Tuesday, September 27, 2011

கிருஷ்ணன் ஆலிலையில் படுத்திருப்பது ஏன்?

தாவர வகைகளிலேயே மிகவும் உயர்ந்த இடத்தை பெறுவது ஆலமரம். ஆலமரத்தின் நிழலில் அமர்ந்து தான் தட்சிணாமூர்த்தி ஞானம் தருகிறார். பொன், பொருள், குடும்ப சுகம் மட்டுமின்றி மறைந்த முன்னோர்கள் மோட்சம் பெற பிதுர் தர்ப்பணத்துக்குரிய பிண்டம் போடும் சடங்கை ஆலமரத்துக்கு கீழே அமர்ந்து தான் செய்வார்கள்.

எனவே தான் ஞானமும் கர்மத்திற்குரிய பலனையும் தருகின்ற ஆலமரத்தின் இலையில் கண்ணன் படுத்துக் கொண்டான். மேலும் ஆலிலைக்கு ஒரு விசேஷ சக்தி உண்டு. இது வாடினாலும் கூட நொறுங்கிப் போவதில்லை. சருகானாலும் கூட மெத்தை மாதிரி இருக்கும். இதுவும் கண்ணன் ஆலிலையை தேர்ந்தெடுக்க ஒரு காரணம் ஆகும்.

 ஓரளவு காய்ந்த ஆலிலையின் மேல் தண்ணீர் தெளித்தால், அது இழந்த பச்சையை பெறும் சக்தி வாய்ந்தது. கண்ணன் வாடாத வதங்காத ஆத்மா என்பதை இதன்மூலம் நிரூபிக்கிறான். ஆலிலையில் படுத்திருக்கும் கண்ணன் நமக்கு ஒரு பாடத்தையும் போதிக்கிறான். அடே பக்தனே! நீ எதற்கும் கவலைப்படாதே.

 என்னைப் போலவே நீ குழந்தை உள்ளத்துடன் இருந்தால், உலக வாழ்க்கை என்ற கொடுமையான அலையால் தாக்கப்படமாட்டாய். குடும்பம் என்ற சம்சாரக்கடலில் அனுபவிக்கும் இன்ப துன்பங்களை ஒரு விளையாட்டாக எடுத்துக் கொண்டு என்னைப் போல் ஆனந்தமாய் இரு என்கிறான். இதுதான் கண்ணன் ஆலமர இலையில் மிதக்கும் தத்துவம் ஆகும்.

ஸ்ரீலட்சுமி நித்திய வாசம் செய்யும் இடங்கள்

ஸ்ரீலட்சுமி திருமாலின் வட்சத் தலத்தில் நித்திய வாசம் புரிகின்றாள். சுமங்கலிகள், பூரண கும்பம்-மஞ்சள், குங்குமம், திருமண், சூர்ணம், கோலம், சந்தனம், வாழை, மாவிலைத் தோரணம், வெற்றிலை, திருவிளக்கு, யானை, பசு, கண்ணாடி, உள்ளங்கை, தீபம் ஆகிய லட்சுமிகரமான மங்கலப் பொருட்களில் மகா லட்சுமி நித்தியவாசம் புரிகிறாள்.


அழகு, தைரியம், அடக்கம், அறிவு, ஆற்றல், தர்மசிந்தனை, பொறுமை, தெய்வபக்தி, ஐம்புலன் அடக்கம், சத்துவ குணம் இத்தகைய மனோபாவம் உடைய மனிதர்களிடத்தும் திருமகள் நிலையாக வாசம் செய்கின்றாள். தேவர்களிடத்திலும் பிரம்ம ஞானியர்களிடத்திலும் பரமனடியார்களிடத்திலும் பக்தி உள்ளோர் கிருஹங்களிலும், கிருகஸ்தர்களிடத்திலும், பசுக்களிடத்திலும், அந்த பசுக்களை பராமரிக்கும் பெண்களிடத்திலும் ஸ்ரீதேவி நித்யவாசம் புரிகிறாள்.

வில்வ மரம், நெல்லி மரம், துளசி, மஞ்சள் ஆகிய மரம் செடிகளிலும் ஸ்ரீலட்சுமி வசிக்கிறாள். ஸ்ரீ லட்சுமியை வில்வத்தால் அர்ச்சித்து பூஜிப்பது மிகவும் விசேஷம். அவ்வாறு அர்ச்சிக்கும் போது, வில்வத்தை தளப் பக்கமாக பூஜிக்க வேண்டும். ஏன் என்றால் வில்வ தளத்தில் அமிர்த தாரையாக லட்சுமி வாசம் செய்கிறாள். அதேபோல் தாமரை மலரால் பூஜிக்கும் போதும் தாமரையின் பூ உள்ள பக்கமாக பூஜிக்க வேண்டும்.
ஸ்ரீ லட்சுமியை சாமந்திப் பூ, தாழம் பூ இலைகளாலும் அர்ச்சிக்கலாம். ஸ்ரீரங்க சேத்திரத்தின் தல விருட்சம் வில்வம், திருவகீந்தபுரத்து ஹேமாம் புஜநாயகி தாயாருக்கு வில்வார்ச்சனை தான் செய்து வருகிறார்கள். வில்வ மரத்தைப் பிரதசிணம் செய்வது ஸ்ரீ லட்சுமியை வலம் வருவதற்குச் சமமாகும். திருமலை ஸ்ரீ வெங்கடேச பெருமானுக்கு மார்கழி மாதம் வில்வார்ச்சனை செய்கிறார்கள்.

 வைகாசன ஆகமத்தின் போது வில்வம் உபயோகப்படுத்தப்படுகிறது. ஸ்ரீ லட்சுமிக்கு வில்வம் விசேஷம் என்பதனை ஸ்ரீ சுக்தத்தில், ``ஆதித்ய வர்ணே தபஸோதி ஜாதோ வனஸ்பதி ஸ்தவ வ்ருஷோதபில்வ'' என்று சொல்லப்பட்டுள்ளது. சூரியனின் வர்ணத்தோடு கூடியவளே! தபஸ்சினாலே உணரப்படுவளே! உன்னுடைய வனஸ்பதி பில்வ விருசமாகும்'' என்பது பொருள்.
தேபோல் மற்றொரு சுலோகத்தில், தஸ்யபவானி தபாசானு தந்து மாயாந் தராயாஸ்ச பாக்யா அலட்சுமி என்று சொல்லப்பட்டுள்ளது. அதன் பழங்கள், மாயையான தடைகளை நீக்கி, அலட்சுமி நிலைக்கு (திருவின்மை) புறம்பானவர்களாக (லட்சுமிகரமாக) ஆக்கும். ஸ்ரீலட்சுமி தவம் செய்வதற்கு வில்வ மரத்தடியில் எழுந்தருளினாள் என்பதைப் பற்றி வாமன புராணம் சொல்கிறது.
வாமன புராணத்தில் திருமகளின் திருக்கரங்களில் இருந்து வில்வ விருட்சம் தோன்றியது என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் வில்வ பத்திரம் சிவ சொரூபம், வில்ப மர முட்கள் சக்தி வடிவம், கிளைகள் வேதம், வேர்கள் 14 கோடி ருத்ரர்கள். இப்பேற்பட்ட மந்திர சக்தி சொரூபமான வில்வ மரமே ஸ்ரீ லட்சுமி சொரூபமாக விளங்குகிறது என்பது புராணம். நெல்லி மரம் திருமாலின் பேரருளைப் பெற்றது.
அது காரணம் பற்றியே நெல்லி மரத்தை ``ஹரி பலம்'' என்று கூறுவர். நெல்லிக்கனி இருக்கும் இல்லத்தில் ஸ்ரீ லட்சுமி நிரந்தரமாக வாசம் புரிகிறாள். ஒரு அந்தணன் மகாலட்சுமிக்கு ப்ரீ தியான நெல்லி மரத்தடியில் உயிர் நீத்த புண்ணியத்தால் வைகுண்ட பிராப்தியை பெற்றான். இதேபோல் நெல்லிக்கனியை பிசை இட்டதற்காக, கடும் வறுமையில் வாடிய குடும்பத்தவர்களுக்கு கனகமணி கட்டி களை வர்சித்தவள் மகாலட்சுமி.

 குபேர பட்டணத்தில் நெல்லி விருட்சங்களை நெடுகிலும் காணலாம். அதனால் தான் நெல்லி மர வழிபாட்டால் குபேர சம்பத்தைக் கொடுக்கும் என்பது திருஷ்டாந்தம் துளசி செடியிலும் லட்சுமி எழுந்தருளியுள்ளாள். இதேபோல் மஞ்சளிலும் ஸ்ரீ லட்சுமி வாசம் செய்கிறாள். மஞ்சள் செடியை வளர்ப்பது விசேஷம்.
மங்களகரமான பொருள் மஞ்சள் என்பதால், எல்லாவிதமான சுபமுகூர்த்தங்களுக்கும் மஞ்சள் உபயோகப்படுகிறது. மஞ்சள் கலந்த மந்திராசத்தை - மங்களார்த்தி என்று கூறப்படும் மஞ்சள் நீர், மஞ்சள் பூசிய மாங்கலய சரடு என்று பல மங்களகரமான பொருட்களோடு, மஞ்சள் கலந்து சர்வ மங்களமாகிறது.

பெண்களின் நெற்றியிலும், வகிடிலும் இட்டுக் கொள்ளும் மஞ்சள் குங்குமம் பெண்களின் சவுபாக்கிய சின்னமாக விளங்குகிறது. குங்குமத்துடன் விளங்கும் பெண்களை மகாலட்சுமி மாதிரி இருக்கிறாள் என்று கூறுவது நமது மரபு. ஸ்ரீ வைஷ்ணவர்கள் அணிந்து கொள்ளும் திருமண், ஸ்ரீ சூர்ணம் அவற்றிலும் திருமாலும், ஸ்ரீமகளும் வாசம் செய்கின்றனர். ஸ்ரீ சூர்ணத்தை ஹரித்ராசூர்ணம் என்று கூறுவர்.
மஞ்சளினால் செய்யப்பட்டது தான் ஸ்ரீ சூர்ணம். அதுவே ஸ்ரீ லட்சுமி. அதேபோல் திருமண் என்றால் திவ்யமான மண் என்று பொருள். திருமண் திருமாலின் அம்சமாகக் கருதப்படுகிறது. திருமண்ணையும் ஸ்ரீ சூர்ணத்தையும் சேர்த்து நெற்றியில் இட்டுக் கொள்வது தான் சிலாக்கியம். ஒன்றை விட்டு ஒன்றை மட்டும் இட்டுக் கொள்ளுதல் கூடாது.

 ஸ்ரீ ராமச்சந்திர பிரபுவையும், சீதா பிராட்டியாரையும் சேர்த்துப் போற்றிப் பணிந்த ஆஞ்சநேய மகாப் பிரபுவும், அவரது திருவடியைச் சிந்தனையிலே கொண்ட பக்தர்களும் சகல சவுபாக்கியங்களுடனும் வாழ்கின்றனர். இல்லங்களை ஸ்ரீ லட்சுமி கடாட்சத்துடன் வைத்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் அவள் நம்முடன் வாசம் செய்வாள்.
வைகறைக் துயில் எழுந்து, நீராடி, சூரியன் உதயமாவதற்கு முன்னால் வீட்டு வாயிலை பசு சாணத்தால் மெழுகி, கோலமிட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைக்க வேண்டும். கோலம் போடும் பழக்கம் என்பது பண்டுதொட்டு நமது பாரத நாட்டில் இருந்து வருவதால் தான் மாக்கோலம், இழை கோலம், புள்ளிக்கோலம், வர்ணப் பொடிகளைத் தூவி போடும் ரங்கோலி போன்ற கோலங்கள் மிகவும் பிரபலமாக உள்ளன.

மாக்கோலத்தை சுற்றி காவி பூசுவதும் பழக்கத்தில் உள்ளது. புராண காலத்தில் யாக சாலைகளில் விதவிதமான வண்ணக் கோலங்களை போட்டு, அக்கோலங்களின் மீது ஹோம குண்டங்களை அமைப்பதை பழக்கமாக கொண்டிருந்தனர். ஸ்ரீ லட்சுமி தேவி தீபமங்கள ஜோதியாக விளங்குகிறாள்.

 இல்லத்திலே விளக்கு எரிவதால் லட்சுமி நிரந்தரமாக வாசம் புரிவாள்.

ஹயக்ரீவர்

ஹயக்ரீவர்


ஹயக்ரீவர் குதிரை முகமும், மனித உடலும் கொண்ட விஷ்ணுவின் வடிவம் என வைணவர்களால் வணங்கப்படுகிறது. ஹயக்ரீவரை கல்வி தெய்வம் என குறிப்பிடுகின்றார்கள். சில இடங்களில் ஹயக்ரீவரின் தொடையில் லட்சுமி அமர்ந்திருப்பதைப் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வடிவத்தினை லட்சுமி ஹயக்ரீவர் என்கின்றனர்.

அலையாழி அறிதுயிலும் மாயவன் விஷ்ணுவின் பல்வேறு அவதாரங்களில் மிக முக்கியமானது, சிறப்பானது, பிரசித்தி பெற்றது மனித உடலும், குதிரை முகமும் கொண்ட ஹயக்ரீவ மூர்த்தியாகும். சொத்து, பணம், நகை, அஷ்ட ஐஸ்வர்யங்கள் எல்லாம் நிலையற்றவை. இடம் விட்டு இடம் செல்லும். இதனால்தான், ‘செல்வம்’ என்று அழைக்கப்படுவதாக சொல்வார்கள். ஆனால், ஞானம் எனும் கல்விச் செல்வத்துக்கு அழிவே கிடையாது. மேலும் காசு, பணம், நகை, நிலம் போன்ற செல்வங்கள் கொடுக்கக் கொடுக்க குறையக்கூடியது. கல்விச் செல்வம் நேர் மாறானது.

ஒருவருக்கு கல்விச் செல்வத்தை வழங்க வழங்க, ஞானமும் கல்வியும் நமக்கு அதிகரிக்கும். நம் கடைசி வரை வரக்கூடியது கல்வி செல்வமாகும். அத்தகைய கல்விக்கு அதிபதியாக சரஸ்வதி தேவியை வணங்குகிறோம். சரஸ்வதி தேவிக்கும் ஒரு குரு உண்டு. அவர்தான் ஸ்ரீஹயக்ரீவ மூர்த்தி. அறியாமை எனும் இருளில் இருந்து ஞானம் எனும் ஒளியை நோக்கி அழைத்து செல்லும் ஞான ஆசிரியனாக ஹயக்ரீவர் அருள்புரிகிறார்.கல்விச் செல்வத்தோடு சேர்த்து பொருள் செல்வத்தை வழங்கும் விதமாக சில தலங்களில் தனது மடியில் லட்சுமி தேவியுடன் இவர் அருள்புரிகிறார்.

இந்த வடிவம் ‘லட்சுமி ஹயக்ரீவர்’ எனப்படுகிறது. கல்வியிலும் இசை, நடனம் போன்ற கலைகளிலும் சிறந்து விளங்குவதற்கு ஞானத்தின் இருப்பிடமாக விளங்கும் ஹயக்ரீவரை வணங்கலாம். படிப்பில் சற்று மந்தமாக இருப்பவர்கள், ஞாபக சக்தி குறைவாக உள்ளவர்கள், பேச்சு சரியாக வராதவர்கள் இவரை வணங்கினால் சகல குறைகளும் நீங்கி ஞானம் அதிகரிக்கும். செல்வாக்குடன் சொல்வாக்கும் நிறைந்த வக்கீல்கள், விற்பனை பிரதிநிதிகள், புரோகிதர்கள், ஜோதிடர்கள், ஆசிரியர்கள், பேச்சாளர்கள், கவிஞர்கள் ஆகியோர் ஹயக்ரீவரை வணங்கி வழிபட்டால் தடைகள், தடங்கல்கள் நீங்கி தொழில் சுபிட்சமாக நடக்கும்.

ஜோதிட சாஸ்திரப்படி புதன் திசை, சந்திர திசை நடப்பவர்கள், 4, 9-ம் அதிபதிகளின் திசை நடப்பவர்கள் புதன்கிழமையன்றும், திருவோண நட்சத்திரத்திலும் ஹயக்ரீவருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து ஏலக்காய் மாலை சாற்றி வழிபடலாம். செங்கல்பட்டு அருகில் செட்டிப் புண்ணியம், கடலூர் அருகில் திருவந்திபுரம், பாண்டிச்சேரி அருகில் முத்தியால்பேட்டை ஆகியவை ஹயக்ரீவ ஸ்தலங்கள் ஆகும். கடலூர் மாவட்டம் திருவந்திபுரத்தில் உள்ள தேவநாத சுவாமி கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும்.

ஔஷத மலையில் ஸ்வாமி வேதாந்த தேசிகனுக்கு ஹயக்ரீவர் எப்படி காட்சி தந்தாரோ, அதே கோலத்தில் இங்கு இவரை தரிசிக்கலாம். புதன்கிழமையும், திருவோண நட்சத்திரமும் சேர்ந்து வரும் நாளில் ஹயக்ரீவரை வழிபட ஞானமும் அறிவும் மேம்படும். ஞாபக சக்தி கூடும். ‘ஓம் வாகீஸ்வராய வித்ம ஹேஹயக்ரீவாய திமஹி தன்னோ ஹம்ஸ ப்ரசோதயாத்’ என்ற ஹயக்ரீவ காயத்ரி மந்திரத்தை மாணவர்கள் தினமும் சொல்லி வந்தால், படிப்பில் கவனமும் நாட்டமும் அதிகரித்து அதிக மதிப்பெண் பெறலாம். நாளை ஹயக்ரீவ ஜெயந்தி ஆகும். இந்நன்னாளில் அவரை வழிபட்டு அருள் பெறுவோம்

ஹயக்ரீவர் மூல மந்திரம்

உக்தீக ப்ரண வோத்கீத

ஸர்வ வாகீச்வரேச்வர

ஸர்வ வேத மயோச்ந்த்ய

ஸர்வம் போதய! போதய!


- என்று ஜெபம் செய்யவும்
 
ஸ்ரீஹயக்ரீவர் ஸ்லோகம்
 
ஞானானந்த மயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதிம்
ஆதாரம் சர்வ வித்யானாம் ஹயக்ரீவம் உபாஸ்மகே
- இதை தினமும் 108 முறை சொன்னால் நல்லது. முடியாவிட்டால் 18 முறையாவது சொல்ல வேண்டும், முக்கியமாக வியாழக்கிழமைகளில் சொல்வது நல்லது.
 

கல்வியில் நல்ல முன்னேற்றம் தரும் ஹயக்ரீவர் ஸ்தோத்திரம்





ஓம்கார உத்கீத ரூபாய ருக்யஜீ ஸாம மூர்த்தயே

நம: அஸ்து தேவதேவாய வாஞ்சிதார்த்த ப்ரதாயினே:

வேத வேதாந்த வேத்யாய வேதாஹரணே கர்மணே

ஸர்வாஸ்த்வ மஹாமோஹ பேதினே ப்ரஸ்மணே நம:

தினமும் 30 நிமிடம் வீதம் முழு ஆண்டு முடியும் வரையிலும் அல்லது 90 நாட்களுக்கு வீட்டுப்பூஜையறையில் இதை ஜபித்து வர வேண்டும்.கல்வியில் பின் தங்கியுள்ள மாணவ மாணவியர் இதை ஜபிக்க கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.
 
 
ஸ்ரீ ஹயக்ரீவர் அஷ்டோத்ரம்
ஹயக்ரீவோ மஹாவிஷ்ணு: கேஸவோ மதுஸூதந:
கோவிந்த: புண்டரீகாக்ஷோ விஷ்ணுர் விஸ்வம்பரோ ஹரி:

ஆதித்யஸ் ஸர்வவாகீஸ: ஸர்வாதாரஸ் ஸநாதந:
நிராதாரோ நிராகாரோ நிரீஸோ நிருபத்ரவ:

நிரஞ்ஜநோ நிஷ்களங்கோ நித்யத்ருப்தோ நிராமய:
ஸிதாநந்தமயஸ் ஸாக்ஷி ஸரண்ய: ஸர்வதாயக:


ஸ்ரீமான் லோகத்ரயாதீஸ: ஸிவஸ் ஸாரஸ்வதப்ரத:
வேதோத்தர்த்தா வேதநிதி: வேதவேத்ய: ப்ரபூதந:

பூர்ண: பூரயிதா புண்ய: புண்யகீர்த்தி பராத்பர:
பரமாத்மா பரம் ஜ்யோதி: பரேஸ: பாரக: பர:

ஸர்வவேதாத்மகோ வித்வான் வேதவேதாந்த பாரக:
ஸகலோபநிஷத் வேத்யோ நிஷ்கலஸ்ஸர்வ ஸாஸ்த்ரக்ருத்

அக்ஷமாலா ஜ்ஞானமுத்ரா யுக்தஹஸ்தோ வரப்ரத:
புராணபுருஷ: ஸ்ரேஷ்ட: ஸரண்ய: பரமேஸ்வர:

ஸாந்தோதாந்தோ ஜிதக்ரோதோ ஜிதாமித்ரோ ஜகந்மய:
ஜந்ம ம்ருத்யுஹரோ ஜீவோ ஜயதோ ஜாட்யநாந:

ஜபப்ரியோ ஜபஸ்துத்யோ ஜாபகப்ரியக்ருத் ப்ரபு:
விமலோ விஸ்வரூபஸ்ச விஸ்வகோப்தா விதிஸ்துத:

விதிர்விஷ்ணுஸ் ஸிவஸ்துத்யோ ஸாந்தித: க்ஷாந்திபாரக:
ஸ்ரேய: ப்ரத: ஸ்ருதிமய: ஸ்ரேயஸாம் பதிரீஸ்வர:

அச்யுதோநந்த ரூபஸ்ச ப்ராணத ப்ருதிவீபதி:
அவ்யக்தோ வ்யக்தரூபஸ்ச ஸர்வஸாக்ஷி தாமோஹர:

அஜ்ஞாநநாஸகோ ஜ்ஞாநீ பூர்ணசந்த்ர ஸமப்ரப:
ஜ்ஞாநதோ வாக்பதிர்யோகீ யோகீஸஸ் ஸர்வகாமத:

மஹாயோகி மஹாமௌநீ மௌநீஸ: ஸ்ரேயஸாம்பதி:
ஹம்ஸ: பரமஹம்ஸஸ்ச விஸ்வகோப்தா விராட் ஸ்வராட்:

ஸுத்தஸ்படிக ஸ்ங்காஸோ ஜடாமண்டல ஸம்யுத:
ஆதிமத்யாந்த ரஹித: ஸர்வவாகீஸ்வரேஸ்வர:

ஸ்ரீ ஹயக்ரீவர் அஷ்டோத்தரம்
ம்பூர்ணம்
இறை வழிபாடு என்பது ஒரு கேலிக்குரிய விஷயமாகி விட்ட இந்த காலத்தில், நமது இந்த இணைய தளத்தில் எந்த கடவுளை வழிபட்டால் , என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று நெடுந் தொடர் கட்டுரைகளை பிரசுரிக்க விருக்கிறோம். எப்போது மனித முயற்சிகள் தோற்றுப்போய் , ஏதாவது வழி கிடைக்காதா எனும் ஏங்கும்போது, இறைவனின் திருவடிகளை தவிர இளைப்பாற வேறு இடமே இல்லை. இதை ஒவ்வொருவரும் நம் வாழ்வில் எதோ ஒரு தருணத்தில் நிச்சயமாக உணர்ந்தே இருப்பர்.
நாம் செய்த கர்ம வினைகளுக்கேற்ப நமக்கு துன்பங்களும், துயரங்களும் நம் வாழ்வில் தொடரும். ஆனால், தீவிர இறைவழிபாடு , அந்த கர்மங்களின் தாக்கத்தை பெருமளவில் குறைத்து , கஷ்டங்களை தாங்கும் சக்தியை நமக்கு கொடுக்கும்.
சிக்கல்கள் தீர்ந்தவுடன் , திரும்பவும் நம் மனம் முருங்கை மரமேறி விடுகிறது. ஏழரை, அஷ்டம சனி இருப்பவர்கள் மட்டும் , அந்த சூட்டை உணர்ந்து தங்கள் வாலை சுருட்டி கொண்டு , ஒழுங்கான பிள்ளைகளாய் கடவுளை பற்றிக்கொண்டு இருக்கிறார்கள். வாங்கிய அடி , அவர்களை கொஞ்சம் பக்குவப் படுத்துகிறது என்றே தோன்றுகிறது. சரி விஷயத்துக்கு வருவோம்.
இறை வழிபாடு - ஹயக்ரீவர் காயத்ரி, துதி, ஸ்ரீ ஹயக்ரீவாஷ்டோத்தரசத நாமாவளி
நாம் முதலில் தொடங்க விருப்பது ஹயக்ரீவர். திருமாலின் மிக சக்தி வாய்ந்த மூர்த்தங்களில் முக்கியமானவர்கள் ஹயக்ரீவரும், நரசிம்ஹா மூர்தியுமே என்பது என் அபிப்பிராயம். ஆனால், இதுவரை ஒரு ரகசியம் போலவே மறைத்துவைக்கப் பட்டிருக்கிறது. ஹயக்ரீவர் , கலைமகளுக்கே குரு வாக மதிக்கப் படுகிறார்.
கல்வி பயிலும் குழந்தைகள் , நல்ல ஞானம் பெற ஹயக்ரீவரை வழி பட, அவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்று மிக நல்ல நிலை அடைவது உறுதி. சினிமா, தொலைக்காட்சி போன்ற வெகுஜனத் தொடர்பு உடைய துறைகளை தேர்ந்து எடுப்பவர்கள் , இவரை வழிபட , அவர்கள் தடைகள் நீங்கி , பிரபலம் அடைவர். இது ஏன் என்பது, அவரது அவதார வரலாற்றை அறிந்து, அவரை வழிபட நம் வாழ்வில் படிப்படியாக ஏற்படும் மலர்ச்சியை வைத்து உணர்ந்து கொள்ள முடியும்.




அவதாரம் :
பகவான் விஷ்ணு, பிரளய காலத்தில் இந்த உலகையும் மக்களையும் தன்னுள்ளே தாங்கி, ஆலிலை மேல் பாலகனாய் பிரளயகால சமுத்திரத்தில் யோக நித்திரை செய்து வந்தார். பின் உலகைப் படைப்பதற்காக தன் நாபிக்கமலத்திலிருந்து பிரம்மனை படைத்து நான்கு வேதங்களையும் உபதேசித்தார். பிரம்மனும் படைப்புத்தொழிலை ஆரம்பித்தார்.ஒருமுறை பெருமாளின் நாபிக்கமலத்தில் உள்ள ஓர் இதழில் இரண்டு தண்ணீர்த்திவலைகள் தோன்றி, மது, கைடபன் என்ற அசுரர்களாக மாறினர். இவர்கள் பெருமாளிடமிருந்து பிறந்த தைரியத்தில், பிரம்மனிடமிருந்த வேதங்களை அபகரித்து, தாங்களே படைப்புத்தொழில் புரிய ஆசைப்பட்டனர். குதிரை முகம் கொண்டு, பிரம்மனிடமிருந்து வேதத்தைப் பறித்துக்கொண்டு, பாதாளத்தில் ஒளித்து வைத்தனர்.வேதங்களை இழந்த பிரம்மன் பெருமாளைச் சரணடைந்தார். பெருமாள் வேதங்களை மீட்க பாதாள உலகம் வர, அங்கே அசுரர்கள் குதிரை வடிவில் இருப்பதைக்கண்டார். உடனே தானும் குதிரை முகம் கொண்டு அவர்களுடன் போரிட்டு, வேதங்களை மீட்டு பிரம்மனிடம் கொடுத்தார். அசுரர்கள் கைபட்டதால் தங்களது பெருமை குன்றியதாக நினைத்த வேதங்கள், தங்களை புனிதமாக்கும்படி பெருமாளை வேண்டின. குதிரைமுகத்துடன் இருந்த பெருமாள் வேதங்களை உச்சிமுகர்ந்ததால், அந்த மூச்சுக்காற்றில் வேதங்கள் புனிதமடைந்தன.
தியான காயத்ரி :
ஓம் வாகீஸ்வராய வித்மஹே ஹயக்ரீவாய தீமஹி
தன்னோ ஹம்ஸஹ் ப்ரசோதயாத்
துதி :
ஞானானந்த மயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதிம்
ஆதாரம் சர்வ வித்யானாம் ஹயக்ரீவம் உபாஸ்மகே

பொருள் : ஞானத்தின் இருப்பிடமும், ஆனந்த மயமானவரும்; படிகம் போன்ற நிர்மலமான குணம் உள்ளவரும்; எல்லாக் கலைகளுக்கும், கல்விக்கும் ஆதாரமாகத் திகழ்பவருமான ஹயக்ரீவரை வணங்குகிறேன் என்று சொன்னபடியே தரிசியுங்கள். நீங்கள் ஜெயிப்பது நிஜம்!
ஸ்ரீ ஹயக்ரீவாஷ்டோத்தரசத நாமாவளி
ஓம் ஹயக்ரீவாய நம:
ஓம் மஹாவிஷ்ணவே நம:
ஓம் கேஸவாய நம:
ஓம் மதுஸூதநாய நம:
ஓம் கோவிந்தாய நம:
ஓம் புண்டரீகாக்ஷõய நம:
ஓம் விஷ்ணவே நம:
ஓம் விஸ்வம்பராய நம:
ஓம் ஹரயே நம:
ஓம் ஆதித்யாய நம:
ஓம் ஸர்வவாகீஸாய நம:
ஓம் ஸர்வாதாராய நம:
ஓம் ஸநாதநாய நம:
ஓம் நிராதாராய நம:
ஓம் நிராகாராய நம:
ஓம் நிரீஸாய நம:
ஓம் நிருபத்ரவாய நம:
ஓம் நிரஞ்ஜநாய நம:
ஓம் நிஷ்களங்காய நம:
ஓம் நித்யத்ருப்தாய நம:
ஓம் நிராமயாய நம:
ஓம் சிதாநந்தாய நம:
ஓம் ஸாக்ஷிணே நம:
ஓம் ஸரண்யாய நம:
ஓம் ஸர்வதாயகாய நம:
ஓம் ஸ்ரீமதே நம:
ஓம் லோகத்ரயாதீஸாய நம:
ஓம் ஸிவாய நம:
ஓம் ஸாரஸ்வதப்ரதாய நம:
ஓம் வேதோத்தர்த்ரே நம:
ஓம் வேதநிதயே நம:
ஓம் வேதவேத்யாய நம:
ஓம் புரதநாய நம:
ஓம் பூர்ணாய நம:
ஓம் பூரயித்ரே நம:
ஓம் புண்யாய நம:
ஓம் புண்யகீர்த்தயே நம:
ஓம் பராத்பரஸ்மை நம:
ஓம் பரமாத்மநே நம:
ஓம் பரஸ்மை ஜ்யோதிஷே நம:
ஓம் பரேஸாய நம:
ஓம் பாரகாய நம:
ஓம் பரஸ்மை நம:
ஓம் ஸகலோநிஷத்வேத்யாய நம:
ஓம் நிஷ்களாய நம:
ஓம் ஸர்வஸாஸ்த்ரக்ருதே நம:
ஓம் அக்ஷமாலா ஜ்ஞாநமுத்ரா யுக்தஹஸ்தாய நம:
ஓம் வரப்ரதாய நம:
ஓம் புராண புருஷாய நம:
ஓம் ஸ்ரேஷ்டாய நம:
ஓம் ஸரண்யாய நம:
ஓம் பரமேஸ்வராய நம:
ஓம் ஸாந்தாய நம:
ஓம் தாந்தாய நம:
ஓம் ஜிதக்ரோதாய நம:
ஓம் ஜிதாமித்ராய நம:
ஓம் ஜகந்மயாய நம:
ஓம் ஜராம்ருத்யுஹராய நம:
ஓம் ஜிவாய நம:
ஓம் ஜயதாய நம:
ஓம் ஜாட்யநாஸதாய நம:
ஓம் ஜபப்ரியாய நம:
ஓம் ஜபஸ்துத்யாய நம:
ஓம் ஜபக்ருதே நம:
ஓம் ப்ரியக்ருதே நம:
ஓம் ப்ரபவே நம:
ஓம் விமலாய நம:
ஓம் விஸ்வரூபாய நம:
ஓம் விஸ்வகோப்த்ரே நம:
ஓம் விதிஸ்துதாய நம:
ஓம் விதயே நம:
ஓம் விஷ்ணவே நம:
ஓம் சிவஸ்துத்யாய நம:
ஓம் ஸாந்திதாய நம:
ஓம் க்ஷõந்தி பாரகாய நம:
ஓம் ஸ்ரேய: ப்ரதாய நம:
ஓம் ஸ்ருதிமயாய நம:
ஓம் ஸ்ரேயஸாம் பதயே நம:
ஓம் ஈஸ்வராய நம:
ஓம் அச்யுதாய நம:
ஓம் அனந்த ரூபாய நம:
ஓம் ப்ராணதாய நம:
ஓம் ப்ருதிவீபதயே நம:
ஓம் அவ்யக்தாய நம:
ஓம் வ்யக்த ரூபாயை நம:
ஓம் ஸர்வஸாக்ஷிணே நம:
ஓம் தமோஹராய நம:
ஓம் அஞ்ஞாநநாஸகாய நம:
ஓம் ஜ்ஞாநிநே நம:
ஓம் பூர்ணசந்த்ரஸமப்ரபாய நம:
ஓம் க்ஞாநதாய நம:
ஓம் வாக்பதயே நம:
ஓம் யோகிநே நம:
ஓம் யோகீஸாய நம:
ஓம் ஸர்வகாமதாய நம:
ஓம் மஹாமௌநிநே நம:
ஓம் மஹாயோகிநே நம:
ஓம் மௌநீஸாய நம:
ஓம் ஸ்ரேயஸாம்நிதயே நம:
ஓம் ஹம்ஸாய நம:
ஓம் பரம ஹம்ஸாய நம:
ஓம் விஸ்வகோப்த்ரே நம:
ஓம் விராஜே நம:
ஓம் ஸ்வராஜே நம:
ஓம் ஸுத்தஸ்படிக ஸங்காஸாய நம:
ஓம் ஜடாமண்டல ஸம்யுதாய நம:
ஓம் ஆதிமத்யாந்தரஹிதாய நம:
ஓம் ஸர்வவாகீஸ்வரேஸ்வராய நம:

 

Thursday, September 22, 2011

பக்தி கதை--மரம் நடுங்க மழை பெறுங்க

ஒரு நாட்டிற்கு, பக்கத்து நாட்டு அரசர் ஒருவர் விஜயம் செய்வதாக அறிவித்தார். பக்கத்து நாடு நட்பு நாடு என்பதாலும், அதிகமான நிதியுதவி செய்கிறது என்பதாலும் வரவேற்பு ஏற்பாடுகள் தடபுடலாக செய்யப்பட்டது. மன்னர் அரண்மனைக்குள் நுழைய தேர் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், தேர் உள்ளே நுழையத் தடையாக, அரண்மனை வாசலில், நூறாண்டுகளுக்கும் மேலாக ஆலமரம் ஒன்று தழைத்து நின்றது. அதன் விழுதுகள் ஆங்காங்கே ஊன்றி நின்றன. மரத்தை வெட்டினால் தான், தேர் தடையின்றி உள்ளே நுழையும் என அமைச்சர்கள் மன்னரிடம் சொன்னார்கள். மன்னர் மறுத்துவிட்டார். அமைச்சர்களே! மரத்தை வெட்ட வேண்டும் என்ற யோசனையை நிராகரிக்கிறேன். அதற்கு மாற்றாக கோட்டைச் சுவரின் ஒருபகுதியை இடியுங்கள்.
அங்கே வாசல் அமைக்கலாம். அதன் வழியே தேர் உள்ளே நுழையட்டும். நமது தேர்களும் கூட இனி அவ்வழியே வரட்டும், என்றான். கோட்டையை இடித்து வழி ஏற்படுத்த அதிக செலவாகும். மரத்தை நம் வேலையாட்களைக் கொண்டே வெட்டி விடலாமே! என்றனர் அமைச்சர்கள். அமைச்சர்களே! கோட்டை வாசல் கட்ட கல்லும், மணலுமே தேவை. அதை பத்தே நாளில் கட்டி விடலாம். அதற்கு செலவு அதிகமாகும் என்பது நிஜமே! அதை நாம் சம்பாதித்து விடலாம். ஆனால், ஒரு மரத்தை உருவாக்க நம்மால் முடியுமா! இயற்கையாகவே வளர்வது! அதற்காக எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் தெரியுமா? மேலும், இது பலருக்கு நிழல் தருகிறது. மழை பெய்யவும் மரங்கள் அவசியம், என்றான். அமைச்சர்களால் பதில் சொல்ல முடியவில்லை. கோட்டைச்சுவரை இடிக்கும் ஏற்பாட்டில் இறங்கிவிட்டனர். மரம் வளர்ப்பதின் அவசியம் புரிகிறதா!

பக்தி கதை -ஊருக்கு ஒரு நல்லவன்

குரு÷க்ஷத்திர யுத்தம் நடந்து கொண்டிருந்தது. துரோணர் மிக வீரமாக போரிட்டார். அவரைக் கொல்ல கிருஷ்ணர் ஒரு உபாயம் செய்தார். புத்திரபாசம் மிக்க துரோணரை நிலைகுலையச் செய்ய, அவரது மகன் அஸ்வத்தாமன் இறந்துவிட்டதாக பொய் சொல் என தர்மரைத் தூண்டினார். தர்மர் மறுக்கவே, சரி! அஸ்வத்தாமன் என்ற யானை இறந்து விட்டதாக துரோணரின் காதில் பட்டும் படாமலும் விழுவது போல் சொல், என்றார். தர்மரும் அவ்வாறே செய்ய மகன் தான் இறந்தான் என நினைத்து துரோணர் போர்க்களத்தில் சாய்ந்தார். இதனால் கொடிய பாவம் தர்மரை பிடித்துக் கொண்டது. அவர் இறந்ததும், இந்த பாவத்திற்குரிய பலனை அனுபவிக்க நரகத்திற்கு இழுத்துச் சென்றனர். தர்மர் அங்கு வந்ததும் நரகவாசிகள் ஆனந்தம் அடைந்தனர். தர்மரே! தர்மவானான உமது பாதம் பட்டதுமே, நரகத்தில் நாங்கள் அனுபவித்த கொடுமைகள் தீர்ந்தது போல் உணர்கிறோம். நீர் இங்கேயே தங்கியிருக்க வேண்டும், என்றனர்.
தர்மருக்குரிய தண்டனை நேரம் முடிந்ததும், அவரை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்ல கிங்கரர்கள் வந்தனர். தர்மரோ அவர்களுடன் செல்ல மறுத்துவிட்டார்.நான் இங்கு வந்தததால், இந்த நரகவாசிகள் நிம்மதியாக இருப்பதாக உணர்கின்றனர். அவர்களுக்கு நான் செய்த புண்ணியபலனை தானம் செய்கிறேன். அவர்களை சொர்க்கத்துக்கு கூட்டிச் செல்லுங்கள், என்றார். கிங்கரர்களும் அவ்வாறே புஷ்பக விமானங்களை வரவழைத்து சொர்க்கத்துக்கு அவர்களை அனுப்பினர். கடைசியாக வந்த விமானத்தில், தர்மரையும் ஏறச்சொன்னார்கள். நான் தான் புண்ணியத்தை தானம் செய்து விட்டேனே! என்னால் எப்படி வர முடியும்? என்றார். புண்ணியத்தையே நீர் தானம் செய்தீரே! அந்த தானம் தானங்களில் மிக உயர்ந்தது. அதற்குரிய பலனாக சொர்க்கம் செல்லலாம், என்றனர். ஒரு நல்லவன் இருந்தால் போதும். உலகில் மழை கொட்டும்.

மனித உடலில் பஞ்ச பூதங்கள்!

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் பஞ்சபூதங்கள் மனித உடலிலும் உள்ளன. ரோமம், தோல், தசை, எலும்பு, நரம்பு ஆகியவை நிலத்தின் தன்மை கொண்டவை. ரத்தம், கொழுப்பு, பித்தம், கழிவுநீர் என்பவை நீரின் இயல்பு உடையவை. பசி, தாகம், தூக்கம் இவை நெருப்புத் தன்மை உடையவை. அசைவு, சுருக்கம், விரிவு ஆகியவை காற்றின் இயல்பைக் கொண்டவை. வயிறு, இதயம், மூளை என்பவை ஆகாயத்தின் தன்மை கொண்டவை. உடலில் மறைபொருளாக அரைப் பங்கும், நிலம், நீர், நெருப்பு, காற்று ஒவ்வொன்றின் அரைக்கால் பங்கும் என்ற விகிதத்தில் ஆகாயம் உள்ளது.

திருமணத்தில் அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது ஏன்?

இந்திய தேசத் திருமணங்களில், அம்மி மிதித்து அருந்ததி காட்டும் வழக்கம் உண்டு. வசிஷ்டா என்ற பெயருக்கு உயிர்மூச்சுடன் உறுதியான மனம் கொண்டவன் என்ற பொருளும், அருந்ததி என்ற பெயருக்கு கணவனின் எண்ணம் அறிந்து கற்பு நெறியுடன் வாழ்பவள் என்ற பொருளும் புராணத்தில் கூறப்பட்டுள்ளது. வஸ்து என்றால் பஞ்சபூதங்கள் என்றும், வசிஷ்தா என்றால் பஞ்சபூதங்களில் ஐக்கியமானவன் என்றும் பொருள் உண்டு. திருமண பந்தத்தில் இணையும் நாள்வரை, மணப்பெண்ணானவள் தன்னையும் தன் உடலையும் காமக்கண்ணுடன் பிறர் பார்த்ததால், திருமண நாளில் தனது உடலை அக்னிக்குள் சமர்ப்பித்து தன்னைப் பரிசுத்தப்படுத்திக்கொள்வதுடன், தன்னைத் திருமணம் செய்துகொள்பவளின் பாவங்களையும் அதே அக்னியில் சாட்சியாக நீக்கி, பரிசுத்தப்படுத்தி, தன் ஆற்றல் எனும் ஆக்ஞை சக்கரத்தை கணவனுக்கு முழுமையாகக் கொடுத்து புருவ மத்தியில் திலகமாக ஏற்றுக்கொள்கிறாள்; கணவனிடம் சரணாகதி அடைகிறாள். பெண்ணின் கழுத்தில் மங்கல நாண் சூடிய கணவன் மணப்பெண்ணைப் பார்த்து, இனி நான் உனது உயிர்மூச்சாகவும் கல்லைப் போல மன உறுதியுடனும் இருந்து உன் வாழ்க்கைக்கு வழிகாட்டுவேன் என்பதை, வசிஷ்ட மகரிஷியின் சாட்சியாக உன் காலை அம்மிமீது வைத்து அதன் சாட்சியாக உன் காலில் மெட்டியைச் சூட்டுகின்றேன் என்று கூறுகின்றான். மணப்பெண்ணானவள், தன் கழுத்தில் மங்கல நாண் சூடிய கணவனுக்கு அருந்ததி நட்சத்திரத்தைக் காட்டி அருந்ததியைப் போல் ஏழு ஜன்மங்களிலும் உமக்கு மட்டும் மனைவியாக இருப்பேன் என்று சத்யப்பிரமாணம் செய்கின்றாள். அக்னியில் பிறந்த பெண், அக்னியாலேயே பரிசுத்தப்படுத்திக்கொண்டு ஆணையும் பரிசுத்தப்படுத்தி திருமணம் எனும் தெய்வீக பந்தத்துக்குள் இணைந்து

பெண்கள் மஞ்சள் கயிறு அணியாமல் தங்கச் சங்கிலியில் திருமாங்கல்யம் அணிவது சரியா?

மாங்கல்ய தந்துனா என்று திருமணத்தில் மந்திரம் சொல்லி தாலி கட்டப்படுகிறது. தந்து என்றால் மஞ்சள் கயிறு என்று பொருள். திருமாங்கல்ய சரடு என்றும் இதனைச் சொல்வார்கள். கணவன் இல்லாதவரை விதந்துஎன்று குறிப்பிடுவார்கள். அதாவது மாங்கல்ய கயிறு இல்லாதவள் என்று பொருள். மந்திர உச்சரிப்போடு கட்டப்படுகிற மஞ்சள்கயிறைத் தான் பெண்கள் அணிய வேண்டும். விருப்பமுள்ளவர்கள் திருமாங்கல்யத்தைக் கயிற்றிலும், மற்றவற்றை சங்கிலியிலும் அணிவதும் வழக்கம். எப்படியோ மஞ்சள் கயிறு அணிந்து தான் ஆக வேண்டும்.

கலியுகம் எப்போது முடியும்?

கலியுகம் முடிய இன்னும் 4,26,896 ஆண்டுகள் உள்ளன. அப்போது உலகம் முழுமையாக இருக்காதாம். இப்போது கலியுகத்தின் 5104ம் ஆண்டு தான் நடக்கிறது. மொத்தம் 4,32,000 ஆண்டுகள். இப்போதே கலியுகத்தின் கொடுமை எல்லை மீறி போய் விட்டது. இனி காட்டுவாசிகள் போல நாகரீகமற்று போய் விடும் அந்த பழைய காலம் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இந்த யுகத்தின் முடிவில் தர்மத்தை நிலைநாட்ட திருமால் கல்கி அவதாரம் எடுப்பாரென்று புராணங்கள் கூறுகின்றன. கல்கி என்பதன் பொருள் காலம் அல்லது முடிவிலி ஆகும்

ஆஞ்சநேயருக்கு வடை மாலை, வெண்ணெய் சார்த்துவது ஏன்?

நமது உடல் தசையால் ஆனது. தசை வளர்ச்சிக்கு உளுந்து முக்கிய காரணமாகிறது. ஒல்லியாக இருப்பவர்கள் இட்லி, தோசை, உளுந்துவடை சாப்பிட்டால் சதைப்பிடிப்பு ஏற்படும். ஆனால், சதையாலான இந்த உடம்பு எதற்காவது பயன்படுமா? எனவே, பயனற்ற இந்த உடலை உனக்கே அர்ப்பணிக்கிறேன் ஆஞ்சநேயா என்ற தத்துவார்த்தத்தின் அடிப்படையிலேயே உளுந்துவடை மாலை அணிவிக்கிறோம். அனுமானுடைய தாய் அஞ்சனாதேவி தன் மகன் திடமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க உளுந்து வடைசெய்து கொடுத்ததாக ஐதீகம். உளுந்து எலும்புகளுக்கு நல்ல போஷாக்கு.
வெண்ணெய் சாத்துதல்: ராம ராவண யுத்தம் நடக்கிறது அப்போது ராமரையும் லக்குமணரையும் தன் தோளில் சுமந்து கொண்டு சென்றார் அனுமான் அப்போது ராவணன் சராமாரியாய் அம்பு தொடுக்க சக்திமிக்க அம்பால் அவர் தாக்கப் பட்டார், அந்தக் காயத்திற்கு மருந்தாக தன் உடம்பில் வெண்ணெய் பூசிக் கொண்டாராம். வெண்ணெய் சீக்கிரமாக உருகும் தன்மை உடையது அந்த வெண்ணை உருகுவதற்கு முன்பாகவே நாம் நினைத்த காரியம் நடந்து விடும் என்ற நம்பிக்கை, அதனால் வெண்ணெய் சார்த்தும் பழக்கம் உள்ளது,

கோகுலாஷ்டமி அன்று கிருஷ்ணனை எவ்வாறு வழிபட வேண்டும்?

எப்போதெல்லாம் தர்மம் அழிந்து அதர்மம் பூமியில் தலையெடுக்கிறதோ அப்போதெல்லாம் நான் தோன்றுவேன். கொடியவர்களை அழித்து பக்தர்களைக் காப்பதற்காகவும், தர்மத்தை நிலைநாட்டுவதற்காகவும் யுகம்தோறும் அவதரிப்பேன், என்பது கீதைநாயகன் கிருஷ்ணரின் அருள்வாக்கு. இப்படியொரு நிலையைச் சீர்படுத்துவதற்காக துவாபரயுகத்தில் அவர் அவதரித்தார். தர்மநெறிதவறி நடந்த கொடிய அரசர்களிடம் இருந்து உலகைக் காப்பதற்காக குரு÷க்ஷத்திர யுத்தத்தை நடத்தினார். மகாபாரதம் என்னும் மகத்தான இதிகாசத்தில் இவருடைய வரலாறு இடம்பெற்றுள்ளது. முழுமுதற்கடவுளாகிய மகாவிஷ்ணுவே கிருஷ்ணராக வசுதேவரின் மகனாகப் பிறந்தார். யதுகுலத்தின் தலை வனான சூரசேனன் மதுராநகரை ஆட்சி செய்து வந்தார். அவரது மகனான வசுதேவர், தேவகர் என்பவரின் மகளான தேவகியை திருமணம் செய்து மகிழ்ச்சியில் திளைத்தார். தேவகியின் ஒன்று விட்ட சகோதரன் கம்சன். அவன் மகாகெட்டவன். உக்கிரசேனன் என்பவரின் மகன். தந்தையையே கொடுமைப்படுத்தியவன். ஆனால், தங்கை தேவகி மீது அன்பு கொண்டவன். அவன் புதுமணத்தம்பதியரை தேரில் அழைத்துக் கொண்டு வீதியில் வந்து கொண்டிருந்தான். அப்போது, ஆகாயத்தில் அசரீரி ஒலித்தது.
மூடனே கம்சா! உன் சகோதரிக்கு தேரோட்டிச் செல்கிறாயே! அந்தத்தங்கையின் எட்டாவது பிள்ளை உன்னைக் கொல்லப் போகிறான்! என்றது. கோபமடைந்த கம்சன், தங்கை என்றும் பாராமல் தேவகியைக் கொல்ல வாளை எடுத்தான். வசுதேவர் அவனிடம், கம்சா! உன் தங்கையால் உனக்கு ஒரு கெடுதலும் நேராது. அவளுக்குப் பிறக்கப்போகும் குழந்தைகளை உன்னிடமே ஒப்படைத்து விடுகிறேன். அவர்களை நீ என்ன வேண்டுமானாலும் செய்துகொள்!, என்று வாக்களித்தார். சமாதானமடைந்த கம்சன் அவர்கள் இருவரையும் சிறையில் அடைத்தான். அவர்களுக்குப் பிறந்த ஆறு குழந்தைகளை கம்சன் தன் கையாலே கொன்றழித்தான். பரம்பொருளான மகாவிஷ்ணு, ஏழாவது கர்ப்பத்தை வசுதேவரின் இன்னொரு மனைவியான ரோகிணியின் வயிற்றில் வளரச் செய்தார். அவரே, பலராமராக ஆயர்பாடியில் பிறந்தார். மகாவிஷ்ணு, எட்டாவது குழந்தையாக ஆவணி மாதம் அஷ்டமி நாள் நள்ளிரவில் வசுதேவர், தேவகி தம்பதியருக்கு குழந்தையாகப் பிறந்தார். அதே நேரத்தில் விஷ்ணுவின் மாயசக்தியான அம்பிகை, ஆயர்பாடியில் வசித்த நந்தகோபனுக்கும், யசோதைக்கும் மகளாகப் பிறந்தாள். வசுதேவரின் ஆத்ம நண்பராக விளங்கியவர் நந்தகோபன். குழந்தை பிறந்ததும், விஸ்வரூபம் எடுத்து தேவகி, வசுதேவர் தம்பதியருக்கு தெய்வீக வடிவத்தைக் காட்டியது. நான்கு கைகளிலும் சங்கு, சக்கரம், கதாயுதம், தாமரை மலர் ஒளிவீசின.
மஞ்சள்நிறப் பட்டாடை, ஸ்ரீவத்சம், கவுஸ்துபமணி ஆகியவையும் அவருக்கு அழகு செய்தன. சிறையில் இருந்த தேவகியும், வசு தேவரும் பரம்பொருளே தங்களுக்குப் பிள்ளை யாகப் பிறந்திருப்பதை அறிந்து மகிழ்ந்தனர். அவர் வசுதேவரிடம், தந்தையே! என்னை ஆயர்பாடிக்கு எடுத்துச் செல்லுங்கள். உங்கள் நண்பர் நந்தகோபரின் மனைவி யசோதைக்குப் பிறந்த யோக மாயா என்னும் பெண் குழந் தையை இங்கு கொண்டு வந்து விடுங்கள், என்று கட்டளையிட்டு,தன் தெய்வீகக்கோலத்தை மறைத்து,சாதாரணக் குழந்தையாக மாறினார். அப்போது சிறையின் கதவுகள் தானாகத் திறந்தன. காவலர்கள் தூக்கத்தில் ஆழ்ந்தனர். தனக்கு பிறந்த கண்ணுக்கு கண்ணான கண்ணனைத் தூக்கிக் கொண்டு வசுதேவர் ஆயர்பாடிக்குக் கிளம்பினார். அப்போது பலத்த மழை பொழிந்தது. ஆதிசேஷன், குழந்தை நனையாதபடி குடையாக வந்து நின்றார். யமுனை ஆறு இரண்டாகப் பிளந்து வழி விட்டது. அதை எளிதில் கடந்த வசுதேவர், நந்தகோபன்மாளிகையில் கண்ணனை ஒப்படைத்து விட்டு, யோகமாயாவை எடுத்துக் கொண்டு மதுரா வந்து சேர்ந்தார். கம்சன் குழந்தையைக் கொல்ல உள்ளே வந்தான். பெண் குழந்தை பிறந்துள்ளதை எண்ணி ஏமாந்தான். ஏனெனில், ஆண் குழந்தையால் மட்டுமே அவனுக்கு அழிவு ஏற்படும் என்பது அசரீரி வாக்கு. இருப்பினும், சந்தேகத்துடன் அந்தப் பெண் குழந்தையின் கால்களைப் பிடித்து சுழற்றி வானில் வீசினான். அவள் காளியாய் மாறி, உன்னைக் கொல்லப்பிறந்த கண்ணன் ஆயர்பாடிக்கு சென்று விட்டான், என்று எச்சரித்து மறைந்தாள். இவ்வாறு அநியாயத்தை ஒழிக்க அவதரித்த கண்ணன் பிறந்த நாளையே கிருஷ்ண ஜெயந்தி என்று கொண்டாடுகிறோம். இந்நாளில் பாகவதம், பகவத்கீதை ஆகியவற்றை பாராயணம் செய்து பூரண அருள் பெறுவோம்.
எவ்வாறு வழிபட வேண்டும்: பொதுவாக குழந்தை கிருஷ்ணனுக்கு விருப்பமான பட்சணங்கள், வெண்ணெய், பால், திரட்டுப்பால், பழங்கள் ஆகியற்றை வைத்து, கிருஷ்ணன் காலடி வரைந்து வழிபடுவதே எங்கும் சகஜமாக இருக்கிறது. அறிவாற்றல், நற்புத்தி, நேர்மை, சமயோஜித புத்தி ஆகியவற்றின் மொத்த வடிவமான பகவானை வழிபட்டு அவர் காட்டிய கீதை வழி நடக்க முயற்சிப்பதே இப்பண்டிகையின் தத்துவார்த்தம்.

பூஜையின் போது சுண்டலுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது ஏன்?

பூஜையின் போது சுண்டலுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. பொதுவாக இறைவனை நினைத்து உபவாசம் இருப்பதே மேலானது. இந்நேரத்தில் புரதச்சத்து மிகுந்த சமச்சீர் உணவான சுண்டலை சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியம். நீராவியில் வேக வைப்பதால் சத்து குறையாது. நோயாளிகளுக்கும் கருவுற்ற பெண்களுக்கும் சுண்டல் அற்புதமான உணவு. மேலும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான தானிய வகை சுண்டல் சமைத்தால், நவக்கிரகங்களையும் திருப்திபடுத்தலாம்.
ஞாயிறு (சூரியன்)- அவித்த கோதுமை கலந்த சுண்டல், திங்கள் (சந்திரன்)- பாசிப்பயிறு, அப்பளம் கலந்த புட்டு, செவ்வாய்- துவரை சுண்டல், புதன்- பயறு சுண்டல், வியாழன்- கொண்டைக்கடலை சுண்டல், வெள்ளி- மொச்சை சுண்டல், சனி- எள் சேர்த்த சுண்டல், ராகு- உளுந்து சுண்டல், கேது- கொள்ளு சுண்டல்.

பக்தி என்றால்.......

இறைவனிடம் அதைக்கொடு, இதைக்கொடு என்று கேட்கிறார்கள். காந்தக் கல்லோடு எப்படி ஊசி போய் ஒட்டிக் கொள்கிறதோ, பதிவிரதையின் மனமானது பர்த்தாவினிடத்தில் போய் கவிந்து கொள்கிறதோ, நதியானது மகாசமுத்திரத்தில் கலந்து விடுகிறதோ... அதுபோல், கடவுளுடன் நமது மனமும் கலந்து விட வேண்டும். நமக்கு அனுக்கிரஹம் செய்கிற, பரமாத்வினிடத்தில், தன்னை அறியாமல் போய் நிற்க வேண்டும். அதற்கு காரணமே இருக்கக்கூடாது. காரணம் என்று வந்தால் அது வியாபாராமாகி விடும். இறைவனிடம் எதைக் கேட்டாலும் அது வியாபாரம் தான்! ஏதோ ஒன்றுக்கொன்று கொடுப்பது போல,செல்வத்தைக் கொடு, பக்தி செய்கிறேன், என்று இறைவனிடம் பரிமாறிக் கொள்வதனால் வியாபாரமாகிவிடும். அப்படியில்லாமல் எதையுமே நினைக்காது, ஈஸ்வரனிடத்தில் போய் சேருவதையே நினைத்து தன்னை அறியாமல் ஓடுகிற சித்த விருத்தி இருக்கிறதே, அதற்கு தான் பக்தி என்று பெயர்.

கோயில்களில் மணியடிப்பது எதற்காக?

மணிச்சத்தம் அதிரும் போது ஓம் என்ற பிரணவம் எழும். ஆத்மார்த்த சிந்தனையுடன், இறைவனுடன் கருத்தொமிருத்து கேட்டால் இந்த நாதத்தைக் கேட்கலாம். இதற்கு எல்லாம் நானே என்பது பொருள். இருப்பதெல்லாம் இறைவனே என்ற பொருளை உணர்த்துவதே மணிச்சத்தம்.

கடவுளின் ஆயுதங்களை பூஜிப்பது சரியா?

ஆயுதங்களை தனித்து பூஜிப்பது இந்து மதத்தின் தனிச்சிறப்பு வாய்ந்த கலாசாரம். தீயசக்திகளை ஆயுதங்களைக் கொண்டே தெய்வங்கள் அழித்திருப்பதாக புராணங்கள் வாயிலாக அறிகிறோம். இந்த ஆயுதங்களை தெய்வமாக வழிபடுவதும், அரசனின் போர்வாளை அவ்வரசனாக எண்ணுவதும் மரபு. ராஜஸ்தான் பகுதி அரச பரம்பரையினர் மணமகன் இல்லாத போதும் கூட அவனது போர்வாளை மணமகனாக எண்ணி, மணமகளை மாலையிடச் செய்வர். இதுபோலவே முருகப்பெருமானின் வேலாயுதமும், பெருமாளின் சங்கு, சக்கரமும், சிவசக்தியின் சூலாயுதமும், இன்னும் பிற தெய்வங்களின் ஆயுதங்களும் பூஜைக்குரியவனாக அமைந்துள்ளது. இந்த அடிப்படையில் தான் ஆயுதபூஜை கொண்டாடுகிறோம்.

கோயிலுக்கு செல்ல இயலாதவர்களுக்கு மட்டும்!

வீடுகளில் விரதம் இருப்பவர்கள் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் கோயிலுக்கு செல்ல நேரம் கிடைக்காமல் இருக்கலாம். சிலருக்கு உடல்நிலை ஒத்துழைக்காது. இதற்காக வருத்தப்பட வேண்டியதில்லை. குத்துவிளக்கில் ஒரு முகம் அல்லது ஐந்து முகம் ஏற்றிவைத்து அதை மூன்று முறை வலம் வந்தாலே கோயிலுக்கு சென்று வந்ததாக பொருளாகும். ஆனால் இந்த சடங்கை கோயிலுக்கு செல்ல முடியாத பட்சத்தில் மட்டுமே செய்ய வேண்டும். கோயிலுக்கு செல்ல நேரமிருந்தும் வீட்டில் இந்த வழிபாட்டை செய்யக்கூடாது.

மாவிலைத் தோரணம் கட்டுவதன் தத்துவம் ?

மாவிலை ஒரு கிருமிநாசினி. இதற்கு துர் தேவதைகளை வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுக்கும் சக்தியும் உண்டு. மேலும் மாவிலை அழுகுவது கிடையாது. முறையாக காய்ந்து உலரும். இதுபோல், வாழ்க்கையும் கெட்டுப்போகாமல் நீண்டகாலம் நடைபெற்று முற்றுபெற வேண்டும் என்ற நம்பிக்கையுடன், மங்கலம் பெருக மாவிலைத் தோரணம் கட்டுகிறோம்.

ஓற்றுமையாய் வாழ வழி?

சிலநேரங்களில் நன்றாக இருக்கும் குடும்பங்களில் கூட சூறாவளியாக புயல் வீசி விடுவதுண்டு. பல்வேறு பிரச்னைகளில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமலோ, அனுசரணை இல்லாததாலோ குடும்ப அமைதிக்கு பங்கம் வந்து விடுகிறது. கணவன்- மனைவி, பெற்றோர்- பிள்ளைகள் உறவு கூட பாதிக்கப்படுகிறது. இவர்கள்
மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலை
கண்ணில் நல்லஃதுறும் கழுமல வளநகர்
பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே

என்ற தேவாரப்பாடலை 12 முறை பாராயணம் செய்து வரவேண்டும். விநாயகர், முருகன், சிவன்,பார்வதி ஆகிய நால்வரும் சேர்ந்திருக்கும் சிவகுடும்ப படம் வைத்து இப்பாடலைப் பாடுவது சிறந்த பரிகாரம். செவ்வாய், வெள்ளியில் இவ்வழிபாட்டை செய்யலாம். கோயில்களில் சுவாமி, அம்மன் சந்நிதிகளில் விளக்கேற்றுவதும் குடும்ப ஒற்றுமைக்கு வழி வகுக்கும்.

வாழைப்பழத்தின் மகிமை தெரியுமா?

வாரம் ஒரு நாள் முழுவதும் வாழைப்பழங்களாகவே உண்டு வேறு எந்த உணவுகளையும் பானங்களும் அருந்தாமல் உபவாசம் போல் இருக்கலாம். நம் உடலில் சேர்ந்துவிடும் அமிலங்களை அழித்து வெளியேற்றுவதில் வாழைப்பழம் ஈடு இணைஇல்லாமல் செயல் புரிகிறது, இதர உணவுகளுடன் உண்ணப்படும் வாழைப்பழம் முழுமையாக செயல்பட இயலுவதில்லை. ஒருநாள் முழுவதும் வாழைப்பழம் மட்டும் உண்டால், மிக விரைவில் ரத்தம் சுத்த மடையும் இதேபோல், சாத்துக்குடி மட்டும் ஒருநாள் முழுவதும், ஆரஞ்சுப் பழம் மட்டுமே உண்டாலும் இதே பலன் கிடைக்கும். பழங்கள் எதுவானாலும் பழங்களுடன் தண்ணீர் அல்லது வேறு உணவுகளை உண்ணுதல் கூடாது. பழம் சாப்பிடுவதற்கு சுமார் 30 நிமிடங்களுக்கு முன்னாலும், 30 நிமிடங்களுக்குப் பின்னாலும் தண்ணீர் போன்றவை அருந்தலாம். எந்த வகை பழமானாலும் அதனுடன் வேறு பானங்களோ தண்ணீரோ சேர்ப்பதினால் பழங்களின் தன்மை கெட்டு விடுகிறது. அதனால் பழங்களின் பயன்களை நாம் அடைய முடியாது. தனியாக பழங்களை மட்டுமே உண்டால் முழுப்பயனும் கிடைக்கும்.

பாலை பயன்படுத்தி நல்ல பலனைப் பெறுவது எப்படி? -காஞ்சிப்பெரியவர்

பசுகள் ஒன்றும் அறியாத ஜீவன்கள். அவற்றை பராமரித்து, அவற்றிடம் உள்ள பாலை பயன்படுத்தி, நல்ல பலனைப் பெறுவது எப்படி என்று உபதேசிப்பவன் கோபாலன். பால் என்றால் உள்ளம் என்று பொருள். முதலில் உள்ளத்தை பால் போல் சுத்தமானதாக்க வேண்டும். கோபாலனை அண்டி பக்தி என்னும் தீயில் அதை பதமாக காய்ச்ச வேண்டும். சாந்தத்தைக் கொண்டு உறை ஊற்றி தயிராக்க வேண்டும். இதயம் என்னும் குடத்தில் தயிர் ஊற்றி அது உறைந்ததும், பக்தியென்ற மத்தைக் கொண்டு கடைந்து, பூத்துவரும் வெண்ணெயைப் போன்ற அனந்தசயனனான பரமபுருஷனைக் காண வேண்டும். தயிரில் பால், வெண்ணெய், நெய் ஆகிய முப்பொருளும் அடங்கியிருந்தாலும், அவற்றை தக்க முறைகள் கொண்டே தனித்தனியாக்க முடியும் என்பது உண்மை. அதைப்போலவே நம் இதயத்தில் உறைந்திருக்கும் கடவுளை நாம் காண வேண்டுமானால், தக்க முயற்சிகள் எடுத்தால் தான் இயலும்.
-காஞ்சிப்பெரியவர்

பூணூலை எப்படி போட வேண்டும்?

தெய்வ காரியங்களுக்கு பக்தி வேண்டும். பித்ரு காரியங்களுக்கு சிரத்தை வேண்டும். பக்தியோடு செய்வது யக்ஞம்; சிரத்தையோடு செய்வது சிரார்த்தம். தெய்வ காரியங்களைப் பண்ணும்போது, சிகையை நன்றாக முடிந்து கொண்டு, யக்ஞோபவீதம் (பூணூல்) இடது தோளில் இருக்கும்படியாகப் பக்தியோடு செய்ய வேண்டும். பித்ரு காரியங்களைச் செய்யும்போது சிகையை முடியாமல், யக்ஞோபவீதம் வலது தோளில் இருக்கும்படியாக, சிரத்தையோடு செய்ய வேண்டும். இதற்காகத்தான் சிகை, யக்ஞோபவீதம் இரண்டும் இருக்கின்றன. சந்நியாசிகளுக்கு இவை இரண்டும் இல்லை. பித்ரு காரியத்தையும், பவ தேவதைகளின் உபாஸனையையும் விட்டு விட்டு, நேரே பரமாத்ம உபாஸனையை எந்தவிதமான லௌகிக அபேøக்ஷயும் இன்றிச் செய்பவர்கள் அவர்கள். நேராகவே கடவுளிடம் போகிற பிற மதஸ்தர்களுக்கும் சிகை, யக்ஞோப வீதம் இல்லை. ஏன் இப்படித் தேவர்களுக்கு இடது தோளில் பூணூலோடும், பித்ருக்களுக்கு வலது தோளில் பூணூலோடும் காரியம் பண்ண வேண்டும் என்று சொல்கிறேன் :
கிழக்கு முகமாக இருந்து கொண்டே காரியங்களைச் செய்ய வேண்டும். வடக்கு தேவர்களிடம் போகிற திசை, உத்தராயணம் என்பது அதுதான். உத்தரம் என்றால் வடக்கு, தெற்கு தான் பித்ருக்கள் இருக்கும் பக்கம். தென்புலத்தார் என்று திருவள்ளுவர்கூடச் சொல்கிறாரல்லவா? தக்ஷிணம் என்றால் தெற்கு. தக்ஷிணாயனம் என்பது பித்ரு லோக மார்க்கம். (உத்தராயணம் என்பதில் மூன்று சுழி ண போட்டும், தக்ஷிணாயனம் என்னும் போது இரண்டு சுழி ன போட்டும் சொல்ல வேண்டும். அயனம் என்றால் மார்க்கம், வழி என்று அர்த்தம். உத்ர என்பதில் வருகிற ர காரத்தினால் ன என்பது ண வாக மாறிவிடும். இது வியாகரண விதி. தற்காலத்தில் மனம் போனபடி பத்தி பத்திரிகைகளில் எழுதுவதால் இதைச் சொல்ல நேர்ந்தது. உத்தராயண தேவ மார்க்கத்தையும், தக்ஷிணாயன பித்ரு மார்க்கத்தையும் பற்றிப் பகவான் கீதையில் சொல்லியிருக்கிறார். நாம் கிழக்கு முகமாக இருந்து கொண்டு பித்ரு காரியம் பண்ணும்போது, எந்தத் தோள் தெற்குப் பக்கமாக இருக்கிறது? வலது தோள் தான். அதனால் தான் பித்ரு காரியத்தில் யக்ஞோபவீதம் அந்தத் தோளின் மேல் இருக்கும் படியாகப் போட்டுக் கொள்ள வேண்டும் என்பது.
பிரதக்ஷிணம் பண்ணுவது என்கிறோமே, இதற்குக் கூட தக்ஷிண (தெற்கு) திசையை நோக்கிப் போவது என்று தான் அர்த்தம். (முக்காலே மூன்றுவாசிக் கோயில்களில் ராஜகோபுரம் கிழக்குப் பார்க்கத்தான் இருக்கும். அதற்குள் நுழைந்து நாம் பிரதக்ஷிணம் ஆரம்பிக்கும்போது, முதலில் தெற்குப் பார்க்கத்தான் போவோம்.) இதே மாதிரி, நாம் கிழக்கு முகமாக இருந்து கொண்டு தேவகாரியம் பண்ணும்போது, தேவர்களின் திசையான வடக்கு திசையைப் பார்க்க இருப்பது நம்முடைய இடது தோள் தான். அதனால் தான்,தேவ காரியங்களில் பூணூல் இடது தோள்மேல் இருக்க வேண்டும் என்பது. தேவ காரியம், பித்ரு காரியம் இரண்டும் செய்யாத மற்ற வேளைகளில், அதாவது உத்யோக வேளை முதலானதுகளின்போது, பூணூலை ஒரு தோளின் மேலேயும் இல்லாமல், கழுத்திலிருந்தே மாலை மாதிரித் தொங்கவிட்டுக் கொள்ள வேண்டும்.

மாலையில் விளக்கேற்றிய பிறகு தண்ணீர், உப்பு பிறருக்கு தரலாமா?

விளக்கேற்றிய பிறகு, நம் வீட்டு வாசலில் ஒருவர் மயங்கிக்கிடக்கிறார் என்றால் தண்ணீர் கொடுக்க வேண்டும். உப்பெல்லாம் இப்போது யார் கேட்டு வருகிறார்கள்! உப்பு லட்சுமியின் அம்சம் என்பதால் இப்படி சொல்வதுண்டு. பகலிலேயே யாரும் கேட்டு வந்தாலும் கூட, கடையில் போய் வாங்கிக் கொள்ளுங்கள் என சொல்லி விடுங்கள். உதவுவது என்பது வேறு, கடன் கொடுப்பது என்பது வேறு

ஸ்படிகமாலை எப்போது அணிய கூடாது?

அழகை எடுத்துக் காட்டுவதற்காகவே நகைகள் அணிகின்றோம். உடலில் பதிநான்கு இடங்களில் அணியும் நகைகளுக்கு ஆறு முக்கிய நன்மைகள் உண்டு. அழகு, தெய்வப்பிரியம்,ஆத்தும தரிசனம்,ஆரோக்கிய இரட்சை,ஸதானக் குறிப்பு,தோஷ நிவாரணம் என்ற நன்மைகளுக்காகவே நகைகள் அணிகின்றோம். பதிநான்கு உலோகங்களின் சின்னமாக தலையிலும், நெற்றியிலும்,காதிலும், மூக்கிலும் உதட்டிலும் கழுத்திலும், தோளிலும், புஜத்திலும், கையிலும், மார்ப்பிலும், இடுப்பிலும், பாதங்களிலும், கால்விரலிலும், கைவிரலிலும், நகைகள் அணிவதுண்டு. தங்கமும் வெள்ளியும் அணியும் போது கைக் கொள்ளும் நம்பிக்கைகள் போலவே ஸ்படிக மாலை அணிவதன் பின்னும் சில நம்பிக்கைகள் உண்டு. இதை அணிய உத்தமமான நட்சத்திரம் கார்த்திகையாம். ஒரு நாள் பசுவின் சாணத்தில் மூழ்கவைத்து ஸ்படிக மாலையை தண்ணீர் பாலில் கழுவி குருவின் உதவியால் அணிய வேண்டும் என்பது ஆசாரவிதி. எந்த காலமானாலும் வெப்பத்தை தடையும் சக்தி இம்மாலைக்குண்டு. கிரகங்கள் மனிதரில் செலுத்தும் செல்வாக்கைக் கட்டுபடுத்த இம் மாலைக்கு இயலும். இரவு வேளை இம்மாலையை தண்ணீரில் இட்டுவைத்து மறுநாள் அத்தண்ணீரைக் குடித்தால் ஆண்மை விருத்தியடையும் என்று நம்புகின்றனர். பௌர்ணமி நாள் ஸ்படிகமாலை அணிந்தால் உடல் சக்தி கூடும் என்றும் தம்பதிகள் இம்மாலை அணிந்து தூங்கக் கூடாதென்றும் விதிக்கப்பட்டுள்ளன. ஸ்படிக மாலையை ஒருவர் அணிந்த பின் மற்ற வர்கள் மாற்றி அணியும் போது தண்ணீருக்குள் குறைந்தது 3 1/2 மணி நேரமாவது ஊறவிட வேண்டும். மற்ற ரத்தின உபயோகத்திற்கும் ஸ்படிக மாலை உபயோகத்திற்கும் ஒரு வித்தியாசம் உண்டு. ஸ்படிகத்தைத் தவிர மற்ற அனைத்து ரத் தினங்களையும் இரவில் அணியலாம். ஆனால் ஸ்படிகத்தைக் கண்டிப்பாக இரவில் அணியக்கூடாது. காரணம், அது உப ரத்தின வகையைச் சார்ந்தது மட்டுமல்ல. தானாகத் தன் அதிர்வுகளை வெளியேற்றும் சக்தி ஸ்படிகத்திற்குக் கிடையாது என்பதும் தான்.                                               

பொறாமைக்காரர்களால் தொல்லையா?

வீட்டிலோ, பணியிடத்திலோ, தொழிலிலோ, உறவிலோ நாம் அறிந்தோ அறியாமலோ பொறாமைக்காரர்கள் முளைத்து விடுகின்றனர். காலப்போக்கில் இவர்கள் எதிரிகளாகக் கூட மாறி விடுகின்றனர். நான் யாருக்கும் ஒரு கெடுதலும் நினைக்கலே! ஏன் எனக்கு மட்டும் எதிரிகள் முளைக்கிறார்கள்! என்று சொல்லி வருத்தப்படுவர்கள் ஏராளம். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க சக்கரத்தாழ்வார், யோகநரசிம்மர் வழிபாடு உகந்தது. சனிக்கிழமைகளில் 12 முறை சக்கரத்தாழ்வார் சந்நிதியை வலம் வந்து வணங்கலாம். துளசிமாலை சாத்தி, கல்கண்டு பிரசாதத்தை நிவேதனம் செய்து பக்தர்களுக்கு கொடுங்கள். யோகநரசிம்மர் படத்தை கிழக்கு முகமாக வைத்து மாலையில் தீபமேற்றுங்கள். யோக நரசிம்மம் சரணம் பிரபத்யே என்று 108 முறை உள்ளம் உருகிச் சொல்லுங்கள். பொறாமைக்காரர்களின் துன்பத்தில் இருந்து விடுதலை பெறுவீர்கள்.

எதையெடுத்தாலும் தடங்கலா? இதற்கு பரிகாரம்!

சிலருக்கு வாழ்வில் எதைச் செய்ய முயன்றாலும் ஏதாவது ஒருவிதத்தில் தடங்கல் உண்டாகும். அப்படி செய்து முடித்தாலும் அதை அனுபவிக்கும் பாக்கியம் கிடைப்பது இல்லை. இவ்வாறு காரியத்தடங்கல் ஏற்படுவதற்கு முற்பிறவியில் செய்த பாவங்களே காரணம். இவர்களை யோகக்கட்டைகள் என்று கேலி செய்வார்கள். முற்பிறவியில் நல்வினைப்பயன் இருக்குமானால், இப்பிறவியில் செய்யும் எல்லாச் செயல்களும் வெற்றியைத் தரும். அதுவே எதிர் மறையான செயல்களை சம்பந்தப் பட்டவர்களோ அல்லது அவர்களின் முன்னோரோ செய்திருந்தால், தடங்கல் ஏற்பட்டு விடும். இதை ஒரு எளிய ஸ்லோகத்தின் மூலம் சரி செய்யலாம். ராமாயணத்தை இந்தியில் ராமசரிதமானஸ் துளசிதாசர் எழுதியுள்ளார். அதில் பாலகாண்டத்தில் வரும்,
பந்தௌ நாம ராம் ரகுபர் கோ!
ஹேது க்ருஸானு பானு ஹிமகர் கோ!!
பிதி ஹரி ஹர்மய பேத் ப்ரான் ஸோ!
அகுண அனூபம் குண நிதான் ஸோ!!
என்ற ஸ்லோகம் இந்த தடங்கலை சீர்செய்யும். இதைச் சொல்ல முடியாதவர்கள் பொருளைச் சொல்லலாம். ரகுநாதா! உன் நாமத்தை வணங்குகிறேன். அக்னி, சூரியன், சந்திரன் எல்லாமே அந்நாமத்தில் அடங்கி உள்ளன. ராமநாமத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்தியின் அம்சங்களும் உள்ளன. வேதத்தின் உயிர்நாடியும், நிர்குணமானவனும், நற்குணங்களின் இருப்பிடமாகவும் இருக்கும் ராமநாமத்தை போற்றுகின்றேன் இந்த ஸ்லோகத்தைச் சொல்ல எவ்வித விரதமும் இருக்க வேண்டியதில்லை. நேரம் காலமும் இல்லை. தினம் 3 முறை தொடர்ந்து ஜெபித்து வருவோருக்கு முன்வினைப் பாவம் நீங்கி அனுகூலம் உண்டாகும்.

ஏழையாய் பிறக்க காரணம் என்ன?

சிலர் பணக்காரர்களாகவும் பலர் வறுமையில் வாடுவதுமே உலகில் நாம் காணும் உண்மை. இந்த நிலை ஏன் ஏற்படுகிறது என்பதற்கு சமஸ்கிருத ஸ்லோகம் ஒன்று பதில் சொல்கிறது. அக்ஷர-த்வய-மப்யஸ்தம் நாஸ்தி நாஸ்தி யத் புரா! ததவே தேஹி தேஹீதி விபரீத-முபஸ்திதம்!! என்ற ஸ்லோகத்தில் நாஸ்தி நாஸ்தி என்றால் இல்லை இல்லை என்று பொருள். தேஹி தேஹி என்றால் கொடு கொடு என்று பொருள். யாரொருவன் முற்பிறவியில் இல்லை இல்லை என்று தன்னிடம் பிச்சை கேட்டவனை விரட்டினானோ, அவன் இப்பிறவியில் கொடு கொடு என்று பிச்சை கேட்பவனாக பிறக்கிறான். அதற்காக, கையை நீட்டும் சோம்பேறிக்கெல்லாம் பிச்சை போடக்கூடாது. உண்மையிலேயே முடியாதவர்களுக்கு, ஏழைப்பெண்களின் திருமணத்திற்கு, ஏழைக்குழந்தைகளின் படிப்புக்கு உதவுவதே நிஜமான பிச்சை. திருமால் கூட பிச்சையெடுக்கப் போகிறோமே என எண்ணி மகாபலி முன் உடலை குறுக்கிக்கொண்டு வந்தார். ஏனெனில், பிச்சை எடுப்பதைக் கேவலம் என்றும் சாஸ்திரம் கூறுகிறது. எனவே நிஜமான ஏழைகளுக்கு தானம் கொடுத்து அடுத்த பிறவியிலாவது பணத்தை வாரிக் குவிப்பவராகப் பிறக்க வழி செய்து கொள்ளலாம்.

கோயிலில் மற்றவர் ஏற்றிய விளக்கில் நாம் விளக்கு ஏற்றலாமா?

பிறர் ஏற்றிய தீபம் என்பதால் அதற்கு ஏதாவது தோஷம் ஏற்படாது. அதுபோல, நாம் தீபம் ஏற்றினால் நமக்கு கிடைக்கவேண்டிய பலன் பிறருக்கும் போய்விடாது. சிவன் கோயில் சந்நிதியில் தீபம் எரிந்து கொண்டிருந்தது. ஒரு எலி அந்த விளக்கில் இருந்த நெய்யைக் குடிக்க வாயை வைத்தது. எதிர்பாராமல் எலியின் வாய்பட்டு அணைய இருந்த திரியில் சுடர், தூண்டப்பட்டு பிரகாசமாக எரிந்தது. இந்நிகழ்ச்சி பெரிய புண்ணியச் செயலாக அமைந்து, மறுபிறவியில் மகாபலிச் சக்கரவர்த்தியாகப் பிறந்தது. சுவாமி சந்நிதியில் விளக்கேற்றுவது தான் முக்கியமே தவிர மற்ற சந்தேகம் எதுவும் வேண்டாம்.

இறைவன் ஏன் கோபத்தை படைத்தான்?

வேண்டாத குணம் என்று கோபத்தைச் சொல்கிறோம். தீ போன்ற கோபம் நம்மிடம் மறைந்து போகட்டும் என்ற பொருளில், அவ்வை ஆறுவது சினம் என்று நமக்கு வழிகாட்டுகிறாள். ஆனால், அக்கோபத்தையும் துதிக்கிறது ரிக்வேதம். கோபத்தை தேவதையாக்கி இரு சூக்த மந்திரங்கள் இடம்பெற்றுள்ளன. முதல் சூக்தத்தில், பலசாலிகள் எல்லாரையும் விட மிகுந்த பலசாலியான கோபமே! இங்கு வருவாயாக! நண்பனுக்காகத் தவத்தினால் எங்களுடைய எதிரிகளை விரட்டி விடுவாயாக. எல்லா எதிரிகளையும், அரக்கர்களையும் கொல்லும் கோபமே! எங்களுக்கு எல்லாச் செல்வங்களையும் கொண்டு வரவேண்டும் என்கிறது. மற்றொரு சூக்தம், எல்லாவற்றையும் வெல்லும் கோபமே! தீயைப் போல ஜொலித்துக் கொண்டிருக்கும் உன்னை எங்களுடைய படைத்தலைவனாக இருக்கும்படி அழைக்கிறோம். எங்களுடைய எதிரிகளைக் கொன்று வீழ்த்த வேண்டும். அவர்களுடைய செல்வங்களை எல்லாருக்கும் பகிர்ந்து கொடுப்பாயாக. உன்னுடைய வலிமையால் எங்களின் எதிரிகளை விரட்ட வேண்டும், என கோபத்தைப் துதிக்கிறது. கடவுள் ஏன் கோபத்தை தந்திருக்கிறான் தெரியுமா? எந்த உணர்வும் நன்மைக்குப் பயன்படுமானால், அது அருளின் வடிவமே! அதனால் தான் கோப தேவதையிடம் நல்லவர்கள் வாழவும், தீயவர்கள் அழியவும் ரிக் வேதம் வேண்டுகிறது. பிறர் நன்மைக்காக கோபப்பட்டால் அதில் தவறில்லை

பாக்கெட் பாலால் அபிஷேகம் செய்வது சரியா?

கோயில்களில் பாக்கெட் பாலால் அபிஷேகம் செய்வது சரியா?
ஆயிரம் வருஷங்களுக்கு முன், ஐந்நூறு வருஷங்களுக்கு முன், நூறு வருஷங்களுக்கு முன், ஐம்பது வருஷங்களுக்கு முன் என்று காலப்போக்கில் நமது வாழ்க்கை முறையில் எத்தனையோ மாறுபாடுகளைச் சந்தித்துக் கொண்டே வந்திருக்கிறோம். அவற்றை எல்லாம் தேவையோ, இல்லையா என்று சிந்திக்காமலேயே ஏற்றுக் கொண்டிருக்கிறோம். பொட்டணப் (பாக்கெட்) பால் என்பது கிராமங்களில் வராது. நகரங்களில்தான் வரும். நகரங்களில் பொட்டணப் பாலை அன்றாட வாழ்க்கையில் ஏற்றுக் கொண்டு விட்டோம் என்பதால், தப்பி எதுவும் வராது. இதுவே கிராமம் என்றால், வீட்டில் மாட்டையும் வைத்துக் கொண்டு எங்கோ போய் பால் பொட்டணத்தை வாங்கிக் கொண்டு வந்து அபிஷேகம் செய்தால்தான் தப்பு

கோயில்களில் பாக்கெட் பாலால் அபிஷேகம் செய்வது சரியா?


ஆயிரம் வருஷங்களுக்கு முன், ஐந்நூறு வருஷங்களுக்கு முன், நூறு வருஷங்களுக்கு முன், ஐம்பது வருஷங்களுக்கு முன் என்று காலப்போக்கில் நமது வாழ்க்கை முறையில் எத்தனையோ மாறுபாடுகளைச் சந்தித்துக் கொண்டே வந்திருக்கிறோம். அவற்றை எல்லாம் தேவையோ, இல்லையா என்று சிந்திக்காமலேயே ஏற்றுக் கொண்டிருக்கிறோம். பொட்டணப் (பாக்கெட்) பால் என்பது கிராமங்களில் வராது. நகரங்களில்தான் வரும். நகரங்களில் பொட்டணப் பாலை அன்றாட வாழ்க்கையில் ஏற்றுக் கொண்டு விட்டோம் என்பதால், தப்பி எதுவும் வராது. இதுவே கிராமம் என்றால், வீட்டில் மாட்டையும் வைத்துக் கொண்டு எங்கோ போய் பால் பொட்டணத்தை வாங்கிக் கொண்டு வந்து அபிஷேகம் செய்தால்தான் தப்பு!

பூஜையறையை மூடும் போது தீபங்களை அணைத்துவிட வேண்டுமா?

பூஜையறையை மூடும்போது தீபங்களை அணைத்துவிட வேண்டும். அணைத்தால் தான் மறு நாள் காலையில் தீபம் ஏற்ற இயலும், இல்லையெனில், தினம் தினம் காலையில் தீபம் ஏற்றும் சம்பிரதாயம் அற்றுப்போகும். அனுதினமும் காலையிலும் மாலையிலும் தீபம் ஏற்றவேண்டும் என்று இருக்கும்போது, நிரந்தர தீபவொளிக்கு இடமில்லாமல் போவதைத் தெரிந்துகொள்ள வேண்டும். பக்தி மேலீட்டால்... நந்தா தீபம் அணையா விளக்கு ஏற்றுகிறேன் என்ற தனிப்பட்டவரின் சிந்தனையை விதியாக மாற்றக்கூடாது. விளக்கைச் சுத்தம் செய்து புதுத் திரி போட்டு விளக்கேற்றுவது சிறப்பு. அணையா விளக்கு வீட்டுக்கு நல்லது என்பது தங்கள் கணிப்பு. எல்லோரது சிந்தனையும் அப்படித்தான் இருக்கவேண்டும் என்றில்லை. சாஸ்திரத்தை மீறி நமது சிந்தனைக்கு முக்கியத்துவம் கொடுப்பது சரியில்லை. கோயில்களில்கூட கர்ப்பகிருஹத்தின் கதவைத் திறக்க ஒரு மந்திரம், தீபம் ஏற்ற ஒரு மந்திரம், நிர்மால்யத்தை விலக்க ஒரு மந்திரம், அபிஷேகத்துக்கு ஒரு மந்திரம் என்ற நடைமுறை உண்டு. கர்ப்பகிருஹத்திலும் அணையா விளக்கு இருந்தால் கோயிலுக்கு நல்லதுதானே... என்று சொல்லலாமா! ஸ்வயம்ப்ரகாசனுக்கு விளக்கு எதற்கு? நாம் அவனை தரிசிக்க விளக்கு வேண்டும். மேலும் அணையாவிளக்கு எதிர்பாராமல் அணைந்துவிட்டால், வீணாக மனநெருடலைச் சந்திக்கவேண்டி வரும். எதிர்பாராமல் விளக்கு தீபம் பற்றிக்கொண்டு பூஜையறையும் பாதிப்புக்குள்ளானால், அதுவும் அபசகுனம். ஆகையால், நமது ஆசையை நிறைவேற்ற எண்ணும்போது, ஆராய்ந்து செயல்பட வேண்டும். சாஸ்திரத்தைக் கடைப் பிடித்தால் அபசாரம் இருக்காது.

கோயிலுக்குச் சென்று வந்தால் நேராக வீட்டுக்குத்தான் வர வேண்டும் என்பது சரியா

நாம் ஆலயத்துக்குச் சென்று நமது மனதின் மாசுகளைப் போக்கி மாசற்றவராகத் திரும்பி வருவதால், நமது புனிதத்தன்மை பாதிக்காவகையில் விளங்கக்கூடிய இடங்களுக்குச் செல்வதால் தவறில்லை. ஆலயத்துக்குச் செல்லும் முன் ஆண்டவனுக்குப் படைக்கப்படகூடியவற்றை நாம் ஏந்திச் செல்வதால் அப்போதும் இதே போன்ற ஒழுக்கத்தை கடைப்பிடிப்பது நன்மையைகொடுக்கும். ஆலயம் செல்வதற்கு முன்னரோ பின்னரோ துக்க நிகழ்ச்சிகள் நடந்த இடங்கள், மற்றும் தீண்டுதல் உள்ள இடங்களுக்கு கண்டிப்பாகச் செல்லக்கூடாது.

எலுமிச்சையின் மகிமை தெரியுமா?

ராகு காலத்தில் எலுமிச்சையை துர்க்காதேவிக்கு தீபம் ஏற்று பயன்படுத்துகிறார்கள். சூலாயுதங்களில் எலுமிச்சை குத்தப்படுகிறது. இதற்கு காரணம் எலுமிச்சை தேவ கனி என்பதால் ஆகும். மாம்பழத்தில் வண்டு குற்றம் உண்டு. பலாவில் வியர்வை குற்றம் உண்டு. வாழையில் புள்ளி குற்றம் உண்டு. ஆனால் எலுமிச்சையில் மட்டும் இவ்வித குற்றங்கள் இல்லை. மனிதனுடைய எண்ணங்களை ஈர்க்கும் சக்தி மற்ற கனிகளைக் காட்டிலும் எலுமிச்சைக்கு அதிகம் உண்டு.

வாழ்க்கைக்குத் தேவை அருளா! பொருளா?!

ஒரு மனிதனின் நிம்மதியான வாழ்க்கைக்குத் தேவை அருளும் பொருளும். இவை இரண்டும் இருந்து விட்டால், எதற்கும் கவலை இல்லை. அருள் அதிகம் இருக்க வேண்டும். பொருள் போதுமான அளவில் இருக்க வேண்டும். பொருள் அதிகம் இருந்தால், அருளைப் பெறுவதில் சிரமம் இருக்கும். அதாவது, அருளைப் பெறுவதில் மனம் நாட்டம் கொள்ளாது. அருளும் பொருளும் ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாதவை. அருளை வைத்துக் கொண்டு பொருள் பெற முடியாது; பொருளை வைத்துக் கொண்டு அருளைப் பெற முடியாது. இரண்டையுமே தேடித்தான் பெற வேண்டும். நல்ல ராசிக்காரர்கள் சிலரை இவை இரண்டுமே தேடி வருவதும் உண்டு. அருள் என்றால், இறை இன்பம். இறை அருள். இறைவனின் ஆசி என்றெல்லாம் சொல்லலாம். என்றென்றைக்கும் எப்போதும் நல்ல நிலையில் ஒருவரை வைத்திருக்க உதவுவது அருள். இத்தகையோரைப் பார்த்தாலே, கையெடுத்துக் கும்பிடத் தோன்றும். பொருள் என்றால், நாம் தேடிச் சேகரித்த செல்வம். பொருள் தேடும் ஆசை குறையக் குறையத்தான் அருள் வந்து சேரும். ஒருவர் வைத்துக் கொண்டிருக்கும் செல்வத்தால், படிப்பால், பதவியினால், ஞானத்தால் அருளை வாங்க முடியாது. அருள் கடைச் சரக்கு அல்ல.
மனத்தூய்மையே அருளைப் பெற முயற்சிப்பதன் முதல் படி. ஸ்ரீராமபிரானின் மனத் தூய்மையை ராவணனே வியந்து போற்றி இருக்கிறான். எதிரியே என்றாலும், ராமனின் இந்தக் குணத்தை தன் மனைவியான மண்டோதரியிடம் வியந்து சொன்னதாக, பரமஹம்சர் சொல்வார். சீதையைத் தங்கள் நாயகி ஆக்கிக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறீர்கள். ஏன் இவ்வளவு அவஸ்தைப்படுகிறீர்கள்? ராமனைப் போன்ற மாய வடிவம் எடுத்து, சீதையிடம் சென்று அவளை ஏன் ஏமாற்றி அடையக் கூடாது. என்று கேட்டாளாம் மண்டோதரி. கணவனின் இந்த இச்சையைப் பூர்த்தி செய்ய விரும்பிய மண்டோதரியே இப்படி ஒரு வழியைச் சொன்னாள். அதற்கு ராவணன், சேச்சே... அப்படி இல்லை மண்டோதரி. ராமனை நினைத்த மாத்திரத்திலேயே வார்த்தைகளில் விவரிக்க முடியாத ஆனந்தமும் இன்பமும் மனதில் உண்டாகின்றன. பரமபதமான சொர்க்கமும்கூட வெறுப்பாகி விடும் போலிருக்கிறது. அப்படி இருக்கும்போது, அவனுடைய திவ்ய சொரூபத்தை எடுத்துக் கொண்டால், எனக்கு எப்படி சிற்றின்பத்தில் நாட்டம் செல்லும்? மனம் இச்சையில் லயிக்காது என்று மண்டோதரியிடம் சொன்னானாம். பொருளாசை மற்றும் இன்ன பிற ஆசைகளில் மனம் சென்று கொண்டிருந்தால், அருள் கிடைக்காது. இறைவனை தரிசிக்க முடியாது. பணம், பதவி, பட்டம், ஆற்றல் இவற்றைச் சேர்க்க முயலும் ஆசை அறவே அடங்கினால்தான் இறை தரிசனம் கிடைக்கும். அந்த இன்பத்தை உணர முடியும்.
அருளில் கிடைக்கும் ஆனந்தத்தை ஒருமுறை ருசித்துப் பார்த்து விட்டால், அதன் பின் வேறு எந்த ஆசையும் ஒரு மனிதனுக்கு எழாது. சான்றோர்கள் அனுபவித்துப் பெற்ற அந்த அருள் அமுதத்தைப் பெற முயற்சிக்கலாமே! அருளைப் பெறுவதற்கு மனதை முதலில் பக்குவப்படுத்துங்கள். பக்குவப்பட்ட மனதில்தான் அருள் ஆனந்த தாண்டவம் ஆடும்.

தவம் என்றால் என்ன?

தவம் என்றால் உடனே யாரும் அஞ்சி விடக்கூடாது. காட்டுக்குச் செல்வதும் பட்டினி கிடப்பதும் கனல் நடுவே நிற்பதும் தவம் என்று கருதி விடக்கூடாது. அவையாவும் தவத்திற்கு அங்கங்களே அன்றி தவமாகாது. தனக்கு வருகின்ற துன்பங்களைச் சித்சமாதானத்துடன் தாங்கிகொள்ளுதல், இன்னொரு உயிர்க்குத் துன்பம் செய்யாதிருத்தல் ஆகிய இரு பண்புகளும் சேர்ந்குணமே தவமாகும்.

பெண்கள் அணியும் ஒவ்வொரு ஆபரணத்திற்கும் காரணம் உண்டு தெரியுமா?

கோயிலில் உள்ள அம்மனுக்கு என்னதான் பட்டுப்புடவை கட்டி மலர் மாலையெல்லாம் சூட்டினாலும், தாலி, தோடு,மூக்குத்தி, வளையல், ஒட்டியானம், மோதிரம் ஆகிய அணிகலன்கள் அணிவித்தால் தான் அலங்காரம் முழுமையடையும். பெண்களை அம்மனின் அம்சமாக கூறுகின்றனர். எனவே தான் பெண்கள் அணியும் கீழ்கண்ட அணிகலன்களுக்கும் சில காரணங்கள் கூறப்படுகிறது.
1. தாலி - தாயாகி, தாலாட்டுப்பாட கணவன் தரும் பரிசு சின்னம்.
2. தோடு - எதையும் காதோடு போட்டுக் கொள். வெளியில் சொல்லாதே !
3. மூக்குத்தி - மூக்கு தான் முதலில் சமையலை அறியும் உத்தி என்பதை உணர்த்துகிறது.
4. வளையல் - கணவன் உன்னை வளைய, வளைய வர வேண்டும், என்பதற்காக,
5. ஒட்டியாணம் - கணவன், மனைவி இருவரும் ஈருடல் ஓருயிராய் ஒட்டியானோம் என்பதற்காக !
6. மோதிரம் - எதிலும் உன் கைத்திறன் காண்பிக்க.

புது ஆடைகளில் மஞ்சள் தடவி அணிவது ஏன்?

மஞ்சள் - தீமைகளிலிருந்து நம்மைக் காப்பாற்றக்கூடிய ஆற்றல் உடையது. புதிய ஆடைகள் அணிந்திருக்கும்போது, எவரேனும் தவறான எண்ணங்களுடனும் பொறாமையுடனும் நம்மைப் பார்த்தார்களேயானால், இந்த மஞ்சளானது நம்மைக் காப்பாற்றும் என்பது நமது நம்பிக்கை. இதுமட்டுமல்லாமல், மஞ்சள் என்பது மங்களத்தின் அடையாளம் ! எனவே, ஒருவர் மஞ்சள் தடவிய ஆடையை உடுத்தியிருப்பார் ஆயின், அவர் ஏதேனும் மங்கள காரியத்தில் பங்கேற்றியிருப்பார் என்பதை நாம் அறியலாம். புத்தாடை என்பது கஞ்சி முதலானவையின் சம்பந்தம் உடையதனால், மஞ்சளை அதன்மேல் தடவுவதன் மூலம் அனைத்துவித தீயவையும் விலகி நன்மைகள் அடையக் காரணமாக அமைகின்றது.

கோயில்களில் முடிகாணிக்கை செலுத்துவதன் தத்துவம் என்ன?

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்துகின்றனர். இதற்கு ஒரு கர்ண பரம்பரை கதை கூறப்படுகிறது. வருஷபன் என்ற அசுரன் பரமபதம் வேண்டி மலையப்ப சுவாமியை தரிசிப்பதற்கு முன்பு தினந்தோறும் யாகம் செய்வான். அப்படி ஒருநாள் யாகம் செய்யும்போது பக்தி மிகுதியால் தன் தலையையே புஷ்பமாக கருதி கிள்ளி எடுத்து நெருப்பில் போட்டு விட்டான். இதை நினைவு கூறும் விதத்தில் பக்தர்கள் தலைமுடியை புஷ்பமாக சமர்ப்பித்து தான் என்ற அகங்காரத்தை அகற்றி இறைவனை வழிபடுகின்றனர்.

உறங்கி எழுந்ததும் உள்ளங்கையைப் பார்க்க வேண்டும் என்பது ஏன்?

நாம் நமது அன்றாடப் பணிகளைச் செய்வதற்கு கைகள் மிகவும் பயன்படுகின்றது. கைகளின் உதவியில்லாமல் எந்த ஒரு காரியத்தையும் செய்ய முடியாது. செயல்களுக்குரிய புலன்களில் கைகளுக்குத் தனி இடம் உண்டு. இறையுருவத்தை வணங்க, புஷ்பத்தை அள்ளிச் சமர்ப்பணம் செய்ய கைகள் உதவும். இறையுருவங்கள், அபய வரத முத்திரைகளைத் தாங்கிய திருக்கரங்களுடன் காட்சி தரும்; இறையுருவத்தின் பெருமையை கைகள் வெளிப்படுத்தும். கைகளை கடவுளுக்குச் சமானமாகச் சொல்கிறது வேதம் (அயம் மெஹஸ்தோ பகவான்...). திருமணத்தை நிறைவு செய்வது பாணிக்ரஹணம்; அதாவது, கை பிடித்தல்... கன்னிகையின் கை பிடித்து வரனிடம் அளிக்க வேண்டும். அரசர்களையும் துறவிகளையும் கைத்தாங்கி பெருமைப்படுத்துவார்கள். மந்திர ஜபங்களில் கரன்யாசத்துக்குக் கைகள் வேண்டும். முதுமையில் ஊன்றுகோலைப் பயன்படுத்த கை வேண்டும்.
கையின் நுனியில் அலைமகளும், நடுவில் கலைமகளும் அடிப்பக்கத்தில் கோவிந்தனும் இருப்பதாகப் புராணம் சொல்லும். ஹஸ்தரேகா சாஸ்திரம் கையை வைத்து உருவானது. அறிவு, செல்வம், ஆன்மிகம் ஆகிய மூன்றையும் பெற, காலையில் எழுந்ததும் கைகளைப் பார்க்க வேண்டும். அத்துடன்
கராக்ரே வஸதெ லஷ்மீ கரமத்யே ஸரஸ்வதி
கரமூலேது கோவிந்த: ப்ரபாதெ கரதர்சனம்

என்ற ஸ்லோகத்தைக் கூற வேண்டும். கையைத் தலையணையாக வைத்து உறங்கும் நமக்கு, விழித்ததும் அதைப் பார்ப்பது எளிது. நல்ல நடைமுறைகளைப் பின்பற்றினால் நன்மைகள் பல உண்டு.

நட்சத்திரத்திற்கான அதிர்ஷ்ட வழிபாட்டு முறைகள்!

ராசி மண்டலத்தில் 27 நட்சத்திரங்கள் உள்ளன. இவற்றை தலா மூன்று நட்சத்திரமாகக் கொண்டு ஒன்பதாக பிரிப்பர். அதன்படி, நட்சத்திரத்திற்கேற்ற அதிர்ஷ்ட வழிபாட்டு முறைகள் இங்கே தரப்பட்டுள்ளன. உங்களின் நட்சத்திரம் எதில் இருக்கிறது என்பதை அறிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுங்கள். வாழ்வில் வளம் பெறுங்கள்.
அசுவினி, மகம், மூலம்
நட்சத்திர அதிபதி கேது ஆவார். கேது திசையில் பிறந்த உங்களின் அதிர்ஷ்ட தெய்வம் விநாயகர். எப்போதும் விநாயகரை வழிபட்ட பின் பணிகளைத் துவக்குங்கள். சதுர்த்திநாளில் விநாயகர் கோயிலுக்குச் செல்ல மறக்காதீர்கள். அதிர்ஷ்டநிறம் சிவப்பு. சிவப்போடு பல நிறமும் கலந்த ஆடைகள் அணிவது யோகம் தரும். அதிர்ஷ்ட எண் 5,7,9. இந்த தேதிகளில் தொடங்கும் முயற்சிகள் எளிதாக நிறைவேறும். நவரத்தினத்தில்
வைடூர்யத்தை அணிந்து கொள்வது நன்மை தரும். மிதுனம், கன்னி, துலாம், தனுசு, மகரம், மீனராசியினர் நல்ல நண்பர்களாக அமைவர்.
பரணி, பூரம், பூராடம்
சுக்ரனே உங்களின் நட்சத்திர அதிபதி. சுக்ர திசையில் பிறந்த உங்களின் அதிர்ஷ்ட தெய்வம் மகாலட்சுமி. காலையில் கண் விழிக்கும் போதே மகாலட்சுமி படத்தை பார்த்து வணங்குங்கள். வெள்ளிக்கிழமையில் லட்சுமி சந்நிதியில் நெய்தீபமிடுங்கள். அதிர்ஷ்ட நிறம் வெள்ளை. வெண்ணிற ஆடைகளை அணிவது யோகம் தரும். அதிர்ஷ்டம் தரும் எண்கள் 3,6,8. இந்த தேதிகளில் தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் எளிதில் முடியும். அதிர்ஷ்டக்கல் வைரம். எல்லோராலும் வாங்கமுடியாது. வைரத்திற்குப் பதிலாக, ஸ்படிக மாலை வாங்கி அணிவதும் நல்லது. மிதுனம், தனுசு, மகரம், கும்பம் ராசியினரோடு நல்ல நட்பு மலரும்.
கிருத்திகை, உத்திரம், உத்திராடம்
சூரியனே உங்கள் நட்சத்திர நாதனாக விளங்குகிறார். நீங்கள் சூரிய திசையில் பிறந்தவர். சிவபெருமானைத் தொடர்ந்து வழிபடுவதால் அதிர்ஷ்டம் உங்களைத் தேடிவரும். பிரதோஷ நாளில் சிவாலய தரிசனம் செய்வது சிறப்பு. அதிர்ஷ்ட நிறம் சிவப்பு. சிவப்பு நிற ஆடை அணிவது யோகம் தரும். 1,5,7 ஆகிய எண்கள் அதிர்ஷ்டத்தை உங்களுக்கு வரவழைக்கும். இந்த தேதிகளில் ஆரம்பிக்கும் செயல்களில் கிடைக்கும். அதிர்ஷ்டக்கல் மாணிக்கம். கடகம், விருச்சிகம், தனுசு, மீனராசியினர் நண்பர்களாக அமைந்தால் நட்பு நீண்ட காலம் தொடரும்.
ரோகிணி, அஸ்தம், திருவோணம்
உங்களின் நட்சத்திர நாதனாக சந்திரன் இருக்கிறார். சந்திரதிசையில் பிறந்த நீங்கள், அம்பிகையை வழிபடுவதால் நன்மை பெறுவீர்கள். பவுர்ணமியில் அம்மனுக்கு தீபமேற்றி வழிபட யோகம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம் வெள்ளை. வெண்ணிற ஆடைகளை அணிவதன் மூலம் வெற்றி வந்து சேரும். அதிர்ஷ்டம் தரும் எண்கள் 2,3,9. இந்த தேதிகளில் தொடங்கும் செயல் எதுவானாலும் வெற்றி உங்களுக்கே. முத்து பதித்த
ஆபரணங்கள் அணிய நன்மை உண்டாகும். மிதுனம், சிம்மம், கன்னி
ராசியினரோடு பழகினால் நட்பு வாழ்வில் வளம் சேர்க்கும்.
மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம்
நவகிரகங்களில் செவ்வாய்க்குரிய நட்சத்திரம் உங்களுடையது. செவ்வாய்திசையில் பிறந்த உங்களுக்கு, அதிர்ஷ்டதெய்வம் முருகன். செவ்வாயன்று முருகனுக்கு பாலபிஷேகம் செய்வது சிறப்பு. அதிர்ஷ்டநிறம் இளஞ்சிவப்பு. சிவப்புநிற ஆடை அணிவதால் நலம் பெருகும். அதிர்ஷ்ட எண்கள் 3,6,9. இந்த தேதிகளில் தொட்ட செயல்கள் யாவும் இனிதே முடியும். அதிர்ஷ்டக்கல் பவளம். பவளத்தை மோதிரமாகவோ, டாலராகவோ அணிந்துகொள்ளலாம். சிம்மம், தனுசு, மீனராசியினர் நண்பராக அமைய அனுகூல பலன்கள் உண்டாகும்.
திருவாதிரை, சுவாதி, சதயம்
ராகுவிற்குரிய இந்த மூன்று நட்சத்திரங்கள் இவை. ராகுதிசையில் பிறந்த நீங்கள் வழிபடவேண்டிய அதிர்ஷ்டதெய்வம் துர்க்கை. ராகுவேளையில் துர்க்கையம்மனுக்கு எலுமிச்சை தீபமேற்றி வழிபடுவது நன்மைதரும். அதிர்ஷ்டநிறம் கருமை. ஆடையில் கருப்பு புள்ளிகள், கோடு இருந்தாலும் போதுமானது. அதிர்ஷ்ட எண்கள் 1,4,7. இந்த தேதிகளில் தொடங்கும் விஷயம் எளிதில் நிறைவேறும். அதிர்ஷ்டக்கல் கோமேதகம். கோமேதகத்தை மோதிரத்தில் பதித்தும், டாலராக அணிந்து கொள்ளலாம். மிதுனம், கன்னி, தனுசு, மகரம், மீனராசியினர் நல்ல நண்பர்களாக அமைவர்.
புனர்பூசம், விசாகம், பூரட்டாதி
நவகிரகங்களில் பூரணசுபரான குரு உங்களுக்கு நட்சத்திராதிபதியாவார். குருதிசையில் பிறந்த உங்களின் அதிர்ஷ்டதெய்வம் தட்சிணாமூர்த்தி. வியாழனன்று இவருக்கு நெய்தீபம் ஏற்றி, கொண்டல்கடலை மாலை சாத்தி, வழிபட்டு வந்தால் சுபபலன் உண்டாகும். அதிர்ஷ்டநிறம் மஞ்சள். இந்நிறத்தில் கைக்குட்டையாக வைத்துக்கொள்ளுங்கள். அதிர்ஷ்ட எண்கள் 2,3,9. இந்த தேதிகளில் புதிய பணிகளைத் துவங்குவது நன்மை தரும். அதிர்ஷ்டக்கல் புஷ்பராகம். மேஷம், சிம்மம், கன்னி, விருச்சிக ராசியினரின் நட்பு கொள்வதால் நற்பலன் உண்டாகும்.
பூசம், அனுஷம், உத்திரட்டாதி
உங்களின் நட்சத்திராதிபதியாக இருப்பவர் சனி. முதல் திசையாக சனியில் பிறந்த நீங்கள், வழிபடவேண்டிய அதிர்ஷ்டதெய்வம் சாஸ்தா. காலையில் எழுந்ததும் இவரை தரிசிப்பது சிறப்பு. குலதெய்வ வழிபாடும் உங்களுக்கும் அதிர்ஷ்டத்தை கொடுக்கும். இயன்ற போதெல்லாம் சாஸ்தா கோயிலுக்குச் சென்று வழிபட்டு வருவது நன்மை தரும். அதிர்ஷ்டநிறம் கருநீலம். அதிர்ஷ்டஎண்கள் 5,6,8. இத்தேதிகளில் தொடங்கும் செயல்கள் இனிதே நிறைவேறும். அதிர்ஷ்டக்கல் நீலம். ரிஷபம், மிதுனராசியினரிடம் நட்பு கொண்டால் நன்மை ஏற்படும்.
ஆயில்யம், கேட்டை, ரேவதி
கிரகங்களில் புதன் உங்களின் நட்சத்திராதிபதி. புதன்திசையில் பிறந்த உங்களுக்கு அதிர்ஷ்டம் அருள்பவர் மகாவிஷ்ணு. சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு துளசி மாலை சாத்தி, நெய் தீபம் ஏற்றி வழிபடுவது யோகம் தரும். ஏகாதசி விரதத்தை கடைபிடிப்பது மிகவும் சிறப்பு. அதிர்ஷ்டநிறம் பச்சை. அதிர்ஷ்டஎண்கள் 1,5,8. இத்தேதிகளில் செய்யும் செயல்கள் அனைத்தும் நற்பலன் தரும். அதிர்ஷ்டக்கல் மரகதம் என்னும் பச்சைக்கல். ரிஷபம், சிம்மம், துலாம் ராசியினரிடம் உண்டாகும் நட்பு உண்மையானதாகவும், ஆழமானதாகவும் இருக்கும்

கல்கி அவதாரம் எப்போது?

கிருஷ்ணர் தன் அவதார நோக்கம் முடிந்து சங்கு சக்கரத்துடன் காட்சி தந்தார். தேவலோகத்தில் தேவர்கள் அனைவரும் மலர் மாறி பொழிந்து மங்கலவாத்தியம் முழங்க பகவானை வரவேற்க காத்திருந்தனர். பூமியில் இருந்து புறப்பட்டு வைகுண்டம் சென்றடைந்தார் விஷ்ணு பகவான். கிருஷ்ணாவதாரம் முடிந்த உடனே கலியுகமும் பிறந்தது. ராம அவதாரத்தில் ராமரின் அன்பினால் கொல்லப்பட்ட வாலிதான் கிருஷ்ணா அவதாரத்தில் வேடனாக வந்து கண்ணன் மீது தவறுதலாய் அம்பு எய்தினான். அதனால் கிருஷ்ணர் உயிர் பிரிந்தது. அவர் வைகுந்தம் சென்றதால் உடன் துவாரகையும் கடலில் மூழ்கியது. கண்ணன் உடல் சந்தனக் கட்டையாகி மிதந்து குருவாயூர் சென்று அடைந்தது. அவ்விடம் தான் குருவாயூர் ஆகும். தசாவதாரங்களில் 9 அவதாரங்களில் ராமாவதாரமும்,கிருஷ்ணாவதாரமும் தான் பூரண அவதாரங்கள் இவை இரண்டும் தான் இதிகாசங்களாக மலர்ந்தன. அவைதான் ராமாயணம், மகாபாரதம். இந்த 9 அவதாரங்களுடன் நின்றுவிடப் போவதில்லை. இன்னும் ஓர் அவதாரம் உள்ளது. அது தான் கல்கி அவதாரம். பகவான் குதிரை முகத்துடன் யாஸஸ் என்பவருக்கு மகனாக அவதாரம் செய்ய போகிறார். தீமைகளை அழித்து நன்மை செய்யவே பகவான் அவதாரம் செய்வார். கலியுக முடிவில் மக்கள் தீமையே உருவாக உள்ளனர். அவர்களை அழித்து அமைதியும் அன்பும் நிலைநாட்ட கல்கி அவதாரம் நிகழும்.
கலியுகம் முடிவில் வருணங்கள் ஒன்றுக்கொன்று கலந்து பலவிதமாக இருக்கும். துர்க்குணம் உடையவர்கள் அதிகமாவார்கள். சாஸ்திரம் பயின்றாலும் அவற்றை அனாச்சாரங்களாகத்தான் பரப்புவார்கள். மிலேச்சர்கள் தலைமை பொறுப்பேற்று மக்களைத் துன்புறுத்துவார்கள். கலியுகத்தில் மனிதர்களிடையே பொய், வஞ்சனை, தூக்கம், சோம்பல், மனவருத்தம், ஹிம்சை செய்தல், பலவீனம், பயம், அறியாமை, அழுகை அதிகமாக இருக்கும் எல்லாவற்றையும் அடைய வேண்டும் என்ற வெறி ஏற்படும். துறவிகள் பணத்தாசையால் அலைவர். இல்லறத்தார் எங்கே எது கிடைக்கும் என்று திரிவர். தாய் வழி உறவினர்களை தவிர்த்து மனைவி வழி உறவினர்களை மட்டுமே மதிப்பார்கள். மனைவிக்கு மட்டுமே கட்டுப்படுவர். சிறிதளவு சொத்துக்கும் உறவினர்களை கொல்வார்கள். பெற்றோர்களைக் காப்பாற்ற மாட்டார்கள். திருமணத்தில் முறை இருக்காது. இவ்வளவு கெடுதல் இருந்தாலும் கடுமையான தியானத்தால் கிருதயுகத்திலும், யாகங்களில் திரேதா யுகத்திலும் பூக்கள் கொண்டு செய்த விரிவான பூஜைகளால் துவாபர யுகத்திலும் கிடைத்த அதே பலனை கலியுகத்தில் கண்ணனின் திருநாமத்தை உச்சரித்த மாத்திரத்திலேயே கிடைத்துவிடும். பாவங்களும் விலகிவிடும். கலியுகத்திலும் இதுவே யுகதர்மமாக மாறும்.
கலியுகத்தில் 3000 ஆண்டுகள் கடந்துவிட்டன என ஆராச்சியாளர்கள் கூறுகின்றனர். கலியுகத்தின் 2000 ஆண்டு கழிந்ததுமே அன்னிய ஆதிக்கம் பரவிவிட்டது. கலியுகத்தின் கேசவனுடைய ஹரி நாமத்தை பாராயணம் செய்வதாலேயே 3 யுகங்களுக்கான புண்ணியம் பெற்று விடலாம். இப்படி மகனீயர்களும் தபஸ்விகளும் தாம் அதர்மத்தை சீர்தூக்கிப் பார்த்து உணர்ந்தாலும் உலகில் தர்மம் சிதைந்து நீதி நேர்மை நசிந்து அராஜகம் தலை விரித்தாடும் போது நல்லவர்களையும் தர்மத்தையும் காக்க கல்கி அவதாரம் நிகழும்.

தெய்வம் நின்று கொல்லும் என்பதன் காரணம்

இறைவனின் பரமகருணையே இதற்குக்காரணம். எப்படியும் ஒருவன் நல்வழிக்கு திரும்பவேண்டும் என்பது தான் இறைவனின் திருவுள்ளம். இரணியனைக் கூட, நரசிம்மப்பெருமான், இருகூறாக்குவதற்கு முன், துவேஷ உணர்வு உதட்டளவில் இருந்தால் விட்டு விடலாம். உள்ளத்து அளவில் இருந்தால் தான் கொல்ல வேண்டும் என்று எண்ணினாராம். தீர்ப்பு நியாயமானதாக இருக்கவேண்டும் என்பதற்காக நாம் திருந்துவதற்கு தரும் வாய்ப்பு தான் காலம். காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் என்பார்களே! அதுபோல, காலம் உள்ளபோதே நல்வழியை நாடி வரவேண்டும் என்பது தான் இறைவன் திருவுள்ளம். அதனால் தான், தெய்வம் நின்று கொல்கிறது.

வாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை

உணவு உண்பவர்கள் வாழை இலையை இடக்கை பக்கமாக நுனி வருவது போலவும். வலக்கை பக்கமாக அகன்ற அடி இலை வருவது போலவும் உண்பது முறையாகும். வாழை இலையில் தனலெட்சுமி வாசம் செய்வதாகப் புராணங்கள் கூறுகின்றன. வறுமை கஷ்டங்கள் நீங்க வேண்டுமானால் வாழை இலையிலேயே சாப்பிட வேண்டும். இப்பழக்கம் கொண்டவர்கள் லெட்சுமி கடாட்சம் பெறுவர் என்பது திண்ணம். அத்துடன் வாழை இலையில் சாப்பிடுவதால் முகம் பளபளப்பாகி அழகும் வசீகரமும் உண்டாகும். தலை முடி கறுப்பாகவே இருக்கும், சீக்கிரத்தில் நரைக்காது. கண்ட திசைகளுக்கு எதிராகவும் உண்ணுதல் கூடாது. உண்ணும் போது வடக்கு நோக்கி இருத்தல் நீண்ட ஆயுளும், தெற்கு நோக்கி இருத்தல் புகழும், மேற்கு நோக்கு இருப்பின் செல்வமும் பெருகும். ஒரு மூலையை பார்த்தவாறு உண்ணுதல் கூடாது. மேற்கண்ட முறையில் உணவை உண்ணுதல் நன்மையைத் தரும்.

பக்தர்கள் பாதயாத்திரை செல்வது ஏன்?

பாதயாத்திரையாக சென்று இறைவனை வணங்கும் முறை சமீபத்தில் அதிகரித்துள்ளது. முற்காலத்தில் வாகனங்கள் இல்லாத சூழ்நிலையில் அடியவர்கள் தெற்கிலிருந்து இமயமலை வரையும், இமயத்திலிருந்து பொதிகை வரையும் உள்ள தலங்களை நடந்துசென்றே தரிசித்தனர். இதே வழக்கம் இப்போதும் ஏற்பட்டுள்ளது. காலச்சூழ்நிலை கருதி குறுகிய இடத்திற்குள் பாதயாத்திரை செல்கின்றனர். பழநி, திருப்பதி ஆகிய தலங்களுக்கு பாதயாத்திரை செல்வோர் அதிகம். ஒருவன் தன்னைத்தானே வருத்திக் கொள்வதன் மூலமே தான் என்ற அகங்காரத்தைக் குறைக்க முடியும் என்பதின் அடிப்படையிலேயே பாதயாத்திரை நடத்தப்படுகிறது.

Sunday, September 18, 2011

உங்கள் அபிப்பிராயங்களை பதிவு செய்து கொள்ளுங்கள்

உங்கள் அபிப்பிராயங்களை பதிவு செய்து கொள்ளுங்கள்



2000 ஆன்மீகத்தகவல்கள்
பல சிரமங்களுக்கு மத்தியில் உங்கள் ஆதரவுடன் இந்த ஆன்மீக வலைப்பதிவானது 2000 ஆன்மீகத்தகவல்களைத்தந்துள்ளது.இதில் பகிரப்படும் விடயங்கள் தொடர்பாக உங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களை பதிவு செய்து கொள்ளுங்கள். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்கள் எம்மை ஊக்கப்படுத்தும்.
உங்கள் வாழ்த்துக்கள், பாராட்டுக்கள், மற்றும் உங்கள் அபிப்பிராயங்களையும் பதிவு செய்து கொள்ளுங்கள்.
நன்றி

அபிராமி பட்டர் வரலாறு


அபிராமி பட்டர் வரலாறு 1

  
அபிராமி பட்டர் அன்றைய சோழநாட்டுப்பகுதியான திருகடவூரில் வாழ்ந்து வந்தார். (அன்னை அபிராமி இருக்கும் இடம்) அவர் எப்பொழுது அன்னை அபிராமி எண்ணி யோக நிலையில் இருப்பது வழக்கம். உலகம் அவரைப்பற்றி பேசுவதைப்பற்றி கவலைப்படாமல் இருந்தார். அப்பொழுது சோழநாட்டை ஆண்ட இரண்டாம் சரபோஜி ராவ் போன்ஸ்லே மன்னர் அன்னை தரிசிப்பதற்கு சென்றார். அப்பொழுதும் அபிராமி பட்டர் மன்னரின் வருகையைப்பற்றி உணராமல் அன்னை அபிராமியின் ஒளிமிகுந்த முகத்தை பற்றி எண்ணி யோக நிலையிலேயே இருந்தார். அப்பொழுது மன்னர் மிகுந்த மரியாதையுடன் அவரை அணுகி இன்று என்ன நாள்(திதி) என்று கேட்டார். அப்பொழுது அபிராமி பட்டர் உண்மையான நாளான அமாவாசையை உணராமல் பெளர்ணமி என்று சொல்ல, அனைவரும் அபிராமி பட்டரைப் பார்த்து சிரித்தனர்.
சரபோஜி மன்னர் கோபம்கொண்டு அபிராமி பட்டரை சொன்னது போல் அவரது வார்த்தைப் பொய்த்தால் அபிராமி பட்டரை உயிரோடு எரிக்குமாறு கூற, அதற்கான தளம் ஏற்பாடு செய்து கீழே நெருப்பு எரியூட்டப்பட்டது. அபிராமி பட்டர் தன் தவறை உணர்ந்தவராக பழியை அன்னை அபிராமியின் மீதே போட்டார். இந்த தவறை அன்னை அபிராமியான உன்னை நினைத்தே நான் யோக நிலையில் மூழ்கி இருந்தமையால் செய்ய நேரிட்டது. அவர் அன்னை அபிராமியைப்பற்றி நூறு சுலோகங்களை மிக அருமையாகப் பாடத் தொடங்கினார்.

அந்தப்பாடல்கள் தமிழ் இலக்கியத்தில் அந்தாதி என்றப்பெயரில் வந்தன, அந்தாதி என்றால் அடுத்தப்பாடல் முதல் பாடல் எந்த வார்த்தையில் முடிந்ததோ அதே வார்த்தையில் தொடங்க வேண்டும். அபிராமி பட்டருக்கு இருந்த திறமையையும் கடவுளின் அருளால் இந்த அருமையான நூறு பாடல்களை ஒரே இரவில் பாடியதை பாராட்டியே ஆகவேண்டும். அபிராமி அந்தாதியில் இன்னொரு தனித்துவம் என்னவென்றால் அதற்கு முடிவும் இல்லை ஆரம்பமும் இல்லை. முதல் வரி 'உதிக்கின்ற செங்கதிர் உச்சி திலகம்..... ' என்று தொடங்க 100வது பாடல் ' உதிக்கின்றனவே ' என்று முடிகிறது.
அபிராமி பட்டர் 79வது பாடலை பாடிக்கொண்டிருக்கையில் 'விழிக்கே அருளுண்டு வேதம் சொன்ன..... ' அன்னை அபிரமி அவரது பக்தியால் இன்புற்று அவர் முன்னே தோன்றி தனது காதணியை (தடங்கா அல்லது குண்டலம்) ஆகாயத்தில் வீச அது வான் முழுவதும் முழு பெளர்ணமியைப் போல பிரகாசித்து ஜொலித்து. அனைவரும் அன்னையை வணங்கி அன்னையின் மகத்தான சக்தி கண்டு வியந்தனர். மன்னர் அபிராமி பட்டரிடம் மன்னிப்பு கோரினார்.

அபிராமி பட்டர் வரலாறு 2

சோழவள நாட்டின் காவிரிக்கரையில் உள்ள சிவாலயங்களில் ஒன்று திருக்கடையூர் அபிராமிவல்லி சமேத அமிர்த கடேஸ்வரர் ஆலயமும் ஒன்றாகும். அந்த ஆலயத்தின் வழிபாடுகள் நடத்தும் அத்யான பட்டர் என்னும் தலைமை பட்டர் ஆன அமிர்தலிங்க ஐயர் என்பவருக்கு கிட்டத்தட்ட முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியவர் சுப்பிரமணியன் என்ற புதல்வன். தம் புதல்வனுக்கு சங்கீதப் பயிற்சியும், குடும்பத்தின் பரம்பரை யான தேவி உபாசனையும் அறியச் செய்தார் அமிர்தலிங்க ஐயரவர்கள். இளமை முதலே ஸ்ரீ அபிராமி அம்மையின் பால் தனிப்பற்றும், பக்தியும் பூண்டு வழிபட்டு வந்தார் சுப்பிரமணிய ஐயர். தமிழ் தவிர வடமொழியிலும், சங்கீதத்திலும் தேர்ச்சி பெற்றிருந்தார் சுப்பிரமணிய ஐயரவர்கள்தம் உள்ளத்தே அன்னையின் பால் தோன்றும் அன்பின் விளைவாக பல துதிகளைத் தாமே இயற்றிப் பாடி வந்தார்.


யோக முறையில் அம்பிகையைத் துதித்து வந்த அவர் சரியை, கிரியை என்பவற்றைக் கடந்து யோகநிலையின் ஆதார பீடங்களில் யாமளை திருக்கோலத்தைக் கண்ணாரக் கண்டு இன்புற்று இடைப்பட்ட கிரந்திகளை எல்லாம் தாண்டிச் சென்று ஸஹஸ்ராரத்தில் ஒளிரும் ஒளிமயமான லலிதையின் திருவருளைப் பரிபூரணமாய் உணர்ந்து அந்த ஆநந்தத்தில் திளைத்து இன்புற்று இருந்தார். ஆனால் உலகத்தவருக்கு அவருடைய ஆனந்த நிலையும், அதன் காரணமும் புரியாமல் போகவே இவர் ஏதோ துர்தேவதையை ஆராதித்து வந்த காரணத்தால் இப்படைப் பைத்தியமாய் ஆகி, ஆசாரங்களை எல்லாம் கைவிட்டுக் கெட்டுப் போய்விட்டார் என்று சொல்லித் தூற்ற ஆரம்பித்தனர். அதைக் காதில் வாங்காமலும், சற்றும் லக்ஷியம் செய்யாமலுமே அபிராமியைத் துதிப்பதும், அவள் பால் துதிகள் இயற்றிப் பாடுவதுமாய் இருந்தார் சுப்ரமணிய ஐயர். தினமும் கோயிலில் அன்றைய திதிகளைக் கூறி அதற்கேற்றவாறு வழிபாட்டு நியமங்களை ஏற்பாடு செய்வதும் அத்யான பட்டரின் நித்ய கடமைகளில் ஒன்றாகும்.


அப்படி இருக்கையில் ஒரு நாள் தஞ்சையின் அரசன் ஆன ராஜா சரபோஜி தை அமாவாசை அன்று பூம்புகார் சென்று முகத்துவாரத்தில் நீராடி, திருக்கடவூருக்குத் தரிசனம் செய்ய வந்தார். திருக்கோயிலில் தரிசனம் செய்யும் வேளையில் அங்கே அபிராமி அம்மன் சந்நதியில் சுப்ரமணிய ஐயர் நின்று கொண்டு அம்பிகையைப் பார்ப்பதும், தொழுவதும், கண்ணீர் பெருக்குவதுமாய் இருந்தார். தானே சிறிது சிரித்தும் கொள்ளுவார். சிரிப்பது அன்னையின் பரிபூரணப் பேராநந்தப் பேரொளியின் தரிசனத்தைக் கண்டு. ஆனால் சுற்றி இருப்பவர்களோ தங்களுக்குள்ளாகக் கிசுகிசுவெனப் பேசிக் கொண்டனர். மன்னர் வந்திருப்பதும் அறியாமல், மன்னரை வணங்கவும் வணங்காமல் தனக்குத் தானே பேசிக் கொள்ளுவதும், சிரித்துக் கொள்ளுவதும், அழுவதுமாய் இருக்கிறாரே என நினைத்தார்கள். மன்னர் இவர் யாரெனக் கேட்டதும், “இவர் ஒரு பைத்தியம். தம் குல ஆசாரங்களை எல்லாம் கைவிட்டுவிட்டு பரிவார சக்தியான ஏதோ ஓர் தேவதையை வழிபடுகிறார்.” என்று சொல்லிவிட்டனர். மன்னர் இது எவ்வளவு தூரம் உண்மையாக இருக்கக் கூடும் என நினைத்த வண்ணம் அதைச் சோதிக்க எண்ணியவர் போல் சுப்ரமணிய ஐயரிடம், “ இன்று அமாவாசை எவ்வளவு நாழிகை உள்ளது?” என்று கேட்டார்.


அப்போதுதான் பரிபூரணப் பேரொளியாய் ஸஹஸ்ராரத்தில் ஒளிமயமாய் ஜொலிக்கும் அன்னையைக் கண்டு ஆனந்தம் கொண்டு அந்தச் சுடரின் பேரொளியிலே தன்னை இழந்து கொண்டிருந்தவர் காதில் அமாவாசையா என்ற சொல் மட்டுமே விழ, “ ஆஹா, இன்று பெளர்ணமி அல்லவோ?” என்று சொல்லிவிட்டார். சுற்றிலும் இருந்தவர்களில் சிலர் கைகொட்டிச் சிரிக்காத குறையாய் அவரை ஏளனத்துடன் பார்க்க, மன்னர் சுற்றிலும் இருந்தவர்கள் கூறியது உண்மையே என நினைத்த வண்ணம் பட்டரை மதிக்காமல் அலக்ஷியத்துடன் சென்று விட்டார்சென்றாரே தவிர மன்னனுக்கு அவருடைய தோற்றமே கண்ணெதிரே வந்தது. திரும்பத் திரும்ப அன்று பெளர்ணமி என பட்டர் கூறிய வார்த்தைகளும் காதிலே ஒலித்த வண்ணம் இருந்தன. முன் மாலைப் பொழுது. சற்றே களைப்புடன் அமர்ந்திருந்த மன்னர் தன்னை அறியாமல் கண்ணயர, கர்ப்பகிருஹத்து அபிராமி அவர் கண்ணெதிரே தோன்றினாள். “இதோ பார், “ என்று சொல்லிக் கொண்டே தன் காதுத் தோட்டைக் கழற்றி வீச, அது விண்ணிலே சுடர்விட்டுப் பிரகாசித்துக் கொண்டு சென்று நிலவாக அமர்ந்ததைக் கண்டார் மன்னர். “ஆஹா, இது பூரண நிலவு அன்றோ! முழுமதி சுடர் விடுகின்றது பாருங்கள்,” என சுப்ரமணிய ஐயரின் குரலும் கேட்டது. மன்னன் கண்விழித்தான். கனவா? நனவா??? மன்னர் உடல் எல்லாம் நடுங்கியது. பெருந்தவறு செய்துவிட்டோம் என உணர்ந்தார் மன்னர்.

இங்கே பட்டருக்கு மன்னன் சென்றதுமே தாம் செய்த பெருந்தவறு புரிந்தது. ஏற்கெனவே ஊரும், உலகமும் தம்மைப் பித்தன் என்று சொல்லி எள்ளி நகையாடுவதை மெய்ப்பிப்பது போலவே நடந்த இந்த நிகழ்ச்சியால் மனம் வருந்திய அவர்உடனேயே அன்னையின் அருளால் மனம் தெளிவுற்று, இதுவும் ஒரு நன்மைக்கே எனத் தெளிந்து அன்னையின் அருளைத் துதித்துப் பாடல்கள் இயற்றலாயினார்அந்தாதி முறையில் இயற்றப் பட்ட இப்பாடல்கள் அன்னையின் சிறப்பைப் புகழ்ந்தும், பட்டரை உலகத்தோர் இகழ்ந்து கூறியும், அன்னையின் அருளால் அவர் பெற்று வரும் அநுபவச் சிறப்பையும் வர்ணிக்கும் விதத்தில் பாடல்கள் அருவி போலப் பொழியலாயிற்று. அங்கே கண் விழித்து எழுந்த மன்னருக்கு அபிராமி பட்டர் பெரும் ஞாநி என்பது புலப்பட்டது. உடனேயே பட்டரின் வீடு சென்று அவரை வணங்கித் தாம் கண்ட கனவைக் கூறி பட்டரின் மன்னிப்பையும் கோரினார். பட்டரும் இது அன்னையின் திருவருள் என எண்ணி மகிழ்ந்தார். மன்னரால் அபிராமி பட்டர் என அழைக்கப் பட்டதோடு அல்லாமல், அவருக்கு மானியமாகச் சில விளை நிலங்களையும் மன்னர் அளித்தார். அவ்விளை நிலங்களை ஏற்க மறுத்த அபிராமி பட்டரிடம் அவரின் பிற்காலச் சந்ததிகளின் நல்வாழ்வை உத்தேசித்து ஏற்குமாறு வற்புறுத்தி ஏற்கச் செய்தார்இவ்வுரிமை 1970களின் கடைசி வரையிலும் அபிராமி பட்டரின் பரம்பரை அநுபவித்து வந்தது. தற்போதைய நிலவரம் சரிவரத் தெரியவில்லை.

மேற்சொன்ன நிகழ்வைச் சிலர் வேறு விதமாயும் கூறுகின்றனர்மன்னர் அன்றைய திதியைக் கேட்டதும், சரியாய்க் கூறாத பட்டருக்கு அன்றிரவுக்குள்ளாக பட்டர் பெளர்ணமியைக் காட்டவேண்டும் எனவும், இயலாவிட்டால் பட்டருக்கு மரண தண்டனை எனத் தீர்ப்புச் சொன்னதாய்ச் சிலரும், வேறு சிலர் மன்னரிடம் சரியான திதியைக் கூறாமல் தடுமாறிய பட்டர் அவமானத்தால் மனம் வருந்தி அரிகண்டம் பாடத் தொடங்கியதாகவும், அப்போது அபிராமியின் சந்நிதியில் ஒரு குழி வெட்டி அதில் அக்னியை மூட்டி அதற்கு மேல் ஒரு விட்டத்தில் இருந்து நூறு கயிறுகளால் ஆன ஓர் உறியைத் தொங்க விட்டு அதன் மேல் ஏறி, “அம்பிகை எனக்குக் காக்ஷி கொடுத்து இந்தப் பழியை நீக்காவிட்டால் என் உயிரை விடுவேன்என்று சபதம் செய்து விட்டு, அபிராமி அந்தாதியைப் பாடியதாகவும் கூறுவார்கள். “உதிக்கின்ற செங்கதிர், உச்சித் திலகம்என்று ஆரம்பிக்கும் இந்த அந்தாதிப் பாடல்களில் ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் ஒவ்வொரு உறியின் கயிறாக பட்டர் அரிந்து கொண்டு வந்ததாகவும், “விழிக்கே அருளுண்டுஎன்ற 79-வது பாடலின் போது மயங்கும் மாலைப் பொழுதில் அன்னை பட்டருக்கு மட்டுமின்றி அவ்வூரில் உள்ள அனைவருக்கும் தெரியும் வண்ணம் காக்ஷி கொடுத்துத் தன் காதுத் தோட்டைக் கழற்றி வீசி எறிந்து பெளர்ணமியை வரவழைத்ததாகவும் சொல்லுவார்கள். எங்கனமாயினும் பட்டரின் பக்தியும், பெருமையும் சற்றும் குறைந்தது அல்ல. அதே போல் மன்னன் எவ்வாறோ அன்னையின் அருளைப் பூரணமாய் உணர்ந்திருந்தான் என்பதும் உண்மையே.

 அன்னையின் முகமண்டலமே பூரண சந்திரன் போல் ஜொலிக்க அவள் காதின் தாடங்கம் மற்றொரு பூரணசந்திரனாக விளங்க அந்த அமாவாசை இருளானது, அனைவரின் மனத்து அறியாமை இருட்டையும் போக்கி அனைவரையும் பேராநந்தப் பேரின்பத்தில் ஆழ்த்தியது. தாம் கண்ட அந்த அதிசய ஆநந்ததைப் பட்டரும், “கூட்டியவா என்னைஎன்ற 80 வது பாடலில் சொல்லி மேலும் இருபது பாடல்களைப் பாடி அந்தாதியைப் பூர்த்தி செய்தார். அன்று முதல் அவர் அபிராமி பட்டர் என அழைக்கப் பட்டதோடு அவர் சந்ததியினருக்கு பாரதியார் என்ற பட்டமும் மன்னரால் வழங்கப் பட்டது.

விழிக்கே அருளுண்டு அபிராம வல்லிக்கு வேதம் சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சுண்டே எமக்கவ்வழி கிடக்கப்
பழிக்கே சுழன்று வெம்பாவங்களே செய்து பாழ்நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர் தம்மோடென்ன கூட்டினியேஅபிராமி அந்தாதி பாடல் 79

கூட்டியவா, என்னைத் தன் அடியாரில் கொடிய வினை
ஓட்டியவா, என் கண் ஓடியவா தன்னை உள்ளவண்ணம்
காட்டியவா கண்ட கண்ணும் மனமும் களிக்கின்றவா
ஆட்டிய வா நடம் ஆடகத் தாமரை ஆரணங்கே!”