடந்திருப்பின், உங்களை குறை கூறுபவரை விஷ ஜந்தாக கருதி ஒதுங்கி விடுங்கள்.

"யாரையும் குறை கூறாதீர்கள்.
அப்படி குறை கூறுபவரை விஷ ஜந்தாக கருதி ஒதுங்கி விடுங்கள்..
இறைவன் ஒருவனே குறை காணும் நிறையை பெற்றவர்...
இரண்டாவது குரு...

மந்திரங்கள்


மந்திரங்கள்

சந்தையிலிருந்து கன்றுக்குட்டி ஒன்றை வாங்கி வந்தான் விவசாயி, அதன் கழுத்துப் பட்டையில் மணிகளிடையே உயர்ந்த ரத்தினக் கற்கள் பதிக்கப்பட்டிருந்தன. அதை சாதாரணக் கற்கள் என விவசாயி நினைத்தான். இதைக் கவனித்த ஒரு ரத்தின வியாபாரி கன்றுக்குட்டியை அதிக விலைக்குக் கேட்டான். விவசாயியும் விற்றுவிட்டான். ரத்தின வியாபாரி ரத்தினங்களை எடுத்து விற்று அதிக லாபம் பார்த்தான். கன்றுக்குட்டியை திரும்ப விவசாயிடமே இனாமாகக் கொடுத்தான். விவசாயிக்கும் ரொம்ப சந்தோஷம்! கன்றுக்குட்டியை வாங்கி விற்றதில் லாபம் கிடைத்தது. கூடவே, கன்றுக் குட்டியும் கிடைத்துவிட்டது. ரத்தின வியாபாரிக்கும் அதிர்ஷ்டம் போல ரத்தினம் கிடைத்தது.

விவசாயி அடைந்த லாபம்-மந்திரங்களை பொருள் புரியாமலே சொல்வது போன்றதாகும். ரத்தின வியாபாரி பெற்ற அதிர்ஷ்டம், மந்திரத்தைப் பொருள் அறிந்து சொல்வது போன்றதாகும். ஆக, பொருள் புரியாமல் மந்திரங்கள் சொன்னாலும் லாபம் உண்டு.

அன்று ஒரு பிரகலாதன் இருந்தான். இன்று ஒரு பிரகலாதன் கூட இல்லையே

ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரிடம் ஒருநாள் நாத்திகன் ஒருவன் வந்தான். அன்று ஒரு இரண்யனை வதம் செய்ய கடவுள் நரசிம்மாவதாரம் செய்ததாகக் கூறுகிறீர்கள். இப்போது இரணியன் போன்று பலர் தீய குணம் உடையவர்களாக உள்ளனரே! ஏன் இப்போது, கடவுள் எந்த அவதாரமும் எடுக்கவில்லை? என்று கேட்டான்.

அதற்கு பரமஹம்சர் அமைதியாகச் சொன்னார்: அன்று ஒரு பிரகலாதன் இருந்தான். இன்று ஒரு பிரகலாதன் கூட இல்லையே என்றாராம்....

நன்மை ஜெயிக்க, விவேகத்துடன் நடந்து கொள்ள வேண்டியுள்ளது

மகாபாரதப்போர் நடந்த இடம் எது என்றால் குருசேத்திரம் என்பார்கள். குருசேத்திரம் எங்கிருக்கிறது என்று கேட்டால் ஹரியானாவில் இருக்கிறது என்று கூட தெரிந்து வைத்திருப்பார்கள். ஆனால், குருசேத்திர யுத்தம், ஒரு அறிவியல் தத்துவத்தையும் எடுத்துச்சொல்வது எத்தனை பேருக்கு தெரிந்திருக்கும்! மனம் தான் நம் செயல்களுக்கு காரணமாக அமைகிறது என்பது அறிவியல் கலந்த ஆன்மிக உண்மை.

ஒவ்வொரு நாளும் நமக்குள்ளும் குருசேத்திர யுத்தம் நடந்து கொண்டு தான் இருக்கிறது. மனசு தான் குருசேத்திரம். அதில் இருக்கும் நல்...ல எண்ணமே நியாயத்திற்காகப் போராடும் தர்மர் தலைமையிலான பாண்டவர்கள். தீய எண்ணங்களே அநியாயத்தின் பக்கமிருக்கும் துரியோதனன் தலைமையிலான கவுரவர்கள். ஓயாமல் இருபிரிவுக்கும் போர் நடந்து கொண்டே இருக்கிறது. பாண்டவர்களும், கவுரவர்களும் ஒரே பரம்பரையில் பிறந்த தாயாதிகள்(சகோதரர்கள்). அதேபோல, நல்லதும், கெட்டதும் ஒரே மனதில் உற்பத்தியானவை தான். அர்ஜூனன், தன் சொந்த பந்தத்தினர் மீது அம்பு விட தயங்கியது போல, உலகியல் வாழ்வில் ஈடுபடும் நமது புத்தியும், ஒன்றைச் செய்வதா வேண்டாமா என திண்டாடுகிறது. அப்போது விவேகம் என்னும் கிருஷ்ணர், நம் புத்திக்கு வழிகாட்ட வருகிறார். பாரதப்போரில், விவேகமாக நடந்த கிருஷ்ணர் மூலம் நியாயம் ஜெயித்தது. நம் மனதில் நடக்கும் குரு÷க்ஷத்திர போரிலும் நன்மை ஜெயிக்க, விவேகத்துடன் நடந்து கொள்ள வேண்டியுள்ளது.

கனகதாரா ஸ்தோத்திரம்


கனகதாரா ஸ்தோத்திரம்
-----------------------------------

குருகுலவாசம் செய்யும் காலத்தில் தினந்தோறும் பிட்சை எடுத்து குருவிற்கு அர்பணித்துவிட்டு பிறகு உண்பது சங்கரரது வழக்கமாயிருந்தது. ஒருநாள் ஒரு ஏழை அந்தணர் அயாசகன் வீட்டு வாசலில் நின்று கொண்டு சங்கரர், பவதி பிக்ஷõம் தேஹி என்றார். ஒளிவீசும் முகத்துடன் திகழும் இந்த சிறுவனுக்கு கொடுக்கக் கூடியதாக தன்னிடம் ஏதுமில்லையே என்று அந்த ஏழையின் மனைவி வருந்தினாள். பின் வீடு முழுவதும் தேடி, உலர்ந்து போன நெல்லிக்கனி ஒன்றை சங்கரருக்கு தான...மாக அளித்தாள். இந்த கருணைச் செயல் சங்கரரின் கண்களை கண்ணீர் குளமாக்கியது. வறுமையில் வாடும் போதே தானம் கொடுக்கும் எண்ணம் கொண்ட இவளிடம் செல்வம் இருந்தால் அது அனைவருக்கும் உபயோகமாக இருக்கும் என்று நினைத்த சங்கரர், அக்குடும்பத்தின் வறுமை நீங்க லட்சுமி தேவியை வேண்டி கனகதாரா ஸ்தோத்திரம் பாடித்துதித்தார். 19வது ஸ்லோகம் பாடி முடித்த போது அந்த ஏழையின் வீடு முழுவதும் தங்க நெல்லிக்கனியை நிரப்பி மகாலட்சுமி பொன்மழை பொழிந்தாள். இந்த நிகழ்ச்சி ஒரு அட்சய திரிதியை நாளில் நடந்தது. (இதன் அடிப்படையில் தான் இப்போதும் கூட அட்சய திரிதியை நாளில் காலடி கிருஷ்ணன் கோயிலில் கனகதாரா யாகம் நடைபெறுகிறது) சங்கரர் ஏழு வயதிற்குள் எல்லா வேதங்களையும் சாஸ்திரங்களையும் கற்றுமுடித்து குருகுலத்திலிருந்து தன் இல்லம் வந்து தன் தாய்க்கு பணிவிடை செய்து வந்

சிவனின் தமிழ்ப் பெயர்களும் அவற்றின் வடமொழி இணைச்சொற்களும்


சிவனின் தமிழ்ப் பெயர்களும் அவற்றின் வடமொழி இணைச்சொற்களும் பின்வருமாறு.

தமிழ்- வடமொழி
1. அடியார்க்கு நல்லான்- பக்தவத்சலன்
2. அம்மையப்பன் -சாம்பசிவன்
3. உடையான்- ...ஈஸ்வரன்
4. உலகுடையான்- ஜகதீஸ்வரன்
5. ஒருமாவன் -ஏகாம்பரன்
6. கேடிலி -அட்சயன்
7. சொக்கன்- சுந்தரன்
8. தாயுமானவன்- மாத்ருபூதம்
9. தான்தோன்றி -சுயம்பு
10. தூக்கிய திருவடியன் -குஞ்சிதபாதன்
11. தென்முகநம்பி, ஆலமர்செல்வன்- தட்சிணாமூர்த்தி
12. புற்றிடங்கொண்டான் -வன்மீகநாதன்
13. நடவரசன் -நடராஜன்
14. பெருந்தேவன்- மகாதேவன்
15. பெருவுடையான் -பிருகதீஸ்வரர்
16. மாதொருபாகன் -அர்த்தநாரி
17. மணவழகன் -கலியாணசுந்தரர்
18. வழித்துணையான் -மார்க்கசகாயன்Sunday, February 23, 2014

நமக்கு யார் சொந்தம்?


நமக்கு யார் சொந்தம்?

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில், பராசர பட்டர் என்ற ஆச்சார்யார், புரோகிதராக இருந்தார். ரங்கநாதர் கோயில் வீதியிலிருந்த குருகுலத்தில், அவர், தன் சிஷ்யகோடிகளுக்கு தினமும் பாடம் நடத்துவார். அந்த வழியே ஒரு வித்வான்,தினமும் தன் சீடர்களோடு போவார். பட்டர் அவரைக் கவனிக்கக் கூட மாட்டார். அதே நேரம், அந்த வீதியில் ஒரு செம்பை எடுத்துக் கொண்டு உஞ்சவ்ருத்தி (பிச்சை எடுத்தல்) செய்யும் ஒரு பிராமணரை விழுந்து விழுந்து கவனிப்பார். அவரிடம், நீண்ட நேரம் பேசவும் செய்வார். இதைப் ...பார்த்த பராசர பட்டரின் சீடர்களுக்கு வியப்பு ஏற்பட்டது. ஒருநாள், பட்டரிடம் அதைக் கேட்டே விட்டார்கள். சுவாமி! மிகப்பெரிய வித்வான் இந்த வழியே தினமும் போகிறார். அவரை நீங்கள் ஏறெடுத்துக் கூட பார்ப்பதில்லை. ஆனால், பிச்சை எடுக்கும், இந்த பிராமணரிடம் நீண்ட நேரமாய் பேசுகிறீர்கள். என்ன காரணம் சொல்லுங்கள்? என்றனர். பட்டர் அவர்களை அமைதிப்படுத்தினார். பொறுங்கள், காலம் போகப் போக உங்களுக்கே புரியும், என்றார். சில மாதங்கள் கழித்து, அந்த வித்வானை தன் குருகுலத்துக்குள் அழைத்தார்.

வித்தகரே! பரதத்துவம் (நிஜமான கடவுள்) யார்? என்று கேள்வி கேட்டார். வித்வான் பட்டரிடம், எனக்கு ஏற்பட்ட அதே சந்தேகம் தான் உமக்கும் ஏற்பட்டிருக்கிறது. இதற்குரிய விடையைத் தானே நான் நீண்ட நாட்களாகத் தேடிக்கொண்டிருக்கிறேன், என்றார். பட்டர் வித்வானை அனுப்பி விட்டார். சில நாட்களில், உஞ்சவ்ருத்தி எடுத்த பிராமணரை பட்டர் அழைத்தார். உம்மிடம் ஒன்று கேட்க வேண்டும், உள்ளே வாரும், என்றார். பிராமணர் பயந்து போனார். இவ்வளவு பெரிய ஆச்சார்யர், தன்னை அழைக்கிறாரே! கேள்வி வேறு கேட்கப்போகிறேன் என்கிறார். எனக்கு படிப்பறிவே கிடையாதே! என்ற நடுக்கத்துடன் உள்ளே வந்தார்.சுவாமி! உண்மையான கடவுள் யார்? என்று கேட்டாரோ இல்லையோ! பிராமணருக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்து விட்டது. கையில் இருந்த பிச்சை செம்பை தூக்கி எறிந்தார். என்ன ஓய் கேட்டீர்? இது கூட தெரியாமல் தான், நீர் உம் சீடர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருக்கிறீரா? நிஜமான கடவுள் நம் ரங்கநாதர் என்று கூட நீர் அறியவில்லையோ? நீரெல்லாம் ஒரு குரு! என்று, கோபமாகச் சொல்லிவிட்டு, வேகமாக எழுந்து போய்விட்டார்.பராசர பட்டர், பார்த்தீர்களா? ரங்கன் தான் நிஜமான தெய்வம் என்று அந்த வித்வானுக்கு தெரியவில்லை. இந்த பிராமணரோ, ரங்கனே எல்லாமும் என்பதில் உறுதியாக இருக்கிறார். ரங்கனே சகலமும் என எண்ணுபவர்கள் தானே நமக்கு சொந்தக்காரர்கள், என்றார்.குருவின் செய்கைக்கான காரணமறிந்த சீடர்கள் வியந்து நின்றார்கள்.

ஆரோக்கியமான தேகம் கொண்ட ஒரு பெண் பூப்பெய்தக்கூடிய வயது

 
பதினெண் மையக்கணக்கு நூலிலிருந்து - இரகசியம் ஒன்று

ஆரோக்கியமான தேகம் கொண்ட ஒரு பெண் பூப்பெய்தக்கூடிய வயது 12. ஏன் 12? இதற்கு சித்தர்கள் சித்தர்கள் அளித்த விளக்கம் என்ன?

எப்படி ஒரு செடி நான்கு பருவங்களையும் கண்டபின் பூ பூக்கிறதோ , அது போல் நம் உடலில் உள்ள 12 அவயங்களும் முழு வளர்ச்சி அடைந்து தன்னை தனது அடுத்த பயணத்திற்கு தயார் செய்துக் கொள்ள எடுத்துக்கொள்ளும் கால அளவு 12 வருடங்கள்....

இந்த 12 வருடங்கள் 12 இராசி/நட்சத்திர மண்டலங்களைக் குறிக்கின்றது. ஒரு குழந்தை பிறந்த பின், பூமி இந்த 12 நட்சத்திர மண்டலங்களையும் 12 முறை கடந்து முடிக்கும் பொது, உடலின் 12 அவயங்களின் அடிப்படை வளர்ச்சியும் முற்று பெரும். இங்கிருந்து தொடங்குவதே இவ்வுடலின் அடுத்த பயணமான தன்னுள் இருந்து மற்றொரு ஜீவனை உருவாக்கும் பணி.

இதன் காரணம் கொண்டே, உடலில் ஏற்படும் இந்த மாற்றத்தை சித்தர்கள் - " பூப்பெய்துதல்" என்றும் "பருவம் அடைதல்" என்றும் அழைத்தனர். ( தமிழ் அழகானது மட்டுமல்ல ஆழமானதும் கூட )

12 அவயங்கள் என்ன என்ன என்று கேட்போருக்கு- இதயம், மூளை, நுரையீரல், கணையம், குடல், சிறுநீரகம், கருப்பை, ஐம்புலன்கள்(5)

சித்தர்கள் மலையில் தவம் செய்வது ஏன்?

சித்தர்கள் மலையில் தவம் செய்வது ஏன்?

பொதுவா எல்லாருக்கும் இருக்கிற கேள்வி இது. மலை அப்படினாலே அமைதியா, மத்த சாதாரண மனுஷங்களோட தொந்தரவு இல்லாம, அருவிகள், சுனைகள், மூலிகைகள் இருக்கிற ஒரு இயற்கையான இடம். இதைத்தவிர நம்ம புராணங்கள்லேயும் மலைகளை பத்தி பல விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கு.

இதைப்பத்தி பெரிய குரு ஒருத்தர் சொன்னத இணையத்துல படிச்சேங்க...அதை அப்படியே உங்களுக்கு தரேன்....

நமது புராணங்களும், வேதங்களும் கைலாய மலையை சிவனின் வாஸ்த தலமாக சொல்கிறது.

அதே போன்றே திருமாலின் அம்சமாக திருமலை கருதப்படுகிறது.

திருவண்ணாமலை கூட அல்ல அல்ல அந்த ஊரில் உள்ள ஒவ்வொரு துளி மண் கூட சிவலிங்கமாக மதிக்கப்படுகிறது.

ஒரு வைணவ பெரியவர் கால்களால் மிதிக்காமல் முழங்காலிட்டே திருமலை ஏறியுள்ளார்.

காரைக்கால் அம்மையாரும் தலையால் ஊர்ந்தே கைலாச மலையை அடைந்துள்ளார்.

திருநாவுக்கரசரும் திருவண்ணாமலையை கால்களால் தீண்டுவது பெரும் பாவம் என அரகண்டநல்லூர் அதுல்யநாதேஸ்வர் ஆலயத்திலிருந்தே அண்ணாமலையை தரிசித்துள்ளார்.

அன்னை ஆதிபராசக்திக்கு விந்தியா சல நிவாசினி என்று ஒரு பெயர் உள்ளது. அதன் பொருள் என்னவென்றால் விந்திய மலையில் வாசம் புரிபவள் என்பதாகும்.

உச்சி பிள்ளையாரும், ஐயப்பனும் மலையிலேயே இருக்கிறார்கள்.

குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என வழிபடப்படுகிறது.

பராம்பரியமான சந்நியாசகளின் ஒரு பிரிவினருக்கு கிரி என்ற மலை பெயரே சந்நியாச நாமமாக கொடுக்கப்படுகிறது.

இவை எல்லாம் இந்து பராம்பயத்தில் மலைக்கு கொடுக்கும் முக்கியத்துவமாகும்.

ஏசுநாதர் கூட கொல்கொதா மலையில் தான் முதல் பிரசங்கத்தை துவங்கினார்.

கல்வாரி மலையில் தான் சிலுவையில் அறையப்பட்டார்.

ஆகவே மலைகளுக்கும் ஆன்மீக உணர்விற்கும் மிக நெருக்கமான உறவு உலகம் முழுவதும் இருந்து வருகிறது.

அதற்கு காரணம் என்ன? மலைகள் மனிதனால் அதிகமாக சஞ்சாரம் செய்யாத பகுதி ஆகும்.

மனித மனதிலிருந்து உற்பத்தியாகும் பல வகையான எண்ண அலைகள் மலை பகுதிகளில் குறைவாகவே இருக்கும்.

இதனால் தவம் புரிவதற்கும், தியானம் செய்வதற்கும் மலைகள் பேருதவி புரிகின்றன. இதனாலேயே கடவுள் அம்சமாக மலை கருதப்படுகிறது.

அதர்வ வேத உண்மைகள்:


அதர்வ வேத உண்மைகள்:

* உலகம் கடல் நீரால் சூழப்பட்டுள்ளது; நீர் இரண்டு வாயுக்களின் சேர்க்கை. அதாவது ஒன்று - பிராண வாயு - ஒரு பங்காகவும், மற்றொரு வாயு - ஜலவாயு - இரண்டு பங்காகவும் நீரில் கலந்திருக்கின்றன.

* மின்சாரத்தை வித்யுத் சக்தி என்பர். இது தாமிரத்தில் தடையின்றிச் செல்லும். நீர், தனிமப் பொருட்கள், சூரியன் மற்றும் கடல் இவற்றிலெல்லாம் மின்சாரத்தைப் பெற முடியும்....

* நீர் மின்சாரம், அனல் மின்சாரம் இவற்றை உருவாக்கிய விஞ்ஞானம், சூரிய ஒளி மற்றும் கடல் அலைகளிலிருந்து மின்சாரம் எடுப்பது பற்றிய ஆராய்ச்சியில் தற்போது ஈடுபட்டு வருகிறோம். ஆனால், பல்லாயிரம் வருடங்களுக்கு முந்தைய அதர்வ வேதத்தில் இந்த உண்மை வியக்கத்தக்க விதத்தில் அறுதியிட்டுக் கூறப்பட்டுள்ளது.

* ஒரு குறிப்பிட்ட யாகத்தின்போது ஹோமகுண்டம் சந்திரனின் மண் கொண்டு அமைக்கப்பெற வேண்டும்; முனிவர்கள் உரிய ஒரு மந்திரத்தைச் சொல்லி, சந்திரனிலிருந்து கறுப்பு நிற மண்ணை நேரடியாக வரவழைப்பார்கள் என்றும் அதர்வ வேதம் கூறுகிறது. சந்திரனின் மண் கறுப்பு என்பது சில வருடங்களுக்கு முன்புதான் அறிய வந்த விஞ்ஞான உண்மையாகும்.

வாடா மலர் (பாகம் 1) நூலில் கிருஷ்ணாபுரம் ஆர். சங்கரநாராயணன்

ஜாதியில்லை பேதமில்லை

ஜாதியில்லை பேதமில்லை

ஒருமுறை ஆதிசங்கரரை புலையன் ஒருவன் பின்தொடர்ந்து வந்தான். அவன் பின்னால் நான்கு நாய்கள் வந்து கொண்டிருந்தன. அவனது கையில் கள் குடம் இருந்தது. கருப்பான அவன், குளித்து பலநாள் ஆனதால் நெடியடித்தது.
மாமிசத்தைச் சுவைத்தபடி சங்கரரை நெருங்கினான். இதைக் கண்ட சங்கரர், ""டேய், விலகிப்போடா!'' என்று எச்சரித்தார். அவன் உடனே,""நீயும் கடவுள். நானும் கடவுள். எனக்குள்ளும் உனக்குள்ளும் ஒரே ஒளியே இருக்கிறது. நான் ஏன் உன்னைக் கண்டு விலகவேண்டும்?'' என்று எதிர்கேள்வி கேட்டான். அப...்போது சங்கரரின் உள்ளத்தில் ஞானஒளி தோன்றியது. "மநிஷா பஞ்சகம்' என்னும் பாடலைப் பாடினார். தன் பிழையை உணர்ந்து அந்தப் புலையனின் காலில் விழுந்து வணங்கினார். அப்போது அங்கிருந்த புலையன், காசிவிஸ்வநாதராக மாறி காட்சியளித்தார். இந்நிகழ்ச்சியின் மூலம், ஜாதியும் பேதமும் கூடாது என்ற உண்மையையும், உருவத்தைக் கண்டு யாரையும் இகழக்கூடாது என்ற உண்மையையும் சங்கரர் மூலமாக இறைவன் உலகுக்கு உணர்த்தினார்.

துன்பம் தரும் அனுபவங்கள் அனைத்தையும் நம்மைச் செம்மைப்படுத்துவதற்காகவே''தங்கத்தை செய்யும் பொற்கொல்லரிடம், ""நான் கொடுக்கும் தங்கத்தை நெருப்பில் போடாதீர்கள். அடித்து துன்புறுத்தாதீர்கள். அதை தட்டி நீட்டவும் வேண்டாம...். ஆனால், அழகான தங்கச்சங்கிலியாக மட்டும் மாற் றுங்கள்,'' என்று சொன்னால் என்ன செய்யமுடியும். தங்கத்தை ஜொலிக்கச் செய்ய வேண்டும் என்றால் நெருப்பில் இட்டு புடம் போட்டால் தான் முடியும்.அதை தட்டி, உருக்கி செய்வதெல்லாம் அது அழகிய அணிகலனாக மாறச் செய்வதற்காகவே. இதுபோல, ஆன்மிகவாழ்வில் ஈடுபடும் சாதகர்கள், ""இறைவா! எனக்குத் துன்பத்தைக் கொடுக்காதே. என்னை வருத்தாதே. ஆனால், ஆனந்தம் மிகுந்த ஆத்மஅனுபவத்தை மட்டும் கொடு,'' என்று கேட்கிறார்கள். வாழ்வில் துன்பம் நேர்ந்தாலும் தெய்வத்தின் பாதங்களை கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும். இன்பதுன்பங்கள் எதுவானாலும், அது அவன் காட்டிய வழி என்று பூரணமாக முழுமனதுடன் ஏற்று, அவரது திருவடிகளைச் சரணடைய வேண்டும். நம்முடைய செயல்கள் எல்லாவற்றையும் இறைவனிடம் ஒப்படைத்து விட்டால் அதன்பின்னர் புறநிகழ்ச்சிகளும் நம்மைப் பாதிப்பதில்லை. புடமிட்ட தங்கம் இறுதியில் நல்ல மதிப்புடைய அணிகலனாக மாறுவதுபோல துன்பம் தரும் அனுபவங்கள் அனைத்தையும் நம்மைச் செம்மைப்படுத்துவதற்காகவே இறைவன் தருகிறான்

Saturday, February 22, 2014

இக்கரைக்கு அக்கரை பச்சை!

சவுபரி என்ற முனிவருக்கு உலகத்தைப் பார்க்கவே பிடிக்கவில்லை. மெய்யான இறைவனைக் காண வேண்டும் என, கடலுக்கடியில் அமர்ந்து கண்ணை மூடிக்கொண்டார். பத்தாயிரம் வருடத்திற்கு ஒருமுறை வெளியே வந்து, பழங்கள், கிழங்குகளை சாப்பிட்டு விட்டு திரும்பவும் கடலுக்குள் போய்விடுவார். ஒருமுறை, அவர் கண் விழித்த போது, பெரியதும், சிறியதுமாக 200 மீன்கள் கொண்ட கூட்டம் அவர் இருந்த இடத்தைக் கடந்தது.
<உடனே சவுபரிக்கு, ""ஆகா! இந்த மீன்கள் குடும்பமாக செல்லும் அழகே அழகு. நாமும் இல்லறத்தில் இருந்திருந்தால், மனைவி, குழந்தை, பேரன், பேத்திகள் என சந்தோஷமாக இருந்திருக்கலாமே!'' என எண்ணினார். கடலை விட்டு வெளியே வந்து, மாந்தாதா என்ற மன்னனிடம் போய் பெண் கேட்டார். அந்த மன்னனுக்கு 50 பெண்கள். வயதான அவருக்கு பெண் கொடுக்க விரும்பாத அவன், ""சுயம்வரம் நடத்தியே என் பெண்களுக்கு திருமணம் முடிப்பேன். அதுவே, எங்கள் மரபு'' என்று தட்டிக்கழித்தான்.
அதற்கு தயார் என்ற சவுபரி, மன்மதனைப் போன்ற இளைஞனாக உருமாறி, அந்தப் பெண்கள் முன் வந்தார். ஐம்பது பேருமே அவர் அழகில் மயங்கி, திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு தலா 50 பிள்ளைகள் பிறந்தனர். அவர் பார்த்த மீன் கூட்டத்தை விட, பத்து மடங்கு அதிகமாகவே பிள்ளை குட்டிகளுடன் வாழ்ந்தார்.
திடீரென ஒருநாள், இல்லற வாழ்வில் வெறுப்பு வந்தது. ""அடடா...பெண்டாட்டி...பிள்ளைகள் என இது என்ன வாழ்க்கை! கடலிலேயே இருந்திருக்கலாம். இதற்குள் கடவுளின் காட்சி கிடைத்து மோட்சம் போயிருக்கலாம்,'' என நினைத்தவர், திரும்பவும் கடலுக்கே போய்விட்டார்.
ஓரிடத்தில் இருக்கும் போது, இன்னொரு இடம் சுகமாய் இருக்கும். இன்னொரு இடத்திற்குப் போனால், பழைய இடமே தேவலை என்ற மனம் அலைபாயும். இது தான் மனசு! கஷ்டநஷ்டம் இருந்தாலும், ஒரே இடத்தை கெட்டியாகப் பிடித்துக் கொள்வது என்றைக்குமே நல்லது.

ஆசையைக் குறைக்கலாம். அறவே போக்க முடியாது

வளமாக வாழ்ந்த செல்வந்தர் ஒருவர், காலப்போக்கில் பல பிரச்னைகளில் சிக்கி பணத்தை இழந்தார். அமைதி வேண்டி ஒரு துறவியிடம் முறையிட்டார்.
""சுவாமி! பணக்காரனாக இருந்து ஏழையாகி விட்டேன். எல்லா துன்பத்திற்கும் காரணம் ஆசையே என்று உணர்ந்து விட்டேன். இவ்வளவு அடிபட்ட பிறகும், ஆசையைக் குறைக்கும் வழி தெரியவில்லை. அதிலிருந்து அடியோடு விடுபடுவது எப்படி?'' என்று கேட்டார்.
புன்னகைத்த துறவி,""அப்பனே! எத்தனை வேளை சாப்பிடுகிறாய்?'' என்று கேட்டார்.
""பணக்காரனாக இருந்தபோது, நினைத்த போதெல்லாம் சாப்பிட்டேன். இப்போது மூன்று வேளை சாப்பிடுகிறேன்....'' என்றார்.
""சரி! ஒருவேளை உணவை மறந்து விடு,'' என பதிலளித்தார்.
துறவியின் பேச்சைக் கேட்டு திடுக்கிட்டார் அவர்.
""சுவாமி! ஆசையைக் குறைக்க வழி கேட்டால், பட்டினி கிடக்கச் சொல்கிறீர்களே!'' என்றார்.
துறவி விளக்கினார்.
""பசியை யாராலும் ஒழிக்க முடியாது. இது ஞானிக்கும் பொருந்தும். அஞ்ஞானிக்கும் பொருந்தும். பசியோடு இருப்பவனிடம், உணவையும், பணத்தையும் கொடுத்தால், முதலில் உணவையே கையில் எடுப்பான். பசியில் உணவைத் தவிர வேறெதிலும் எண்ணம் உண்டாகாது. அதனால், பட்டினி இருக்கப் பழகி விட்டால், ஆசையைக் குறைக்க கற்றுக் கொள்வாய்,'' என்றார்.
ஆசையைக் குறைக்கலாம். அறவே போக்க முடியாது என்ற உண்மையை முன்னாள் பணக்காரர் புரிந்து கொண்டார்.

ஆன்மிக கதை

நமது வாழ்க்கையில் எவ்வளவோ நிகழ்ச்சிகள் நடக்கின்றன. சில நிகழ்ச்சிகள், பசு மரத்தாணி போல நன்கு பதிந்து, நம் மனதில் எப்பொழுதும் நிலைத்து நிற்கின்றன.
பல வருடங்கள் முன்பு (திரேதா யுகத்தில் அல்லது துவாபர யுகத்தில் நடந்த நிகழ்ச்சி என்று கூட சொல்லலாம், அவ்வளவு வருடங்கள் கடந்து விட்டன). எனக்கு ஒரு மாதுலர் (தாய் மாமன்) இருந்தார்.
""கல்கத்தாவில் வந்து வேலை பாரு; சாயந்திரம் கல்லூரியில் சேர்ந்து மேலே படிக்கவும் முடியும்,'' என்று என்னை என்னுடைய கிராமத்தில் இருந்து அழைத்து சென்றார்.
""கல்கத்தா செல்வதற்கு முன்னால், திருப்பதி பாலாஜி தர்சனம் செய்ய நான் குடும்பத்துடன் செல்கிறேன்; நீயும் என்னுடனே வரலாம்,'' என்று சொன்னார். கிராமத்தை விட்டு வெளி இடம் செல்லாதவன் நான்; "வருகிறேன்' என்று சொல்ல கசக்குமா என்ன?
திருப்பதி "பீமா ஹோட்டல்' சிற்றுண்டி வாய்க்கு ருசியாக இருந்தது. முதல் முதலாக திருப்பதியில் இருந்து திருமலாவுக்கு வளைந்து வளைந்து செல்லும், அந்த மலைப்பாதையில் பஸ்சில் பயணம் சென்றது, என் வாழ்வின் மறக்க முடியாத நிகழ்ச்சி.
வேங்கடாசலபதியின் சுப்ரபாத தரிசனம், தோமாலை சேவை, பெரிய கல்யாண உத்ஸவம், அதற்கு மேலே மிக்க அமைதியான சூழ்நிலையில் ஏகாந்த சேவை எல்லாம் (இதெல்லாம் "அந்த' காலத்தில் நடந்த சம்பவம் என்பதை நான் மறக்காமல் குறிப்பிட வேண்டும்) மாமா குடும்பத்தோடு பாலாஜியை தரிசனம் செய்தது, இன்றும் என் கண் முன்னால் நிற்கின்றன.
நாங்கள் தங்கி இருந்த சத்திரத்திற்கு திரும்பி வந்த பொழுது, எனக்கு ஒரு ஆச்சரியம் காத்துக்கொண்டிருந்தது. கூடை கூடையாக பெருமாள் பிரசாதம், லட்டு, வடை, புளியோதரை, தயிர்சாதம், அதிரசம் என்று வகை வகையாக இருந்தன. எனக்கு உடனே நினைவுக்கு வந்தது ரங்காராவ் நடித்த மாயா பஜார் படத்தில் வரும் "கல்யாண சமையல் சாதம்' காட்சி.
கீழ திருப்பதிக்கு செல்ல, நாங்கள் எல்லோரும் பஸ்சில் அமர்ந்திருந்த பொழுது, மாமா என் அருகில் வந்து, எதிரில் இருந்த ஒரு ஆள் உயர பலகையைக் காட்டி, ""என்ன எழுதியிருக்கிறது, படி,'' என்றார்.
எல்லாருக்கும் நன்கு தெரிகிற மாதிரி பெரிய பலகையில் சமஸ்கிருதத்தில் எழுதி இருந்தார்கள். நான் சமஸ்கிருதம் கற்றுக்கொண்டதால், எனக்கு படிப்பது சுலபமாக இருந்தது. தைரியமாக, உரக்கப் படித்தேன்....''புனர் தர்சன ப்ராப்திரஸ்து'' (மறுபடியும் பாலாஜியை திருமலையில் வந்து சேவிக்க உனக்கு வாய்ப்பு உண்டாகுக) என்று எழுதி இருக்கிறது என்று சொன்னேன்.
மாமா எனக்கு சமஸ்கிருதம் தெரியுமா என்று சோதித்தாரா, அல்லது எனக்கு மறுபடியும் பாலாஜி தரிசனம் கிடைக்க பகவானை வேண்டிக் கொண்டாரா, அல்லது நான் திரும்பத் திரும்ப பாலாஜியை சேவிக்க வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று என்னை மனப்பூர்வமாக ஆசிர்வாதம் செய்தாரா என்று, அன்று எனக்கு நானே கேட்டுக்கொண்ட கேள்விக்கு இன்று வரை எனக்கு பதில் கிடைக்க வில்லை.
காலம் கடந்தது. மாமாவும் காலம் கடந்து விட்டார். இது வரை நான் எத்தனை தடவை நான் திருப்பதி சென்று இருக்கிறேன். எத்தனை தடவை எனக்கு பாலாஜி தரிசனம் கிட்டி இருக்கிறது என்றால் கணக்கில் அடங்காதவை என்று தான் பதில் சொல்ல முடியும். நூறு தடவையா அல்லது இரு நூறு தடவை இருக்குமா என்பதை பற்றி இப்பொழுது நாம் பேசவில்லை. மறுபடியும், அங்கே சென்று பகவானை தரிசனம் செய்ய வேண்டும் என்று ஆவல் எழுந்து கொண்டே இருக்கிறது. அதற்கு ஏதாவது சந்தர்ப்பமும் வந்து கொண்டே இருக்கிறது.
என்னுடைய சமீபத்திய வாய்ப்பைப் பற்றி நான் கட்டாயம் கூறவேண்டும்.
""அமெரிக்காவில் இருக்கும் உன் மாமாவின் கொள்ளுப் பேரனுக்குப் பூணல் போடப்போகிறோம்... நீ தான் அப்பாவுக்கும், எங்களுக்கும், குழந்தைகளுக்கும், பேரக் குழந்தைகளுக்கும் ஒரு இணைப்பு. கட்டாயம் பூணலுக்கு வர வேண்டும்,'' என்று என் மாமா பெண்ணிடம் இருந்து, தொலைபேசியில் அழைப்பு வந்தது.
அமெரிக்காவிலோ, அல்லது இங்கேயே மும்பை, டில்லியில் அந்த விழா இருந்தால் பிரயாண டிக்கெட் கிடைக்குமா என்று நான் யோசித்ததை புரிந்து கொண்டு, ""பூணல் திருமலையில், ஆண்டவன் ஆஸ்ரமத்தில் நடக்க இருக்கிறது,'' என்று என் மாமா பெண் சொன்னது, காதுக்கு ரொம்ப இனிமையாக இருந்தது. திருப்பதி செல்ல பிரயாண டிக்கெட் சுலபமாகக் கிடைக்கும் என்பதால், "கட்டாயம் வருகிறேன்' என்று உடனே கூறி விட்டேன்.
பூணல் கல்யாணம் நன்றாக நடந்தது. எனக்கும் அந்த ஏழுமலையானின் புனர் தர்சனம் கிடைத்தது.
கீழ் திருப்பதிக்கு, நாங்கள் எல்லோரும் இறங்கிக் கொண்டிருந்தோம். அந்த பூணல் போட்டுகொண்ட குழந்தை என் அருகே வந்து, ""மாமா...அங்கே பெரிசா என்ன எழுதி இருக்குன்னு படியுங்கோ,'' என்ற உடன், எனக்கு தூக்கி வாரிப் போட்டது. கண்களில் ஜலம் கொட்ட ஆரம்பித்தது. என் எண்ணங்கள் பல வருடங்கள் பின்னோக்கி பறந்து சென்றன.
மெதுவாக சமாளித்துக்கொண்டு, கண்களைத் துடைத்துக்கொண்டேன். ""அங்கே எழுதி இருப்பது எழுத்து மூலம் இருக்கும் "தெய்வத்தின் குரல்' அப்பா...உனக்கு ஆங்கிலத்திலோ, தமிழிலோ மொழி ஆக்கி விளக்குவது என் சக்திக்கு அப்பாற்பட்டது. ஆனால், ஒன்று மட்டும் நான் உறுதியாக சொல்ல முடியும். உனக்கு, அந்த திருப்பதி ஆண்டவன், கணக்கற்ற முறை நீ திருமலை வந்து அவனை சேவித்து, ஆசிர்வாதங்கள் பெற்றுக்கொண்டு, இருப்பாய் என்று "அவன்' (பாலாஜி) உனக்குச் சொல்லுகிறான்...''.
அந்த பாலகனுக்கு நான் சொன்னது புரிந்ததோ, புரியவில்லையோ! என் கண்கள் ஜன்னல் வழியே வானத்தை நோக்கிச் சென்றன..
"நீ சொல்லுவது சரி' என்று திருப்தியுடனும், மகிழ்ச்சியுடனும் இருக்கும் மாமாவின் முகம் பளிச்சென்று மின்னியது.