Thursday, July 31, 2014

தருமருக்கு ‘தருமத்தின் இலக்கணத்தை’ உரைத்த பிதாமகன் பீஷ் மர்

தருமருக்கு ‘தருமத்தின் இலக்கணத்தை’ உரைத்த பிதாமகன் பீஷ் மர்! – இது தருமருக்கு மட்டுமல்ல நமக்கும் தான்
தருமத்தின் இலக்கணத்தை பீஷ்மர், இந்திர னுக்கும்,கிளிக்கும் நடந் த உரையாடலாக அமைந்த ஒரு கதையாக தருமருக்கு உரை த்தார்..
‘தருமா! காசி தேசத்தில் ஒரு வேடன் விஷ ம் தோய்ந்த அம்பையும், வில்லையும் எடு த்துக் கொண்டு மான் வேட்டைக்குக் காடு நோக்கிச் சென்றான்.மான் கூட்டம் நிறைந் திருப்பதைக் கண்டு மகிழ்ந்த வேடன் உற் சாகத்துடன் அம்பைச் செலுத்தினான்.அது குறி தவறி ஒரு பெரிய ஆலமரத்தில் செ ன்று பாய்ந்தது.விஷம் தோய்ந்த அம்பான தால் அந்த மரம் பட்டுப் போனது.
மரம் அப்படியான போதும் அந்த மரத்தின்
பொந்துகளில் வசித்து வந்த ஒரு கிளி அந்த இடத்தை விட்டு அகல வில்லை. இரை எடுக்க வில்லை. வெளி யே போகவில்லை.தான் வசித்து வந்த மரத்திற்கு இப்ப டியானதே ..என வருந்தியது.
கிளியின் அன்பைக் கண்டு இந்திரன் வியப்புற்றான். பற வை இனமா ய் இருந்தும் மரத்திடம் இப்படி ஒரு அன்பா? என எண்ணி,கிளி இருந்த மரம் நோக்கி வந்தான்.. அவன் கிளியிடம்’இந்த மரத்தைவி ட்டு ஏன் அகலாமல் இருக்கிறாய்?’ என்றான்.
இந்திரன் இப்படிக் கேட்டதும் கிளி அவனை வணங்கி..’ தேவேந்திரா! உன்னை என் தவத்தால் அறிந்து கொண் டேன். உன் வரவு நல் வரவாகட்டும்’ என்றது.
தேவேந்திரன் கிளியிடம், ‘இலைகளும், கனிகளும், கிளைகளும் இன்றி பட்டுப்போன மரத்தில் ..நீ மட் டும் இருந்து ஏன் காவல் காக்கிறாய் . . இக்காட்டில் உனக்கு வேறு மரமா.. இல்லை?’எனக் கேட்டான்.
இந்திரனின் வார்த்தைகளைக் கேட்ட கிளி, மிகுந்த துயர த்துடன்’ நற்குணங்களின் இருப்பிடமான இம்மரத்தில் நான் பிறந்தேன். இளமையில் நன்கு பாதுகாக்கப்பட் டேன். பகைவ ர்களும் என்னை ஒன்றும் செய்யவில்லை. தயை, பக்தி இவற் றால் வேறு இடம் நாடாமல் இருக்கும் எனது பிறவியை ஏன் பயனற்றதாக மாற்ற நினைக்கிறாய்?நமக்கு உதவு செய்தவரி டத்தில் தயையுடன் நடந்து கொள்வது தானே தருமத்தின் இலக்கணம். தயை யே எல்லோருக்கும் திருப்தியை அளிப்ப து.தேவர்கள் அனைவரும் தருமத்தின் சிறப்பைப் பற்றி உன்னிடம் அல்லவா கேட்க வருகிறார்கள்.. அதனால் அன் றோ தேவர்களுக்கு அதிபதியாய் நீ இரு க்கிறாய் ..தருமம் அறிந்த நீ, நீண்ட நாட் களாக நான் இருந்த மரத்தை விட்டுவிட ச் சொல்லலாமா?ஆதரித்தவர் நல்ல நிலையில் இருந்த போது அடுத்துப் பிழை ததவன் அவர் கெட்டநிலைக்கு வந்தபோது எப்படி பிரிவது?’ என்று கூறி யது.
கிளியின் சொல் கேட்டு, இந்திரன் மகிழ் ந்தான். ஞானிபோல பேசிய அக்கிளியி டம் மிக்க மரியாதை ஏற்பட்டது. அதனி டம், “நீ வேண்டும் வரம் கேள்.. தருகி றேன்’ என்றான்.
உடன் கிளி.’பட்டுப்போன இம்மரம் முன் போல பூத்துக்குலுங்க வேண்டும். . இது வே நான் வேண்டும் வரம்’என்றது.
உடன் இந்திரனும் அம்மரத்தின்மீது அமி ழ்தத்தைப்பொழிந்தான். முன்னை விட பன்மடங்கு பொலிவுடனும், கம் பீரத்துடனும் ஓங்கி வளர்ந்து நின்றது மரம்.
‘தருமரே! கிளியின் பக்தியால் அம் மரம் பழைய நிலையை விட சிற ந்து விளங்கியது என்பதுடன் அல்லாது, அக்கிளியும் ஆயுள் முடிவி ல் இந்திர லோகம் அடைந்தது. பக்தியுள்ளவ னைச் சார்ந்தவர் மரம் போல நற்பய னைப் பெறுவர் என உணர்வாயாக’ என்றார் பீஷ்மர்.

ஆனந்தம் பொங்கும் ஆடிவெள்ளி,,!

ஆனந்தம் பொங்கும் ஆடிவெள்ளி,,!
ஆடிவெள்ளிக் கிழமையிலே அன்னை வந்தாள் தேரினிலே
அண்டமெலாம் ஆளும் சத்தி அசைந்து வந்தாள் ஊரினிலே
கண்டவரின் மனம் மயங்க கனிந்து வந்தாள் மாரியம்மா
வண்டாரும் குழலழகி வேண்டும் வரம் தாருமம்மா!
அழகுமயில் ஆடுதல்போல் அம்மன் தேர் ஓடுதம்மா!
பழ்குதமிழாய் ஆடித்தேர் அசைந்தசைந்து வருகுதம்மா!
அன்னையிவள் பெருமையினைச் சொல்லிடவும் முடியாது
என்னமொழி சொன்னாலும் எடுத்துரைக்க இயலாது
கண்ணெழிலைக் காட்டியிவள் கேட்டவரம் தந்திடுவாள்
பண்ணெடுத்துப் பாடுபவர் பாவங்களைப் போக்கிடுவாள்!
சிவனுடைய சக்தியைவிட அம்மனுடைய சக்தி ஆடி மாதத்தில் அதிகமாக இருக்கும். ஆடி மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகி விடுகிறார் என்பது ஐதீகம்.
ஆடி மாதப் பிறப்பு- தட்சிணாயண புண்ணிய காலம், ஆடிப் பண்டிகை என்று தமிழ்நாட்டில் கொண்டாடப்படுகிறது. மார்கழியைப் போல ஆடி மாதமும் தெய்வீக மாதமாகும்.
சுப காரியங்கள் செய்வது தவிர்க்கப்பட்டு, இறைவழிபாட்டில் மக்கள் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளும் மாதம்.
தட்சிணாயண சமயத்தில் சூரியன் பூமத்திய ரேகையின் தெற்குப் பக்கத்தில் சஞ்சரிக்கும்போது, வட பாகத்தில் வெயில் கடுமையாக இருக்காது. காற்று, மழை, பனி என்று பருவநிலை காணப்படும்.
ஆடி மாதம் அம்மனின் அருள் பூரணமாக வெளிப்படும். அம்மன் மாதம்
அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு, அம்மனுக்குப் பொங்கல் இடுதல், 
கூழ் காய்ச்சி ஊற்றுதல் என நிவேதனம் செய்து அவற்றை 
ஏழைகளுக்குப் பகிர்ந்தளித்து அவர்கள் பசி நீக்கும் மாதம் !
ஆடி மாதத்தில்தான் ஸ்ரீவில்லிபுத்தூரில் துளசிப் பாத்திகளுக்கு நடுவே பெரியாழ்வார் என்கிற விஷ்ணு சித்தருக்கு அரங்கனையே ஆளப்போகும் ஆண்டாள் கிடைத்தாள்.
ஆடி என்பது ஒரு அசுரனின் பெயர். , பாம்புருவில் நுழைந்து பார்வதி தேவியாக உருமாறி, சிவபெருமான் அருகில் சென்றான்.
அசுரன் என்பதை உணர்ந்த இறைவன், உறவாடி அவனைக் வென்ற. நிகழ்வின் நினைவாகவே ஆடி எனப் பெயர் பெற்றது.
ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளிகள் முக்கியத்துவம் பெறுகின்றன. , இல்லத்தின் வாசலில் கோலமிட்டு, பூஜையறையில் குத்துவிளக்கேற்றி ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமம் மற்றும் பல அம்மன் பாடல்களைப் பாடுவார்கள். பால் பாயசம், சர்க்கரைப் பொங்கல் போன்றவற்றை நிவேதனம் செய்து இறைவனை வழிபாடுவார்கள்.
பெண் குழந்தைகளை அம்மனாக பாவித்து, உணவளித்து, அவர்களுக்கு அஷ்டமங்கலப்பொருள்களை அளித்து சிறப்பிக்க தேவியின் அருள் கிடைக்கும்.
ஆடி வெள்ளிக்கிழமைகளில் மாலை நேரத்தில் அம்பிகை, ஆதிபராசக்தி, அகிலாண்டேஸ்வரி, தெய்வங்களை வழிபடுவது சிறப்பு.
ஆலயங்களில் குத்து விளக்கு பூஜை நடைபெறும்.
ஆடி வெள்ளியன்று மகாலட்சுயை வழிபட்டால் 
நிறைந்த செல்வம் இல்லம் தேடி வரும் என்பது நம்பிக்கை.
ஆடி கடைசி வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு உகந்த வரலட்சுமி விரதம்
ஆடி வெள்ளியன்று நாகதேவதைக்கு பால் தெளித்து 
விசேஷ பூஜை செய்வார்கள்.
பராசக்தியின் ஒன்பது அம்சங்களை (சர்வபூதசமனி, மனோன்மணி, பலப்பிரதமணி, பலவிகாரணி, கலவிகாரணி, காளி, ரௌத்ரி, ஜேஷ்டை, வாமை) ஒன்பது சிவாச்சார்யர்கள், ஒன்பது வகை மலர்களால் ஒரே சமயத்தில் அர்ச்சிக்கும் "நவசக்தி அர்ச்சனை' நடைபெறும்.
ஆடி வெள்ளியில் "சண்டி ஹோமம்' போன்ற சக்தி ஹோமங்களும் செய்வார்கள்.
வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் துர்க்கையம்மனுக்கு 
எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபடுதல் அதிகச் சிறப்பாகும்.
திருவானைக்காவலில் ஆடி வெள்ளியன்று அம்பாள் காலையில் லட்சுமிதேவியாகவும், உச்சிக்கால வேளையில் பார்வதியாகவும், மாலையில் சரஸ்வதியாகவும் காட்சி தருவாள்
சமயபுரத்தினிலே மாரியென வீற்றிருப்பாள்
கண்ணபுரத்தினிலே கண்ணாத்தா இவளேதான்
மதுரையிலே மீனாக்ஷி காஞ்சியிலே காமாக்ஷி
காசி விசாலாக்ஷி வேற்காட்டில் கருமாரி
திருவாரூர் கமலாம்பா திருக்கடவூர் அபிராமி
ஆரணி பெரியபாளையம் அங்கிவளே படவேட்டம்மா
சிதம்பரத்தில் சிவகாமி நாகையிலே நீலாயி
உஜ்ஜயினி ஓங்காளி உறையூரில் வெக்காளி
புதுக்கோட்டையில் புவனேஸ்வரி மயிலையிலே கற்பகம்மா
முண்டகக்கண்ணி மாரியம்மா, அங்கையற்கண்ணி அகிலாம்பா
பொற்கூடை மகமாயி பொலிவுதரும் பொன்னாத்தா
என்றுன்னைப் போற்றுகின்ற பக்தருக்கு அருளிடம்மா!
இப்படியே கோயிலிலே இருப்பதிலே மகிழாமல்
தாயாக நீவந்து வீடெல்லாம் குடியிருப்பாய்
தாயன்பே தெய்வமென தரணிக்குக் காட்டிடுவாய்
தங்கமே நின்பெருமை எளியேனால் சொல்லப்போமோ!
..

வசந்தம் வீசும் - ஆடி பதினெட்டு’

வசந்தம் வீசும் - ஆடி பதினெட்டு’
பூமியில் வாழும் ஜீவராசிகள் , மழையால் வாழ்கின்றன..
ஆடி மாதத் தொடக்கத்தில் காவிரியில் வெள்ளம் வரத் துவங்கும்.
ஆடி பதினெட்டு அன்று காவிரி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடும்.
பதினெட்டு என்ற எண் வெற்றியைக் குறிக்கும்.
மகாபாரதத்தில் பதினெட்டு பர்வங்கள், 
பகவத் கீதையில் 18 அத்தியாயங்கள், 
சித்தர்கள் 18 பேர்கள், 
சபரிமலை ஐயப்பன் கோயிலில் 18 படிகள், 
குடிமக்கள் 18 வகை, 
நெல் முதலான தானியங்கள் 18 
எனப் பலவும் அந்த அடிப்படையிலேயே அமைந்ததை அனுசரித்துத்தான், நீர் பெருக்கெடுத்து ஓடும் நதிக் கரைகளில் 18 படிகளை அமைத்தார்கள்.
உடலுக்கும் உள்ளத்துக்கும் ஆரோக்கியம் தரும் காவிரி அன்னைக்கு ‘
ஆடி பதினெட்டு’ என்று விழாவும் எடுத்தார்கள்.
நவதானியங்களை ஒரு தட்டில் தூவி, அத்துடன் சிறிதளவு மண்ணோ - எருவோ கலந்து, தண்ணீரும் தெளித்து வைப்பார்கள். விழாவுக்குள் ஆடி பதினெட்டு விழாவில் முளைத்து, வளர்ந்து இருக்கும். முளைப்பாலிகை அல்லது முளைப்பாரி...
ஆடி பதினெட்டு அன்று முளைப் பாலிகையைக் கையில் ஏந்தியபடி, பெண்கள் ஆற்றங்கரையில் வட்டமாக கும்மி அடிப்பார்கள்.
சர்க்கரை, பச்சரிசி ஆகியவற்றுடன் தண்ணீரை கலந்து, பிள்ளையார் முன்னால் வைப்பார்கள்.
மஞ்சள் தடவிய நூல் சரடை முதிய சுமங்கலியிடம் பெற்று அணிந்துகொள்வார்கள்..
ஒன்றாகக் கூடிக் கும்மி, கோலாட்டம் என ஆடுவார்கள். ஆடி முடித்ததும் ஆற்றில் இறங்கி, அவரவர் தாம் கொண்டு வந்த முளைப் பாலிகைகளை சிறிது சிறிதாக எடுத்து ஆற்றில் விடுவார்கள்.
மதுரையில் ஆயில்ய நக்ஷத்திரத்தில் ஆடி மாத முளைக்கொட்டுத் திருவிழாவுக்குக் கொடியேற்றும் உற்சவத்திற்கு அன்னைக்கு மட்டுமே கொடி ஏற்றப் பட்டு. முளைக்கொட்டு உற்சவம் நடக்கும்.
எல்லா நதிகளிலும் வெள்ளம் புத்தம்புதியதாக வந்து வயல்களில் செழிப்பாக நாற்றுக்கள் வளரவேண்டி நடத்தப்படும் உற்சவம் !!. 
மதுரை சுற்றியுள்ள மக்கள் அனைவருமே மீனாக்ஷியைத் தங்கள் குலதெய்வமாய்க் கொண்டு முளைப்பாரி எடுத்து வந்து வழிபட்டுப் பிரார்த்திப்பார்கள்.
அம்மனுக்கு 21 என்ற கணக்கிலேயே எல்லாச் சீரும், சிறப்பும், உபசாரங்களும் செய்வதால் இதையும் 21 விதமான விதைகளைக் கொண்டு செய்வதும் உண்டு. 
ஆயில்ய நக்ஷத்திரத்தில் ஏற்றப்படும் கொடி பத்து நாட்கள் உற்சவத்திற்குப் பின்னர் இறக்கப்படும். 
பத்துநாட்களும் அம்மன் ஒவ்வொரு விதமான அலங்காரத்தில் அம்மன் சந்நிதியிலேயே இருக்கும் மீனாக்ஷி நாயக்கன் மண்டபத்தில் காட்சி தரும் அன்னையின் முன் பச்சை நிறம் கண்கொள்ளாக் காட்சியாக முளைப்பாரிகளை வைத்திருப்பார்கள்.
கும்மியோடு முளைக்கொட்டைப் பொற்றாமரையில் கரைக்கப்படும்.
கருகமணி, காதோலை ஆகியவற்றையும் ஆற்றில் விடுவார்கள். ‘
ஆடி 18 அன்று திருச்சி ஸ்ரீரங்கத்தில் அருள் பாலிக்கும் ஸ்ரீரங்கநாதர் காவேரித் தாயாருக்கு மரியாதை செய்ய ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவேரிப் படித்துறைக்கு எழுந்தருள்வார்.
கோவிலிலிருந்து யானையின்மேல் மங்கலப் பொருட்களான புடவை, ரவிக்கைத் துணி, மஞ்சள், குங்குமம், சந்தனம், பழம், தாம்பூலம், கருகமணி ஆகியவற்றைக் கொண்டு வரும் மங்கலப் பொருட்களை பெருமாள்முன் சமர்ப்பித்து பூஜைசெய்து, பின் காவேரித் தாயாருக்கு பூஜை செய்து காவேரி நதியில் சமர்ப்பிப் பார்கள்.

பெருமாள், வெளி ஆண்டாள் சந்நிதிக்குச் சென்று, அங்கு ஸ்ரீஆண்டாளின் மாலையை மாற்றிக்கொண்டு ஸ்ரீரங்கம் கோவிலுக்குச் செல்லும் விழாவில் கலந்துகொண்டால் வாழ்க்கையில் என்றும் வசந்தம் வீசும்

அபிஷேகப் பிரியரின் ஆனந்த கூத்து !

அபிஷேகப் பிரியரின் ஆனந்த கூத்து !

"ஆனந்தம் ஆடரங்கு, ஆனந்தம் அகில சராசரம், ஆனந்தம் ஆனந்த கூத்து'' என இறைவன் ஆடிய தாண்டவத்தை திருமூலர் போற்றுகின்றார்.
ஆடவல்லானின் திருத்தாண்டவத்தைக்காண கண் கோடி வேண்டும். பேரழகியாம் அன்னையும் பேரழகனாம் அப்பனும் குழைந்தெடுத்த திருவுருவாய்த் திகழும் நடராசர் உருவத்தை முழுமையாக அனுபவிக்க கண்கள் கோடி வேண்டுமே !!
தாண்டவத் திருவுருவத்துக்கு ஈடு எதனையும் ஒப்பிட்டு பேசமுடியாது என்பது உண்மை.
நமக்கு நல்வாழ்வு அளிக்கும் இறைவனை திருக்கோயில்களுக்கு சென்று . இளநீர், தேன், பால் போன்ற பொருட்களைக் கொண்டு உள்ளம் குளிர அபிஷேகம் செய்து மகிழ்ச்சி அடைகிறோம்.
நதியோ, அருவியோ, ஓடையோ அனைத்தும் இறுதியாகக் கடலில் கலப்பது போன்று அனைத்து உயிர்களும் பரமனை அணுகுவதே அபிஷேக வழிபாட்டின் தத்துவம் ஆகும்.
திருமால் "அலங்காரப் பிரியர்' என்றால் சிவபெருமான் 
"அபிஷேகப் பிரியர்' எனச் சிறப்பித்துக் கூறுவர்.
சிவபெருமானுக்கு என்னென்ன பொருட்களால் "அபிஷேகம்' செய்ய வேண்டும் என்பதை "அண்ணாமலைச் சதகம்' என்ற நூலில் காணப்படும் பாடல் ஒன்று எடுத்துக் கூறுகிறது.
""ஆடினாய் நறு நெய்யொடு பால் தயிர்''
""நெய்யினோடு பால் இளநீர் ஆடினான் காண்''
""நெய்யும் பாலும் தயிருங் கொண்டு நித்தல் பூசனை''
- என்றெல்லாம் சிவபெருமானுக்கு நடைபெறும் அபிஷேகங்களை திருமுறைப் பாடல்கள் போற்றிக் கூறுகின்றன.
உலகில் காணப்படும் அனைத்தும் "கானல் நீர்' என்று தெளியும் தத்துவ ஞானமே திருமஞ்சனம் என்பதை காசி காண்டம் செய்யுள் கூறுகிறது.
நடராஜப் பெருமானுக்கு நடைபெறும் "ஆனித் திருமஞ்சனம்' மிகவும் சிறப்பானது.
இந்நாளில் சிவாலயங்களுக்கு சென்று "ஆனித் திருமஞ்சனம்' கண்டு வழிபட்டு வாழ்வில் அனைத்து நலன்களையும் அடைவோம்.

தாமரையின் தனிச்சிறப்பு ..........

தாமரையின் தனிச்சிறப்பு ..........
செல்வத்தின் கடவுளான திருமகள் சிவப்புத் தாமரையில் அமர்ந்திருப்பதாகவும், கல்வியின் கடவுளான கலைமகள் வெள்ளைத் தாமரையில் வீற்றிருப்பதாகவும் நம் நாட்டில் சித்தரிக்கப் படுகிறார்கள். மகாவிஷ்ணுவின் நாபியில் இருந்து தாமரை வருவதால் மகாவிஷ்ணுவிற்கு பத்மநாபன் என்ற பெயரும் உண்டு. கண்ணனின் கண்கள் தாமரை போன்ற அழகுடன் இருப்பதால் கண்ணனுக்கு கமலக் கண்ணன் என்ற பெயரும் உண்டு.
தாமரை நம் நாட்டு தேசிய மலர் மட்டுமல்ல வியட்னாம், எகிப்து போன்ற நாடுகளுக்கும் அது தேசிய மலர் ஆகும். பண்டைய எகிப்தில் தாமரை நைல் நதிக்கரை ஓரத்தில் பரவலாகக் காணப்பட்டதாகவும், அக்கால எகிப்தியர்கள் தாமரை மலரைப் புனிதமாகப் போற்றியதாகவும் சொல்லப்படுகிறது. நம் நாட்டு தெய்வங்களைப் போலவே பண்டைய எகிப்திய கடவுள்களும் தாமரை மலரைக் கையில் வைத்திருப்பதாக பழங்கால எகிப்திய சிற்பங்கள் கூறுகின்றன. ஆனால் எகிப்திய தாமரை நம் நாட்டு தாமரையை விட தோற்றத்தில் சற்று வேறுபட்டிருக்கிறது.
இனி தாமரை மலருக்கு ஆன்மிக ரீதியாகவும், மற்ற விதங்களிலும் உள்ள தனிச்சிறப்புகளைப் பார்ப்போம்.
தாமரை மலர் சத்தியம், சிவம், சுந்தரம் என்ற முக்குணங்களின் இருப்பிடம். இறைவனும் இந்த முக்குணங்களையும் கொண்டவன் தானே? அதனால் தான் இறைவனின் பல அம்சங்களும் தாமரை மலருடனேயே ஒப்பிடப்படுகின்றன. தாமரைக் கண்கள், தாமரைப் பாதங்கள், தாமரைக் கைகள், இதயத்தாமரை என்றெல்லாம் சொல்கிறோம். தாமரை மலர் இறைவனைப் பூஜிக்க மட்டுமே பயன் படுத்தப்படுகிறது. தாமரை மலரைத் தலையில் யாரும் சூடிக்கொள்வதில்லை.
நம் வேதங்களிலேயே தாமரை பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. சோம என்பது தாமரையை குறிக்கும் என்பது டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆண்ட்ரூ மெக்டொனால்ட் என்ற தாவரவியலாளரால் நிறுவப்பட்டிருக்கிறது. வேதம் சொல்லும் தாவரம் நிச்சயமாக இந்திய கண்டத்தில் மிக முக்கியமான, மையமான இடம் கொண்டதாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் அவர் சிந்து சமவெளி நாகரிகத்திலிருந்து பிற்காலத்திய சைவ, வைணவ, பவுத்த பண்பாடுகள் வரை ஆராய்ச்சி செய்தார். இத்தகைய முழுமையான பண்பாட்டு ஆராய்ச்சியின் விளைவாக அவர் சோமத் தாவரம் என்பது வேறெதுவும் அல்ல தாமரை (Nelumbo nucifera) தான் என முடிவு செய்தார். வேதங்களின் உருவகத்துக்கும் சிந்து சமவெளி நாகரிக முத்திரைகளில் காணப்படும் சித்திரங்களுக்கும் இருக்கும் ஒற்றுமையை அவர் சுட்டிக்காட்டினார். சிந்து வெளி பண்பாட்டு முத்திரைகளில் காணப்படும் இலச்சினை சித்திரத்தில் புனிதத் தாமரை மிக அழகான முறையில் காட்டப்பட்டுள்ளது. தாமரைப்பூவின் தூண் போன்ற பீடம் முக்கியப்படுத்தப் பட்டுள்ளது என்பதை ஆதாரபூர்வமாகக் காட்டி உள்ளார்.
இப்படி பழமைச் சிறப்பு வாய்ந்துள்ள தாமரையின் வேர் தரையில் சேற்றில் இருந்தாலும் அதன் மலர்கள் அத்தகைய சுற்றுப்புறத்தினால் பாதிக்கப்படாதவையாக அழகுடன் ஒளி வீசுபவையாக இருக்கும். அப்படியே நாமும் எப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்தாலும் அந்த சூழ்நிலையில் இருந்து மேல் எழுந்து தாமரையைப் போலவே உள்ளும் புறமும் தூய்மையுடனும், அழகுடனும் விளங்க வேண்டும் என்கிறார்கள் ஆன்மிகப் பெரியோர்கள்.
அதே போல தண்ணீரிலேயே இருந்தாலும் தாமரை இதழ்கள் தண்ணீரினால் நனைவதில்லை. இது ஞானிகளின் மனநிலைக்கு உதாரணமாக இருக்கிறது. எத்தனையோ துன்பங்களுக்கும் பிரச்சினைகளுக்கும் நடுவே ஞானியின் உலக வாழ்க்கை அமைந்தாலும் ஞானி அவற்றால் சிறிதும் பாதிக்கப்படாமல், தன் மேலான இயல்பு மாறாமல் இருப்பதை தாமரை இலை - தண்ணீர் உதாரணம் மூலம் அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்.
தனியாக ஓரிடத்தில் இருப்பவன் எதனாலும் பாதிக்கப்படாமல் இருக்கலாம். அது ஒரு கஷ்டமான காரியம் அல்ல. துன்பங்களும், பிரச்சினைகளும், கவர்ந்திழுக்கும் விஷயங்களும் நிறைந்த உலகின் மத்தியில் வாழ்ந்து கொண்டு இருந்தும் அவற்றால் பாதிக்கப்படாமல் இருப்பது தான் பேருயர்வு. அது தான் உன்னத நிலை. அந்த நிலைக்கு ஒருவன் உயர்ந்திருக்க ஏண்டும் என்று சதா நினைவூட்டிக் கொண்டிருப்பது தாமரையின் தனிப்பெரும் சிறப்பு.
பகவத் கீதையிலும் கிருஷ்ண பரமாத்மா ஒரு சுலோகத்தில் தாமரை மலர் உதாரணத்தையே அர்ஜுனனிற்கு சொல்லி விளக்குகிறார். ”எவனொருவன் செயல் புரிகையில் அச்செயல்களிடத்தில் பற்றுதல் கொள்ளாமல் அவற்றை இறைவனுக்கு அர்ப்பணித்து விடுகிறானோ அவன் நீரில் இருப்பினும் நீரினால் நனைக்கப்படாத தாமரை இதழ்களைப் போல் பாவங்களினால் பாதிக்கப்படாமல் இருப்பான்”.
மனித உடலில் “சக்ரா” என்னும் சக்தி மையங்கள் ஏழு உள்ளன என்று யோக சாஸ்திர நூல்கள் கூறுகின்றன. மூலாதார சக்ராவில் இருந்து சஹஸ்ரர சக்ரா வரை உள்ள அந்த ஒவ்வொரு சக்ராவும் குறிப்பிட்ட எண்ணிக்கையுடைய இதழ்கள் கொண்ட தாமரையாக உருவகப்படுத்தப் படுகின்றது. உதாரணத்திற்கு மூலாதார சக்ரா என்னும் முதல் சக்ரா நான்கு இதழ் தாமரையான சக்ராவாகவும், ஏழாவது சக்ராவான சஹஸ்ரர சக்ரா ஆயிரம் இதழ் கொண்ட தாமரையின் வடிவாகவும் உருவகப்படுத்தப்படுகிறது. இப்படி சக்தி மையங்களை உருவகப்படுத்தும் போது கூட தாமரை மலரைக் கொண்டே உருவகப்படுத்தும் அளவு தாமரை சிறப்புப் பெற்றிருக்கிறது.
இப்படி வேத காலத்தில் இருந்து ஆன்மிக மலராய் கருதப்படும் தாமரைக்கு மருத்துவத் தன்மைகளும் இருக்கின்றன. பழங்காலத்திலிருந்தே தாமரை ஆயுர்வேத வைத்தியத்தில் பயன்படுவதால், அதைப் பற்றிய விவரங்கள் ஆயுர்வேத நூல்களில் அதிகம் சொல்லப்பட்டிருக்கின்றன. கப, பித்தங்களை சீராக்கவும், பேதிக்கு மருந்தாகவும் தாமரை பயனாகிறது. முக்கியமாய் இதய நோய்களைக் கட்டுப்படுத்தும் மருந்தாக தாமரை கருதப்படுகிறது.
பொதுவாக ஜுரங்களுக்கு மருந்தாகவும், தாகத்தை தணிப்பதாகவும், வயிற்றுப்பூச்சிகளை போக்கும் மருந்தாகவும், உடலில் உஷ்ணம், எரிச்சல் இவற்றை குறைக்க வல்லதாகவும் ஆயுர்வேதத்தில் தாமரை கருதப்படுகிறது. தாமரை விதைகள் தானியங்களை விட சத்துள்ள உணவாக கருதப்படுகிறது. தாமரையின் வேர்கிழங்கு (Rhizome) உடல் வளர்ச்சிக்கு சத்துணவாகும். இது உடலுக்கு ‘டானிக்’ காக செயல்படும். கல்லீரல் நோய்கள், இருமல், மாதவிடாயில் அதிக ரத்தப்போக்கு, மூலத்தில் ரத்தம் வருவது போன்றவற்றுக்கு மருந்தாக கொடுக்கப்படுகிறது. தாமரை பிராங்கைடீஸ் போன்ற நுரையீரல் நோய்களுக்கும் மருந்தாகும். செந்தாமரையை விட வெண் தாமரைக்கு மருத்துவ குணங்கள் அதிகம் என்கின்றனர்.
இப்படி மகாலட்சுமியின் உறைவிடமாகவும், மெய்ஞான நிலையின் உதாரணமாகவும், மருத்துவ குணங்களின் தொகுப்பாகவும் இருக்கும் நம் நாட்டு தேசிய மலரான தாமரையின் மகத்துவத்தை அறிந்திருந்து, முறையாகப் பயன்படுத்தி நாம் முழுப்பலன் அடைவோமாக!
•• இராமர் பாலம் - வரலாற்றுப் பதிவு ...!!!
••• இராமர் சேது, அனுமன் சேது, தள - சேது என்று பற்பல பெயர்களால் அழைக்கப்படும் இராமர் பாலம் 5076 BCE-ல் கட்டப்பட்டது என்கிறது வான்மீகியின் சுலோகம்.
••• இதையே அகத்தியர் குறிப்பிலிருந்து சுமார் பதினேழு லட்சத்து இருபத்தைந்தாயிரம் ஆண்டு கட்கு முன் கட்டப்பட்டது இராமர் சேது என அறிகின்றோம்.
••• பற்பல சுனாமி போன்ற ஆழி அலைகளினால், கடல் மட்டத்தின் மேலிருந்த பாலம் நீருக்கு அடியில் சென்றது என்றாலும், மணற்பரப்பு மூடியமையால் மணல் திட்டு போல் காட்சி தந்தாலும், இது ஒரு Engineering Marvel என்றே சரித்திரம் பேசுகின்றது.
••• இராமர் பிறந்ததை அகத்தியர் தமது நாடியில்,
••• “கவுசல்யா கருவந்தான் மேடத்தாமே உச்சமந்த நண்டாவி சுங்கனுச்சங்காண வியாழனுமது போன்றென புனர்ழசத்தே."
--- என்பதில் சோதிடர்களால் வரையப்படும் இராசி சக்கரமும், நவீன Computer மூலம் எடுக்கப்படும் கோள் நிலையும் ஒத்து இருப்பதை விஞ்ஞானம் ஒப்புக்கொள்கிறது.
••• அதாவது இராம பிரான் ஜனவரி திங்கள் பத்தாம் நாள் 5114 BCE, மதியம் 12.30 மணிக்கு அயோத்தியில் கவுசல்யா என்ற மகாராணிக்கு மகவாய் பிறந்தார் என்பதாகும்.
••• அகத்தியர் தமது பாடலில் 11---1---5114 BCEல் பரதனும், 3-4-5076 BCE-ல் வாலி வானர வதம் என்றும் 12--9-5076--ல் அனுமன் இலங்கையை முதன் முதலில் அடைந்தார் என்றும்,14 செப்டம்பர் 5076 BCE---ல் மீண்டும் இராமனை சந்தித்து சீதையின் சந்திப்பைப் பற்றி அனுமன் தெரிவித்தார் என்றும், 12 அக்டோபர் 5076 BCE---ல் வானர சேனை இராவணாசுரனின் கோட்டையை முற்றுகையிட்டது என்றும், 24 நவம்பர் 5076 BCE --ல் மேகநாதன் என்ற இந்திரஜித் மாண்டார் என்றும் பொருள் கொண்ட பாடல்கள் காணக் கிடைக்கின்றன.
••• வான்மீகியின் யுத்த காண்ட சுலோகம் 6:22:50--72--ல் இராமர் சேது கட்டிய விதம் பற்றி மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை அகத்தியர் தமது ஜீவநாடியில்,
“கட்டை பல கூட்டி பஞ்சுப் பொதி
கூட்டினாலப்ப அமைத்தனன் நளனுமே
நன்றே நேரான கோடு நிற்க திட்ட
மோடு பணியிட்டு பாங்காய் முடிப்ப
முதலொரு பகலிலே யீரேழு யோசனை
பின்னிரு மூன்றுகூட வடுத்தா முப்போது
ஏகமெடுத்து கூட்டவே சதமென நாட்பஞ்
சத்து முடிப்ப பானிலொரு பாகமகலமெனப்
பகரவே பின்னை காலக்கோடி நகரை
போயென பறையப் பாரு”
- என்ற வரிகள் ஆயத்தக்கது ஆகும்.
••• தற்காலம் கடலும், கடல் சார்ந்த பகுதிகளில் ஏற்படுத்தப்படும் அஸ்திவாரத்தை பைல் பவுண் டேசன் என்ற முறை கொண்டு அமைக்கின்றனர்.
••• ஆனால் பற்பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்னரே இம்முறை நமது முன்னோர்களால் பின்பற்றப்பட்டமை காண்க.
••• முதலில் பற்பல விதமான, பருத்த பருமன் கொண்ட கட்டைகளை நேர்கோட்டில் அடுக்கி அதன் பிறகு சிறிதும் பெரிதுமான தக்க கட்டைகளை அடுக்கி சமப்படுத்தி உள்ளனர்.
••• தெய்வீக பாலமே இராம சேது. இதனை உருவாக்கியவர் விசுவகர்மாவான நளராஜ் என்பவர்.
••• இராம - இராவண யுத்தம் முடிந்து புட்பக விமானத்தில் திரும்புகையில் இந்த பாலத்தை இராமபிரான் சீதாபிராட்டியாரிடம் காட்டி, ‘‘அதிக பிரயத்தனம் கொண்டு வானர சேனை உதவியுடன் கட்டிய நளசேது’’ என்றார், என்கிறது அகத்தியரின் முன்னைப் பாடல்.
••• ஆக ஒரு பாலம் கட்ட 1.Survey, 2. Planning, 3. Execution, 4. Post Completion ஆகிய நான்கு அத்தியாவசியமான விசயங்களைப் பின்பற்றி பாலத்தை அமைத்துள்ளனர்.
••• பாலத்தின் நீளம் நூறு யோசனை தூரம். அகலம் பத்து யோசனை தூரம். எனவே 1 : 10 என்ற விகிதத்தில் பாலம் அமைந்தது என்கிறது வான்மீகி இராமாயணமும், அகத்தியர் செய்யுளும்.
“இராமனுக்கே சூரனை வதமிக்க
சூத்திரமொன்றை யுபதேசித்தோ
முணர்வீர் - ஆதித்ய இருதயமென
உலகுணர உறைத் தொன்பது முறை அகச்
சுத்தியாய் ஏக காலவிரதத்தோடு முடிப்
பாருக்கு அல்லலேது”
என்கிறது பாடல்.
••• இராமபிரானுக்கு இராவணாசுரனை வதைத்திட, ஆதித்திய ஹ்ருதய ஸ்தோத்திரத்தை உபதேசித்தவர் அகத்தியர் என்பதாம்.
••• யாரொருவன் விரதமிருந்து நம்பிக்கையுடன் தினமும் ஒன்பது முறை பாராயணம் செய்து வருகிறானோ அவன் அனைத்து சேமங்களையும் அடைகின்றான் என்று பொருள்.
••• பாலத்தின் சிறப்பை விமரிசிக்கின்றார் சித்தர். விருட்சம் என்றால் மரக்கட்டை என்று பொருள் கொள்க.
“மிதக்குங்கல்லை நீலனுடங் கூடிய
சாம்பவானுமேந்தி வானரத்தீய யடி நின்ற
கட்டை யது அசுவகருணமோடு யெல்லா
சாலை தாபப் புல் குதசா வர்சுனமொடு
வில்வமாவசோக மென யருவரி படுக்கை
மெத்த மாறு வரியோடு சதயோசனை
கொண்டே நிறுத்த வகுத்தனர் விசுவ
கர்ம நளரே”
••• .என்ற பாடல் வரிகளில் இருந்து, பாலத்தின் அடிப்பகுதியில், பருத்த மரக்கட்டைகளான எல்லா சாலை, அசுவகர்ணன் தாபா, மூங்கில், கூதஜா, அர்ஜுனா, வில்வம், மா மரம், அசோகா போன்ற கட்டைகள், நூல் பிடித்தாற்போல அடுக்கி வைக்கப்பட்டமை காணலாம். பல லட்சக்கணக்கான ஆண்டுகள் ஆனமையால் அம்மரங்கள் இருகி தாவரக் கற்களாக மாறியமை ஆராய்ச்சியில் தெரிய வருகின்றது.
••• இருபது கிலோ, பதினெட்டு கிலோ நிறையுடைய கற்கள் நீரில் மிதப்பது இயற்கையின் தெய்வீகம். இன்றும் இராமேச்சுவரத்தில், சீதா தீர்த்தத்து அருகாமையில் இவை இருக்கின்றன. பக்தர்கள் காண அவை வைக்கப்பட்டுள்ளன.
••• இப்பாலம் இப்பூவுலகின் பொக்கிசம் என்கிறது நாடி. •••
•••இராவணாசுரனின் இறந்துபோன உடல் கல்பேழையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இராவணாசுரன் கொல்லப்பட்டது உண்மை. கொன்றது இராமபிரான்.
••• பதப்படுத்தப்பட்டு ஒரு கல் பேழையில் வைக்கப்பட்ட இராவணாசுரனின் உடல் இலங்கையில் உள்ள “உஸ்ஸன் கொட’’
(Ussan guda) என்ற இடத்தில் கண்டறியப் பட்டிருக்கிறது.
••• தனுஷ்கோடியை பேய் நகரமென மக்கள் பேசும் காலம் வரும் என்ற அகத்தியர் வாக்கு முக்காலும் உண்மையே. தனுஷ்கோடியை Ghost City என்றே இன்றைய ஆய்வாளர்கள் வர்ணிக்கின்றனர்.
••• அகத்தியன் ஜீவநாடி வாக்கு பதிவுப்படி, முதல் நாளில் கடலில் பதினான்கு யோசனை தூரமும், இரண்டாம் நாளில் இருபது யோசனை தூரமும், மூன்றாம் நாளில் இருபத்தொரு யோசனை தூரமும், நான்காம் நாளில் இருபத்து இரண்டு யோசனை தூரமும், கடைசி நாளான ஐந்தாம் நாளில் இருபத்து மூன்று யோசனை தூரமும் பாலத்தை கட்டி முடித்தனர் வானர சேனைகள்.
••• இந்த பாலம் ஐந்தே நாட்களில் கட்டி முடிக்கப்பட்டது என்றால் அன்றைய கட்டிடகலை விஞ்ஞானம், இன்றைய நவீன விஞ்ஞானத்தை மிஞ்சுகின்றது என்பதில் ஏது சந்தேகம்.
‘இதிகாசம்’ என்ற சொல்லுக்கு இது இப்படி நடந்தது என்று பொருள் ஆகும். நாடியில் அகத்தியன்,
“சீதையின் பதி வாடிய வதனொடுத்தொடு
தர்பத்து உண்ணாது மலர்ந்தே
சாய்ந்திருக்க புல்லாணி பூமியில்
கண்டோமயர்ந்தோம் - அவதாரத்தானே
அவலமென அயர ஆகும் விதியை
யென் சொல்ல”
••• என்ற செய்யுள் மூலம் திருப்புல்லாணி என்ற ஊரில், தர்ப்ப புல்லை நிறையப் போட்டு படுக்கையை வானர சேனை தயார் செய்து தர, அதனில் மலர்ந்து - வானை நோக்கி, கவலை தோய்ந்த மனமும், முகமும் கொண்டு இராமர் படுத்திருந்தார் என்கின்ற செய்தியை அறிய முடிகிறது.
••• அவதாரம் என்றால் தேவர் என்ற நிலையில் இருந்து மனிதர் என்ற சற்று குறைந்த நிலையில், அறிந்தே- சத்யத்தின் நிலை நிறுத்தல் பொருட்டு தேவர்கள் வாழ்ந்தார்கள்.
••• அதன்படி அவதாரபுருசன் இராமன் என்பது விளங்குகிறது. இன்றும் திருப்புல்லாணியில் தர்ப்ப சயன பெருமாள் கோவில் உண்டு.
••• மேலும் இந்த இராமர் சேதுவின் அருகிலிருக்கும் பாறையில் பொக்கிசங்கள் புதைந்திருக்கின்றன என அமெரிக்க நிறுவனம் ழிகிஷிகி கூறியமை கவனிக்கத்தக்கது. அகத்தியர் தமது பாடலில்,
“ஊறுதருமொரி கொண்ட படிவந் தன்னால்
பக்குவமாய் மின்காந்தங் கண்டு
யளி காண சிலாங்கிய வளவு தூவி
நாளியில் கூட்ட வேதுவாமே
களவுஞ் செய யெண்ணுவார் கோடியே”
.என்ற வரிகள் நோக்கத்தக்கது. இங்கு தோரியம் என்ற அரிய வகை தாது படிவங்கள், ராமர் சேதுவின் அடியில் நிறைய கிடக்கின்றன.
•••இவற்றை உரிய முறையில் எடுத்து உபயோகித்தால், ஒவ்வொரு மணிநேரத்திலும் நான்கு லட்சம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யலாம். இதனை ழிகிஷிகி உள்ளிட்ட பற்பல பன்னாட்டு நிறுவனங்கள் அறியும்.
••• எனவே இராமர் பாலம் தெய்வீகமான பூமியின் புராதனச் சின்னமொடு விலைமதிப்பற்ற படிவபாறை சொத்துக்களை உள்ளடக்கியது என்பது திண்ணம்

மகாபாரதப்போரின்போது பீஷ்மர் வகுத்த போர் விதிமுறைகள்

மகாபாரதப்போரின்போது பீஷ்மர் வகுத்த போர் விதிமுறைகள்:
மகாபாரதபோரில் கௌரவப்படைகளுக்கு தலைமைத்தாங்கியவர், பீஷ்மர் ஆவார். இவரேதான் மகாபாரப்போரில் விதிகளை வகுத்தார் . இதற்கு
கௌர‍வர் மற்றும் பாண்டவர்களும் அவர்களின் கூட்ட‍ணி படைக ளும் கட்டுப்பட்ட‍ன•
போர் விதிமுறைகள் வகுத்தல்
கையில் ஆயுதம் இல்லாத ஒரு வீரன், மீண்டும் ஆயுதம் ஏந்தும் வரை அவனை எதிர்த்து போரிடக்கூடாது.
ஆண்மையற்றவனிடம் (அரவாணி) போரிடக்கூடாது.
போரில் காயம் பட்டு போர்க்களத்திலிருந்து வெளியேறிய வீரனை தாக்கக் கூடாது.
மேலும் காயம் அடைந்த வீரனை காக்கும் போர் வீரனையும் எதிர்த்து போரிடக்கூடாது.
போரிடாத வீரனை தாக்கக் கூடாது.
கதிரவன் உதயத்திலிருந்து, மறையும் வரைமட்டுமே போரிடவேண் டும். கதிரவன் மறைந்த பின் போரிடக் கூடாது.
போரில் சரணடைந்தவர்களைக் கொல்லாமல், போரில் வென்றவர் கள் காக்க வேண்டும்.
காலாட்படை வீரர்கள், காலாட்படை வீரர்களுடன் மட்டும் போரிட வேண்டும்,
அதுபோல் குதிரைப்படை, யானைப்படை, தேர்ப்படை வீரர்கள் தத்த மது தகுதிக்குரிய வீரர்களுடன் மட்டும் போரிட வேண்டும்.
மகாரதர்கள், மகாரதர்களுடனும், அதிரதர்கள், அதிரதர்களுடன் மட்டுமே போரிட வேண்டும்.
போரின் இரவு வேளையில் இரு அணிப் படையினர், ஒருவரை ஒருவர் சந்திக்க விரும்பினால் சந்திக்கலாம்.
பீஷ்மர் வகுத்த இப்போர்விதிகளை கௌரவப் படையினரும், பாண் டவப் படையினரும் முதலில் ஏற்றுக் கொண்டாலும் இந்தப் போர் விதிகளை, அபிமன்யுவின் வீரமரணத்திற்குப் பின் இரு படைகளும் கடைப்பிடிக்கவில்லை.

ஒருவன் தூய்மையான மனமில்லாமல் வஞ்சக எண்ணத்துடன், மற்றவர்களுக் கு அன்னமிட்டால், அந்த எண்ணம் உண் டவனின் ரத்தத்தில் கலந்துவிடும்

இது ‘பீஷ்மர்’ சொன்ன‍து: “நான் துரியோதனன் இட்ட சோற்றை உண்டதால் எனக்குள் அவனது தீய குணமே குடிகொண்டு விட்டது!”
பிதாமகர் பீஷ்மர் அம்புப் படுக்கையில் படுத்தவாறே, உத்திரியான புண்ய காலத்தை எதிர்நோக்கிக்கி, காத் திருந்தார். அவர் மரணமடைவதற்கு முன் , அவரிடமிருந்து நீதி, நேர்மை, அரசியல் தர்மம் முதலியவற்றைக் கேட்டு தெரிந்து கொள்ள தர்மர் விரும்பினார் . தனது சகோதரர்கள் நால்வரையும் அழைத்துக் கொண்டு பாஞ்சாலி யுடன் பிதாமகரிடம் சென்றார் .
பாண்டவர்கள் அனைவரும் பீஷ்மரை வணங்கி “தாங்கள் எங்களுக்கு நீதி, நேர்மை, அரசியல் தர்மம் பற்றி உபதேசிக்க வேண்டும்” என்று கேட்க , பாஞ்சாலி மட்டும் பல மாகச் சிரித்தாள் . அதில் கேலி கலந் திருப்பதை உணர்ந்த தர்மர், “நம் தந் தைக்கு இணையான பிதா மகரைப் பார்த்து ஏன் சிரிக்கிறா ய் ? ” என்று கடுமையாகக்கேட்டார்.
“துரியோதனனின் சபையில் துச்சாத னன் என்னை மானபங்கம் செய்த போது, கண்ணன் மட்டும் வந்து காப்பாற்றியிருக்காவிட்டால் என் கதி என்னவாகியிருக்கும்? தர்மம் தெரிந்த பீஷ்மர், அந்தச் சபையில் அமர்ந்து, வேடிக்கை பார்த்துக் கொண் டிருந்தாரே தவிர , துரியோ தனனை எதிர்த்து ஒரு வார்த்தையா வது பேசி னாரா ? இப்படிப்பட்டவரிடம் நீங்கள் அரசியல் தர்மத்தைப் பற்றி கேட்கிறீர் களே என்று நினைக்கும் போது சிரிக்காமல் என்ன செய்வது ? ” என்று சொல்ல, பாண்டவர்கள் என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதி யாக இருந்தார்கள் .
அப்பொழுது பீஷ்மர் பேசினார். “பாஞ்சாலி சொன்னது முற்றிலும் உண்மை. அவள் கேள்விக்கு நான் பதில் சொல்லியே ஆக வேண் டும். அப்போதுதான் உங்களுக்கும் , உலகத்துக்கும் உண்மை என்ன வென்று தெரியும் .
துரியோதனன், அன்னமிடுவதில் உய ர்ந்தவன் . எந்த நேரத்தில் யார் வந்தா லும் அவர்கள் வயிறு நிறைய உபசரி ப்பான். ஆனால், அவன்செய்யும் அன் னதானம் பரிசுத்தமான மனதுடன் செய்யப்பட்டதல்ல . சுயநலத்துக்காக அன்னதானம் என்ற பெயரில் உணவி ட்டு, அவர்களை தன் காரியங்களுக் கு பயன்படுத்திக் கொள்வான். உண்டவர்கள் செஞ்சோற்றுக் கடன் தீர்க்க, வேறு வழியில்லாமல் அவன் சொல்படி நடப்பார்கள் . இத ற்கு சல்லியன் ஓர் உதாரணம் .
” ஒருவன் தூய்மையான மனமில்லாமல் வஞ்சக எண்ணத்துடன், மற்றவர்களுக் கு அன்னமிட்டால், அந்த எண்ணம் உண் டவனின் ரத்தத்தில் கலந்துவிடும். நான் துரியோதனன் இட்ட சோற்றை உண்டதா ல் எனக்குள் அவனது தீய குணமே குடி கொண்டு விட்டது . அத னால்தான் பாஞ் சாலியை மானபங்கம் செய்தபோது எது வும் பேச முடியாமல் வாயடைத்து அமர்ந்திருந்தேன் .”
” ஆனால் இப்போது , பார்த்தன் அமர்த்திக் கொடுத்த அம்புப்படுக்கை யில் படுத்த பிறகு எனது உடலிலி ருந்த கெட்ட ரத்தம் முழுவதும் வெளி யேறி விட்டது. அத்தோடு தீயசக்தி களும் வெளியேறிவிட்டன . இப்போ து என் உடலில் தூய்மையான ஆன் மா மட்டும்தான் இருக் கிறது. எனவே நான் அரசியல் தர்மத்தைப் பற்றிப் பேசத் தகுதியுள்ள வன் . கேளுங்கள் ” என்று சொல்லி பாண்டவர்களுக்கு அரசியல் தர்மத்தை உபதேசம் செய் தார் .
அதனால்தான் அந்தக் காலத்தில் விவரம் தெரிந்த சான்றோர்கள் , சாதுக்கள், பண்டிதர்கள் பரான்ன த்தை அதாவது வெளியில் சாப்பிடு வதை விரும்ப மாட்டார்கள்.

Tuesday, July 29, 2014

முருக பெருமானின் பெரு விழாக்கள்!

முருக பெருமானின் பெரு விழாக்கள்!
* தைப் பூசம் = அன்னையிடம் வேல் பெற்ற நாள்
* பங்குனி உத்திரம் = திருமண நாள்
* வைகாசி விசாகம் = பிறந்த நாள்
* ஆடிக் கிருத்திகை = அறுவரும் ஒன்றான நாள்
* ஐப்பசியில் சஷ்டி = சூர சங்காரம்
* கார்த்திகையில் கார்த்திகை = தீபம் ஒளியாய் காணும் நாள்

கலிபுருஷன் தங்கும் இடம் ...............

கலிபுருஷன் தங்கும் இடம் ...............
கலியுகம் துவங்கியதும், அதன் அதிபதியான கலிபுருஷன், அர்ஜுனனின் பேரனான பரீட்சித்து மகாராஜா முன் வந்தான்.
""மகாராஜா! நான் புதிதாக பூலோகம் வந்தவன். தங்க இடம் கொடுங்கள்,'' என்று கேட்டான்.
""உஹும்...உயர்ந்த மனநிலையுடன் ஆட்சிசெய்யும் என் நாட்டில் உனக்கு இடமில்லை,'' என்று மறுத்தான் பரீட்சித்து. ""அப்படி சொல்லாதீர்கள். நாடு முழுக்க பரவியிருக்க வேண்டுமென நான் கேட்கவில்லை. 
குறிப்பிட்ட இடத்தைச் சொல்லுங்கள்,'' என்று கெஞ்சினான்.
""சரி..மது அருந்தும் இடம், சூதாடுமிடம், மிருகங்களை வதை செய்யும் இடம், ஒற்றுமையில்லாத சகோதர, சகோதரிகள் இருக்குமிடம் ஆகியவற்றில் நீ தங்கலாம்,' 'என அனுமதித்தார் பரீட்சித்து.
""ஒரே நேரத்தில், நான்கு இடங்களில் தங்குவது கஷ்டம். ஏதோ, ஒரு இடத்தைக் குறிப்பிடுங்கள். அங்கே தங்கிக் கொள்கிறேன்,'' என்றான். பரீட்சித்து அவனிடம், ஒரு தங்கக் கட்டியைக் கொடுத்து, ""கலியே! நீ பணத்தில் தங்கியிரு. பணத்தில் நான் சொன்ன நான்கும் இருக்கிறது,'' என்றார்.
கலிக்கு ஏக சந்தோஷம்.
""நன்றி மகாராஜா! இந்த பணத்தில் நான் தங்குவேன். மக்களை அமைதி இழக்கச் செய்வேன். ஆயிரக்கணக்கானவர்கள் என் பிடியில் இருப்பார்கள். அவர்களிடையே கலகத்தை ஏற்படுத்துவேன்,' 'என்று கூறி விடைபெற்றான்.
கலிபுருஷன் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறான், என்பது நம் எல்லாருக்குமே தெரியும்

பித்ருக்களுக்கு வலது தோளில் பூணூலோடும் காரியம் பண்ணி வேண்டும்

சடங்கின் போது, ஏன் பூணூலை இடம், வலம் தோள்களில் மாற்றிக்கொண்டே இருக்கிறோம்? -
மஹா பெரியவா
தெய்வ காரியங்களுக்கு பக்தி வேண்டும். பித்ரு காரியங்களுக்கு சிரத்தை வேண்டும். பக்தியோடு செய்வது யக்ஞம் ; சிரத்தையோடு செய்வது சிராத்தம். தெய்வகாரியங்களைப் பண்ணும்போது சிகையை நன்றாக முடிந்து கொண்டு, யக்ஞோபவீதம் (பூணூல்) இடது தோளில் இருக்கும்படியாக, சிரத்தையோடு செய்ய வேண்டும்.
இதற்காகத்தான் சிகை, யக்ஞோபவீதம் இரண்டும் இருக்கின்றன. சந்நியாசிகளுக்கு இவை இரண்டும் இல்லை. பித்ரு காரியத்தையும், பல தேவதைகளின் உபாஸனையையும் விட்டுவிட்டு, நேரே பரமாத்ம உபாஸனையை எந்தவிதமான லௌகிக அபேக்ஷையும் இன்றிச் செய்பவர்கள் அவர்கள். நேராகவே கடவுளிடம் போகிற பிற மதஸ்தர்களுக்கும் சிகை, யக்ஞோபவீதம் இல்லை.
ஏன் இப்படித் தேவர்களுக்கு இடது தோளில் பூணூலோடும், பித்ருக்களுக்கு வலது தோளில் பூணூலோடும் காரியம் பண்ணி வேண்டும் என்று சொல்கிறேன்:
கிழக்கு முகமாக இருந்து கொண்டே காரியங்களைச் செய்ய வேண்டும். வடக்கு தேவர்களிடம் போகிற திசை, உத்தராயனம் என்பது அதுதான். உத்தரம் என்றால் வடக்கு. தெற்குதான் பித்ருக்கள் இருக்கும் பக்கம். ' தென்புலத்தார் ' என்று திருவள்ளுவர்கூடச் சொல்கிறாரல்லவா ? தக்ஷிணம் என்றால் தெற்கு. தக்ஷிணாயனம் என்பது பித்ரு லோக மார்க்கம்..... ' உத்தராயணம் ' என்பதில் மூன்று சுழி ' ண ' போட்டும், ' தக்ஷிணாயனம் ' என்னும்போது இரண்டு சுழி ' ன ' என்பது ' ண ' வாக மாறிவிடும். இது வியாகரண விதி. தற்காலத்தில் மனம் போனபடி பத்திரிகைகளில் எழுதுவதால் இதைச் சொல்ல நேர்ந்தது.
உத்தராயண தேவ மார்க்கத்தையும், தக்ஷிணாயன பித்ரு மார்க்கத்தையும் பற்றிப் பகவான் கீதையில் சொல்லியிருக்கிறார். நாம் கிழக்குமுகமாக இருந்துகொண்டு பித்ரு காரியம் பண்ணும்போது, எந்தத் தோள் தெற்குப் பக்கமாக இருக்கிறது? வலது தோள்தான். அதனால்தான் பித்ரு காரியத்தில் யக்ஞோபவீதம் அந்தத் தோளின்மேல் இருக்கும்படியாகப் போட்டுக்கொள்ள வேண்டும் என்பது.
" பிரதக்ஷணம் பண்ணுவது " என்கிறோமே, இதற்குக் கூட தக்ஷிண (தெற்கு) திசையை நோக்கி என்றுதான் அர்த்தம். முக்காலே மூன்றுவாசிக் கோயில்களில் ராஜகோபுரம் கிழக்குப் பார்த்தான் இருக்கும். அதற்குள் நுழைந்து நாம் பிரதக்ஷிணம் ஆரம்பிக்கும்போது, முதலில் தெற்குப் பார்க்கத்தான் போவோம்.
இதே மாதிரி, நாம் கிழக்குமுகமாக இருந்துகொண்டு தேவகாரியம் பண்ணும்போது, தேவர்களின் திசையான வடக்கு திசையைப் பார்க்க இருப்பது நம்முடைய இடது தோள்தான்.
அதனால்தான், தேவ காரியங்களில் பூணூல் இடது தோள்மேல் இருக்க வேண்டும் என்பது.

உன்னை விட்டு விலகினால் கடவுளை காணலாம்!

உன்னை விட்டு விலகினால் கடவுளை காணலாம்!

ஒரு மனிதனுக்கு கடவுளைக் காண வேண்டும் என்று ஆசை அவரை எப்படி சந்திப்பது ? கோவிலுக்குப் போ ! என்றார்கள். உடனே புறப்பட்டான்.போகும் வழியில் ஒரு ஞானியை சந்தித்தான். அவர் கேட்டார். எங்கே போகிறாய் ? கடவுளைக் காண போகிறேன் ! எங்கே ? கோவிலில் ! அங்கே போய்... ? அவரை வழிபடப் போகிறேன் ! அவரை உனக்கு ஏற்கனவே தெரியுமா ? தெரியாது ! எந்த வகையிலும் நீ கடவுளை அறிந்திருக்கவில்லை. அப்படி இருக்கும்போது எப்படி நீ அவரை வழிபட முடியும் ? அப்படியென்றால் ... ? உன்னுடைய வழிபாடு வெறும் சடங்காகத்தான் இருக்க முடியும் ! மனிதன் குழம்பிப் போனான். ஞானி தெளிவுபடுத்தினார். ஏ, மனிதனே... நீ செய்யப் போவது உண்மையான வழிபாடு அல்ல. இன்றைக்கு மனிதர்கள் வழிபாடு என்கிற பெயரில் ஆண்டவனிடம் தங்கள் ஆசைகளைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். தங்களது கோரிக்கைகளைக் குரல் மூலம் பட்டியலிட்டுச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். தங்களது புகார்களை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அவ்வளவுதான். நான் கடவுளிடம் அன்பு செலுத்த விரும்புகிறேன். நீ அறியாத கடவுளிடம் எப்படி அன்பு செலுத்த முடியும் ? அப்படியானால்... ஆண்டவனை சந்திக்க என்னதான் வழி ? அவரை நீ சந்திக்க முடியாது. உணர முடியும் ! அதற்கு வழி ?
தியானம். தியானத்துக்கும் கடவுளுக்கும் சம்பந்தம் உண்டா ? இல்லை ! மனிதன் வியப்போடு நிமிர்ந்தான். அவர் சொன்னார் : தியானம் உன் மனத்தோடு சம்பந்தப்பட்டது. அது உனக்குள் ஓர் ஆழ்ந்த மௌனத்தை உண்டு பண்ணும், அப்படிப்பட்ட ஒரு மௌன நிலையில், கடவுள் இருப்பதை நீ உணரத் தொடங்குவாய். உண்மையான தியானத்தின் பின்விளைவே வழிபடுதல் ஆகும். தியானம் செய்பவன் மட்டுமே கடவுளை உணர முடியும். அந்த மனிதனும் ஞானியும் இப்படிப் பேசிக் கொண்டிருக்கும் போதே, வெளிநாட்டுக்காரர் ஒருவர் அங்கே வந்தார். ஞானியின் முன்னால் வந்து பணிபோடு நின்றார். தன்னுடைய தேவையைச் சொன்னார். நான் விரும்புவது அமைதி ஞானி சொன்னார். முதல் இரண்டு வார்த்தைகளை விட்டு விலகு. மூன்றாவது வார்த்தையை நெருங்கலாம் எனக் கூற வந்தவர் யோசித்தார். நான் என்கிற அகங்காரத்தை விலக்குங்கள். நான், என்னுடையது என்கிற ஆசைகளை விலக்குங்கள். அமைதி என்கிற இறைநிலையை நீங்கள் நெருங்கிவிடுவீர்கள். வெளிநாட்டுக்காரருக்கு விளக்கம் கிடைத்தது. மனநிறைவோடு திரும்பிச் சென்றார். கொஞ்ச அந்த அளவுக்கு வேறே யாருக்கும் கிடைச்சிருக்காது!
ஸ்பெஷல் தரிசனம் ! 50 ரூபாய் டிக்கெட் ! சுவாமிக்கு நெருக்கமா போய் சந்நிதியிலே கொஞ்சநேரம் உட்கார முடிஞ்சிது ! அவன் முகத்திலே கடவுளை நெருங்கிவிட்ட பெருமிதம் ! ஞானி கேட்டார் : அப்படின்னா உனக்கும் கடவுளுக்கும் எவ்வளவு தூரம் ? ஒரு பத்தடி தூரம் இருக்கும் அவ்வளவுதான் ! உன் அளவுக்கு வேற யாரும் நெருங்கலையா ? இல்லை ! அந்த வகையில் பார்த்தால் உன்னைவிட கடவுளுக்கு நெருக்கமானவர் வேறொருவர் உண்டு ! யார் அவர் ? அங்கே இருக்கிற அர்ச்சகர் ! வந்தவன் முகத்தில் ஒரு சிறு ஏமாற்றம். சரி சுவாமி, நான் வர்றேன் ! சோர்வோடு நடந்து போனான். அதன் பிறகும் விவாதம் தொடர்ந்தது. இறுதியில் மனிதன் எழுந்தான். திரும்பி நடந்தான். ஞானி கேட்டார். எங்கே போகிறாய் ? வீட்டுக்கு ! கோவிலுக்குப் போகவில்லையா ? இல்லை ! அங்கே போக வேண்டும் என்றுதானே புறப்பட்டு வந்தாய் ? ஆண்டவனை உணர்ந்தபிறகுதான் அவரை வழிபட முடியும் என்பதைப் புரிந்து கொண்டேன். நான், என்னிடம் இருந்து விலகினால் இறைவனை நெருங்கலாம் என்கிற உண்மையை தெரிந்து கொண்டேன். ஞானி கைகளை உயர்த்தினார். ஆன்மிகம் என்பது நெருங்குவது அல்ல, விலகுவது ! எவ்வளவு தூரம் நம்மிடமிருந்து விலகியிருக்கிறீர்களோ, அவ்வளவு தூரம் கடவுளை நெருங்கியிருக்கிறீர்கள் என்பது பொருள் ! 

உருவ வழிபாடு பற்றி .......

உருவ வழிபாடு பற்றி .......
உருவ வழிபாடு பற்றி எத்தனை பதிவுகள் போட்டாலும். இந்த கிறிஸ்துவ, முஸ்லிம் மற்றும் ப(கு)ழுத்தஅறிவு மண்டைகளுக்கு அது ஏறாது. சரி நாங்கள்தான் உருவத்தை வழிபடுகிறோம் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று கேட்டால் அவ்வளவுதான் அதற்கு அவர்கள் தரும் பதில் நம்மை வியக்கும் அளவுக்கு பைபிள் மற்றும் குரான் வசனங்களை போட்டு தள்ளுவார்கள். ஏன்டா சிவனை செய்யிற அதே கல்லுதான் ஏசுவை மற்ற தெய்வங்களையும் செய்யிது அது எப்படி எங்க கடவுள் மட்டும் வெறும் கல்லாகும். சரி அது எதோ உங்க மூளை அப்படி இருக்கு அதவிடுங்க. உருவழிபாடு பற்றி சுவாமி விவேகானந்தர் அருமையான தகவலை தருகிறார் அதை பார்ப்போம்..
'பிரதீகம்', 'பிரதிமா ' என்று இரண்டு சமஸ்கிரதச் சொற்கள் உள்ளன. பிரதீகம் என்றால் நோக்கி வருவது, நெருங்கி வருவது. எல்லா மதங்களிலுமே வழிபாட்டில் பல படிகளைப் பார்க்கிரீகள். இந்த நாட்டிலும் சிலர் மகான்களின் திருவுருவங்களை வழிபடுகிறார்கள். சிலர் குறிப்பிட்ட உருவங்களையும் சின்னங்களையும் வழிபடுகிறார்கள். வேறு சிலர் மனிதர்களைவிட உயர்ந்த ஆவிகளை வழிபடுகிறார்கள். ஆவிவழிபாட்டில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை வேகமாக பெருகி வருகிறது. அத்தகையோர் இங்கே சுமார் என்பது லட்சம்(அப்போதைய கணக்கு) இருப்பதாக நான் படித்தேன். இன்னும் சற்று உயர்ந்த நிலையில் உள்ள தேவதைகளையும் தெய்வங்களையும் வழிபடுபவர்களும் உண்டு ......
இவையெல்லாம் பிரதீக வழிபாடு. இவர்கள் இறைவனை வழிபடவில்லை.ஆனால் இறைநிலைக்கு அருகில் உள்ளதான பிரதீகத்தை வழிபடுகிறார்கள். இவற்றின் வழியாக இறைவனை அடைய முயல்கிறார்கள்.
இந்த பிரதீக வழிபாடு நமக்கு முக்தி தந்து, நம்மைச் சுதந்திரர்கள் ஆக்காது. எந்தப் பொருட்களுக்காக அவற்றை வழிபடுகிறோமோ, அவற்றை மட்டுமே தரமுடியும். எடுத்துகாட்டாக, இறந்துபோன தன் முன்னோர்களையோ, நண்பர்களையோ ஒருவன் வழிபட்டால் ஒருவேளை சில சக்திகளோ, சில செய்திகளோ அவர்களிடமிருந்து கிடைக்ககூடும். வழிபடப்படுகின்ற அவர்களிடமிருந்து கிடைக்கும் அன்பளிப்பே வித்தை அதாவது விசேஷ ஞானம். ஆனால் நமது மிக உயர்ந்த லட்சியமான முக்தி என்பது ஆண்டவனை வழிபடுவதன்மூலம் மட்டுமே கிடைக்க முடியும்.
வேதங்களை விளக்கும்போது சில கீழைநாட்டு அறிஞர்கள் சகுணக் கடவுளைக்கூட ஒரு பிரதீகமாக கருதுகிறார்கள். ஆனால் அப்படியல்ல. சகுணக் கடவுளைப் பிரதீகம் என்று கருத இடமுண்டு; ஆனால் பிரதீகம் என்பது சகுணக் கடவுளும் அல்ல, நிர்க்குணக் கடவுளும் அல்ல. அதை இறைவனாக வழிபடமுடியாது. எனவே தெய்வங்கள், முன்னோர்கள், மகான்கள், ஆவிகள் என்று பல்வேறு பிரதீகங்களை வழிபடுவதால் முக்தி பெறாலம் என்று நினைத்தால் அது பெரும் தவறாகும். மிஞ்சிப்போனால் அவர்களுடைய உதவியால் சில சக்திகளை பெறலாம். ஆனால் இறைவனால்தான் முக்தி தர முடியும். முக்தி தர இயலாதவை என்பதற்காக அவற்றை நாம் கண்டிக்க வேண்டியதில்லை. அந்த வழிபாடும் சில பலன்களைக் கொடுக்கவே செய்கிறது. இவற்றைவிட உயர்ந்த எதையும் அறிந்துகொள்ள இயலாத மனிதன் இந்த பிரதீக வழிபாட்டின்மூலம் சிறிது சக்தியைப் பெறலாம். சிறிது மகிழ்ச்சியை எய்தலாம். ஆனால் நீண்டநாள் அனுபவித்த பிறகு, முக்தி பெரும் தகுதி அவனுக்கு வரும்போது, அவன் தானாகவே இந்த பிரதீகங்களை விட்டுவிடுவான். இவ்வாறு சுவாமிஜி கூறுகிறார்.
ஹிந்துக்கள் வழிபாடும் போது அவர்கள் கல்லே மண்ணே என்று வழிபடுவதில்லை. அந்த உருவத்தை வழிபடுவதன் மூலம் அவர்களுக்கு ஒரு மனநிறைவு ஏற்படுகிறது. நாளடைவில் அது அவர்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்கிறது..

Monday, July 28, 2014

எப்போதும்_பகவானின்_நாமாவை_உச்சரிப்பதால்_என்ன_பலன்?


எப்போதும்_பகவானின்_நாமாவை_உச்சரிப்பதால்_என்ன_பலன்?

நாவை, ஆண்டவன் படைத்தது சாப்பிடுவதற்கும், பேசுவதற்கும் மட்டும் அல்ல. அவன் நாமத்தை, அவனது பெயரை எப்போதும் நாம் உச்சரிக்கவேண்டும் என்று தான். ஆகையால் தான் நம்முடைய நா நாமோடு இருக்கிறதாம்.

கையெழுத்து போடுங்கள்என்றால்ஆஹா பேனாவை எங்கேயோ வைத்து விட்டேன்என்று தப்பிக்கலாம். ‘இறைநாமம் சொல்லுங்கள்என்றால்ஆஹா, நாவை எங்கோ கழற்றி வைத்துவிட்டேன்என்று தப்பிக்க முடியுமா? ‘புத்தகம் படியுங்கள்என்று அலுப்பேற்படுத்துகிற புத்தகம் கொடுத்தால்கண்ணாடியைக் காணோமேஎன்று டபாய்க்கலாம். ஆனால் இறைநாமத்தைச் சொல்லுங்கள் என்று ஒருவர் கேட்டுக்கொள்ளும்போதுஎன் நாவு எங்கே?’ என்று ஏய்க்க முடியாது. அதனால்தான்நாவுண்டு நமோ நாராயணா என்னஎன்கிறார் ஆழ்வார். எப்போதும்ராம்ராம்என்றதால்தான் இறுதி நேரத்திலும்ஹே ராம்என்றார் மகாத்மா காந்தி!

நாம் எந்த பணியை செய்தாலும், ‘சிவ சிவஎன்றோ, ‘ராம் ராம்என்றோ, என்றோ சொல்லியபடி தான் செய்யவேண்டும். சரிஅப்படி செய்வதால் என்ன பலன் கிடைக்கும்? இது தானே உங்கள் கேள்வி.

பக்த துக்காராம் அவர்களின் வாழ்வில் உண்மையில் நடைபெற்ற சம்பவம் ஒன்றை உங்களுக்கு கூறவிரும்புகிறோம்.

இரண்டு பெண்கள் பசுஞ்சாணத்தில் வரட்டி தயாரித்து விற்பனை செய்து பிழைத்து வந்தனர். ஒருசமயம், ஒருத்தி தயார் செய்த வரட்டிகளை, மற்றொருத்தி, அவள் அறியாமல் எடுத்துக் கொண்டாள். இருவருக்கும் இதனால் பிரச்னை ஏற்பட்டது. இந்த சமயத்தில் கிருஷ்ண பக்தரான துக்காராம் அங்கு வந்தார். அவரிடம் திருட்டுக் கொடுத்தவள் முறையிட்டாள். “சுவாமி! நான் கஷ்டப்பட்டு தயாரித்த வரட்டிகளை இவள் திருடிக்கொண்டாள். என்னுடையதை வாங்கித் தாருங்கள்!” என்றாள்.

துக்காராம் அந்த வரட்டிகளை கையில் எடுத்து, ஒவ்வொன்றாக காதின் அருகில் கொண்டு சென்றார்.

பின், ஒரு பகுதியை வலதுபுறமாகவும், ஒரு பகுதியை இடதுபுறமாகவும் வைத்தார்.

உங்களில் வரட்டி தட்டும்போது, ‘விட்டல! விட்டல!’ என சொன்னது யார்?” என்றார்.

திருட்டுக் கொடுத்த பெண், “நான் தான் அவ்வாறு சொன்னேன்”, என்றாள்.

அப்படியானால், வலதுபக்கம் இருப்பவை உன்னுடையவை. இடப்பக்கம் அவளுடையவை!” என்று கூறிவிட்டு, “திருடுவது மாபாவம். இனி அப்படி செய்யாதேஎன்று திருடிய பெண்மணிக்கு அறிவுரை கூறினார்.

ஒரு தொழிலைச் செய்யும் போது, கண்ணனின் திருநாமத்தை யார் உச்சரிக்கிறார்களோ, அது காற்றில் பரவி, அந்த இடம் முழுக்க எதிரொலிக்கும். அவ் வகையில் வரட்டிக்குள்ளும் கண்ணனின் திருநாமங்களில் ஒன்றான விட்டல என்பது ஒலித்தது!!” என்றார்.

திருட்டுக் கொடுத்தவள் தன் பொருளைத் திரும்பப் பெற்றதுடன், கண்ணனின் அனுக்கிரகமும் தனக்கு கிடைத்ததற்காக, நன்றியுடன் கண்ணீர் பெருக்கினாள்.

இப்போது புரிகிறதா அன்றாட வேலைகளை செய்யும்போது இறைவனின் நாமத்தை சொல்வதால் கிடைக்கும் பலனை?

 —